சிறுகதை

Thursday, January 15, 2015

தொரட் 2

ஒரு மாத தெரபிக்கு பிறகு... ஒரு அளவிற்கு நோயை கட்டுக்குள் கொண்டுவந்து விட்டேன். ரட்சகன்ல நாகார்ஜுனா நரம்பெல்லாம் பொடைக்க கையை முறுக்கி கோபத்தை அடக்குவாறே..... அது மாதிரி தான் இனி அடக்கி கொண்டே வாழ வேண்டும். எங்கு போறதா இருந்தாலும் ட்ரைன் தான்.... அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை பாத்ரூமிற்கு ஓடி.... சத்தமாக கத்தி.....  கை கால்களை உதறி..... எல்லாம் செய்துவிட வேண்டும் இல்லை என்றால் அவஸ்த்தை.

கோவில் கோவிலாக சென்று அழுதுவிட்டு எனக்காக வேண்டும் அம்மா..... "டேய் அமெரிக்கா சிக்காகோல எதோ ஒரு டாக்டர்.... நம்ம இந்தியன் தான்.... research பண்றாராம்..... ட்ரை பண்ணுவோமா....." என்று கேட்கும் அப்பா.... இவர்களுக்கு நான் பிள்ளை இல்லையாம்...... இந்த நோய் வந்ததை விட பெரிய அதிர்ச்சி நான் தத்து பிள்ளை என்று அறிந்தது தான்.

"எதுக்காக இந்த நோயை எனக்கு கொடுத்த...?" என்று கடவுளை நான் கேட்கவில்லை... கேட்டால் கூடவே எதுக்காக பக்கத்துக்கு தொட்டிலில் இருந்த சூர்யாவை விட்டுவிட்டு என்னை என் அப்பா எடுத்தார் என்றும் கேட்கவேண்டும். இப்போதும் ஒன்றும் குறைவில்லை.... வேலை இருக்கிறது..... மேனேஜர் கூட இப்போது மிகவும் பரிவு காட்டுகிறார்....
"டோன்ட் டேக் மச் ஸ்ட்ரெஸ் வினோ... வீட்டுக்கு கெளம்புங்க.... " என்கிறார்
இந்நோயினால் நான் சீக்கீரம் சாகவும் போறதில்லை.... இந்த நோய் சில நாள்களில் தேய்ந்தும் போகலாம் வளரவும் செய்யலாம். கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டுதான் இருந்தது மீண்டும் நான் அம்முவை பார்க்கும் வரை.

எல்லாம் இந்த தேவ் பயலால..... அன்னைக்கு வழக்கம் போல சங்கீதா போனேன் காபி குடிக்க... அங்க தேவுடன் அம்முவும் இருந்தாள்.... நான் வருவதை பார்த்ததும் தேவ் எழுந்து... நல்லா பேசு மச்சா... ஆல் தி பெஸ்ட் என்று கை குலுக்கி தம் அடிக்க சென்று விட்டான். அம்மு உம்ம்ம் என்று அமர்ந்திருந்தாள்.... எனக்கு கைககள் உதறி மீண்டும் நெஞ்சை தட்ட ஆரம்பித்து விட்டேன்.
"நீங்க எங்க இங்க.....??"
"எல்லா உங்க பிரிண்டு தான் torture பண்றார்....!!!"
வாயிலிருந்து கெட்டவார்த்தை உதயமாக.... வாயை மூடி... தண்ணி டம்ளரை எடுத்து விழுங்கினேன்....
"ஹலோ.... என்ன பண்றீங்க....." எனக் கேட்டாள்
கைகளால் நெஞ்சை தட்டிக்கொண்டே..."ஒரு நிமிஷம்...." என்று எழுந்து ஓடினேன்.
எதிர்த்தாபில் வந்தவனிடம் ..."டேய் xxxx..... பாத்ரூம் எங்கடா....?"
அவன் பதில் சொல்லாமல் கத்த.... நானாக கண்டுபிடித்து.... உள்ளே ஓடி... கண்ணாடி முன்னாடி கைகளால் நெஞ்சை பலமாக தட்டிக்கொண்டே "xxxx xxxx xxxx ..." என்று கத்தினேன்
சில நொடிகள் அமைதி....உள்ளே இருந்து பாண்டை மாட்டிக்கொண்டு வந்தவர் என்னை ஒருமாதிரி பார்த்துக்கொண்டே கைகழுவாமல் சென்றார். நானும் முகத்தை கழுவிவிட்டு.... வெளியே சென்றேன். அம்முகிட்ட அன்னிக்கி அப்படி பேசுனதுக்கு சாரி கேக்கணும் என்று நினைத்துக்கொண்டேன்.
 "சாரி அம்மு" என்றேன்
"xxxx " ஈட்டியால் குத்தியது போல் இருந்தது
"உனக்கு மட்டும் தான் கெட்டவார்த்த தெரியுமா..... அன்னிக்கே உன்ன இவ் டீசிங்க்ல உள்ள போட்டு இருக்கணும்.... அங்கிள்காக தான் அப்பா விட சொன்னாரு...." அடிபட்ட கண்களுடன் அவளை பார்த்தேன்
" இனிமே உன் friend வந்து உன் கிட்ட பேச சொல்லி torture பண்ணான்னு வச்சுக்க ரெண்டு பேரையும் தூக்கி உள்ள போட்டுருவேன்..... உனக்கு வியாதின்ன நீயே வச்சுக்க எதுக்கு என் தலையில கொண்டுவந்து கொட்டுறீங்க.... நா என்ன அன்னை தெரசாவா.... stupids....." எழுந்து போய் விட்டாள். நான் ஒன்றும் பேசவில்லை... காபி ஒன்று ஆர்டர் செய்து குடித்துக்கொண்டு இருந்தேன்.
தேவ் வந்து நடந்ததை அறிந்து குதித்து கொண்டிருந்தான்....
"மூடிட்டு உட்காரு..... " என்றேன்
"இதுவே பொண்ணு பாக்குறப்ப  தெரிஞ்சுருக்காம... கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சுருந்தா என்ன பண்ணிருப்பா....ஹவ் டேர்..உன்ன அப்படி திட்டறதுக்கு....??"
"விட்றா..... அவ சொன்னது நியாயம் தா.. கெட்டவார்த்த தான் காயத்ரி மந்தரம் மாறி நாளைக்கு 1008 சொல்றேனே..... மத்தவங்க சொல்லி ஒரு தடவ கேட்டா என்ன தப்பு....எதுக்கு நம் வியாதியை மத்தவங்க தலையில் கொட்டனும்.... இதை என் genetic parents நெனச்சு இருதாங்கன்னா எனக்கு இப்போ பிரச்சனை  இருந்துருக்காது. நா கல்யாணம் பன்னா இது என் பிள்ளைக்கு வரும்.... அப்புறம் அது பிள்ளைக்கு வரும்.... யாராவது ஒரு ஆள் இந்த சங்கலிய ஒடச்சு தானே ஆகணும்....??"

"என்ன சொல்ல வர...?"

"நா கல்யாணமே பண்ணிக்க போறதில்ல....."  என்று என் முடிவை சொன்னேன்

இதை சொன்ன தேதியில் இருந்து சரியாக இரண்டு வருடம் கழித்து ரூபாவை மனந்துக்கொண்டேன் . எனக்கு அவள் வாழ்வளித்தாள் அவளுக்கு நான் வாழ்வளித்தேன். இருவரும் சேர்ந்து 14மாத ஆனதை பெண் குழைந்தைக்கு வாழ்வளித்தோம். அரைகுறையாய் இருந்த ஒருவர் வாழ்கையை ஒருவர் முழுமை ஆக்கி கொண்டோம்., like a symbiotic relationship. வாழ்கையில் எதுவுமே நிரந்தர சாபமும் இல்லை நிரந்தர வரமும் இல்லை.

கிட்டத்தட்ட பத்து வருட உழைப்பிற்கு பின் என் மேனேஜர் எனக்கு மிக பெரிய பரிசு ஒன்று அளித்தார்.... வேறு கம்பெனி போக சொல்லி.... வந்தது கோபம் எனக்கு.... கைகளை ஆட்டி நெஞ்சை தட்டி.... முன்னால் இருந்த லேப்டாப்பை தூக்கி எறிந்தேன்...
"மிஸ்டர் வினோ.. கண்ட்ரோல் யூவர்செல்ப்..... உங்களுக்கு torrent இருக்குல.... ரிலாக்ஸ் தண்ணி குடிங்க....."
"tourette டா .....xxxxx xxxxx xxxxx......" என்று மனசார திட்டிவிட்டு வெளியே சிரித்துக்கொண்டே வந்தேன். சொன்னேன்ல வரமோ... சாபமோ... எல்லாம்
situation-அ பொறுத்துதான்.

Tuesday, January 13, 2015

தொரட்

பச்சை கலர் பட்டுப்புடவை.... தலை நிறையா மல்லிகைப்பூ.... கையில காபி இது போன்ற பெண் பார்க்கும் படலத்திற்கு தொடர்பான எந்த ஒரு அறிகுறியும் இல்லை.... எனக்கு எதிர் சோபாவில் கையில் செல் போனுடன் மங்கலான சுடிதாரில் அமர்ந்திருந்தாள் என் எதிர்கால மனைவி.
"அம்மு MBA முடுச்சுருக்கா... பெங்களுருலையே வேலை தேடிகிட்டு இருக்கோம்.... கேடச்சுடுச்சுன்னா ரெண்டு பேருமே வேலைப்பாக்கலாம்" ஆமோதிப்பது போல் தலை அசைத்து சிரித்தேன்.
பெரிய கண்கள்.... கலையான முகம்.... அழகாக இருந்ததாள்... மெல்லிசாக சிரித்தாள்.
"ஏன் அமைதியா இருக்கீங்க.. ஏதாவது பேசுங்க...."
"கேன.... XXX...xxxx ...xxxxxx....!!!!"
தொடர்ந்து நாலு வார்த்தை..... என் நண்பர்களிடம் கூட பேசிராத கெட்ட வார்த்தை முத்துக்கள் போல வந்து விழுந்தன. அம்முவின் பெரிய கண்கள் நிறைந்து வழிந்தது. எழுந்து உள்ளே ஓடிவிட்டாள்.
"பொண்ணு பாக்குறேன்னு கண்ட கண்டவனை உள்ளே விட்டு.... என்ன பேச்சு பேசுறான்.... வெளில போடா ராஸ்கல்..." பள்ளியில் வேலை பார்க்கும் அம்முவின் அம்மா கொண்டுவந்த காப்பியை மூஞ்சியில் உற்றி என்னை துரத்திவிட்டாள்.

அதற்குள் அப்பாவிற்கு விசயம் தெரிந்துவிட்டது.... போன் பண்ணி சிரித்தார்
"என்னடா பொண்ணு புடிக்கலையா.... அம்மா இனிமே உனக்கு பொன்னே பாக்க மாட்டேன்னு சொல்லிட்டா..... இனிமே நீயா லவ் பன்னி பாத்தா தான் உண்டு...!!!" என்றார் நேரில் வந்து பேசுவதாக சொல்லி போனை வைத்தேன்

தேவ் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்....
"25 வயசாயுருச்சு சொல்லிகிரமாறி பாஸ்ட்லையும் ஒன்னும் கிடையாது.... இனிமே ஒருதன்னும் பொண்ணு தர மாட்டான்.... future-உம் போச்சு.... என்னடா பண்றது....?"
என் கைகள் நடுங்கி கொண்டிருந்தது

"xxxx..... xxxx .... xxxx ...xxxxx ....." நான் கூறிய வார்த்தைகளை மீண்டும் சொல்லி
"கொல்லாம எப்பிடிடா விட்டாங்க..... இனிமே பொண்ணு பாக்க பையன் வரான்னு சொன்னவுடன்னே அந்த பொண்ணுக்கு என்னடா தோனும்.... எதுக்கும் follow-up பண்ணிக்க..... தற்கொலை முயற்சி ஏதாவது பண்ணிடபோகுது...பொண்ணு என்ன அவ்வளோ மோசமாவ இருந்துச்சு..? "

"நம்ம ODC பார்கவி இல்ல.... அவளைவிட நல்ல இருந்தாடா....!!" முகத்தை சுளித்து நெஞ்சில் தட்டிக்கொண்டேன் "ச்சே...!!"

"டேய் என்ன பண்ற.... டென்ஷன் ஆகாத...." என்று என் கையை பிடித்தான்

அவனை உதறிவிட்டு... மீண்டும் முகத்தை சுளித்து... நெஞ்சில் தட்டினேன்

"அந்த பொண்ணு கிட்ட சாரி கேக்கணும்..." என்றேன்

"ஒன்னும் வேணாம்.. எல்லா அங்கிள் பாத்துப்பாரு....." என்று மீண்டும் என் கையை இறுக பற்றினான்

முகத்தை சுளித்து.... தோளை குலுக்கி.... "கையை விடுடா...xxxx " என்றேன்

சற்று விலகி போய் என்னை ஆச்சர்யமாக பார்த்தான்

"மச்சா சாரி டா.... நான் எதுவுமே வேணும்ன்னே பன்னலடா...." கண்களை வேகமாக சிமிட்டிக்கொண்டே தரையில் மண்டியிட்டேன்.... திடீர்ன்னு என்னோமோ ஆச்சுடா.... ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுடா....XXXX "  கைகள் மீண்டும் நெஞ்சை தட்டின

வாயை கையால் பொத்திக்கொண்டு அழவே ஆரம்பித்துவிட்டேன்.
                                                                       
2

முகத்தை சுளித்து.... முத்தமிடுவது போல் உதட்டை குவித்து நாக்கை நீட்டி.... வலது கையால் மட்டும் அவ்வப்போது வணக்கம் வைத்துக்கொண்டிருந்தேன். தலையில் உள்ள ஆயிரக்கணக்கான சர்க்யுட்டுகளில் எது short ஆகியிருக்கு என்று பார்பதற்காக நரம்பியல் நிபுணர் டொமினிக்கை பார்க்க வந்தோம்
 சில நிமிட காத்திருப்புக்கு பின் வழுக்கை தலையுடன் சோடா பொட்டி போட்ட நெட்டையான மனிதர் வந்தார்.
" யார் patient..."
"பாத்த தெரிலய xxxxx...."
"வாட்.....!!!" ஒரே வார்த்தையில் வியர்த்துவிட்டது அவருக்கு, தலை பளபளக்க தொடங்கியது 
"சார் இது தான் சார் இவன் பிரச்சனையே...." என்றான் தேவ் 
நான் சாரில் அமர்ந்து சந்திரமுகியாக முழுசாக மாறிய ஜோதிகா போல் பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருந்தேன்.... கண்கள் தானாக சிமிட்டிகொள்ள.... தோள்கள் தானாக சிலிரித்து கைகளால் நெஞ்சை தட்டிக்கொண்டேன்.
"involuntary twitching..... obscene words...... ஹ்ம்ம் எத்தன வருசமா உங்களுக்கு இந்த பிரச்சன இருக்கு....?"
கைகளால் நடு விரலை காமித்தேன்.... டொமினிக் என்னை முறைத்தார்....
"ஒரு நாள்ன்னு சொல்றான் சார்...." என்றான் தேவ்
"சான்சே இல்லை என்றார் டொமினிக்....இந்த நோய் 20 வயசுக்கு மேல வரது ரொம்ப ரேர்..... இருபதுக்கு மேல வரவே வராதுன்னே சொல்லலாம்....."
"நம்புடா xxxxx....!!!"
"டேய் சும்மா இருடா.... சார் இவன் கூட நான் lkg-ல இருந்தே இருக்கேன்..... அவன் இந்த மாறி எல்லாம் இல்ல சார்..... !!!"
"ஹ்ம்ம்.... இருந்துருக்கலாம்.... நீங்க கவனிச்சுருக்கமாட்டீங்க..... சின்ன சின்ன symptoms ஆ வந்து இருக்கலாம்....இட்ஸ் genetic...."
"சார் இத சரி பண்ண முடியும் இல்ல....?"
"உங்க பாமிலில இது மாறி யாருக்கும் வந்திருக்கா?"
"பர்ர்ர்ர்....இல்ல...." தனிச்சையாக  வித்தியாசமான சப்தங்கள் எழுப்பினேன்
"90% genetic தான்.... மே பி... இருபத்தி அஞ்சு வயசுல வருதுன்னா environmental-அ கூட இருக்கலாம்.... இல்லன்னா தத்துபிள்ளையா கூட இருக்கலாம்..."
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது..... தத்துப்பிள்ளையா....?? நான் எண்ணுவதற்குள் அவர் தொடர்ந்தார்....
"இந்த நோய்க்கு பேரு தொரட் சின்றோம்.... இதுக்கு சரியான மருந்து இல்ல.... வேணும்னா symptom  வெளில தெரியாதமாரி மறைக்கலாம்..... ஆனா நோய குணப்படுத்த முடியாது......"

"டாக்டர்....xxxxx....." உதட்டை கடித்துக்கொண்டேன்
"இப்படியே பேசிட்டு இருந்தா... என்னால வேலைக்கு போக முடியாது.... பப்ளிக்கா நாலு இடத்துக்கு போக முடியாது.... என் சோசியல் லைப்பே காணாம போய்டுமே சார்...!!!" என்று அழுதேவிட்டேன்
"டோன்ட் வோரி மிஸ்டர்.... இதனால உயிருக்கோ உங்க அறிவுக்கோ எந்த ப்ரொப்லெமும் இல்ல.... நான் லெட்டெர் தரேன்.... யூ கேன் வொர்க்.... பட் சோசியல் லைப் நீங்க தான் பாத்துக்கணும்.... உங்களால இந்த டிக்ஸ் tics and twitches-அ  கண்ட்ரோல் பண்ண முடியும்..... முட்டி கிட்டு வர urine மாறி தான் இந்த symptoms.... பப்ளிக்கா இருக்கும் பொழுது எவ்வளோ கண்ட்ரோல் பண்ண முடியோமோ ட்ரை பண்ணுங்க.... முடியலையா.... யாருமில்லாத தனி இடத்துக்கு போய்... உங்க symptoms-அ எக்ஸ்பிரஸ் பண்ணிக்கங்க..... இந்த நோய்க்கு எந்த ட்ரீட்மேண்டும் இல்ல..... symptoms-அ கண்ட்ரோல் பன்ற psychotherapy மட்டும் தான் இருக்கு..... ஒன் month தெரபி எடுங்க.... இந்த நோய் தானா கட்டுக்குள்ள வந்துடும்....!!"

தொடரும்....