சிறுகதை

Wednesday, March 13, 2013

ஒசிக3 : கார்ட்டூன் கிழவி..!!


நானும் எவ்ளோ நாளு தான் வாழ்க்கைங்கற நாடக மேடையில audienceஆவே நடிகரதுன்னு தெரியல...ஸ்கூல் முடுச்சப்பயே.. அட்லீஸ்ட் ஸ்கூல் ல தான் ஒன்னும் தேரல.. காலேஜ்லயாவது ட்ரை பண்ணுவோம்னு நெனச்சேன்....நாலு வருஷம் ஹ்ம்ம்ம்ம்.... ஹுஹும் .... பொண்ணுங்க கூட பேசுனது கூட இல்ல.....சரி வேலைக்கு போறோம்.. அங்கேயாவது ஹ்ம்ம்- னா...  ஹ்.. ஹ்..  ஹுஹும் .... ஒன்னும்தேர்ர மாறி இல்ல..இனி சான்ஸ் கொஞ்சம் கம்மி தான்....


 கண் கேட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் ... 24 வயசுல லவ் பணனும்னு நெனக்கறது.... கண்டிப்பா எந்த பொன்னும் கெடக்காது.... 24 வயசுல ஒரு பொண்ணு நா யாரையும் லவ் பண்ணலன்னு சொன்னா ஒன்னு அது பொய்யா இருக்கும்..இல்ல கண்டிப்பா history இருக்கும்.... யாரும் ப்ரீயா இருக்க மாட்டாங்க...!!!


இது போன்ற அனுபவ பாடங்களால் நம்பிக்கை இழந்து அம்மா பாக்குற பொண்ணு தான் என்று தீர்மானித்து வைத்துருந்தேன்....ஆனா இந்த புனே... நொந்து கிடந்த என் மனதிற்கு தெம்பு ஊட்டியது ..... புனேயில் தாங்கே சௌக்கில்( dange chowk ) தங்கிஇருந்த பிரபாவையும் ஹரியையும் பாக்க சென்றேன்.. அப்ப தான் அந்த பெண்ணை பார்த்தேன்..!!

 மாமா திரும்ப திரும்ப சொன்னார்... எட்டாம் நம்பர் பஸ்சு .. நேரா போகும்.. ஒன்னு..ரண்டு..முனு ..என்று காற்றில் படம் வரைந்து .... 7ஏழாவது ஸ்டாப்பு... மறந்துடாத என்றார்.

எட்டாம் நம்பர் பஸ்சு ..ஏழாம் நம்பர் ஸ்டாப்பு....
த்ரீ போர்த்.... டி-ஷர்ட் ....ஒன்னு ..ரெண்டு..முனு...
எட்டாம் நம்பர் பஸ்சு ..ஏழாம் நம்பர் ஸ்டாப்பு....
ஓபன் ஹேர் .. குல்பி கட .. நாலுஅஞ்சு ஆறு.....
ஏழாம் நம்பர் பஸ்சு .. எட்டாம் நம்பர்ஸ்டாப்பு....
பைக்கில் போற பொண்ணுங்க ஏழு... எட்டு... பின்னால இருக்க பொண்ணு நல்லஇல்ல .. ஸ்டில் கவுன்டிங் 7....!!
நேரா லெப்டு போய் ரைட்டு திரும்பினா பஸ் ஸ்டாப்பு...!!
பஸ் ஸ்டாப்பில்.. பச்ச சுடி ... எட்டு ...!!!
என் 24 வருட எக்ஸ்பிரிஎன்சில் இவ்ளோ அழகா பார்த்ததேயில்லை ...அதுவும் சுடியில்... !!
எட்டு மட்டும் ஞாபகத்தில்.... மீதி எல்லாம் மறந்துவிட்டது....!!


புனேல 10 நிமிசதுள்ள நம்மள கிராஸ் பண்ணற அளவுக்கு நல்ல பிகர்ஸ நம்மூருல பாக்கணும்னா 10 நாள் அதே இடத்துல்ல நிக்கணும்....!!!
அதுவும் இந்த பச்சை சுடியை போல் பார்க்கணும்னா... சான்சே .. இல்ல..!!!
டிவி போட்டாதான் உண்டு.....!!!

என்னை புனேக்கு அனுபித்த பெயர் தெரியாத RMGயை மானசிகமாய் காலில் விழுந்து கும்பிட்டேன்...!!
மீண்டும் உலகத்திற்கு வரும் பொழுது அவளில்லை... பஸ்சு ஸ்டாப்பை விட்டு கிளம்பியது.... ரன்னிங்கில் ஏறினேன்.... கண்டக்டர் தொ..தா..புதா.. என்று திட்டினான்... அவள் என்னை லூசை பார்ப்பது போல் பார்த்தாள்..!!!

கண்டக்டர் நேரே வந்து....
"கிதர் ..?"
அய்யோ இடம் பேர மறந்துட்டேனே.....
"ஆரே... கிதார் யார்..?"
ஸ்டாப் நம்பர்..ஸ்டாப் நம்பர்... எட்டா..பத்தா...
"பாப்ரே....கிதார்ர்ர்ர்ர்......?!"
காது கேக்காதுனு நெனச்சிட்டான் போல... அவள் சிரித்தாள் ....

தட்டு தடுமாறி... மூளையில் உள்ள neuron-செல்லம் தட்டி...
"பையா சௌக் ...."
"பா..பாபா..பா சௌக்..?"
சௌக்குக்கு முன்னாடி என்ன சொன்னான்....?!
"ஹா.. கரெக்ட்.... சௌக் பையா ... சௌக் ..." காசை நீட்டினேன் 
"அரே பா.. பாபா.. பா.. சௌக் ..." 
அய்யோ சத்தியமா புரியலடா....!!!கடுப்பாகி ஒரு 25 ருபாய் டிக்கெட்டை கொடுத்துவிட்டு...  அந்த பச்சையிடம் போனான்...என்னை பற்றி ஏதோ திட்டினான்...
எனக்கு ஏன் இதுவரைக்கு ஆள் செட்டகலன்னு புரிஞ்சுகிட்டேன்...

பொதுவாக பொது இடங்களில் பார்க்கும் பெண்களை நான் மனதிற்குள் நுழையவிடுவதில்லை.... இவளையும் நுழையவிடவில்லை...!!! முதலில்...!!!

கண்டக்டர் கத்துவது எங்கோ கேட்டது போல இருந்தது... கூர்ந்து கேட்டேன்..
"தாங்கே சௌக்... தாங்கே சௌக் .."
அட நம்ம இடம்... அவசர அவசரமாக ரன்னிங்கில் இறங்கினேன்....
கண்டக்டர் திட்டுவது காற்றோடு கரைந்து மறைந்தது...!!

பிரபாவுக்கு கால் பண்ணேன்... அவனும் DCஇல்  (தாங்கே சௌகில்) தான் இருப்பதாக சொன்னான்.. தேடி பார்த்தேன்.....
"லேண்ட்மார்க் ஏதாவது சொல்லுடா.... ".
ஆதித்யா பிர்லா ஹாஸ்பிடல் என்றான்.
பகதில்லிருந்தவரிடம் விசாரித்ததில் பஸ் போன திக்கில் கை காட்டி ஏதோ சொன்னார்.... புரிந்தது ...!!!

ஆட்டோ பிடித்து DC போனேன்.....பிரபாவும் ஹரியும் ரோட்டிலேயே விழுந்து விழுந்து சிரித்தார்கள்..... தூரத்தில் ஒரு கூட்டம் வாயில் கைவைத்து பெண் சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தது.. அதில் அவளும் இருந்தாள்..!!!

பிறகு அவளை மாமா விட்டிற்கு எதிரே இருந்த கணேஷ் மந்திரில் தாண்டியா ஆட்டத்தில் பார்த்தேன்....!! அது என்னமோ நார்த் ஸ்டைல் டிரஸ்....அக்காவிடம் கேட்டபொழுது காக்ரா என்றாள் . இன்னும் அழகாய் இருந்தாள்..!!! பசங்களும் பலர் அவளை சுற்றி வர.. சில பெண்கள் அவளை பொறாமையுடன் பார்க்க..  அவள் எந்த பையனுடனும் பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்... அவளை சில சல்மான்கள் ஆட அழைக்க அவள் மறுத்துவிட்டாள் ..!! வடிவேலு நான் கூப்பிட்டால் வரவா போகிறாள்.. மீண்டும் மனதினுள் இருள் கவ்வி வீட்ற்கு சென்றுவிட்டேன்...!!!

பொதுவாக பொது இடங்களில் பார்க்கும் பெண்களை நான் மனதிற்குள் நுழையவிடுவதில்லை.... இவளையும் நுழையவிடவில்லை...!!! வெளியிலேயே தடுத்து நிறுத்த பார்த்தேன்.. எங்கே காணோம்.... உள்ளிருந்து சத்தம் வந்தது... உள்ளே இருக்கிறேன் பார் என்று ....!!!

எவ்வளவோ சொல்லி பார்த்தேன்.... கேட்கமாட்டேன் என்கிறது மனது.... ஏ இப்படி.. யாருனே தெரியாது... என்ன காரணம் ... காரணமின்றி வருவது தான் காதலா....பேரு என்னவா இருக்கும் ஊரு.....?!

balconyil இருந்து எட்டி பார்த்தேன் .. அவள் யாரோ ஒரு பையனிடம் பேசி கொண்டிருந்தாள்..... இனி அவளை பார்க்க கூடாது என்று முடிவு பண்ணினேன்....!! மனதிலிருந்து விரட்ட ட்ரை பண்ணேன்...
அவளை பார்த்தேன் மறு நாள் காலை ஆபீஸ் போகும்பொழுது....

நான் பார்த்தேன்.. அவளும் பார்த்தாள் ...!!!
நான் பார்த்தேன் .. புன்முறிந்தால்..!!!
நான் பார்த்தேன் ... முகத்தை திருப்பி கொண்டாள் ..!!!
நான் பார்த்தேன்... நகர்த்து நின்றாள் ...!!!
நான் பார்த்து கொண்டே இருந்தேன்....!!!!

அவள் வேறு கம்பெனி ID கார்டு மட்டிருந்தாள்.. பேரை பார்க்க எவ்வளோவோ முயன்றும் பார்க்க முடியவில்லை...!! அவளுக்கு போன் வந்தது... எடுத்தாள்... பேசினாள் ...
"கிளம்பிட்டேன்டி ... பஸ் ஸ்டாப்புல தா இருக்கேன்....."
என் முகத்தை நூறு பேர் ..நூறு திசையில் இழுத்தது போல் விரிந்தது.... தமிழா...நா கேட்டது தமிழா ... ஸ்டார் பிளஸா இருக்கும்னு நெனச்சா .. ஸ்டார் விஜய் போல....!!!

பேசினேன்..அவள் பேசவில்லை..... மிகவும் பிடித்துவிட்டது....!!!
மீண்டும் கண்டக்டரிடம் "சௌக்.."
என்று நான் சொல்ல... அவள் பேசினாள் முதல் முறையாக
"சௌக்னா நால் ரோடுன்னு அர்த்தம்..  நிறைய சௌக் இருக்கு புனேல.... முழுசா சொல்லுங்க...."
இருவரது ஆபீசும் ஒரே டெக் பார்க்கில் தான் இருந்தது...!!!
நாள் முழுக்க அவள் சௌக் என்னும் வார்த்தையை சொன்னது போல உச்சரித்து.. பிரபாவை நச்சரிதுவிட்டேன்.....!!

மதியான ஷிப்ட் ..போட்டு விட்டார்கள்... இருந்தும் அவளை பார்க்க காலையிலேயே எழுந்து ஓடினென்...!!

தினமும் சிரிப்பு....அந்த மருண்ட பார்வை... மீண்டும் 24 மணி நேர காத்திருப்பு...
மீண்டும் சிரிப்பு....!!

பிரபாவும் ஹரியும் என்னை அவர்களுடன் வந்து தாங்கும் படி நச்சரித்தார்கள்.. மேலும் எத்தனை நாள் தான் நானும் மாம்சை தொல்லை கொடுப்பது... இருந்தும் அந்த கண்கள்.. போக மனமில்லை...போய்விட்டேன்.


24 மணி நேர காத்திருப்பு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது... டெக் பார்க்கில் தேடி பார்த்தேன்.. அவள் நின்றது போலவே இருந்தது.. ஓடி பொய் பார்த்தால் வேறு யாரோ...!!
ஒரு நாள் அவளை food கோர்ட்டில் பார்த்து விட்டேன்.
"என்னடா இவளா..!!!" வயைபோலந்தான் பிரபா
"ஆமா மச்சி..."
"விட்று மச்சான்.."
"ஏன்டா....ஆளு இருக்கா.. அப்படி தெரியலையே  "
"ஒத்துக்க மாட்டா.."
"எப்படி  சொல்ற...?!"
"என் காலேஜ் தாண்டா.... எவ்ளோ பேரு பின்னாடி சுத்தினானுங்க தெரியுமா..."
எதிர்பார்ததுதனே....
"இங்கயே நெறைய பேரு.. இதோ அங்க வாட்டர் கூலேர் கிட்ட நிக்கிறானே தொப்பி போட்டவன்... அவே.. அப்புறம் நம்ம சத்திசு... பாலா... எ நா கூட பஸ்ட் உன் ஆள சைட் அடிச்சுருக்கேன் மச்சான்..."
"டேய்....!!!"
"அப்புறம் வேலைக்கு ஆகாதுன்னு விட்டுட்டேன்... நீயும் விட்டுடு...."
எனக்கு என்ன சொல்வேதேன்றே தெரியவில்லை....
"உன் காலேஜ்ன்னு தெரியாம போச்சு.... உங்கிட்ட ஒன்னே ஒன்னு கேகட்டா..."
"என்னடா.. காசு கிசு எதாவது வேணுமா.."
"அவ பேரு என்ன மச்சி...?!"
நக்கலாய் சிரித்து
"நாங்க வச்ச பேரு வேணுமா.. உண்மையான பேரு வேணுமா...."
"நீங்க வச்சது ஜென்மத்துக்கும் சொல்லிடாத.... உண்மையான பெயர் சொல்லு..."
"கார்ட்டூன் கெழவி... நல்லா பாரேன் அது மாரியே இருக்கும்..."
அடிக்கபோனேன்..எழுந்து ஓடினான்...
கஷ்டப்பட்டு அவனை பிடித்தேன்  "பி profesional மச்சான் " என்றான். அவன் கழுத்தை  கையால் சுற்றி "உண்மையான பேரு சொல்லுடா ப்ளீஸ்..." என்று கெஞ்சினேன். நில்லு நில்லு சொல்லறேன்....கழுத்தை விடுவித்தேன்.... அவன் சட்டையெல்லம் சரி பண்ணிக்கொண்டு .... "கார்ட்டூன் கிழவி" கத்திவிட்டு ஓடினான்....!!!

இப்போலாம் அவள பத்தி நினைத்தால் கார்ட்டூன் கிழவி தான் ஞாபகத்திற்கு வருகிறது.... அவளது உண்மையான பெயர் தெரியாததால் இருக்கும்... என்னால் அவளது உண்மையான பெயரை தெரிந்துகொள்ள முடியவில்லை... மீண்டு போய் பிரபாவிடம் கேட்டால்.. புது புது பெயராக சொல்லுகிறான்.. நெறைய பேரு இருக்கும் போல...!!!
இரவெல்லாம் தூங்கவில்லை...  பாலாவையே ஒத்துகலைய.. ஆளு நல்லாருப்பானே.... எனக்கு வாய்பேயில்லை என்று முழுசாக தோன்றியது... இனிமே அவள பத்தி நனைக்காத கோபி..forget her.. forget her ...!!!

மறுநாள் காலை.. 6 மணிக்கெல்லாம் DCஇல் பஸ் ஏறி... மாமா வீட்டு பஸ் ஸ்டாப்பிற்கு வந்து அவளுக்காக காத்திருந்தேன்....!! பத்து மணி ஆகிவிட்டது இன்னும் அவளை காணவில்லை...!!!  அந்த சிரிப்பு.. அந்த கண்கள்...மனதில் பளிச்சிட்டது .. பார்க்காமல் போககூடாது.....!!! காத்திருந்தேன்.. வந்தாள்... வெள்ளை சுடி... காற்றில் பறக்கும் கூந்தல் ... இதழ்களில்லேசாய் புன்முறவல்... என்னருகே வந்தாள்.. என்னை பார்த்தல்.... எதாவது பேசு கோபி பேசு என்றது மனது... பேச முயற்சித்து தோற்றது எனது உதடுகள்... அவளே பேசினாள் ... "எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்...."
தமிழ் இவ்ளோ அழகான மொழியா....பேசினேன்.. என்னவென்று தெரியவில்லை... ஆனால் பேசினேன்.... பறந்தேன்... காதலென்னும் கப்பல் ஏறி காற்றில் பறந்தேன்....!!!! (அய்யையோ கவித கவித ...!!!)

அதன் பிறகு தினமும் DCil இருந்து மாம்ஸ் வீடு...அங்கிருந்து மீண்டு DC என்று சுற்ற ஆரம்பித்தேன்.... மீண்டும் அந்த சிரிப்பு..அந்த கண்கள்.. ஒரு சில வார்த்தைகள்...

என்னதான் எனக்குள் காதல் முதலில் தலை காவேரி போல் சின்னதாய் ஆரம்பித்து.. இப்பொழுது திருச்சி அகண்ட காவேரி போல் ஓடினாலும்.. அந்த பக்கம் ஒன்னும் இல்லை எனபது ஏன் மனதில் அவ்வப்போது தோன்றி உறுத்தும்.... இருந்தும் எனக்கு பேசினால் போதும் ஒரு வார்த்தை... ஒரே ஒரு வார்த்தை... அந்த கண் சிமிட்டல் ஒரு தடவை பார்த்தல் போதும் நாள் முழுக்க introducing சீனில் வரும் ஹீரோ போல ஆடிகொண்டிருப்பேன்.... இல்லை என்றால் நாள் முழுக்க புலம்பிகொண்டிருப்பேன்... பார்த்தால் போதும்.... அவள் என்னை காதலிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்கவில்லை ஒரே ஒரு முறை பார்த்தால் போதும் ஆனால் தினமும்.. அதற்கு அவள் என்னை காதலிக்க வேண்டும்.

சில நாட்களாய் அவள் என்னுடன் பேசவில்லை... பார்த்து கண்ணால் சிரிப்பதும் இல்லை.. என்னவென்று தெரியவில்லை.... அமைதியாய் அவளை பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தேன் பஸ் ஸ்டாப்பில் ...... உம்மென்று இருந்தால் கொஞ்சம் கார்ட்டூன் போல தான் இருந்தாள்... கிளவிங்க்றது எல்லாம் ஓவர்....!!!
"டேய் கோபி....இங்க என்னடா பண்ற...."
யாரு என்று பார்த்தல் மாமா....!!!!
ஒழியபார்தேன்.. இடமில்லை..மாட்டிக்கொண்டேன்....
பக்கத்தில் வந்தார்...."இங்க என்னடா பண்ற... பஸ் ஸ்டோப்புல நிக்குற வீட்டுக்கு வரல..."
"இல்ல மாமா பஸ் மாறி ஏறி இங்க வந்துட்டேன்...."
"அடப்பாவி.. உங்க அம்மா உன்ன புனேல விட பயப்பட்டது சரி தான்....நீ பாட்டுக்கு வேற எங்கனாவது போய் தொலஞ்சிடாத.. பேசாம தாங்கே சௌக்அ  காலி பண்ணிட்டு இங்கயே வந்துடு.... வா வீட்டுக்கு..."
"இல்ல மாமா..ஆபீஸுக்கு டைம் ஆயிருச்சு..."
எல்லாத்தையும் உளறி கொட்டிவிட்டு சென்று விட்டார்...
அவள் என்னை முறைத்து பார்த்தாள்...
"நீங்க DCலயா தங்கி இருக்கீங்க..."
"ஹ்ம்ம் ஆமா..." (இன்னைக்கு பேசி விட்டாள்...ஐ ..!!!)
"அப்புறம் எதுக்கு இங்க வந்து தெனக்கும் பஸ் ஏறுரீங்க..."
இன்னுமா புரியால.....!!!
நான் நெளிந்தேன்...
"இனிமே இங்கெல்லாம் வந்து அலையாதீங்க.... "
மனது வெடித்தது.....
"நானே DCக்கு மாற போறேன்.. பிரேண்ட்சொட.."
கண்சிம்மிட்டி சிரித்தால்..... நம்பமுடியவில்லை என்னால்....


வாழ்கை என்னும் நாடகத்தில் எனக்காக இளையராஜா பாட்டிசைதார்.. தபூ ஷங்கர் கவிதைகள் எழுதினார்.... audience சீட்டில் எனது இடம் காலியானது.




No comments: