சிறுகதை

Saturday, March 9, 2013

ஒரு சின்ன கற்பனை - 1

காலேஜ் முடிக்கிற வரைக்கும் தமிழ் நாட்டை தாண்டி நான் போன ஒரே இடம் திருப்பதி தான்....இப்போ புனே போனுமாம்...!!!

Pune..... கூகிளில் சர்ச் பன்னி பார்த்ததில் மும்பை பக்கதில்...மகாராஷ்ட்ராவில் இருப்பது தெரிய வந்தது....!!!

நாங்கள் பிரப்பெரன்சில் கொடுத்த மூனு ஆப்சனும் சென்னை தான்...போராடினோம்..!!!
"அட்லீஸ்ட் பெங்களூர் ஆவது கொடுங்க மேம் ப்ளீஸ்..!!!"
"டேய் இங்கிலீஷ் ல பேசுடா..." என்றான் பிரபா
அவசரத்துல வாய்ல தமிழே வாரல ..இங்கிலீஷ் வேறயா....கடைசி நாளில் புனே என்று குண்டு போட்டுவிட்டார்கள்....கெஞ்சி கூத்தாடி பார்த்தோம்...

"வேலைக்கு ஜாய்ன் பண்ணறதுக்கு முன்னாடி லாஸ்ட்ல ஒரு கையேழுத்து போட்டிங்களே ஞாபகம் இருக்கா...வில்லிங் டு வொர்க் எனிவேர்...." (அப்படியா...?!)

சிலர் அம்மா அப்பா என்று கதை சொன்னார்கள்...சிலர் காதலி இருப்பதாக கூட சொல்லிப்பார்தார்கள் ஒன்றும் எடுபடவில்லை....பசங்க சில பேர் காலில் விழாதக் குறையாக கெஞ்சிப் பார்த்தார்கள்.....யாரும் மசியவில்லை....  சிலரை கொல்கத்தா டெல்லி என்று கன்னபின்னவென்று அள்ளித் தெளித்திருந்தார்கள் ...!!! ஆனா ஒரு சில பெண்கள் ஈஸியாய் சென்னைக்கு மாற்றிகொண்டார்கள்.... அவர்கள் பேசவில்லை... ரெண்டு சொட்டு கண்ணீர் ... ஹ்ம்ம்ம்ம.... பொண்ணா பிறந்திருக்கலாம்... எதை வேணும்னாலும் சாதிக்கலாம்...ஒன்னு அழனும்..இல்லனா சிரிக்கணும்....!!


சில பேர் குடும்பத்தோட ஜோடியாய் பிளேஸ் அயிருந்திருந்தார்கள் ... ஒன்றாக ILP செய்தார்கள்... மூன்று மதத்திற்கு பிறகு சில காதல் பறவைகள் பிரிக்கப்பட்டன... ஒன்று சவுத்தில் சென்னை மற்றொன்று கிழக்கில் கொல்கத்தா என்று தூக்கி எறியப்பட்டார்கள்...சிலர் கடைசி பில்டெரிலும் தப்பித்து ஒரே ஊருக்கு அனுப்பபட்டார்கள்...புனேக்கு எந்த பறவைகளும் வரவில்லை ..

சில பசங்களுக்கு ஒரு டிபரென்ட்டான வியாதி இருக்கும்...அவர்களுக்கு பேச வராது... மற்ற பசங்களுடன்....!!! அவர்கள் கண்ணும் பார்க்காது... மற்ற பசங்களை...!!! எக்ஸ்குளுஷ்வளி மேட் போர் கேள்ஸ் ...!!!

எங்கள் பாட்ச்சில் அது போல் எக்ஸ்குளுஷ்வளி மேட் ஜீவன்கள் சில இருந்தது.....அது போன்றவர்களை அனைவருக்கும் தெரிந்து இருக்கும் ...
அவற்றில் ஒருவன் கார்த்தி... இது அவன் இயற்பெயர்.. எங்களுக்கு "கடல" கார்த்தி..!!

அந்த கூட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு அவனை மட்டும் புனேவில் போட்டுத் தொலைத்து விட்டார்கள்...அதனால் முதல் முறையாக எங்களிடம் வந்து பேசினான்...ஏற்கனவே பிரபாவுக்கு அவனை பிடிக்காது

"ஹாய் ..மச்சான் நீங்களும் புனே தானே...?" எனக் கேட்டான் கடல

"யே..நீ தமிழா....வாவ் வாட் எ சர்பிரைஸ் ..!!!" நக்கலடித்தான் பிரபா

"அக்சுவல்லி..டமில் கொஞ்சம் கொஞ்சம் தான் பேசுவேன்...இப்போ தான் கத்துக்கிட்டேன்...."

"இந்த மூனு மாசதிலையா..ரொம்ப பாஸ்டு தான்..."

"பசங்க லேன்குவேஜ்  கத்துக்கணும்னா ஈஸியான வழி..... அந்த லேன்குவேஜ்  பொண்ணுங்கள கரெக்ட் பண்றது தண்டா பிரபா...."என்றேன் நான்

"என்னேன்ன லேன்குவேஜ் தெரியும் உனக்கு...?" என கேட்டான் ஹரி

"இங்கிலீஷ், ஹிந்தி, தமிழ் தெலுங்கு...."

பிரபா அவனை நடுவிலேயே நிறுத்தி
"ஏதாவது ஒரு லேன்குவேஜ்அ  ஒழுங்கா கத்துக்கோடா..ஏன் எல்லாத்துக்கும் அசை படுற..!!"

அனைவரும் சிரித்தோம்....அவன் நெளிந்தான்.....

"ஏ கார்த்தி நீ மட்டுமா வர..உன் பிரெண்ட்செல்லம் புனே வரல..?" என கேட்டென் நான்.

"ப்ச்ச்ச் வரல கோபி ..." என்றான்

"அப்பா.... புனேல இந்த கொசு தொல்ல இருக்காது..." என்றான் ஹரி .


"அங்க பொண்ணுங்க கூட வெளில சுத்துனா....காவி தூண்டு போட்டுக்கிட்டு நெறய பேரு குத்து குத்துனு பிரிச்சு மேஞ்சிடுவாங்கலான்டா.."என்றேன் நான்

"அதுக்கு நாம ஏ மாப்ள பயப்படனும்....ஆளே இல்ல... பெல்லு..!!" என்றான் பிரபா

"நமக்குன்னு இல்லடா பிரபா .... எல்லாருக்கும்...!!! பொது நலன் கருதி வெளியிட்டுள்ளான்  கோபி ...!! " என்றான் ஹரி


அவனுக்கு புரிந்துவிட்டது "அப்ப நா வரேன்" நைசாய் நழுவினான்

"ஏய் நில்லுடி செல்லம்.... அதுக்குள்ள எங்கடி... கெளம்புற...? உங்கிட்ட ஹரி ஒரு கேள்வி கேக்கணுமாம் டேய் கேளுடா ..."என்று பிரபா அவன் தோளில் கை போட்டான்.

"டேய் அத இவன் கிட்ட கேக்கலாமாடா...சரி ஆனா ஆளு தானா ..?"

"இவன் தாண்ட கரெக்டு...கேளுடா...!!"

கார்த்தி கொஞ்சம் ஆர்வமாய் முகத்தை வைத்து "கேளு ஹரி என்றான்..."

"ஏன் மச்சான் கிளி போன்ற பெண்கள் குரங்கு போன்ற ஆண்களை ஈஸியா பிரெண்ட்ஸ் ஆக்கிறாங்க..?!!"

அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..."#@$%@ I will see you guys in Pune" என்று கோபமாய் கத்திச் சென்றான்

"அப்பயாவது எங்கள பாருடா.....#@$%^# " என்றான் ஹரி.

கடல கோவத்தில் ஒரு மாதிரி விசுக்கி விசுக்கி நடந்து போனது மேலும் சிரிப்பூட்டியது...

"டேய் இருந்த ஹிந்தி தெரிஞ்ச ஒருத்தனையும் விரட்டிட்டோம்..இப்போ என்னடா பண்றது....?" எனக்கேட்டேன் நான்

"மச்சி confidence...ஏன் எல்லோரும் புனேனா  பயபட்றீங்க ...பொண்ணுங்களாம் செமையா இருக்கும்....கிளைமேட் பெங்களூர விட நல்லாருக்கும்....என்ஜாய் பண்ணலாம்...சட்டிக்குள்ளேயே குதுர ஒட்டாம...வாங்கடா வெளில ." என்றான் பிரபா

"ஹிந்தி தெரியாதேடா....அங்க போய் என்ன பண்றது ...."என கேட்டேன்  நான்

".டேய் கோபி.... நீ சொன்னமாறி ஆளுக்கு ஒரு பொண்ணா பிடிச்சு ஹிந்தி கத்துக்குவோம்  ..அப்படியே அங்கயே  செட்டில் ஆயுடலாம்..."என்று பிரபா
கையை ஸ்மாஷ் அடிப்பது போல் உயர்த்தினான்...

அவன் கையை தட்டி விட்டு..."21 வருஷம் தமிழ் கத்துகிட்டடீங்க்லே சார் என்ன கிழிச்சிட்டீங்க....காலேஜ்ல ஏதாவது ஒரு பொண்ணு பேசிருக்காட உங்கிட்ட ..எல்லாம் அலறி அடிச்சுகிட்டு ஓடும்.... இதுல அந்த ஊரு பொண்ணுங்க...?! நம்மள....?! ப்ப்பூ....நம்மளாம் கண்ணுலேயே படமாட்டோம்..."

"பீ பாசிடிவ் மச்சான் ..போறோம் புனேக்கு..எல்லாரும் அங்கேயே செட்டில் ஆரோம் ...மகாராஷ்டிரா அபீசியல் லேன்குவேஜ் தமிழ்னு மாத்துறோம்...!!!"

மூவரும் ஸ்மாஷ் அடித்தோம்....கிளம்பினோம் புனேக்கு....!!!!


No comments: