அடுத்த இரண்டு மணி நேரம் காத்திருந்து பொறுக்காமல்...
அண்ணாமலை ஆட்டோவை கைகாட்டி நிப்பாட்டினார்....
அவள் அவர் கைகளை தட்டிவிட்டு முறைத்தாள்...
"உனக்கு இல்ல...உனக்கு இல்ல.. எனக்கு... ரெண்டு பேறும் இப்படியே நின்னு மக்கி மண்ணா போங்க... நா போறேன்...."
ஆட்டோவில் ஏறி ஆடோகாரரிடம் இடத்தை புரியவைத்து.. பேரம் பேசி முடித்து டாட்டா காமிப்பதற்காக என் பக்கம் திரும்பினார்.... அதற்குள் அவர் பக்கத்தில் அவளது சின்ன சூட்கேசை தினித்திருந்தேன்....!!!
"சொல்லிர்கலாம்ல..... அவ வந்தப்பயே சொல்லிர்கலாம்ல... லக்கேஜை எடுத்துட்டு போ.. நாங்க வரோம்னு சொல்லிருந்தா போயிருக்க மாட்டேனா.... நைட்டு புல்லா நிக்கவச்சியே அது கூட பாராவயில்ல.... ஆனா அவ வந்ததுக்கு அப்புறம் ரெண்டுமநேரம் நிக்கவச்சியே..... டேய் டேய்..."
"அண்ணே ...."
"நோன்னே... இனிமே ஓ வாயால நோன்னேனு சொன்னே...." முகத்தில் குத்த வந்தார்....
"அண்ணே அண்ணேன்னு சொல்லி ஊறுகா ஆக்கிடியேடா..... அண்ணே பாவம் உன்ன சும்மா விடாது...." ஆட்டோவை கிளப்பிக்கொண்டு பறந்து விட்டார்.
அண்ணன் பாவம் வெப்பன்னாக மாறி தாக்கியது.....!!!
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் பேச ஆரம்பித்தேன் .... அவள் என்னை விட்டு பிரிந்ததற்கு கூறிய காரணம் முட்டாள்தனமாக இருந்தது...
"நீ என்ன லூசா.. இல்ல என்ன லூஸ்ஸாக்க பாக்குறியா...."
"யே சத்தியமாப்பா.... எங்கண்ணன நம்பித்தான் இப்படி பண்ணேன்.... கடைசில கால வாரிட்டான்".
"இப்போ வந்து ஏதாவது சாக்கு சொல்லி சமாளிச்சிக்கலாம்.... சிரிச்சிட்டு எத சொன்னாலும் நம்பிடுவான்னு நெனச்சிட்டு வந்தியா...."
அழுதாள்.... (அய்யோ.... கோவிச்சுட்டு திரும்ப போய்டகூடாது கடவுளே...)
அழுதுகொண்டே...
"ஏ.. அண்ணே அன்னிக்கு நம்பள பாத்துட்டு... வேணா விட்டுடுன்னு சொல்லி என்ன அடிக்கல்லாம் செஞ்சான்... நான் ஒதுக்கவே இல்ல.... அப்பாட்ட சொல்லுவேன்னு சொன்னான்.... சொல்லிகோன்னு சொல்லிட்டேன்.... அப்புறம்... அப்புறம்... நீ வந்து என்ன விட்டுட்டு போய்டுவ..... பிரச்சன வந்தா ஓடிடுவேன்னு சொன்னான்....."
"நான் எ கோபி.. அப்படியெல்லாம் பண்ண மாட்டான்... அவன பத்தி எவ்ளோ தெரியும் உனக்குன்னு சண்ட போட்டேன்....."
ஏன் முகத்தில் பெருமிதம்... அவள் மேலும்
"அப்போ.... அப்போ அவன் நீ போய்ட மாட்டேன்னு என்ன நிச்சயம்ன்னு கேட்டான்.... நா வந்து எனக்கு தெரியும் அவன் போகமாட்டானு சொன்னேன்.. அதுக்கு அவன் இப்படி கேன மாறி பேசாத....."
"என்ன..?!" என்றேன்
"பச்ச்..." கண்களை துடைத்துக்கொண்டு... "அப்படித்தான் சொன்னான்... கேன மாறி பேசாத.... இப்படி வீட்ல சொன்னா யாரு ஒத்துப்பாங்க.... அவன் உன்ன லவ் பண்றான்னு.. உனக்கு தெரிஞ்சா பத்தாது.... நீ நிரூபிக்கணும்.. அப்பாட்ட.. அம்மாட்ட... இப்படி சொன்னா சத்தியமா உன் லவ்வு புட்டுக்கும்னு சொல்லிட்டான்.... "
"ஹ்ம்ம்ம்ம் அப்புறம்....."
"அவங்க ஏதோ நீ சொல்லறத எல்லாம் சின்ன புள்ள பொம்ம கேட்டு அழுறத கண்டுக்காம விட்ற மாறி மதிக்கவே மாட்டாங்க....அப்படினான்....."
"இப்போ என்ன பண்றதுன்னு கேட்டேன்... அவன் தான் உங்கூட ஒரு வருஷம் பேசாத பழகாத.... அவன் ஒரு வருஷத்துக்கு அப்புறமும் இப்ட்டியே இருந்தானா கண்டிப்பா நா உனக்கு சப்போர்ட் பண்ணி உன் லவ்வ சேத்து வைகிறேன்னு சொன்னான்."
"அப்புறம் என்ன.... இப்போ தான் ஒருவருஷம் ஆயிடுச்சே.. அவன் என்ன சொல்றான்...."
"ஏமாத்திட்டான்... இன்னும் மறக்கலையா.. மறந்துடு அப்படிங்கறான்...."
"அவன் தான் உன்ன பொம்மைக்கு ஏமாத்துற மாறி.. இதே பொம்மைய அப்புறமா வங்கிதரென்னு சொல்லி ஏமாத்திருக்கான்....."
"ஆமா கோபி.. அதான் இங்க வந்துட்டேன்....."
"லூசு வீட்ல தெரியுமா.. "
தலையை ஆட்டினாள்....
" பொண்ணுங்க மட்டும் ஒன்னும் பண்ணாம லவ் மட்டும் பண்ணிட்டு இருந்தீங்கன்னா.. இந்நேரம் பல காதல் ஜெய்சிருக்கும்... அறிவு ஜீவி மாறி பண்ணறேன்னு செமையா சொதுபிட்டியே.... ஏற்கனவே பண்ணது ஒரு தப்பு.. இப்போ அத விட பெரிய தப்பு பண்ற.. முதல்ல வீட்டுக்கு கிளம்பு ... நா வந்து பேசறேன்....."
"ஐயோ கோபி.... அவன் சொல்றத தான் எங்க வீட்ல கேப்பாங்க..... சரியான பழம்... நான் சொல்றத காதுலையே வாங்க மாட்டாங்க..... "
"அதெல்லாம் நான் பாத்துக்குறேன்... இப்போ நீ கிளம்புற அவ்ளோதான்....."
முறைத்தால்.. சினுங்கினாள்.. இதுவே நாம் பார்ப்பது கடைசியாக கூட இருக்கலாம் என்று மிரட்டினாள்... 11 மணிக்கு மும்பையிலிருந்து வரும் பஸ்சில் அவளுக்கு டிக்கெட் போட்டுவிட்டேன்.
கோவமாக நின்று கொண்டிருந்தாள்..... நான் அவளிடம் "ஆமா நீ பாட்டுக்கு எந்த தைரியதுல்ல ஒரு வருஷம் பேசாம இருந்த.. நா இங்கயே ஏதாவது பொண்ண கரெக்ட் பண்ணி செட்டில் ஆயிருந்தேனா என்ன பண்ணிருப்ப...."
சிரித்தாள் ..." நீயா...!!! 200% நம்பிக்கை.. உனக்கு அந்த அளவுக்கு திறம இல்ல கோபி..."
"ஹெல்ல்லோ.. என்ன.. எவ்ளோ பொண்ணுங்க வந்தாங்க தெரியுமா... இனிமே இந்த பொண்ணுங்க இம்சையே வேணாமுன்னு நானே தான் தள்ளி போனேன்...."
"குட் ஜோக்...நா இருக்கும் போதே போய் வழிவ...."
"நிஷா.... ஞாபகம் இருக்க நிஷா..." அவள் முகம் மாறியது
"அவள்ட்ட பேசாதேன்னு சொன்னேன்ல.. பேசினியா....?"
அப்பொழுது பெங்களூரில் இருந்து வந்த பஸ்சில் கடலை கார்த்தி வந்து இறங்கினான். அவனை பார்த்ததும் அவனை வெறுப்பேற்ற அவள் தோளில் கை போட்டேன்.... அவன் நேரே எங்களை நோக்கி வந்தான்....
பேச்சை மாற்றி...
"ஏன் உன் அண்ணன் நம்ம காதல் தெரிந்தபோதும் வீட்டிற்கும் சொல்லாமல்..என்கிட்டயும் போன் போட்டு கேட்ட வார்த்தையில் திட்டாமல்... உன்கிட்ட சதி வலையை வீசி.. உன்னை விழவைத்து... நம்மை ஏன் பிரிக்க வேண்டும்" என்று நான் கேட்டு கொண்டுருக்கும் பொழுது பக்கத்தில் நெருங்கிவிட்டான்.
"காயத்ரி...."
திரும்பினாள்...கடலையை பார்த்தவுடன் என் கைகளை தட்டிவிட்டு
"அண்ணா ....." என்றாள்.
நான் கேட்ட கேள்விக்கு பதில் அவள் சொல்லாமலேயே கிடைத்து விட்டது...!!
ஒரு பிளாஷ் பாக் போல் பல நினைவுகள் ஓடியது....
அன்று (ஒரு வருடத்திற்கு முன்பு) இவள் கடலையை பார்க்கவில்லை.. நான் பார்த்தேன்.. பார்த்த பிறகுதான்.... பிளாக் போரேச்ட்டை அவளுக்கு ஊட்டிவிட்டேன்... கடுப்பாகி போனான். அவன் சான்ஸ் கெடச்சா என்னை கொலை கூட பண்ணிடுவான் கொஞ்சம் நஞ்சமா பண்ணிருக்கோம் அவனுக்கு. நம்ம முன்னாடி சின்ன பசங்களா இருந்தவைங்க நம்ம முன்னாடியே பெரியாளுங்களா ஆயிடுரானுங்க. final இயர்ல கடலை சந்தனா ரகுநாத்தை காதலிப்பதாக ஒரு தகவல் கெடச்சு நான், பிரபா, ஹரி மூவரும் ஷாக் ஆனோம் . நான் பிரபா ஹரி மூவரும் தனி தனியாக ஒரு ஆளை சைட் அடித்துக்கொண்டிருக்க நாங்கள் மூவரும் சேர்ந்து சைட் அடிக்கும் குரூப் பிகர் இந்த சந்தனா.அதாவது எப்படினா அந்த பொண்ணுங்ககிட்ட நாங்களும் பேச மாட்டோம் மத்தவங்களையும் பேசவிடமட்டோம்.
அன்று இரவு கல்லூரிக்கு எதிர்த்தாப்பில் இருக்கும் பாட்டி கடைக்கு கொத்து பரோட்டா சாப்பிட வந்த அவனை சந்துக்குள் இழுத்து மோந்து மோந்தேன்று மொக்கி....
"அவ எங்க குரூப் பிகர்.... நாங்க தனி தனியா பாக்குற பிகருங்கள பக்கனும்னாலே அதுக்குன்னு தனியா ஒரு qualification வேணும்... நாங்க மூணு பேரும் பாக்குற பொண்ணுனா அந்த லெவல்லே தனி....பாப்பியா.. பாப்பியா..."
பாக்கமாட்டேன்.. பாக்கமாட்டேனு அலறிகிட்டு ஓடினான்.அப்புறம் சந்தனாவும் வேறு ஒரு அஜானுபாகுவை காதலிக்க எங்கள் குரூப் பிகரை மாற்றிவிட்டோம்.
இன்று நான் எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல் என்னை தள்ளி விட்டு அவளை இழுத்துக்கொண்டு பஸ்சில் ஏறும் பொழுது அவன் சொன்னது
"என்னோட சிஸ்டர்ர லவ் பண்ணனும் நா அதுக்குன்னு ஒரு qualification வேணும்"
நான் காஞ்சனா சரதுகுமார் போல் "விடமாட்டேன்.....!!!" என்று அலறினேன்.

No comments:
Post a Comment