மதுரையில் இருந்து முப்பது காததிற்கு தெற்கே இருந்தது தங்க சுரங்கங்கள் நிறைந்த, ஏழழேழ் நாடுகளில் குறும்பனை நாட்டின் தலைநகர் சென்னூர். ஆங்கே சுற்றிலும் பல காதங்களுக்கு தங்க கிணறுகள் வெட்டப்பட்டு இரவு பகல் பாராமல் சப்பை மூஞ்சியும் வெளிர் வண்ணமும் குட்டையான உடல்வாகும் கொண்ட மனிதர்கள் பலர் சுரங்கங்களில் தங்கம் வெட்டி எடுத்துக்கொண்டு இருந்தனர். அதனால் ஆயிரகணக்கான தீவர்த்திகள் பல நூறு கிணறுகளில் கொழுந்து விட்டு எரிய... வெளிர் மஞ்சை பூசிய பெண்ணின் எலும்பிச்சை முகம் போல பிரகாசித்துக் கொண்டிருந்தது சென்னூர்.
அவ்வூருக்கு சற்று தூரத்தில் சிறிய மடுவில் இருந்து சென்னூரை பார்த்த உதயனுக்கு.... தங்க கிணறுகள் இரவு நேரத்தில் உதித்த சிறு சிறு கதிரவண்களை போல் தெரிந்தது. சென்னூரை தங்க நகரம் என்று கூறுவதற்கு இதுவும் ஒரு காரணமோ என்று எண்ணிக்கொண்டான்.
தங்கத்தை பற்றியும் தங்க சுரங்கங்கள் பற்றியும் நம் மக்கள் வெகுவாக அறிந்து வைத்திருந்தனர். ராபதேஸ்வரர் வந்த பிறகு இக்கலை மேலும் வலு பெற்று பிற தாதுக்களை நீக்கி மிக தரமான தங்க கட்டிகளை உருவாக்க கற்றுக்கொண்டனர். வெட்டி எடுக்க பெற்ற தாதுக்கள் நேராக கொல்லன் உலைக்கு சென்று தரமாக சுத்த தங்கமாக பிரிக்க பெற்று பின்னர் தேவைக்கு ஏற்ப தங்கத்தையும் தாமிரத்தையும் கலந்து நகைகள், காசுகள், மாலைகள் செய்யப்பட்டன.
தங்கதிற்கான மோகம் இன்று போல் அன்றும் ஓங்கி பறந்து கொண்டு தான் இருந்தது.. அதனால் பற்பல வியாபாரங்கள் செய்யும் வணிகர்களும்... சிற்றரசுகளின் ராணிகளும், இளவரசிகளும் இன்னும் பல பணக்காரர்களும்.. அவர்களுக்கு வியாபாரம் செய்ய ஆடைகள், உணவுகள் போன்றவற்றை விற்கும் சிறு வியாபாரிகளும் என்று பலர் ஊருக்குள் வந்தும் போயும் கொண்டிருந்தனர்.
கலை நயம் மிக்க நகைகளை செய்வதில் கைதேர்ந்தவர்கள் சென்னூர் தட்டான்கள். நகை செய்யும் கூடத்திற்கு அனுமதி இன்றி வேறொருவர் சென்றால் தலை இல்லாமல் தான் வெளிவர வேண்டி இருக்கும்.ராஜாங்கத்திற்கு தேவையான தங்க நாணயங்களை செய்யும் கூடமும் அங்கே இருந்தது. அதனால் காவலும் கட்டு கோப்பும் பலமாக இருந்தது. மலை போல ஊரை சுற்றி கோட்டை எழுப்பபட்டு அகழியும் வெட்டப்பட்டிருந்தது. வீரர்கள் வாளும் வேலும் ஏந்திக்கொண்டு தயாராக நின்று கொண்டிருந்தனர். இந்நாட்டின் தலைவன் இந்தினை மீறி காற்று கூட சென்னூர் கோட்டை கதவுகளை தாண்ட முடியாது. கோட்டைக்கு வெளியிலேயே பல வீரர்கள் காவல் புரிந்து கொண்டு இருந்தனர், ஒருவரையும் சாலையில் நிற்க விடவில்லை. நகர்த்திக்கொண்டே சென்றனர். யாரோ ஒருவனை நான்கு வீரர்கள் அவன் கத்த கத்த எங்கோ தூக்கி சென்றனர்.
சென்னூரை ஒரு தடவை ஆவது பார்த்துவிட வேண்டும் என்கிற உதயனின் ஆசை இன்றாவது பாதி நிறைவேறி விட்டது. ஆம், கோட்டைக்கு வெளியே கிணறுகளை பார்த்தாகிவிட்டது.... அப்பா எவ்வளவு ஆழமாக தோண்டிக்கொண்டே போகிறார்கள். விசாலமான கடை வீதிகள், வித விதமான சாமான்கள், உணவு வகைகள் அப்பப்பா எத்தனை எத்தனை... ஒரு சதாரான மனிதனின் இச்சைகளை போக்க எத்தனை எத்தனை வழிகள். சில பெண்கள் கூட்டமாக பாண்டிய நாட்டை பற்றி பாடி ஆடிக்கொண்டிருக்க சுற்றி நின்று கைத்தட்டிக்கொண்டிருந்தது சிறு கூட்டம். கோட்டைக்கு வெளியிலேயே இவ்வளவு கலகலப்பாக இருந்தால், உள்ளே எப்படி இருக்கும் என்று உதயனின் மனம் என்ன துவங்கியது. நமது வேலை இதுவல்ல மதுரை செல்ல வேண்டும், குருவின் கட்டளை. இருந்தும் இன்று இரவு எங்காவது தங்கி நாளை சூர்யோதயதிற்கு பிறகு தானே செல்ல வேண்டும். ஏன் இன்று இங்கேயே இரவு தங்க கூடாது.. என்று அவன் மனமே கேள்வி கேட்டு அறிவு பதில் சொல்வதற்குள் மனமே சரி என்றும் பதி சொல்லி விட்டது.
கோட்டை கதவுகள் திறந்திருந்தால் அதன் வழியாக நகரத்தின் சிறு பகுதியை ஆவது பார்த்து விடலாம். அணைத்து வாசல் கதவுகளும் மூடி ஆகி விட்டது.. திறந்திருப்பது ஒரே ஒருவாசல் கதவுகள்.... தங்க வாசலின் கதவுகள். எறும்புகள் தங்க தாதுவை கோட்டைக்குள் கொண்டு சேர்க்கும் வழி. அங்கே சென்றால் விரட்டுவார்களோ..போய் தான் பார்ப்போமே.. ஒரு வேளை இனி சென்னூர் வர சந்தர்ப்பமே அமையாமல் போய்விட்டால் பார்க்கவே முடியாதே என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டே கிழக்கு பக்கத்தில் இருக்கும் தங்க வாசலை நோக்கி நடந்தான்.
கோட்டை வாசலுக்கு அருகே அவ்வளவாக கூட்டம் இல்லை.. காவலர்கள் தான் அதிகம் நின்றனர். வாயிலுக்கு அருகில், சுரங்கத்தில் இருந்து எருது பூட்டிய வண்டிகள் வரும் வழியில் எறும்பு மனிதர்களின் வீடுகள் இருந்தது. மூங்கில்களில் கட்ட பட்டிருந்த குடிசை வீடுகள்... வித்தியாசமான உணவின் வாசம் உணவு வகை என்னவென்று தெரிவிக்க வில்லை என்றாலும் உதயனின் பசியை கிள்ளி விட்டு மிதந்து சென்றது. மேலும் அக்குடியிருப்புக்கு அருகில் சென்றால்.. வாசல் நேராக இருக்கும் ஊரும் தெரியும்.
உதயன் அவ்வீடுகளை நெருங்கினான்.... வெளிர் நிறத்துப் பெண்கள் குழைந்தகளுடன் விளையாடி கொண்டிருந்தனர்..... வேலை விட்டு வந்த எறும்புகள் துங்கி கொண்டிருந்தார்கள். கிழக்கு தேசத்தில் இருந்து சுரங்கங்களில் வேலை செய்ய அழைத்து வரப்பட்ட அடிமைகள். அத்தேசத்து பெண்கள் விதவிதமான பொருட்களை செய்து தத்தம் வீட்டின் வெளியில் அடுக்கி வைத்திருந்தனர். பனை ஓலைகளிலும், மூங்கில்கலிலும் சிறு சிறு பொம்மைகள்.... நாற்காலிகள் களிமண்ணில் செய்யப்பட்டிருந்த தட்டுக்கள் என்று பல விதமான பொருட்களை அடுக்கி வைத்திருந்தனர்.
இதை எல்லாம் ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே வந்த உதயனை ஒரு முதாட்டி கைகளை அசைத்து அழைத்தாள். அவனிடம் வேலைப்பாட்டுடன் சிகப்பு மஞ்சள் நிறத்தில் பின்னப்பட்டிருந்த கைகளில் கட்டிக்கொள்ளும் கயிறு ஒன்றை கொடுத்தாள்.
"எனக்கு இது தேவை இல்லையே பாட்டி..."
அவள் நீட்டிக்கொண்டே இருந்தாள். உதயனுக்கு என்னவென்றே புரியவில்லை கைபையில் வைத்திருந்த காசுகளை ஒரு நாணயத்தை எடுத்து கொடுத்தான். பாட்டி அதை வங்கி கொள்ளாமல் கயிறை மட்டும் நீட்டிக்கொண்டிருந்தாள்.
"பணம் கொடுக்காமல் தானமாக நான் எதுவும் வாங்கி கொள்வதில்லை" என்று கூறி மேலே நடக்க துவங்கினான்.
அவனை தடுத்து நிறுத்திய பாட்டி... சிறிய மணி ஒன்றை கையில் எடுத்து இசைத்தாள். உள்ளிருந்து பதின் வயதில் இருக்கும் பெண்ணொருத்தி வெளியில் வந்தாள். பளிங்கு போன்ற நிறம் கத்தி போன்ற கண்கள், சிறிய உதடுகள். தமிழகத்து பெண்களுக்கும் இவளுக்கும் அத்தனை வித்தியாசம்.... தமிழகத்து பெண்களின் கண்கள் தாமரை மொட்டு என்றால் இவளின் கண்களோ மல்லிகை மொட்டு.
அவள்பாட்டியிடம் ஏதோ பேசிவிட்டு.....
"நீங்கள் மதுரைக்கு போக திட்டமிட்டுள்ளீரா...."
உதயனுக்கு அதிர்ச்சியாக இருந்தது... யார் இவர்கள் இவர்களுக்கு எப்படி தெரியும்.....
"யார் அப்படி சொன்னது.... அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை...."
அவள் இவன் இதை என்று எதிர்பார்த்ததை போல் முகத்தில் எந்த சலனமும் இல்லமால்
"உங்களால் போக முடியாது.... உங்களை சென்னூர் விடாது..." என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டாள்.
மூதாட்டி இன்னும் கயிறை நீட்டி சிரித்துக்கொண்டிருந்தாள்.... இதற்கு மேலும் அங்கே நிற்காமல் உதயன் நடக்க துவங்கினான்.
அப்போது தீடீர் சலசலப்பு ஏற்பட்டது.... புழுதி பறக்க குதிரையில் அடிப்பட்டு மயக்க நிலையில் வந்த
வீரன் தங்க வாசலுக்கு சென்று விழுந்தான். சட்டென்று பதற்றம் தொற்றி கொண்டது.... வீரர்கள் குதிரையில் வந்தவனை உள்ளே அழைத்து சென்றனர். அபாய சங்கு முழங்கப்பட்டு.... வீதிகள் வெறிச்சோடி காவலர்கள் குவிக்கப்பட்டனர். பகைவர்களால் பிரதம அமைச்சர் கவிக்குன்றனார் கடத்தப்பட்டுள்ளார் என்றும் அவருடன் இளவரசியும் சேர்ந்து கடத்தப்பட்டுள்ளார் என்று அரசல் புரசலாக வந்த செய்தியை உதயனால் நம்ப முடியவில்லை.

No comments:
Post a Comment