அடுத்த நாள் முருகன் முறுக்குகளை விற்றுவிட்டு சீக்கிரமே திரும்பி வந்துக்கொண்டிருந்தான். வழியில் ஆலமரத்தடியில் சென்று தாத்தாவை தேடினான்... அவரது பையும் தடியும் இருந்தது அவரை காணவில்லை...
"தாத்தா... தாத்தா..."
பதில்லில்லை.... கொஞ்சம் தள்ளி சுற்றும் முற்றும் பார்த்தான்.... பிறகுஅவரது பைக்குள் இருந்த காகிதங்களை எடுத்துப் பார்த்தான்..... நிறைய படங்கள் வரையப்படிருந்தன..... அதில் பல் கோவில்கள்.... கோவிலின் கோபுரம்... கோபுரத்தின் கலசம்.. அதில் அமர்ந்திருக்கும் புறா.... கோபுரத்தில் இருக்கும் சிலைகள்..... வெளியில் உள்ள பிள்ளையாரை கும்பிடும் பட்டு சேலை அணிந்த பெண்.. கூட வேடிக்கை பார்க்கும் சிறுவன்.... கிழக்கு வீதியில் பவனி வரும் உற்சவர்.... வெள்ளியிலிருந்து தெரியும் கோவிலின் உள்புறம்.. அனைத்தும் கோவில் கோவில் கோவில்...!!!!
அப்பொழுது வந்த தாத்தா படங்களை அவனிடம் இருந்து பிடுங்கி கொண்டார் "என் கிட்ட இருக்க ஒரே சொத்து இது தான்.... இதையும் எடுத்துட்டு போய்டாதீங்க சாமி..." அவர் முகத்தில் இன்னும் கொஞ்சம் பயம் ஒட்டிக்கிடந்ததது. முருகன் அவரை பாவமாய் பார்த்தான்..... தனது பைக்குள் கைவிட்டு வெள்ளை காகிதத்தையும் ஒரு பென்சில்லையும் எடுத்து அவரிடம் கொடுத்தான்......
"உனக்கு தான் வாங்கி வந்தேன் வச்சுக்கோ..."
"எனக்கா.." என்க் கேட்டார்..
"ஹ்ம்ம் உங்களுக்குத்தான்..... இதுல வரைஞ்சா இன்னும் நல்லாருக்கும் எங்கண்ணன் இதுல தான் வரையும்..."
அவர் சிரித்தார்...... "நீ போ.. போ.. யாராவது பத்தா அடிப்பாங்க..."
"என்ன யாரும் அடிக்க மாட்டாங்க.... நீ இங்க என்ன பண்ற..."
"உன்ன யாரு அடிப்பா.. என்ன தான் அடிப்பாங்க...போ போ...."
"காகிதம் எல்லாம் வாங்கி கொடுத்துருக்கேன் ஒரு நன்றி கூட இல்லயா..."
"எனக்கு எதுவும் வேணாம் நீ போ சாமி..."
"தண்ணியாவது கொடேன் தாகமா இருக்கு..."
பானையில் வைத்திருந்த தண்ணீரை மொண்டு தந்தார்.....
"நீ என்ன கோவில் கோவிலா வரஞ்சு இருக்க....."
"கோவில்...." என்று கூறி பேரு மூச்சு விட்டார்
"அது தான் என் கனவு...."
"என்ன சொல்ற......"
"நீ கோவிலுக்கு உள்ள போய் இருக்கியா..."
"இது என்ன கேள்வி நிறையா தடவ போய் இருக்கேன்...."
"எப்படி இருக்கும்.... ஆள் உயரத்துக்கு தத்ரூபமா சிலைங்க.... ஒரு வித தெய்வீக நறுமணம்..... நாதஸ்வரம்.. மிருதங்கம்..... மேகங்களுக்கு நடுவே இருக்குற மாறி புகைகளுக்கு நடுவே எம்பெருமான்.... சொர்க்கம் மாறி இருக்குமா..." மெய் மறந்து கூறிக்கொண்டிருந்தார்.
முருகன் பல தடவை சென்று இருந்தாலும் கோவிலை இது போல் ரசனையுடன் ஒரு போதும் அவன் அணுகியதில்லை. ஆச்சர்யத்துடன் அவரிடம் கேட்டான்
"நீ கோவிலுக்குள்ள போனதே இல்லையா..."
அவர் முகத்தில் சோகம் பரவியது
"இன்னும் போனதில்லை...."
அப்பொழுது முருகன் வயது மதிக்கத்தக்க ஒருவன் ஓடி வந்தான்.. தாத்தாவை ஏற இறங்க ஒரு மாதிரி பாத்து விட்டு "டேய் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க.. உன் அக்கா உன்ன ஊர் பூரா தேடிகிட்டு இருக்கு.."
"ஏன் என்னவாம்.."
"உங்கண்ணன் வந்துட்டானாம்.... தென்னந்திட்டுல ஏதோ கூட்டமாம்..."
இதை கேட்ட மறு நொடி முருகன் அங்கில்லை.. தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தான்.
முருகனின் அக்கா மனோன்மணி அவனிடம் தூக்கு கொடுத்தாள்..கணேஷை கேட்டதாக சொன்னாள்... பாத்து போ என்றாள். ஜோல்னா பையில் புது சட்டை சகிதம் அதிரசத்துடன் விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தான்.
ஊருக்கு வெளியே கொஞ்சம் தூரம் நடந்தவுடன் அக்காள் சொன்னபடி சிகப்புத் துண்டுடன் ஒருவர் காத்திருந்தார். முருகனை வாய்க்கால் அருகே அழைத்துச்சென்று ஒரு படகில் ஏற்றினார். படகு தில்லைக் காடுகளின் ஊடே மிதந்து சென்றது. முருகனுக்கு அவன் அண்ணனை காணும் ஆர்வம் கட்டுபடுத்த முடியாத எல்லையை கடந்திருந்தது. சில நிமிட பயணத்திற்கு பிறகு கடற்கரை தெரிந்தது. கரையில் நான்கைந்து பேர் புகைத்துக்கொண்டிருந்தார்கள். கரையை அடைந்தவுடன் அவனுடன் வந்தவர் அதோ அங்கே என்று தூரத்தில் நின்று இருந்த கூட்டத்தை காமித்தார்.
கதிரவன் மேற்கே மறைய துவங்கியதால் இருட்ட துவங்கி இருந்தது. முருகன் கடற்கரை மணலில் தடுமாறி வழியில் இருந்த நண்டுகளை வளைக்குள் விரட்டிக்கொண்டு அந்த கூட்டத்தை நோக்கி ஓடினான். தீபந்ததின் வெளிச்சத்தில் கணேஷின் முகம் மற்றொரு பந்தம் போல் சுவ்வாலை வீசிக்கொண்டு இருந்தது.இரண்டு ஆண்டுகளில் முழுவதுமாய் மாறி இருந்தான். முகம் முழுவதையும் தாடி மறைத்திருந்தது, பாரதி மீசை அதே பரந்த மார்பு கணீர் குரல். கூட்டத்தினரிடம் பேசிக்கொண்டிருந்த அவன் முருகனை கண்டதும் லேசாய் புன்முரிந்தான். கூட்டத்தில் மகிழ்ச்சி நிரம்பி இருந்தது.
"நாம் மகிழ்ந்து கொண்டாட வேண்டிய தருணம்.. 200 ஆண்டுகளாய் நாம் போராடி எட்டிய தருணம்.. இன்னும் சில தினங்களில் நமக்கு சுதந்திரம்...."
கூட்டம் சந்தோஷ முழக்கமிட்டது.....
"இவ்வுலகை ஆட்சி செய்தவர்கள் நாம்... 200 ஆண்டுகளுக்கு முன் அனைவரும் பார்த்துவிடவேண்டும் என்று ஆசை பட்ட நாடு நம் பாரதம்.... உலகுக்கே பண்டங்களை ஏற்றுமதி செய்தவர்கள் நாம்..... களவு இல்லாமல் ஜாதி சண்டை இல்லாமல் கட்சிகள் இல்லாமல் ஒருவருக்கொருவர் அமைதியாய் வாழ்ந்து கொண்டிருந்தோம்.... அழகு ஆபத்து தான்.... அழகும் அமைதியும் பேராபத்து.... இன்று வடக்கே ஜாதி கலவரத்தில், இங்கே உணவு பஞ்சத்தில் பலர் மடிவதை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.... ஏன் ஏன்..???"
"ஒண்ட வந்த பிடாரிகள்.. எல்லாம் அந்த வெள்ளைக்கார பேய்களால் தான்" என்று கத்தினர்
"இல்லை.." என்று கணேஷ் சொன்ன பொழுது நிசப்தம் நிலவியது.
"அவர்களால் மட்டும் இல்லை.... பல பரிசுகளுடன் நாய் போல வாலை ஆட்டிக்கொண்டு வந்த ஆங்கிலேயர்களை பண்டைய மரபு விருந்தோம்பலின் படி வாழ்த்தி வரவேற்றோம்.... உபசரித்தோம் நாம்.... வந்தவர்கள் காலை சுற்றிய பாம்பாய் நம்மை அடிமை படுத்த நினைத்த பொழுது வெகுண்டு எழுந்தோம். போராடி பல தியாகிகள் உயிர் கொடுத்து நமக்கு நமது உரிமையை நமது பெருமையை தந்துள்ளனர்... நாம் கொண்டாட வேண்டும் இன்று மட்டும் அல்ல என்றும் தினம் தினம் நமது சுதந்திரத்தை கொண்டாட வேண்டும்.."
"ஆம் கொண்டாட வேண்டும்.. கொண்டாட வேண்டும்.." என்று சிலர் எழுந்து ஆட ஆரம்பித்தனர். வேறு சிலர் "ஜெய் ஹிந்த்", "வந்தே மாதரம்" என்று முழக்கமிட்டனர் . அவர்களை கை அசைத்து அமரச் சொன்னான் கணேஷ்.
"கொண்டாடலாம்... கொண்டாடினால் மட்டும் போதுமா..... அன்று இருந்த அந்த அமைதி இன்றும் இருக்கிறதா நம்மிடம்..."
"இல்லை இல்லை.."
"ஆம்.. இல்லை தான்... முன் போன்ற வளமான நாடாக நமது பாரதம் இல்லை.... அமைதி இல்லை..... கொட்டிக்கொடுக்கும் வாணிபம் இல்லை...... ஆனால் நம்மிடம் அன்று இல்லாதா ஒன்று இன்று இருக்கிறது அது என்ன..??"
"அரசாங்கம்..."
"ராணுவம்.."
என்று பலக் குரல்கள்
"நம்மிடம் இப்பொழுது ஒன்று பட்ட இந்தியா உள்ளது..... அது மட்டும் போதுமா.. சுதந்திரம் பெற்று விட்டால் நமது போராட்டம் முற்று பெற்று விடுமா.. இல்லை இனி தான் நாம் உண்மையான போராட்டத்தை தொடங்கவேண்டும்..... நமது பெருமையை நமது கலாசாரத்தை மீண்டும் புத்துயிர் கொள்ள போராட வேண்டும்..... சுதந்திரம் வாங்கி சுயாட்சி செய்து என்னத்த கிழிக்க போகிறீர்கள் .. ஒருவருக்குள் ஒருவர் சண்டை இட்டு மாண்டு மடிய போகிறீர்கள்..என்று எள்ளி நகை ஆடுகிறார்கள் ஆங்கிலேயர்கள்.... அவர்கள் முகத்தில் மண்ணை பூச வேண்டும்..."
"ஆம் ஆம்..."
"நம் நாட்டு பெருமையை காக்க நெல்லையிலே ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் தமிழன்... பரங்கியரை எதிர்த்து போராடி.. சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு..கடைசி வரையில் அடிபணியாமல் மாண்ட சிவா தமிழன்... சிரத்திலே ஈடி ஈடியென அடி விழுந்த போதிலும் கரத்தில் இருந்து நமது தேசியக்கொடியை விடாமல் பிடித்த குமரன் தமிழன்...கட்டபொம்மன் தமிழன்.... புலித்தேவன் தமிழன்.... அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ன.... நமது மானதிற்க்காகவும் வீரதிற்க்காகவும் நாட்டிற்காகவும் போராடிய அனைவருக்கும் நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா.."
"என்ன என்ன...???"
"நமது நாட்டின் பெருமையை மீட்டு கொணர வேண்டும்... நம்மை பீடித்த விச பேய் ஆகிய பரங்கியரின் சுய ரூபத்தை நாம் உணரவே இரண்டு நூற்றாண்டு ஓடி விட்டது.. .பரங்கியனை ஒழிக்கவே மேலும் ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது... நமது நாட்டில் இன்னும் ஜாதி மதம்... மற்றும் அதன் பெயரில் தீண்டாமை என்னும் பல பெரிய பேய்களும் பல சின்ன பேய்களும் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாய் தின்று கொழித்து மிக பெரியதாய் வளர்ந்துள்ளன...அவற்றை விரட்ட எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அவற்றை விரட்டும் வரை நம் போராட்டம் ஓயாது நண்பர்களே ஓயாது... இனி கோவில்கள் மட்டும் அல்ல சட்டமன்றகளும் அனைவருக்கும் சமமே என்பதை அனைவருக்கும் புரிய வையுங்கள்... நண்பர்களே இந்நேரத்தில் உங்களுக்கு ஒரு கதை சொல்ல ஆசைப்படுகிறேன்... அது ஒரு அழகான கிராமம் அந்த கிராமத்தில் கண் பார்வையற்ற சிறுமி ஒருத்தி இருந்தாள்.. அவளால் கதிரவனின் வெப்பத்தை உணரமுடியும்... தென்றலின் மென்மையை அனுபவிக்கமுடியும்.... தண்ணீரின் சல சலப்பை கேட்கமுடியும்...குயிலினும் இனிமையாய் பாட முடியும்... அனைத்தும் முடிந்த அவளால் இப்பூவுலகை பார்க்கமுடியாது வேதனைப்பட்டாள். அவள் தினமும் கடவுளிடம் வேண்டினாள் ஒரு நாள் ஆவது கண் பார்வை கொடுங்கள் என்று.. கடவுள் மனமிரங்கி ஒரே ஒரு நாள் இவ்வுலகை ரசிக்க வரம் தந்தார்... அச்சிறுமியும் அந்த ஒரு நாளில் விளையாடும் மானுடன் துள்ளி குதித்தாள்... மயிலுடன் ஆடினாள்... மீனுடன் நீந்தினாள்.... கதிரவனின் செம்மையைப் பார்த்து வண்ணம் கொண்டாள்.. மேகங்களுடன் மிதந்தாள்.. அந்த நாள் முடிவுற்றது.. சூரியன் மறைந்து இருள் கவ்விய நேரம் அவள் வாழ்விலும் நீங்கா இருள் சூழ்ந்தது.... அப்பொழுது கடவுள் அவளிடம் சந்தோசமா எனக்கேட்டார்.. அதற்கு அவள் விம்மி அழத் துவங்கினாள்..."ஏனம்மா அழுகிறாய்..?" என்று கேட்டதற்கு.... இது வரை எதையோ நான் இழக்கிறேன் என்று எண்ணி வருந்திக்கொண்டிருந்தேன்.. இன்று நான் எதை இழக்கிறேன் என்று தெரிந்து கொண்டேன்..முன்னை விட வருத்தமாக உள்ளது என்றாள்.... நண்பர்களே நம் மக்கள் எதை இழந்துள்ளார்கள் என்பதை புரிய வையுங்கள்..... நம் நாடு தானே முன்னேறும்.. அவர்கள் கண்களை திறக்கும் கடவுளாய் இருங்கள்....!!!"

No comments:
Post a Comment