சிறுகதை

Monday, March 11, 2013

ஒரு சின்ன கற்பனை- 2

ரிஷு ...!!

மேலிருந்து கீழ் வலியும் எழுத்துக்கள்.... முறைத்து பார்க்கும் மக்கள்.... முக்காடிட்ட அழகான பெண்கள்... ஜிப்பா போட்ட குல்லா வைத்த ஆண்கள்.... trackஇன் துர்நாற்றத்துடன் சேர்ந்து வீசும் வடா பாவ் வாடை ....

புனே ரயில்வே ஸ்டேஷன் மே ஆப்கா ஹர்த்திக்  ஸ்வாகத் ஹேய்..!!!

ஹிந்தியில் வரவேற்றது புனே...!!!

நான் மட்டும் தனியாக ட்ரெயினில் வந்தேன்...!! எனக்கு இங்கே ஏதோ தூரத்து மாமா இருப்பதை என் அம்மா எப்படியோ கண்டிபிடித்து.. திடிரென நெருங்கிய மாமா ஆக்கி... இப்பொழுது என்னை தேடி வீட்டில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்...!!! அதனால் ஒரு நாள் முன்னாரே நான் வந்துவிட்டேன்..!!

கடுமையான குளிர்....குளிரில் பிரேக் டான்ஸ் ஆடிகொண்டிருந்தேன் .... குளிரையும் பொருட் படுத்தாமல் பலர் பிளாட்போர்மில் படுதுக்கொண்டிருந்தார்கள் .... ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது.. அதன் தாய் அதற்கு குளிராமல் அனைத்துகொண்டிருந்தாள்...!!!


கலையாத தூக்கத்தை கண்ணில் வைத்துக்கொண்டு... அவசரமாய் வந்தார் என் மாமா...அவரது தலை புது பிளாட் போல சுத்தமா காலி செய்யப்பட்டு.. மேலிருந்த லைட்டை reflect செய்தது... அவர் ஸ்கூலிங்குக்கு பிறகு வளர்வதை நிறுத்திவிட்டார் போல...இடுப்புக்கு இருந்தார்...!!!

அவரை இப்பொழுது தான் முதலில் பார்பதாக ஞாபகம்...!! என்னை ஏற்கனவே பார்த்துள்ளதாக புருடா விட்டார்...!! வளர்துவிட்டேனாம்...மற்றும் பல கிளிசெகள்..!!! நான் அதிகம் பேசவில்லை.... வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன்... நாயை தூரத்தி செல்லும் குண்டு பெண்கள்... சைக்கிளில் டி விற்கும் தாத்தா... jhonson n jhonson  விளம்பரத்திற்கு வருவது போல லட்டு பாப்பாகள்... நிறைய மிலிட்டரி உடைகள்.. பீரங்கிகள்... எல்லாவற்றுக்கும் மேலாக வெளியில் தலை நீட்ட முடியாத அளவிற்கு குளிர்...!! மாம்ஸ் குரங்கு குல்லா போட்டிருந்தார்..இப்பொழுதுதான் முகமே தெரிந்தது...!!! நான் நடுகுவதை பார்த்து எனக்கு ஜாக்கெட் எடுத்துவர மறந்து விட்டதாக கூறினார்...அவர் ஜாக்கெட்டை சரி செய்து கொண்டார்..!!

தஞ்சாவூர் ஓல்ட் ஹௌசிங்க் யூனிட் போல இருந்தது அவர்கள் ஏரியா.... ஆனால் நல்ல மெய்டேனேன்ஷ்... எல்ல வீட்டிலும் கார் நின்றது...அவர்கள் அதை society என்று அழைத்தார்கள்...20 வருஷத்துக்கு முன்னாடி புநேலையே முதல கட்டின society இதுதானாம்..!!
"பாகத்தா இப்படி இருக்கும் ஆல் ரிச் பீப்புள்..!!" என்றார் மாம்ஸ்

20 வருஷத்துக்கு முன்னாடி லிப்டேல்லாம்  இல்ல போல.... படிக்கட்டில் ஏறி முதல் மாடி சென்றால்.. படிக்கட்டு திரும்பும் இடத்தில் நான்கு  கதவுகள்.. அதில் ஒன்று திறக்கப்பட்டு ஒரு குழந்தை கதவை பிடித்துக்கொண்டு நின்றது... அதனிடம் மாம்ஸ் ஏதோ ஹிந்தியில் பேச... அது அழுது கொண்டே உள்ளே ஓடிவிட்டது...

"ஹி ஹி எப்போதும் விளையாடும்..என்னானு தெரியல.."

வழிந்தார்..நான் சிரித்தேன்....

"குல்லா போட்டிருகீங்கள அதனால இருக்கும் "

குல்லாவை கலட்டிகொண்டே... கதவின் லாட்சை திறந்தார்.... ஹ்ம்ம் சாம்பார் ஸ்மெல்..!!

 அக்கா ஒல்லியாய் கச்சிதமாய் சாரி அணிதிருந்தாள் ..  லேப்டாபில் சன் டிவி ....  ராதிகா யாரையோ கைநீட்டி திடிகொண்டோண்டிருக்கும் பொழுது பாஸ் செயப்பட்டுள்ளர்....

"நல்லாருக்கியா கோபி..?"

"நல்லாருக்கேன்..நீ எப்படி இருக்க வினி" வினிதா முழுப்பெயர்....

 அக்காவை பலமுறை பார்த்துள்ளேன்... ஊர் திருவிழாவிற்க்கு ஒன்றாகத்தான் போவோம்... யாரோயோ லவ் பண்ணி.. லவ் கம் arranged marriageஆக நடந்த இவர்கள் கல்யாணம் எப்பொழுது நடந்ததென்று சத்தியமாய் ஞாபகம் இல்லை..!!

இட்லி வித் சாம்பார் .. என்னதான் நம்ம ஊரு ஐடெம்னாலும்... வெளிஊரில் சாப்பிடும் பொழுது.. கொஞ்சம் சுவை ஜாஸ்தியாக தான் உள்ளது...
மாம்ஸ் அவசர அவசரமாகா இட்லிகளை முழுங்கிவிட்டு ஆபீசிற்கு ஓடினார்...

பால்கனியை கிட்சென் ஆக்கி இருந்தார்கள்.. கிட்சேனை பெட்ரூம் ஆக மாற்றம் செய்திருந்தனர்.. அந்த கிட்சென் பெட்ரூமில் இருந்து வெளியே வந்த அக்கா...

"சாப்ட்டுட்டு ரிஷு ரூம்ல.. ரெஸ்ட் எடுத்துக்கோ... ட்ரேச்சு கிஸ்சு எல்லாம் அப்படியே பரப்பிட்டு போய்டா.. இப்போதா கிளீன் பண்ணேன்..."

ஹ்ம்ம் அக்காவுக்கு பொண்ணு இருக்கா.. திடிரென்று மாம்ஸ் குள்ளா  கழட்டினதை போல வீடு பளிச்சென்று ஆனது... அம்மா சொல்லவே இல்ல...வாழ்வின் ஒரு மூலையில் சின்ன ஒழி கீற்று கிளம்பியது....!!!
கற்பனை குதிரைகளை கட்டுபடுத்தி நிஜ உலகிற்க்கு வர கொஞ்சம் டைம் எடுத்தது...!!!

ஒரு பொண்ணு ரூம்குள்ள நான் எப்படி... திடிருன்னு வந்துட்டா ...

"ரிஷு (பெயரே இப்போ தா தெரியும்..).. எங்க போயிருக்கா..."

"தசரா வருதுல.. இங்க எல்லோரும் தாண்டியா ஆடுவாங்க தெனைக்கும் சயுன்காலம்.. ப்ராக்டிஸ் பண்ண போயிருக்கா.. ஆடவே வராது.. குச்சி வச்சிக்கிட்டு அடுரவங்க எல்லாரையும் அடிசிகிட்டு இருப்பா.. "
சிரித்தேன்

ரூமில் போய் உட்கார்தேன்.. பெரிய கௌன் ஒன்று தொங்கி கொண்டிருந்தது... நெறைய மெடல்.. கப்.. சின்ன வயது போட்டோகள்.. வரைந்த ஓவியங்கள்.. ஹிந்து எங் வோர்ல்ட்ல வர மாறி..

"ரிஷு டிராயிங் பண்ணுமா...? "

அது உங்க மாமா வோட வேல கோபி...

"ப்ப்பு.." சிரிப்பை அடக்கி கொண்டேன்

தீடிரென்று யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது... தலையை சீவி.. முகத்தை தொடைத்து கொண்டு.. ஹால்லிற்கு போனேன்..

ஒரு அழகான பெண் நின்று கொண்டிருந்தாள்...
"ரிஷு இப்போல்லாம் நல்லா ஆட ஆரம்பிச்சுட்டா.."

பக்கத்தில் ஒரு சின்ன குழந்தை... bag மாட்டிகொண்டு..

"அம்மா யாருமா இந்த அங்கிள்...?!"











No comments: