சிறுகதை

Wednesday, June 15, 2011

இளம்பிறை

மிக பெரிய சப்ட்வேர் கம்பெனியில் வேலை பர்க்கும் இளைங்கர்கள் சிலர் ஒன்று சேர்ந்தால் என்ன செய்வார்கள் படம் பார்பார்கள்,ஊர் சுற்றுவார்கள்,தாங்களிடம் இருக்கும் மிகுதியான பணத்தை என்ன செய்வதென்று அறியாமல் வெட்டியாய் விரயமக்குவர்.ஆனால் இவர்கள் ஏழ்மையில் இருக்கும் மாணவர்கள் படிக்க உதவி செய்கிறார்கள்.

"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்க்கு
எழுமையும் ஏமாப் புடைத்து"

”ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.", என்பதில் நம்பிக்கை கொண்ட infosys,accenture,tcs போன்ற மல்டி நேஷனல் கம்பேனிகளில் வேலை பார்க்கும் ஒரெ கல்லுரியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இளம்பிறை என்னும் அமைப்பை ஏற்படுத்தி கடந்த 2010-ம் ஆண்டு முதல் அவர்களால் இயன்ற வரை நிதியுதவி செய்தும் பிறரிடம் இருந்து நிதி திரட்டியும் கல்வியில் வய்ப்பு மறுக்கப்பட்ட சிறுவர்களுக்கு இலவசச் சீருடை,புத்தகம்,கல்வி கட்டணம் முதலியவைகளை வழங்கி உதவி வருகிறார்கள்.இன்றைய இளையசமுதாயதினரின் கல்வி நாளய இந்தியாவின் வளர்ச்சி என்பதில் நம்பிக்கை கொண்ட இவர்கள் புதிய தலைமுறையின் நம்பிக்கை நட்ச்சத்திரங்களாக ஜொலிக்கிறார்கள்.

இவர்களைப் போல் சாப்ட்வேர் மற்றும் ஐ.டி துறையில் இருக்கும் இளைஞர்கள் தங்களால் இயன்ற சிறு உதவியை செய்தால் இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டயாய் நிற்க்கும் அறியாமை என்னும் நோயை முற்றிலும் ஒழித்துவிடலாம்,இந்திய அரசின் முக்கிய இலக்கான அனைவருக்கும் கல்வி என்பதை மிக எளிதில் அடைந்துவிடலாம்.

http://www.facebook.com/Ilampirai2010?sk=info
http://ilampirai.8m.com/about_us.html

No comments: