3. உற்ற நண்பன்
பொதுவாக காரை என்று முடியும் ஊர்களை கண்களை மூடிக்கொண்டு கடற்கரை ஊர்கள் என்று கூறி விடலாம். ஏழ்குணகாரை நாடுகள் என்பது கடற்கரையில் இருந்த ஏழு நாடுகளை குறிப்பதுவே. அக்காலத்தில் மிக முக்கிய மற்றும் பெரிய குடியேற்றங்கள் கடற்கரையை ஒட்டி இருந்தது. அதற்கு முக்கிய காரணம் ஓங்கி உயர்ந்த மலைகளும்.. அடர்ந்த காடுகளும் தான். கரடு முரடான காடுகளில் செங்குத்து சரிவுகளில் ஓடி வரும் ஆறுகளும் அவ்வற்றை சுற்றி மண்டியிருந்த காடுகளும் அதில் இருந்த அபாயகரமான வன விலங்குகளும் குடியேறுவதை கடினமாக செய்து இருந்தது. அப்படிப்பட்ட கடினமான புகலிடத்தில் வாழ்ந்தது புங்கனின் ஊர் கால்னாட்டன் காடு.
அவ்வூர் மக்களின் ஒவ்வொரு நாளும் கேள்விக்குறியாகத்தான் இருந்தது. திடீர் என்று தாக்கி ஊரை சூறையாடும் நாடடோடி கும்பல்கள், புலிகளின் வேட்டை, பொங்கி வரும் காட்டாற்று என்று அவ்வூர் பதுகாப்பற்றதாகவே இருந்ததது. இருந்தும் அவர்களுக்கு கடற்கரையில் இருப்பதை விட காட்டில் வாழ்வது அவ்வளவு ஆபத்து இல்லை என்றே கருதினர். கடல்கள் என்றாவது ஒரு நாள் மலைகள் போல எழுந்து..... விரிந்து கிடக்கும் மதுரையை கூட விழுங்கி விடும் என்று அவர்கள் பயந்தனர். அவர்களுக்கு உயரமான இடம் பாதுகாப்பானதாக பட்டது.
அவ்வூர் மக்களின் ஒவ்வொரு நாளும் கேள்விக்குறியாகத்தான் இருந்தது. திடீர் என்று தாக்கி ஊரை சூறையாடும் நாடடோடி கும்பல்கள், புலிகளின் வேட்டை, பொங்கி வரும் காட்டாற்று என்று அவ்வூர் பதுகாப்பற்றதாகவே இருந்ததது. இருந்தும் அவர்களுக்கு கடற்கரையில் இருப்பதை விட காட்டில் வாழ்வது அவ்வளவு ஆபத்து இல்லை என்றே கருதினர். கடல்கள் என்றாவது ஒரு நாள் மலைகள் போல எழுந்து..... விரிந்து கிடக்கும் மதுரையை கூட விழுங்கி விடும் என்று அவர்கள் பயந்தனர். அவர்களுக்கு உயரமான இடம் பாதுகாப்பானதாக பட்டது.
ஏதேச்சையாக அந்த பக்கம் வந்த ராபதேஸ்வரிடம் தங்கள் குறைகளை கூறி புலம்பினர். அப்போது அவர் அவர்களுக்கு காட்டிலேயே புதிதாக இடம் ஒன்றை தேர்வு செய்து சுற்றி அரண் அமைந்த ஊரை ஏற்படுத்தினார். மேலும் அவர்கள் ஊரிலேயே வீரனான புங்கனை தேர்ந்தெடுத்து அவருக்கு சிஷ்யனாக என்றும் கேட்டுக்கொண்டனர். ராபதேஸ்வரரும் அதை ஏற்றுக்கொண்டு அவனுக்கு முழு பயிற்சி அளித்து சமயத்தில் மீண்டும் கால்னாட்டன் காட்டிற்கு அனுப்புவதாக வாக்களித்தார்.
அன்று வரை தன் அத்தை மகளை காதலித்து திருமணதிற்கு காத்திருந்த இளைஞன் புங்கன் அவளை தனக்காக காத்திருக்கும்படிகூறி விட்டு தன் ஊருக்காக விடைபெற்று வந்து இத்துடன் மூன்று ஆண்டுகள் ஆகிறது. இத்துணை நாள்களாக பயிற்சி முடிந்ததும் ஊருக்கு செல்லலாம் என்றும் எத்தனை தூரம் விரைவாக கற்றுகொண்டால், அத்தனை விரைவாக தன் காதலியை காணலாம் என்று எண்ணியிருந்த புங்கன் ராபதேஷ்வரர் தன்னை கபடாபுரதிற்கு செல்ல கட்டளை இட்டதும் கொஞ்சம் ஒடிந்து தான் போனான். இருந்தும் குருவின் வார்த்தைக்குள் ஆயிரம் காரணம் ஒழிந்திருக்கும் என்று எண்ணியவனாய் மகிழ்ச்சியாக கிளம்பினான்.
கூடவே இருந்து, பழகி பயிற்சி பெற்று உற்ற நண்பர்களாய் இருந்த அவர்கள், பயிற்சி முடிந்தவுடன் மதுரை படைகளில் ஒன்றாக சேரப்போகிறோம் என்று எண்ணி இருந்தனர். இப்படி நால்வரையும் நான்கு மூலைக்கு அள்ளி தெளிப்பார் என்று அவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தது வியப்பில்லை.
"போங்கள்.." என்று ராபதேஸ்வரர் உத்தரவிட்ட உடன் அடுத்த கருகல்லிலேயே நால்வரும் விடை பெற்று கிளம்பி விட்டனர். நல்லி தெற்கு திசையில் பயணம் மேற்கொண்டான்... உதயா கிழக்கே சென்று தன் அன்னையை பார்த்துவிட்டு வடக்கே பயணப்பட திட்டமிட்டுள்ளான்.... புங்கனும் நன்னனும் அடர்ந்த காடுகளின் ஊடே புரவிகளை மெதுவாக ஓடவிட்டுக்கொண்டு பேசிக்கொண்டே சென்றனர். நன்னன் கபடபுரத்தை தாண்டி எல்லையில் காவல் இருக்கும் நாகர் படைக்கு செல்லவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களாக பயணப்பட்டதால் அவர்கள் புரவிகள் களைப்படைந்திருந்தாலும் அவர்கள் என்னவோ உற்சாகமாகத்தான் இருந்தார்கள்.
"நேராக கபடாபுரம் செல்கிறாயே... இந்த முறையும் உன் அத்தை மகளை சென்று பார்க்கவில்லையா...." எனக் கேட்டான் நன்னன்.
"அங்கே போனால்.. கல்யாணாம் விருந்து என்று சில மாதம் தங்க வேண்டி வரும் .... காலத்தில் கபடாபுரம் சென்று சேர முடியாது..."
"ஒருவழி செய்... உன் அத்தை மகளை அங்கே வர சொல்லிவிடு.... இன்னும் தாமதித்தால் வேறு யாரையோ மணந்து கொள்ள போகிறாள்" என்று நகைத்தான் நன்னன்.
"உனக்கு பெண்களிடம் அதிகம் பழக்கம் இல்லை அல்லவா அதான் இப்படி பேசுகிறாய்.... அவள் என்னை மணம்புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் நான் மேரு மலையை தாண்டி போனாலும் தொடர்ந்து வந்து என்னை பிடித்து விடுவாள்...."
"ஒரு வேளை அவளுக்கு இந்நேரம் உன்னை பிடிக்கவில்லை போயிருந்தால்...."
புங்கன் பெரு மூச்சு விட்டு.."இந்நேரம் இடிப்பில் பிள்ளையை சுமந்து கொண்டிருப்பாள்...." என்று முடித்தவன் மேலும்..." அதனால் பாதகம் இல்லை.. என் அத்தைக்கு என்னை பிடிக்கும்.... ஒன்று போனால் இன்னொன்றை பெற்று எனக்காக கணக்கை நேர் படுத்தி வைத்திருப்பாள்...." என்று கூற இருவரும் சத்தம் போட்டு சிரித்தனர்.
அந்நேரத்தில் விசுக்கென்று பறந்து வந்த சக்கர அம்பு புங்கனின் இடது கண்ணை துளை இட்டு மறுபுறம் வெளிவந்து மரத்தில் குத்தி நின்றது. புங்கன் குதிரையில் இருந்து சாய்ந்தான் "புங்கா......" என்று நன்னன் கத்தியது காடுகளை அதிரச்செய்தது.
