கேம்பஸ் இன்டர்வியுல கெடச்ச வேலைய விட்டுட்டு... ரெண்டு வருஷம் முக்கித் திக்கித் தெணறி...UPSCக்கு படிச்சு முடியாமல் tnpscஇல் தேறி SI ஆக சேர்ந்து என் பெயர் முதன் முதலில் பேப்பரில் வந்த தினம். கட் பண்ணி எடுத்து பிரேம் போட்டு வைக்க முடியவில்லை. அக்ஷிதா எழுந்துவிட்டாள் வேகாமா..கசக்கி தூக்கி எறிந்து விட்டேன்.
தூக்க கலக்கத்தில் என்னை முறைத்துக்கொண்டே சென்றாள். கல்யாணம் ஆனா புதிதில் வேலைக்கே செல்லமாட்டேன் என்று அடம் பிடித்த என்னை அதட்டி விரட்டுவாள்... ஆனால் இப்பொழுது வீட்டிற்க்கே வரவில்லை என்றால் கோபம் வரத்தானே செய்யும்.
இன்னும் நான் upscக்கு படித்துக் கொண்டிருப்பதற்கே காரணம் அவள்தான். தினமும் பத்து கேள்வி கேட்பாள்..பதில் சொன்னால் தான் சாப்பாடே..எக்ஸ்ட்ரா ஐந்து கேள்விக்கு பதில் சொன்னால் முத்தம். எனக்கு தெரிந்து சப்பாடிற்காகவும் முத்ததிற்காகவும் IASக்கு படிக்கும் ஒரே ஆள் நானாக தான் இருப்பேன்.
கோபமாக முறைத்துக் கொண்டே என்முன் அமர்ந்தாள், சிறிது முறைத்து பார்த்துவிட்டு.. அந்த குட்டி நோட்டை கையில் எடுத்தாள்.
"பிப்டி குவஸ்டீன்..... பிப்டி டப் குவஸ்டீன்.." என்றாள்
இப்போல்லாம் சண்டை போடுவதற்கும் குவச்டீன்சை பயன்படுத்துகிறாள்...
"பிப்டி யா....??"
மிக கோபமாக பேசாதே என்று சைகை செய்தாள்....
"ரொம்ப கோபமா இருக்கேன்... வாயில இருந்து ஆன்ஸார் மட்டும் தான் வரணும்...."
"தெரியலனா...."
"குட்டு குட்டுன்னு குட்டுவேன்....."
"கரெக்ட்டா சொன்னா.." என்று கண்சிமிட்டினேன்
"குட்டு கெடையாது..."
"இதெல்லாம் அநியாயம்... நா ஒத்துக்க முடியாது..நோ டீல்..நோ டீல்.."என்று எழுந்தேன். அருகில் வந்து குட்ட வந்தாள்.
ஓடினேன்...துரத்தினாள்..... நேற்று வாங்கி வைத்திருந்த டெட்டி பியர் ஒன்றை எடுத்து நீட்டினேன்.
"டெட்டி பியர் கொடுத்து ஐஸ் வச்சா விட்டுடுவேனா.... எத்தன போன்...எத்தன மெசேஜ்.... நீ என்ன கலெக்டர் உத்தியோகத்துக்கா போற.... உண்மையில நீ கலெக்டர் ஆனா வீட்டுக்கே வர மாட்டியா...."
எதிர்த்து ஒரு வார்த்தை பேசலையே..பேச மாட்டேனே...கல்யாணம் ஆகி ரெண்டு நாள்ல நான் கற்றுக்கொண்ட பால பாடம் இது.
மீண்டு குட்ட வந்தாள்..பெட்டுக்கு அடியில் அவளுக்காக வாங்கி வைத்திருந்த புது புடவைய எடுத்து நீட்டினேன். அதை பார்த்தவுடன் முகத்தில் லேசாய் புன்முறுவல் ..(தெரியுமே....!!)
"திருடன் டா நீ...." என்று மீண்டு குட்ட வந்தாள்
"போலிச ஊரே அப்டிதான் கூப்டுது... ஸ்டாப் ஸ்டாப்.... இதுக்கு மேல கொடுக்குறதுக்கு எதுவும் இல்ல..." என்று ஒற்றை காலில் மண்டியிட்டு ஆரம்பித்தேன்...
"1989-ல பிறந்து... கஷ்டப்பட்டு வளந்து... அடி வாங்கி படிச்சு.... பின்னாடி சுத்தின பசங்கள விரட்டி, தேடி வந்த பல மாப்ளைங்கள வேணான்னு சொல்லி எனக்காக காத்திருந்து என் வாழ்க்கையை கம்ப்ளீட் பண்ணதுக்கு...." என்று ஒரு ரெட் ரோசை நீட்டினேன்.
வெட்கமாக சிரித்து கொண்டே அனைத்துக் கொண்டாள்... பின் காதோரமாய் கேட்டாள்
"அந்த சாரி எங்க வாங்குன....?"
"ராஜா சில்கஸ்ல.... நல்லாருக்கா......?"
"மொதல்ல அத மாத்தனும்...."

No comments:
Post a Comment