குமரிகாண்டம் பற்றி அனைவருக்கும் தெரியும் என்று நம்புகிறேன்.... சங்க
பாடல்களில் இருக்கும் தகவல்களை வைத்து பார்த்தால் நமது தமிழ் சமுகம் 12000 கி.பி
இல்லேயே மிகவும் முன்னேறிய ஒன்றாக இருந்திருக்க வேண்டும். கப்பல்கள், மாளிகைகள்,
அரசு, போர் படை மற்றும் பல. நிறைய தகவல்கள் சொல்வதற்கு இருக்கிறது குமரிக்கண்டத்தை
பற்றியும் பாண்டியர்களை பற்றியும்..... அப்படியே சொல்லாமல் கதைவழியாக சொல்ல ஒரு
சின்ன முயற்சி. உங்களுக்கு பிடிக்கும் என்கிற நம்பிக்கையுடன்....
1. நன்னன்
மேற்கிலிருந்து கிழக்காக சுற்றும் பூமி பந்தினை நிறுத்தி சற்று கிழக்கிலிருந்து மேற்காக சுற்றி விட்டால்..... எம்.ஜி.ஆர் நான் ஆணை இட்டால் பாட்டிற்கு சாட்டையை சுழற்றி கொண்டிருப்பார்...... காந்திஜி உப்பு சத்தியாகிரகத்தில் குச்சியை பிடித்துக்கொண்டு நடந்து போய் கொண்டிருப்பார்...... ஆங்கிலயருக்கு எதிராக யாரோ ஒரு பெயர் தெரியாத வாலிபர் கையெறி குண்டினை வாயில் கடித்து வீசி கொண்டிருப்பார்.... முதன் முதலாக வாஸ்கடோ கமோ கள்ளிக்காட்டில் வந்து இறங்கி வைன்அருந்திக் கொண்டிருப்பார்.... இன்னும் கொஞ்சம் வேகமாக சுழற்றினால் மக்கள் மாட்டு வண்டிகளிலும் குதிரை பூட்டிய ரதங்களிலும் சென்று கொண்டிருப்பர்.., தஞ்சையில் ராஜ ராஜர் பெரிய கோவிலை கட்டிக்கொண்டிருப்பார்..... இயேசு பிறப்பார்..... முதன் முதலாய் ஒருவர் நாயினை வீட்டு விலங்காய் மாற்றி இருப்பார்.... இந்து நதிக் கரையில் மணிகளை அடைகளாய் பூட்டிய பெண்கள் நடனம் ஆடிக்கொண்டிருப்பார்.... அதற்கும் பின்னே பயணப்பட்டால் இலை தலைகளை அணிந்த மக்கள் நாடோடியாய் அலைந்து.... வேட்டை ஆடி நர மாமிசத்தை தின்று கொண்டிருப்பர்... அதற்கும் பின்னே போனால்...????
இன்னும் கொஞ்சம் வேகமாக சுழற்றி தமிழகத்துக்கு தெற்கே நகர்ந்தால்... குமரிக்கு தெற்கே உள்ள இந்தியப் பெருங்கடல் பனிக்கட்டியாய் சுண்டிபோய்.... அகன்ற கண்டம் ஒன்று நீருக்குள் இருந்து வெளிவரும்.... முழ்கிய பல்லாயிரக்கனக்கான கப்பல்களும் தென் மதுரையின் கரையில் அசைந்தாடி கொண்டிருக்கும். ஆங்கே வானுயர்ந்தமாட மாளிகையில்.... முழுதாய் பட்டாடை உடுத்தி.. சங்க பாடல் ஒன்றை பாடிக்கொண்டே நிலவை காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டிக்கொண்டிருப்பாள் ஒரு தமிழ் அன்னை..... அடடா இது என்ன காலம் என்று கேட்கிறீர்களா.... இது தான் முதல் சங்க காலம்... ஏறக்குறைய கி.பி. 12000ம் !!!!
நமக்கு மதுரையில் வேலை இல்லை.... அங்கிருந்து நகர்ந்து பக்றுளி ஆற்றை கடந்து குமரி கண்டத்தின் முதுகெலும்பை போல் விரிந்திருக்கும் மேரு மலையின் மேல் தோன்றும் முத்தாற்றின் முக்கிய துனை ஆறான ஹிர்தியாவுக்கு செல்வோம்.
தொல் பாண்டிய நாட்டில் ஓடும் பல்லாயிரக்கணக்கான ஆறுகளில் மிகவும் ஆக்ரோஷமான ஆறுகளை கொண்ட காடு மேகமலை காடுகள். அதில் மிகவும் ஆக்ரோஷமாக... பிளிறுகள் கூட கடக்க அஞ்சும் விதத்தில் பிளிறிக்கொண்டு செல்பவள் ஹிர்தியா. அடர்ந்த வனாந்திரம் சூழ்ந்த பகுதியில், மலை சரிவில் பறைகளை உருட்டிக்கொண்டு வேகமாக சென்றது ஹிர்தியா.
அவ்வாற்றங்கரையில் மான்கள் கால்களை தூக்கிக் கொண்டு இலைகளை பறித்து மென்று கொண்டு இருந்தன. ஆற்றின் இரைச்சலை தவிர மற்றபடி அமைதியாய் இருந்த கானகத்தில் முழவு கொட்டும் ஓசை ஆரம்பித்தது. மான்கள் கூட்டம் அலறி அடித்து ஓட ஆரம்பித்தன.... மரங்களின் நடுவில் இருந்து தின்று பருத்த சிறுத்தை ஒன்று தவ்வி குதித்தது.... முழவு கொட்டும் ஓசை இன்னும் அதிகமாய் கேட்டது. சிறுத்தைக்கு பின்னே நான்கு கட்டிளம் காளைகள் சிறுத்தையை துரத்திக்கொண்டு வந்தார்கள். இல்லை இல்லை அவர்கள் சிறுத்தையை துரத்தவில்லை அவர்களும் மானை தான் துரத்தினார்கள்.
சிறுத்தையின் வேகத்திற்கும் துரிதமான திசை மாறுதலுக்கும் கொஞ்சம் கூட அவர்கள் சலிக்கவில்லை. நான்கு பேரில் முன்னாள் சிறுத்தைக்கு மிக அருகில் வந்தவன் கொஞ்சம் வேகத்தை கூட்டித் தாவினான், சிறுத்தையும் தவ்வியது, மானும் உயிரை காப்பாற்ற பிரயத்தனம் செய்து தவ்வ முயற்சித்தது.
நமது இளைஞன் முன்னால் தவ்விய சிறுத்தையின் மேல் கால் வைத்து எம்பி மின்னல் வேகத்தில் இடுப்பில் சொருகி இருந்த கத்தியை எடுத்து மானின் கழுத்தை அறுக்க தொப்பென்று விழுந்து பொரண்டு கரையின் விளிம்பில் எழுந்தான். முழவு சத்தம் நின்றது..... மீதி மூவரும் கைதட்டினர்... சிறுத்தை அவனை பார்த்து உறுமிக்கொண்டே அரைவட்டம் அடித்தது. எந்த கணமும் அவன் மேல் பாய.... பாய்ந்துவிட்டது. இருவரும் தொப்பென்று வெள்ளத்தில் விழ.... சுழலில் சிக்கி சுற்றி... இழுத்துச்செல்லப்பட்டன். சிறுத்தை கூட கால்களை வைத்து தத்தியது.... பாறைகளின் ஊடே அடித்து செல்லும் நதி... அவனை அந்த பெரும்பாறைகளில் மோதி இருக்க வேண்டும். அவனை சுற்றி ரத்தக்கம்பலம் விரிக்கப்பட்டது. ஒரு சுத்த வீரன் கொல்லப்பட்டான் என்றதை மீதி மூவரால் நம்ப முடியவில்லை.
அந்த நொடி யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிசய சம்பவம் நிகழ்ந்தது.... ஆயிரம் இடி இடித்தார் போல பெரும் ஓசை கேட்டது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமோ....தெய்வாதீனமோ...மனிதனின் செயலோ.... அருகில் இருந்த குன்றில் நிலச்சரிவு ஏற்ப்பட்டு அந்த குன்று அப்படியே நகர்ந்து ஆற்றின் குறுக்கே அமர்ந்தது. நதியின் குறுக்கே தற்காலிக அணை ஏற்ப்பட்டு ஆற்றின் வெள்ளத்தை தடுத்தது. கீழ் கரையில் வெள்ளம் வடிந்தது மேல் கரையில் வெள்ளம் சேர்ந்து அணையை அரிக்க ஆரம்பித்தது. தடுமாறி எழுந்த இளைஞன்.... அணையை பார்த்தான்.. இன்னும் சில நொடிகள் தான்.. அணையை வெள்ளம் தகர்த்துவிடும். அண்ணாந்து கதிரவனை பார்த்து கும்பிட்டான்... தூரத்தில் ஓடிய சிறுத்தையை நோக்கி ஓடத் துவங்கினான். அணை உடைந்தது. வெள்ளம் அடித்துக்கொண்டு செல்ல கரையில் சிறுத்தையுடன் ஒதுங்கினான் நம் இளைஞன். மீண்டும் முழவு சத்தம் ஒழிக்க அனைவரும் "நன்னன்...நன்னன்..!!!" என்று கோஷமிட்டனர்.
அதிர்ஷ்டவசத்தால் எக்காலத்திலும் வற்றாத ஆறு கண நொடியில் வற்றி உயிர் பிழைக்க மறு வாய்ப்பு கிடைத்த போதிலும்... அதை பயன் படுத்தாமல் தன்னைகொல்ல வந்த சிறுத்தையை கொன்றது நம் பழந்தமிழர்களின் வீரம்..!!!
தொடரும்.

No comments:
Post a Comment