சிறுகதை

Thursday, March 7, 2013

புனே டைரீஸ் : சரக்க போடே.....!!!!

சரக்க போடே.....சரக்க போடே .....
இந்த மங்களகரமான வார்த்தைகளில் தான் ஆரம்பிக்கும் எங்கள் ஒவ்வொரு நாளும்....புனேயில்...!!!!

சரக்க போடே  என்றால் உள்ளே போ என்று அர்த்தமாம் மராத்தியில் ....கண்டக்டர் தினமும் ஆபீஸ் வருவதற்குள் நூறு முறையாவது காதில் கத்துவான் ....

பஸ் பயணம்....மிக கொடுமை புனேயில்... சத்தியமங்கலம் காட்டுக்குள் யானைகளை தேடுவது போல் பேருந்துகளை தேடவேண்டும் புனேயில்...!!! ரொம்ப ரேர்...!!! அதனால ஷேர் ஆட்டோ தான்...அதுவும் phase 3 hinjewadiக்கு கிடைக்காது....ஆளுங்க கம்மிய வருவாங்க...லேட்டா தான் எடுப்பான்....

ஒவ்வொரு நாளும்...ஆட்டோவா..பஸ்ஆ  என்று முடிவெடுப்பதற்குள் அல்லோலப்பட வேண்டிவரும்...பஸ் எங்க வர போகுதுனு ஆட்டோல ஏறி உட்காந்தா ...பஸ் வரும்..ஓடி போய் எறிடலம்னா ...ஏறவிடமாட்டனுங்க....முன் பக்கம் ஏறுனா கண்டக்டர் கழுத்த புடிச்சு வெளில தள்ளுவான்.....நீச்சே சல்....வேகமா பின்னாடி ஓடுனா...முகமூடி கும்பல் (அதாங்க லேடீஸ்...) சரா மாரியா ஸ்டேப்ஸ்ல தொங்கிகிட்டு இருப்பாங்க...அவர்கள் மேல் கை பட கூடாது...கால் பட கூடாது...ஆனா ஸ்டேப்ஸ்ல எப்டியாவது கால place பண்ணிடனும்.....TCS ல கூட easyah பிலெஸ்  பண்ணிட்டேன் ஆனா இந்த placement ரொம்ப கஷ்டம்ங்க ....கஷ்டப்பட்டு எப்டியாவது ஏறிடோம்னாலும்..ஒரு வித யோகா பண்ற போஸ்லயே ஆபீஸ் வர வரைக்கும் நிக்கணும்....!!!

சிலநேரங்களில் ஓடி போவதற்குள் பஸ்சும் போய் விடும்...திரும்பி பார்த்தால் ஆட்டோவும் இருக்காது...பல்பு ஆப் தி டே கொடுத்துருவாய்ங்க ..

கும்பலா இருந்தா நம்ம ஊரு கண்டக்டரே நம்ம மேல எரிஞ்சு எரிஞ்சு  விழுவாறு...இதுல புனே கண்டக்டர் எல்லாம் கேட்கவாவேனும்....ஏற்கனவே அம்மன் படம் வில்லன் மாறி பெரிய பொட்டு (திலகம்...) வச்சிட்டு பாக்க பயங்கரமா...பிரம்மாண்டமா..இருப்பாங்க...!!!!

ஸ்டெப்ஸ்ல நின்னுகிட்டு அக்ரோபடிக்ஸ்...எரோபடிக்ஸ்...எல்லாம் பன்னி...கண்டக்டர்கிட்ட காச கொடுத்தா...உள்ள இருக்க அவருக்கு நம்ம கை மட்டும் தான் தெரியும்...காச வாங்கிட்டு டிக்கெட் கொடுக்கமாட்டான்....ஹிந்தி சுட்டு போட்டாலும் வராது...மராத்தி..ஹி ஹி ஹி....அதனால நம்ம நடிகர் திலகம் சிவஜி மாறி(சிம்புனனு  சொல்லிருக்கலாம்...!!) கைலையே பேசி சார் டிக்கெட் இன்னும் கொடுக்கல....என்பதை புரியவைக்க வேண்டும்...கைல பிரேக் டான்ஸ் ஆடுனாலும் புரியாது...திரும்பி  சரக்க போடே.....சரக்க போடே .....என்று கத்த ஆரம்பித்துவிடுவான்...

கைல டான்ஸ்,காமெடி சீக்குவேன்செல்லாம் முடித்து...அடுத்தது அதிரடியை கையில் எடுத்தால் தான் நாம் இருப்பது அவன் கண்ணுக்கு தெரியும்..முதுகில் லேசாய் ஒரு அடி...

கரே முரே என்று சரியாய் டியூன் பண்ணாத FM கேட்பதுபோல் இருக்கும்...கடைசியாய் டிக்கெட் கையில் வந்து சேரும் ......டேய் சில்லற எங்கடா என்று கேட்பதற்குள் வேறு யாரையோ திட்டி கொண்டிருப்பான்....கண்டிப்பா நம்ம தமிழ்  பயபுள்ளயாதா இருக்கும்...:-)

No comments: