பிரபா கால் பண்ணான் "மச்சான் கல்யாணத்துக்கு என்ன பிளான்..?"
"கல்யாணமாடா.. இப்போதைக்கு பிளான் எதுவும் இல்ல மச்சா.. இன்னும் 2 வருஷம் ஆகும்ன்னு நெனைக்கிறேன்...."
"டேய்... உன் கல்யாணம் இல்லடா.. நந்தினி கல்யாணத்துக்கு என்ன பிளான்ன்னு கேட்டேன்... 24 மணி நேரமும் அதே நெனைப்பு தானா...."
வாயை கொடுத்து மாட்டிக்கொண்டேன்.... நந்தினி கல்யாணத்தில் ஆரம்பித்து.. என் காதல், கல்யாணம் , first நைட் வழியாக பிரபா கல்யாணம் வரை போய் ஒருவழியாக கோயம்பத்தூரில் திங்ககிழமை 6 மணி கல்யாணத்துக்கு நானும் பிரபாவும் ஞாயிற்றுகிழமை காலை 8 மணிக்கெல்லாம் மண்டபத்தின் வாசலில் நின்றோம்.
கோபி, அண்ணாமலை எல்லோரும் புனேயில் இருந்து சென்னை மாறி ஒரு வருடம் ஆகிறது. அவர்கள் ஏதோ பெயர் தெரியாத எக்ஸ்ப்ரஸில் வந்து கொண்டிருகிருக்கிறார்கள். மண்டபத்திற்கு முன் பெரிய கிரிக்கெட் கிரௌண்ட் அளவிற்கு கேப் விடப்பட்டு அதற்கு முன் ஏறி குதிக்க முடியாத அளவிற்கு பெரிய கேட்டில் திண்டுக்கல் பூட்டு தொங்கி கொண்டிருந்தது. கோயம்பத்தூரில் இறங்கி எப்படியாவது அனைவரும் மண்டபத்திற்கு வந்துவிடுவது அப்புறம் அனைவரும் சேர்ந்து ரூம் போட்டுக்கொள்வது என்பது பிளான். வாசலில் பெரிய பானரில் நந்தினியும் வருங்கால கணவரும் சிரித்துக்கொண்டிருக்க அந்த முகத்தை எங்கோ பார்த்தது போல் இருந்தது.
"டேய் மாப்பள யாரு டா...உன் காலேஜ் தானா...?"
"ஆமாண்டா.. செகண்ட் இயர்ல இருந்தே லவ்வு... குருசரண்... மெக்கு..."
குருசரண்... மெக்கு... இந்த வார்த்தைகள் மூளையில் ஒரு மூலையில் இருந்த நியுரான்களை தட்டிவிட்டு என் ஆள் சொன்னது பிளாஷ் ஆனது.
"குருசரன்னு ஒருத்தன்... மெக்கு.. எத்தன வருசமா என் பின்னால அலஞ்சான் தெரியுமா.... நா ஒத்துக்கவே இல்லையே.... ஒரு தடவ என் கிளாசுக்குள்ள வந்து என்ன போட்டோ எடுத்துட்டான்.... அத ரவி பாத்துட்டான் (ரவி அவளை பார்க்கும் மற்றொருவன்..!!).. அப்புறம் பெரிய சண்டை ஆயிடுச்சு..."
அந்த குரு சரணா இவன்...
"டேய் இவன் நந்தினியை எப்போல இருந்து லவ் பண்றான்..."
"பஸ்ட் இயர்ல பாத்ததுல இருந்தே..."
நந்தினியையும் சும்மா சொல்லிவிட முடியாது.... ஏகப்பட்ட பேர் அவள் பின்னால் சுற்றினார்களாம்... நந்தினியும் என் ஆள் கௌரியும் ஒரே department தான்.
"எப்போ ப்ரோபஸ் பண்ணான்...."
"final இயர்ன்னு நெனைக்கிறேன்..."
"பிரபா இவன் என் ஆள் பின்னாடியும் சுத்தி இருக்கான்டா..."
"டேய் எனக்கு அவன பிரஸ்ட் இயர்ல இருந்து தெரியும்டா... அவன் நந்தினியை தான் லவ் பண்ணறான்... ஆமா உன் ஆள் போட்டோவ என்னிக்காவது காமிச்சியா...?"
போனை எடுத்து நானும் அவளும் கருடா மாலில் எடுத்த போட்டோவை கமித்தேன்....
"அவசரர பட்டுடியே மச்சான்.. உனக்கென்ன ஆளா கெடைக்கல்ல.. FBல தமன்னா பிக் இருக்கும் போதே நெனச்சேன்....." என்றானே பாக்கணும்.
பெங்களூர் வந்ததில் இருந்து ஒரு வருடம் நாய் போல சுத்தி.... அவளை பன்னிரெண்டாவதில் இருந்து லவ் பண்ணும் ரவியிடம் (முன்னே சொன்னேன்ல..) சண்டை போட்டு....உயிரை கொடுத்து ஒரு பொண்ண கரெக்ட் பண்ணிருக்கேன். நான் இதை எதிர் பார்க்கவே இல்லை...:-(
"டேய் என்னடா.. நேர்ல பாத்தேனா நயன்தாரா மாறியே இருப்பாட...."
"எ நைடில பத்தா நல்லருப்பான்னு சொல்லேன்...." ரொம்ப கூலா வானிலை அறிக்கை படிக்கிற மாறி சொன்னான்.
"டேய் ஏ அஞ்சலட அவ.." அவனை அடிக்க போனேன். அதற்குள் கோபி, அண்ணாமலை மற்றும் கூட எனக்கு தெரியாத சில பெண்கள் வர.. இப்போதைக்கு தப்பித்தேன்.
பொண்ணு வீட்ல இருந்தும் யாரும் வரல.. மாப்பள வீட்டில் இருந்தும் யாரும் வரல நாங்கள் போய் நின்றதை பார்த்து மண்டப செக்யூரிட்டி அதிர்ந்து விட்டார். மாப்பிளை பேரு சொல்லுங்க பொண்ணு பேரு என்ன.. மாப்பள எந்த ஊரு போன்ற கேள்விகள் கேட்டு திருப்திகரமான பதில் சொன்னதால் உள்ளே விட்டார். தற்கலிகமாக மாப்பிளை ரூமில் இடம் தந்தார்கள். அங்கேயும் ஆரம்பித்து விட்டான் பிரபா
"அண்ணே உங்களுக்கு.. டேய் ஹரி உன் ஆளு பேரு என்ன..."
"கௌரி..." கடுப்பாக சொன்னேன்
"ஹா.. கௌரின்னு ஒரு பொண்ணு... electrical department தெரியுமா...."
"யாருடா.. பெரிய கண்ணோட.... இடுப்பு வரைக்கும் சடை போட்டு இருப்பாளே அவளா..."
"அவ காயத்ரினே.. அவ இல்ல... கொஞ்சம் சுமாரா..."
"கொஞ்சம் சுமாராவா..." என்று அழுத்தி கூறி என்னை பார்த்து சிரித்து விட்டு "தெரியலையேடா பிரபா.." என்றார் அப்பொழுது கோபி முகம் கழுவி விட்டு வெளியே வந்தான்
"இந்தா கோபி கிட்ட கேட்போம்... நம்ம காலேஜ்லையே பெரிய database இவன்துதான்.... எல்லா பொண்ணு பேரு ஊரு department எல்லா தெரியும்.... டேய் கோபி பேரு கௌரி... department electrical.... டக்குன்னு சொல்லு ஆள் எப்படி இருப்பா...?"
அதிர்ச்சியாக பார்த்தான்.... "டேய் நம்ம காலேஜ் தானா... ?"
"ஆமாடா..."
"first time in my history.... no matches foundன்னு வருதுடா..."
அனைவரும் சிரித்தார்கள்.. எனக்கு கோபம் தலைகேறியது.....
"டேய் இந்த கல்யாண மாப்பிளையே.. என் ஆள் பின்னாடி சுத்துனவன் தாண்டா... தெரியும் இல்ல....?" என்று நான் கேட்கவும் அந்த மாப்பிளை உள்ளே வரவும் சரியாக இருந்தது.
அய்யோ கேட்டு இருப்பானோ.... "வாங்க மாப்பிளை... ஹாப்பி மாரீட் லைப்.." என்று ஏதேதோ உளறிகொண்டிருந்தேன். "மாப்பிளை மாறியா இருக்கேன்.. நான் குருவோட அண்ணன் சபரி.... கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆச்சு" என்று கூறி மிக சந்தோசத்துடன் அவர் மனைவியிடம் இதை கூற ஓடி விட்டார்.
பிரபா இந்த காதல் சந்தேகத்தை தீர்க்க குருவிடம் கேட்டு விடுவது என்று முடிவு எடுத்துவிட்டான். நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. மாலை receptionக்கு இப்போதே கோட் சூட் போட்டு சின்ன தொப்பையுடன்.. நேற்று செய்த facial முகத்தில் மின்னும் அளவிற்கு கச்சித மாப்பிளையாய் வந்தான் குரு.
எப்போழுதும் அப்பா அம்மா தங்கச்சி என்று யாரோ ஒருவர் அவன் கூடவே நிற்க அவனிடம் எதுவும் பேச முடியவில்லை. எப்படியோ அவனிடம் காதோரமாக பேசி தனியாக அழைத்து வந்து விட்டான் பிரபா.
"என்னடா பிரபா... சரக்குக்கு காசு வேணுமா.. பார்ட்டியா.." எனக்கேட்டான் குரு
"அதுவும் தான்... அதவுட இன்னொரு மேட்டர்... உனக்கு கௌரின்னு ஒரு பொண்ணு... electrical department.. தெரியுமா...?"
குருவின் முகம் மாறியது.... "தெரியும்... நந்தினி கிளாஸ் தான் சொல்லு..."
"அவள எப்பயாவது போட்டோ எடுத்தியா...."
"எத்தன பேரு டா கேட்பீங்க.... "
"வேற யாரு டா கேட்டா..."
"நா அவள சத்தியமா போட்டோ எடுக்கல டா... நா எடுத்தது நந்தினிய... அந்த போட்டோ கூட இருக்கு..." போனில் எடுத்து கமித்தான்.... புல் போகஸில் நந்தினி வாயில் கைவைத்து சிரித்துக்கொண்டிருக்க.. அவுட் ஆப் போகஸில்.. இடது மூலையில் இருந்தாள் கௌரி.
"இந்த போட்டோ என் லவ் souvenir... எப்பயுமே வச்சுருப்பேன்... இப்படி தான் ரவின்னு ஒரு லூசு பய வந்து சண்ட போட்டான்.. ஒதைச்சு அனுப்பிச்சேன்.. உனக்கு யாரு சொன்னா..." என்று கையை முறுக்கினான் குரு .
சொல்லிடாத...சொல்லிடாத என்று கை அசைத்தேன்.
"அதே ரவி தான்.." என்றான் பிரபா.
பெங்களூரில் அவளிடம் கேட்டேன்.... "நீ ஏன் FB-ல உன் பிக் வைக்கல..?"
அதிர்ச்சியாக என்னை பார்த்தாள்..... "ஒவ்வொருத்தன் போட்டோ போடாத.. FB-ய deactivate பண்ணு லவ்வர்ச நச்சுறாங்க.... நீ ரொம்ப கிரேட் டா..." சிரித்தாள்.. சிரித்தேன்.... "போட்டோ போட்டா நெறய பசங்க தொல்ல பண்ணுவாங்க அதான்... "
"ஹ்ம்ம்....(முடியல....)"
"நீ ஆச பட்டுடியே... நா வேணா இப்படி ஒரு போஸ் கொடுத்து போட்டுடவா..." என்று கைகளை வைத்து முகத்தை மறைத்து... கண்களை மட்டும் காட்டி கண்சிம்மிட்டினாள்..... யாருங்க சொன்னா தமன்னா பிக் இருந்தா மொக்க பிகர்ன்னு...?

No comments:
Post a Comment