என்னைக்கு ஒருநாள் பெண்ணொருத்தி தனியா நள்ளிரவுல பாதுகாப்பா நடந்து போறாளோ அன்னிக்கு தான் இந்தியாவின் உண்மையான சுந்தந்திரம்னு காந்தி 1947 ஆகஸ்ட் 15 சொல்லி இருப்பார் போல.... 67 வது சுதந்திர தினம் வந்தும் அது நடக்காதுன்னு நெனைக்கிறேன்...!!!
உடனே நா ஏதோ உணர்ச்சி பேருரை ஆற்ற போறேன்னு நினைக்காதிங்க.... ஒரு அப்பவி அபலை ஆகிய எனக்கு நடந்த கொடுமையை கேளுங்க..!!!
அன்னைக்கு சோ வென்று பெய்ந்துகொண்டிருந்தது மழை... பஸ் ஏற வந்த நான் பாதி வழியிலேயே மாட்டிக்கொண்டு முழுவதுமாய் நனைந்திருந்தேன். என்னையே வெரிதுப்பார்துக்கொண்டு ஆட்டுத்தாடி வைத்த மொட்டை தலை ஒருவன் அருகில் நின்று கொண்டிருந்தான். தள்ளி தள்ளி போக அருகில் அருகில் வந்தான். என்னை சுற்றி வேறு யாரும் இல்லை... பயம் கவ்விக் கொண்டது... வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஏதோ ஒரு பஸ் வந்தது.... கை நீட்டி தவ்விக் கொண்டேன்.
பஸ்சில் என்னை தவிற டிரைவர், கண்டக்டர் இன்னும் ஒருவன்... யாரென்று பார்த்தால் அந்த மொட்ட தலை. பஸ்சில் நகர்ந்து போய் ஒரு மூலையில் அமர்ந்தேன்..... போட்டிருந்த டிரஸ் வேறு உடம்போடு ஒட்டிப்போய் உள்ளே போட்டிருந்ததெல்லாம் வெளியே தெரிய.... பஸ்சின் வெளிச்சம் மேலும் என்னை தர்மசங்கடப்படுத்தியது....!!!
எல்லா சீட்டும் காலியாய் இருக்க...அவன் நேரே எனக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்து என்னை குறு குறு வென்று பார்த்தான். எரிச்சல் அதிகமாகியது.... ஏன் இப்படி desperate ஆகுரானுங்கன்னே தெரிலே.. பொன்னா இல்ல.... வேணும்னா கல்யாணாம் பண்ணி தொலைக்க வேண்டித்தானே.... அதுவரைக்கும் பொறுக்க முடியல்லனா ரெட் லைட் ஏரியாவுக்கு போ.... என்னாவது பன்னிதொல...ஏன் வந்து என்ன பிச்சு திங்கிற மாறி பாக்குற....!!!
கண்டக்டரும் கண்டும் காணாதது போல் இருந்துவிட்டார்...டிக்கெட் எடுத்ததும்.... "இப்போல்லாம் டிக்கெட் வில ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சுல.." என்று பேச்சை ஆரம்பித்தான்.
ஆம்மாம் என்பதுபோல் தலையாட்டினேன்....மனதின் மறுப்பையும் மீறி. "im jayaprakash ". நான் பதில் சொல்ல வில்லை. இன்னும் அருகில் நகர்ந்து அமர்ந்து என் மார்பில் தொங்கிய ID card-ஐ பார்த்து... "நானும் உன் கம்பனி தான்,,, technical lead " என்று காலில் கை வைத்தான்.... அவ்வளவுதான்... "கைய எடுடா @#$%!!" எங்கிருந்து இவ்வளவு தைரியம் வருகிறது...என்ன துணிச்சல் இவ்வளவு கீழ்த்தரமான காரியங்களை செய்வதார்க்கு....கண்ணா பின்னா வென்று திட்டினேன்...எழுந்து நின்று ஒன்றும் தெரியாததுபோல் முழித்தான்.. பஸ் கரெக்ட் ஆகா அடுத்த ஸ்டாப்பில் நின்றது.. இறங்கி ஓடிவிட்டான். அந்த ஸ்டாப்பில் நெறைய பெண்கள் ஏறினார்கள்..... பொதுவாக பெண்கள் அதிகம் உள்ள இடத்தில தானாக ஒரு பாதுகாப்பு வளையம் உருவாகிவிடும்.. பாதுகாப்பாக உணர்ந்தேன்.... !!!
பஸ் முக்கால் வாசி நிரம்பி விட என் பக்கத்து சீட் காலியாக இருந்தது...அடுத்த ஸ்டாப்பில் இரண்டு ஆண்டி ஏறினார்கள்.... நேரே என்னருகே வந்து..."தம்பி இது லேடீஸ் சீட்....." என்று கூறி இடத்த காலி பண்ணு என்பதை போல் பார்த்தார்கள்...!!!
இப்போ சொல்லுங்க காந்தி கனவு...?!!!!!!