சிறுகதை

Friday, April 26, 2013

ஒ.சி.க.8 : தேவி தரிசனம்

 எண்ணில் அடங்கா கவிதைகள்....
எண்ணற்ற கனவுகள்....
என்னில் முழ்கியது ....
நீ என்னை விட்டு பிரிந்ததும்....!!!


எப்படினே இருக்கு.... மானிட்டரில் முழ்கி இருந்தவர்... என்னை பார்த்தார்.... 
"எங்கூட வா...." பிரேக் அவுட் ஏரியாவுக்கு இழுத்துட்டு போய் 
"என்னாச்சு சொல்லு.....?"
"ஒண்ணுமில்லனே சும்மா... நா எப்பயோ எழுதுனது.. ஞாபகம் வந்துச்சு... சொன்னேன்...."
நான் எதையோ மறைப்பது போல் பார்த்தார்....
"எனக்கு தெரியும்...." என்றார் 
தாடையில் கை வைத்து தாடியை சொரிந்தேன்....
"இன்னிக்கு காலையில என்னிக்கும் இல்லாம அதிசயமா .... ஏன்டா சீக்ரமா எழுந்து கோவிலுக்கு போன..."

"என்னிக்கும் இல்லாம அதிசயமா.. சீக்ரம் எழுந்துட்டேன்ல.. அதான்....ரொம்ப நாள் வேண்டுதல்னே...சீக்ரம் எழுந்திருக்கனும்னு..."
"ஹ்ம்ம்...சொல்லமாட்ட ....."
மௌனமாய் நின்றேன்... "பிரபா சொன்னான்...."என்றார்.
"இன்னிக்கு அவ பொறந்த நாள்னே...!!!"
அவர் தோளில் சாய்ந்து லேசாய் ரெண்டு சொட்டு தண்ணீர் தெளித்தேன்.
"டேய்... என்னடா இது சின்ன புள்ள மாறி.....!!"
"போன வருஷம் இந்நேரம்... நாள் முழுக்க என்னோட தான் இருந்தா...ஒரு செகண்ட் கூட பிரியல.... கல்யாணத்துக்கு அப்புறம் இப்படியே இருப்பியா என்ன...? என்னையெல்லாம் கண்டுக்கவே மாட்ட.... அப்படின்னு சொன்னா... லூசு இப்போ தான் என்னால உன்ன சரியா பாத்துக்க முடியல... கல்யாணம் ஆயிடுச்சுனா... யூ ஆர் மை ப்ரோபெர்ட்டி... எப்படி கவனிக்கிறேனு பாருன்னு சொன்னேன்.. இப்போ ஒரு விஷ் கூட பண்ணலை....."

"டேய்.. நீ இன்னும் அவள லவ் பண்றீயா...?"
"என்ன கேள்வினே இது.....லவ் என்ன சுவிட்சா வேணாநோன ஆப் பன்னிட்டு போறதுக்கு.... அவ லவ் பண்றதுக்கு முன்னாடியும் நா அவள லவ் பண்ணேன்... இப்போயும் அவள நா லவ் பண்ணறேன்.....!!!"
"அப்புறம் என்னடா... அவளும் உன்ன லவ் பன்னாதனே...போ போய் அவள்ட்ட பேசு.. அவங்க வீட்ல பேசு.... "
"லவ் பண்ணா... அப்புறம் ஏன்னே விட்டுட்டு போனா.... போன பிறந்தநாள் அப்போ நாங்க வெளில சுத்துநோம்னு சொன்னேன்ல... அப்போ அவங்க அண்ணன் பாத்துட்டனாம்.... திட்டினானாம்...அதுவும் கசின்... அதுக்கு போய்...சாரி கோபி... சரி பட்டு வராது அப்படினுட்டு ஜாலியா போய்ட்ட...."
அவர் ஏதோ பேச வந்தார்... அவரை தடுத்து...
"வீட்டுக்கு..தெரிஞ்சா என்ன..எப்படி இருந்தாலும் தெரிய போறது தானே... இப்போ உங்க அண்ணனுக்கு  தெரிஞ்சது நல்லதுதான்.... நம்ம ஜெனரேஷன்..புரிஞ்சுக்குவான்னு.. அவன் நம்பர் வாங்கி பேசுனா... என்னென்னமோ பேசுறான்....அப்புறமா அவ ப்ளீஸ் கோபி விட்டுடு... இனிமே வேணானு ...சொல்லிட்டு கட் பண்ணிட்டா.... என்னமோ நடந்துருக்கு...."
" ஆனா இன்னும் நீ அவள தானே நெனச்சுக்கிட்டு இருக்க...."
"சாமி நாம வேண்டிக்றது எல்லாம் கேக்குதா இல்லையான்னு.. நமக்கு தெரியுமா என்ன...? இன்னும் நாம தெனக்கும் சாமி கும்பிடல... அது மாறி தான்... என்  லவ் வேண்டுதல் மாறி... நடந்தாலும் நடக்காட்டியும் வேண்டிகிட்டே இருப்பேன்...!!"
தோளை தட்டிக்கொடுத்தார்....
"அப்ப ஒருவேள அவளே திரும்பி உங்கிட்ட வந்தா....."
"ஒத்துக்கமாட்டேன்...."
"ஏண்டா...?!"
"இன்னமும் அவள நா லவ் பன்றேந்தான்... ஆனா நம்பிக்க.... அன்னிக்கு கடைசியா அவள ஆட்டோ எத்திவிட்டப்ப... அழுதுகிட்டே டாட்டா காமிச்சுட்டு போன... அப்ப எனக்கு என்ன தோணிச்சு தெரியுமா.. இந்த உலகமே எதிர்த்தாலும் அவ என்ன விட்டுட்டு போக மாட்டானு தோணிச்சு.... அடுத்த ஒரு மணி நேரத்துல கால் பண்ணா....சாரி கோபி விட்டுடுன்னு... அப்போ அந்த கண்ணீர்.. எல்லாம் பொய்யா.. நம்பிக்க போச்சுனே.... கசங்குன பேப்பர் மாறி ஆயிடுச்சு.. இனிமே என்ன தான் நேர் பண்ணாலும் பிரிண்டருக்கு யூஸ் ஆகாது....!!!"
"டேய்..உன்ன மாறி ஒரு நல்ல பையன மிஸ் பண்ணிடாடா அவ...."
நான் பேச எத்தனித்த பொழுது .... என் கைபேசி சினிங்கியது..... மெசேஜ்....unknown நம்பரில் இருந்து... 
"கோபி...  நாளைக்கு காலைல புனேல இருப்பேன்... பஸ் புடிச்சுட்டேன் ..

-G3"

"என்னடா face ரியாக்சனே மாறுது...."
"அண்ணே..அவளே... மெசேஜ் பண்ணிருக்கா... நாளைக்கு புனே வாரலாம்...!!!!
தாவி குதிக்கலாம் போலிருந்தது எனக்கு....
"அய்யயோ... நீ தான் இனி அவள்ட்ட பேச மாட்டியேடா.. இப்போ என்னாடா பண்ண போற...."
"ஆமா.. நா எதுக்கு அவள பாக்க போகணும்... நா போக மாட்டேன்... அவள பாக்க மாட்டேன்... அவள்ட்ட பேச மாட்டேன்...."

ஆபீஸில் இருந்து இருந்து பைகில்வந்துகொண்டிருந்தோம்... அவள மற ...அவள மற...அவள மற மனதிற்குள் சொல்லிக்கொண்டே வந்தேன்... அண்ணன் அவர்கள் அவளை எப்படி எல்லாம் அவாய்ட் பண்ணுவது என்று ஐடியா தந்து கொண்டே வந்தார்.... 
அவரிடம் திரும்பி கேட்டேன்....
"இந்த பெங்களுருல இருந்து வர பஸ்செல்லம் எங்க வந்துனே இறக்கிவிடும்....!!!!" 

" இந்தா இந்த சிக்னல் ரைட் போயி... டேய் டேய் எங்கடா ரைட்ல திரும்புற....."

"டேய்..வேணாண்டா கோபி.... திரும்பா போய் சிக்கல்ல மாட்டாத..."
"அண்ணே.... அவள பாக்க வர்லனே.... ஓரமா நின்னு.. தெரியாம பாத்துட்டு போய்டலாம்....."

ஓவர் bridge ஆரம்பிக்கும் இடத்தில் பஸ் நிக்கும் இடம் இருந்தது ....பெங்களூரில் இருந்து மும்பை செல்லும் வழி... இந்த இடத்தில புனே டிக்கெட்டை எல்லாம் இறக்கிவிடுவார்கலாம்.... நடு ரோட்டில் வண்டியை நிப்பாட்டி இறங்கினேன்.... 
"டேய்..இது தான் உங்க ஊர்ல ஓரமா......"
அவரை பார்த்து சிரித்தேன்....
"பஸ்சு காலைல தாண்டா வரும்.. இப்பயே ஏண்டா வந்து நிக்கிறா வாடா ரூமுக்கு போகலாம்....."
"பஸ் எத்தனமணிக்கு வரும்னே தெரில.... மிஸ் பண்ணிட்டோம்னா...."
"மெசேஜ் பண்ணி கேளு...."
"அது தப்பு...அது தப்பு....""
"டேய் இல்லனா... அவளே மெசேஜ் பன்னுவாடா வாடா....."
"மோசாமான இடம்ணே.... அவ மெசேஜ் பண்ணி நா வரதுக்குள ஏதாவது ஆயிடுச்சுனா...."
முறைத்தார்.....
"மணி ஒன்பது தான் ஆகுது..... பசிக்குதுடா.......ப்ளீஸ் டா...."
"வாங்க அங்க ஹோட்டல் இருக்கு சாப்பிடுவோம்......"சாபிட்டோம்.... மணி பத்து..... 
ஓவர் bridge சுவரில் அண்ணன் சாய்ந்து அமர்ந்தார்... நான் எதிரில் பைக்கில் சாய்ந்தேன்.....
"டேய் பசங்களுக்கு போன் போட்டு சொல்லலாமா....."
"வேணாண்ணே அவங்களுக்கு தெரிஞ்சா திட்டுவானுங்க.. வந்து நம்மள இழுத்துட்டு போய்டுவானுங்க...."
அவர் முகத்தில் ஒரு சந்தோஷம்..பிரபா சீக்ரம் வந்து என்ன காப்பாத்துடா என்று அவசரமாக போன் போட்டார்... பிடுங்க போனேன்.. ஓடினார்... பிடித்துவிட்டேன்...
"என்ன யெங்ககிட்யெவா.. போங்க தல போய் கம்முனு உட்காருங்க...."
"டேய் என்ன விட்டுடுடா..."
"சேரி...இந்தாங்க பைக் சாவி...நீங்க போங்க..."கொடுத்துவிட்டு சிரித்தேன்..."நக்கலு... பைக் ஓட்ட தெரிஞ்சிருந்தா.. எப்பயோ நா கேளம்பிருப்பேனேடா.. உங்கிட்ட ஏன் தொங்கிகிட்டு இருக்க போறேன்...மை fate.. இன்னிக்கு நடு ரோட்டில தான் [பொழுது விடிய போகுது..."
போனில் பாட்டை போட்டார்..... 
"உங்களுக்கு போர் அடிச்சுசுனா.. நா வேணா என் லவ் ஸ்டோரிய சொல்லவா...."
"கொண்டேபுடுவேன்...ஓடி போய்டு....."

மணி 12.....
அவரது போனில்....ராக் ஸ்டார் பாட்டு பாட ஆரம்பித்தது...... டக்கென்று மாற்றினார்.....
"ஏன்னே..."
"நீ தா இத கேக்கமாடியே....."
"அது அப்ப.. இப்ப போடுங்க...."
முறைத்துக்கொண்டே போட்டார்.....
"இந்த படத்துக்கு ஒரு ஹிஸ்டரி இருக்கு தெரியுமானே..."
"என்ன... சொல்லி தொல ..."
"நாங்க மூனாவதா பாத்த படம்... இது..."
"அதனால தா நீ இந்த பாட்ட கேக்கலையா..."
"அப்படினா... நா பல படத்தோட பாட்ட கேக்காமா இருக்கணும்....அது இல்லானே..."
"அப்புறம்... ?"
"நாங்க ரெண்டாவதா பாத்த படமும் இதுதான்.... நாங்க எங்க போனாலும் இந்த படம் தான் ஓடி கிட்டு இருக்கும்... பஸ்ல போனா பஸ்ல ஓடும்... ஹோட்டலுக்கு போனா அங்க ஓடும்.. அதனால இத எங்க பாமிலி படமா declare பண்ணியிருந்தோம்...."
"கலிகாலம்.....அப்ப நீங்க பாத்த முத படம்..."
"ஹி..ஹி... ராக் ஸ்டார்..."
"அட கிராதகா....ஹிந்தி படமாச்சே உனக்கு புரியாதே...." என்று யோசித்தவர்... டக்கென்று மிரட்சி ஆனார்... " இதுக்கு மேல என்னால தாங்க முடியாதுடா.... நா நடந்தே போறேன்...."
நடக்க தொடங்கினார்....
"ப்ச்ச்ச்... வாங்கன்னே.. இதுக்கு போயி.... வாங்க.. டீ வாங்கி தரேன்..."
"ஏண்டா.. ஏதோ ப்ரிட்ன்டறு.. பேப்பருனு டயலாக் விட்ட... இந்த பிரிண்டர்.. எத குடுத்தாலும் ஏத்துக்கும் போலயே...". நக்கலடித்தார்

மணி 3.. 

நல்லா தூங்கி கொண்டிருந்தார்....
அவசர..அவசரமாக.. அவரை எழுப்பினேன்...
திடிக்கிட்டு எழுந்தவர்...
"என்ன வந்துட்டாளா...?"
"இல்லனே பஸ் வர ஆரம்பிச்சிடுச்சு....." கடுப்பாகி வாயை ஜூஸ் குடிப்பதுபோல் சுருக்கி ஏதோ திட்ட வந்தார்... திட்டமால்.."நல்லா வருது...." என்று கூறி எழுந்து போனார்...
"எங்கண்ணே...."
"வருது டா.... எனக்கு வருது... " தலையில் அடித்துக்கொண்டு போனார்.... 

மணி 4.30
கையில் டீயுடன் இருவரும் அமர்ந்திருந்தோம்....
"டேய் மாப்ள.. இதோ ஒரு பொண்ணு வருது.... அதுவா....."
"ச்ச... இல்லன்னே..."
"ஆமான்னு சொல்லிருந்த... இங்கயே கொன்றுப்பே...."

"டேய்ய்ய்ய்ய்.... இவள மட்டும் சொல்லிடதடா......"
"என்ன நல்லதனே இருக்கு...."
"அதனால தான்.. உனக்கு கொஞ்சம் ஓவர்... அண்ணனுக்கு வீக் ஹார்ட்.. தாங்கிக்க முடியாது....!!!"
"ஹ்ம்ம்ம்ம்.... உங்களுக்கு தங்கச்சி... ஞாபகத்துல வச்சுக்கோங்க....."

மணி 6.....
"என் பாவம் உன்ன சும்மா விடாதுடா..... டேய்...."
பல்லை கடித்துக்கொண்டு உட்கதிருந்தேன்....
"எனக்கு முன்னாடியே தெரியும் ... யாரோ நம்மகிட்ட fun பன்னிருகாங்கன்னு...." என்றேன்...
"அடப்பாவி ..!!! கொலைகாரா....." என்னை அடிக்க வந்தார்... அப்போது கல்லடா வந்து நின்றது.....
"அண்ணே.. இதா லாஸ்ட்.. இதா லாஸ்ட்..."
லேசானா காற்று.... தாத்தா ஒருவர் லக்கேஜை சிரமாபட்டு இறக்கினார்... அடுத்தது பட்டியை இறக்கினார்.. அடுத்து பேத்தியை
 "ஒ இம்சை பத்தாதுன்னு.. இவே வேற...."
அடுத்தது அவள் இறங்கினாள்.. அண்ணே "அவ தான்னே.. அவ தான்னே.. " கத்தினேன். அவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு கிழே விழுந்தார்..."இவளா.... ரொம்ப ஓவர்...!!1"
 அவள் எங்களை பார்த்து விட்டாள் "அய்யோ பாத்துட்டா... பாத்துட்டா... " 
"ஏண்டா எல்லா டபுள் டபுள்ளா சொல்ற.. இதற்க்கு தானே காத்துக்கொண்டிருந்தாய் பாலகுமாரா..."
அவள் நேரே என்னிடம் வந்தாள்.... என்னை பார்த்து சிரித்தாள்
 "யாருன்னே இந்த பொண்ணு.நம்மகிட்ட வந்து சிரிக்குது.... லூசா இருக்குமோ..." என்று கூறி முகத்தை திருப்பி கொண்டேன் .
அதிர்ச்சியுடன் பார்த்தார்...
"டேய்..டேய்..டேய்ய்ய்ய்ய்... உலக மகா நடிப்புடா சாமீ....!!!!"
அவளும் முகத்தை திருப்பிக்கொண்டு நின்றாள்... 
"யம்மா.. அவ கெடக்குறான்.... ஆட்டோ நிப்பட்றேன்.. நீ போ வேண்டிய இடத்துக்கு போ.. முடியல" என்று கூறி ஆட்டோ ஒன்றை நிப்பாட்டி ஏற சொன்னார்... அவள் கண்டுக்காமல் முகத்தை திருப்பி கொண்டு நின்றாள். ஆடோக்காரன் பொறுத்து பொறுத்து பார்த்து அண்ணனை திட்டிவிட்டு போய்விட்டான். நானும் அவளும் சிரித்தோம்.. என்னை பார்த்தார்... அவளை பார்த்தார்... 
"சூப்பர் ஜோடி...!!! அவனுக்கு கொஞ்சம் கூட சலிக்கமா... நீயும் நல்லா செஞ்சுவுட்ரம்மா...!!! ஹ்ம்ம்ம் பஸ்சு வந்துடுச்சு ஜாலி.. வீட்டுக்கு போலாம்னு நெனச்சே... இன்னும் எத்தன மணி நேரமோ....." 
(இன்னும் நாலு மணி நேரம் நின்று கொண்டிருந்தோம்....அவள் அண்ணன் அடுத்த பஸ்சில் வந்திறங்கி எங்களை பிடிக்கும் வரை.......:-))

Thursday, April 25, 2013

ஒசிக 7: சூப்பர் ஹீரோ

மிகத்திறமை வாய்ந்த சூப்பர் ஹீரோ ஒருவன் அந்த ஊரில் இருந்தான்.... அவனுக்கு நிகர் யாருமில்லை.... அவ்வளவு பலம் மற்றும் சக்திகளை உடையவன்..... அவனுக்கு சரி நிகரான வில்லன் ஒருவனும் இருந்தான்... மிக கொடியவன்.... இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கும்.. யுத்தம் போல் இருக்கும்.... புழுதி மண்டலம் இமயமலை சைஸ்க்கு எழும்பும்... பூமி நில நடுக்கம் வந்தது போல நடுங்கும்.... அணுகுண்டு வெடித்தாற்போல... சத்தம் காதை பிளக்கும்.. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி விழும்.... நின்று கொண்டிருக்கும் புல் லோட் லாரிகூட வெகு தூரத்தில் நடக்கும் யுத்தத்தினால் வரும் சத்தத்தில் நடுங்கும்.

அந்த ஊரில் உள்ள அனைவரும் அந்த வில்லனை எந்த அளவுக்கு வெறுத்தார்களோ அதைவிட பலமடங்கு அந்த ஹீரோவை ரசித்தார்கள்.... ஆனால் அவன் மட்டும் அந்த ஹீரோவை காதலித்தான் என்று தான் சொல்லவேண்டும்..... எப்பொழுதும் அந்த ஹீரோவை பற்றி தான் பேச்சு.. ரூம் பூரா அவனது போஸ்டர்கள்.... நெஞ்சிலும் அவனைத்தான் ஒட்டிவைதிருந்தான்... அவனுக்கு தெரியும் அவனால் அந்த ஹீரோவை போல் வரமுடியாது என்று... அது போன்ற சக்தி... ஆயிரம் ஆணைகளுக்கு உண்டான பலம்.... காற்றைவிட வேகமாய் பறக்கும் திறன்.... கண்டிப்பாக முடியாது என்று அவனுக்கு தெரியும்.. அவனும் அதற்கு ஆசைபடவில்லை... அந்த ஹீரோவிற்கு நன்பனாக வேண்டும் என்று ஆசை பட்டான்.. ஒரே ஒரு முறை நேரில் மிக அருகில் பார்த்திருக்கிறான்.... அந்த வில்லன் அவனை ஓங்கி ஒரு குத்து குத்த... தள்ள பட்ட ஊஞ்சல் போல நேர இவன் இருந்த இடத்தை நோக்கி.... நடுவில் நின்றிருந்த பஸ்... மற்றும் ஒரு தலைவரின் சிலையை உடைத்துக்கொண்டு நேரே இவனை நோக்கி... அதற்குள் இந்த பக்கமாக திரும்பியிருந்த நம் ஹீரோ அவனை அலேக்காக கையில் பற்றி மேலே தூக்கி சென்று ஒரு மொட்டை மாடியில் வைத்து.... "ஹே..சின்ன பையா.... எப்படி இருந்துச்சு நம்ம flight..."என்று சிரித்து கொண்டே கேட்டு கையில் சாக்லேட் நீட்டினார்.... அவன் தெய்வத்தை கண்ட பக்தன் போல பரவசிதில் இருந்த அவன் அதை ஒரு பிரசாதம் போல் வாங்கி கொண்டான்... இன்னும் அவன் ரூமில் அதை வைத்து அழகு பார்த்துக்கொண்டிருக்கிறான்.....!!!

அந்த சிறுவன் ரூமில் இதெயெல்லாம் யோசித்துக்கொண்டிருந்த பொழுது... வீடு லேசாக நடுங்கியது... அவன் முகத்தில் மகிழ்ச்சி..... "ஐயா...சண்டை..."
நேராக வெளியே ஓடினான்... தூரத்தில் எழும்பியிருந்த புகைமண்டலம் அதனை உறுதி படுத்தியது.... சுற்றி இருந்த கட்டிடங்கள் பார்வையை மறைத்ததால்.. அருகில் இருந்த சிறு குன்றுக்கு மிதிவண்டியில் விரைந்தான்.... கொஞ்சம் கொஞ்சமாக அவன் மேலே ஏற..ஏற..... இரண்டு பிரகாசமான நட்சச்திரங்கள் அந்த அடர்ந்த மேகங்களுக்குகிடையே அவன் கண்களுக்கு புலனாகின..... இரெண்டும் வந்து மோதும் பொழுது.. ஒரு ஒளிவெள்ளம் அந்த மேகங்களையும் கிழித்து இரவை பகலாக்கின..... அவன் குன்றின் உச்சியை அடைந்த கூடியிருந்த மக்கள் வெள்ளத்தில் ஒரு சிறு துளியாய் சேர்ந்து நடக்கும் இரவின் ஒலி ஒளி நிகழ்ச்சியை 5d யில் ரசித்தான்.... அந்த சண்டையின் எபிசென்ட்டர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து... இவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகமையில் வந்தது.... வில்லனை நேர் பார்த்த சிலர்.. அவன் உருவத்தில் இருக்கும் பயங்கரதிலெயெ மயங்கி விழுந்தனர்.... காற்று பலமாக வீசியது... குன்றே லேசாக நடுங்கியது.... கூடியிருந்த அனைவரும் அலறி ஓட... அவன் மட்டும் நின்று.. உலகை மறந்து ரசித்துக்கொண்டிருந்தான்..... பலமாக வீசிய காற்று அவனை பின்னுக்கு தள்ளியது..... தாங்கமுடியாமல் ஒரு கட்டத்தில் காற்றால் தள்ளப்பட்டு... பறந்து.... தலைவிரி கோலமாய் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒற்றை மரத்தில் தனது உயிரை கொக்கிப்போட்டான்.... தீடிரென்று பலமான இடி இடித்தார் போல சத்தம்.... சண்டையில் ஓங்கியிருந்த வில்லனது கை... ஹீரோ வை பலமாய் தாக்க... ஹீரோ சுடுபட்ட சுல்லேரும்புபோல் சுருண்டு குன்றின் மேல் விழுந்து உருண்டார்..... வில்லன் பக்கத்து குன்றில் தரை இறங்கினான்.... காற்று தனிந்தது....அடிபட்ட ஹீரோவிற்கு தென்றலாய் மாறி ஒத்தடம் கொடுத்தது..... வானம் கண்ணீர் பொழிந்தது...... நமது சிறுவனது கண்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது..... ஓடி போய்.. மயங்கியிருந்த ஹீரோவை எடுத்து... மடியில் எடுத்து வைத்து கன்னத்தை தட்டி எழுப்பினான்.... மயக்கமான கண்களை திறந்து பார்த்த ஹீரோ 
"இனி என்னால் உயிருடன் இருக்க முடியாது......"
"அய்யோ.. அப்டி எல்லாம் பேசாதீங்க.. நீங்க இல்லான.. இந்த உலகத்தையே அவன் அழிச்சிடுவான்..."
அவர் இதழ்களில் லேசான புன்முறுவல்...
"அப்படி விட்டுட்டு போய்டுவேனா என்ன..... அத நீ இருக்கீயே....."
அவன் புரியாமல் முழித்தான்....
"என் சக்திஎல்லாம் உனக்கு தரேன்.... இனி இந்த உலகம் உன் கையில்... "
சொன்னவர் அவன் கையில் தன் கைகளை கோர்த்தார்..... ஒளி கீற்றுகள் அவர்களது விரல் இடுக்கிலிருந்து புறப்பட்டது..... அந்த ஒளியோடு..ஒளியாக.... அவர் மறந்து மாயமாக... இருள் சூழ்ந்தது..... எதிரில் வில்லன் "இந்த போடியானா...." என்று ஏளனமாய் அதிர..... கூடி இருந்த மக்கள் நமது புது ஹீரோவை கரகோஷத்துடன் ஆதரிக்க..... 

இவனால் நம்பவே முடியவில்லை... நெஜமாவே.... நமக்கு.. பலம் வந்துவிட்டதா..... கைகள் புடைக்கவில்லை.. மார்பு எக்கு போல் ஆகவில்லை.. நெஜமாவே நாம் சூப்பர் ஹீரோ தானா... 

"போ..போ.. அவனை ஒழி...ஒழி...." என்று ஏகப்பட்ட கூக்குரல்கள்....
முடிவெடுத்தான்...... கால்களை தரையில் ஊன்றினான்..... புழுதி பறந்தது..... ஓடினான் வேகமாக... வில்லனை நோக்கி....இவன் இந்த பக்கம் ஓடிவர.. வில்லன் அந்த பக்கம் ஓடி.. நடுவில் அதலபாதாளம்......
வில்லன்  எகிறி அவனை நோக்கி.... சீரிபாய்ந்தான்......
 "ஹே...."என்று கத்திகொண்டே அவன் ஓடி விளிம்பில் கால் வைத்து எம்பி குதித்தான்......  அடுத்த விநாடி.... தொப்பென்று கிலே விழுந்தான்.....!!!!


வில்லன்.... இந்த குன்றில் வந்து இறங்கி.. கிலே விழும் இவனை பார்த்து எக்காலம்மிட்டான்....... "எனக்கு.. அப்பவே டவுட்டு இவனுக்கு எப்படி.. அவ்ளோ பவர் வரும்னு..." என்று கூட்டத்தில் ஒருவன் ஒலி எழுப்பினான்.இவன் இன்னும் பாதாளத்தை நோக்க விரைந்து கொண்டிருந்தான்.

தம்பி இந்த கதையில இருந்து என்ன சொல்ல வர எனகேட்கிறீர்கள.....
அந்த சூப்பர் ஹீரோ தான் நம்ம பெண்கள்.... அந்த சின்ன பையன் நம்ம பசங்க..... அந்த சூப்பர் ஹீரோ அந்த சின்ன பையனுக்கு குடுத்த சூப்பர் போல தான் பசங்களுக்கு இந்த பொண்ணுங்க காதலை ஒத்துக்கொள்ளும் போது உற்சாகமும் ... அத நம்பி உலகத்த விட்டு மேலே மேலே ரொம்ப மேலே போய்டுவாங்க... உலகமே சின்ன புள்ளியாதா தெரியும்....... திடீர்னு கழட்டி விட்டுடாங்கான..இப்படி அதளபாதளம் தான்.....!!!!

கிழே விழுந்து கொண்டிருக்கும் பொழுது.... இது போன்ற சில mindvoice-சும் நமக்கு கேட்டு வைத்தேரிச்சலை கிளப்பும் .....
"எனக்கு.. அப்பவே டவுட்டு இவனுக்கு எப்படி.. அவ்ளோ பவர் வரும்னு...!!!!"

இது அடுத்து வரபோகும் கார்டூன் கிழவி பகுதி இரேன்டிற்கு.... ஓர் முன் கதை தான்.....!!!

Sunday, April 21, 2013

ஒசிக 6 : திடிர்னு ஒரு நாள் 3

நடுத் தெருவில் குளிரில் விறைத்து போய் நின்றுகொண்டிருந்தோம்... போன் பர்ஸ் எல்லாம் வீட்டினுள் தான் இருந்தது.... ஒனெர் வீடு நாலு தெரு தள்ளிதான்..போனோம்...எங்களுக்கு ஹிந்தி தெரியாது கொஞ்சம் புரியும்.. அவருக்கு இங்கிலீஷ் தெரியாது... பேசினோம்...!!!
 ஒனெர்  எங்களை பார்த்தவுடன் போலி சிரிப்புடன்

"எப்படி இருக்கீங்க... வீடு நல்லருக்கா....?"

"நல்லா செஞ்சுவுட்டுட்டு கேள்வி கேக்குது பாரு..." என்றான் பிரபா

"பையா.. வீட்ல பேய் இருக்குது பையா....!!" என்றேன் நான்

"க்யா ...?"

"பேய்....!பேய்....பேய்ய்ய்ய்ய் பையா....  பேய்ய்ய்ய்ய்..!!!"

"நெய்...நெய்... யூ கேன் பெ  நெக்ஸ்ட் month...!!!"

"ஓ தலேல அண்டாவ கவுக்க..."

"பையா பேய்...!ஹ்ம்ம் ghost பையா.... பூதோ பையா பூதம்..!!! இங்க பாருங்க இவன மாறி " ஹரியை இழுத்து

"டேய் நாக்க வெளில நீட்டி காமிடா...!!"
செய்தான்...அவர் முகம் மாறியது....

"பூத்...?!"

ஒரு வித மிரட்சியுடன் கேட்டார்.....

"ஹரே பாப்ரே....!!"

ஹரியிடம் ஏதோ ஹிந்தியில் பேசினார்... அவன் என்னிடம் திரும்பி

"ரூம்ல ஏதாவது கயிறு கட்டி இருந்ததா... அவுத்தியா" எனக்கேட்டான்
இல்லவே இல்லை என்று சத்தியம் செய்தேன்.
இருவரும் கொஞ்சம் நேரம் பேசி தினறினார்கள் பின்னர் ஹரி சொன்னது...

"அந்த வீட்ல ஏற்கனவே பிராப்லெம் இருந்துச்சாம் ...."

"தெரிஞ்சே விட்டனாடா..."

அவனிடம் சண்டைக்கு போனோம்... அவன் வீட்ட வேணா காலி பண்ணிடுங்க.. என்னோட இன்னொரு வீடு இருக்கு.. நீங்க காசே தரவேணாம்.. இத வெளில யார்டயும் சொல்லாதீங்க என்று ஒரு ஆபர் வைத்தான்... நல்லாத்தான் இருந்தது..... சரி என்று ஒருவாறு முடிவெடுத்து கெழம்பயில் அவன் மறுபடியும் சொன்னான்...

 "காலி பண்ணுங்க.. அதுக்கு தெரியாம காலிபன்னுங்க ....!!!"

"எப்படிடா.. எப்படி..அதுக்கு தெரியாம காலி பண்றது..." எனக் கேட்டான் பிரபா.

"அடி மாட்டு விலைக்கு வரும்போதே நினச்சேன்... ஏதாவது உள்குத்து இருக்கும்னு..."

"குத்து செமையா வலிக்குதேடா.. வீங்கின முஞ்சியை துடைத்துக் கொண்டான் ஹரி.

"நம்ம தெய்வம் இப்படி பண்ணும் நினைக்கலடா.."என்றேன் நான்.

"நீதானே இந்த வீட்ட பாத்த... நீதானே அந்த டேஷ தெய்வம்ன... என்னது தெயவத்த நேர்ல பாத்துருக்கியா மச்சான்.. வா நா கட்டுறேன்....."
நான் அவர்களிடம் சொன்னது போலவே சொல்லி என்னை அடிக்க வந்தார்கள்.....

"டேய் மச மசனு நிக்காம போய் சாமான்லா பேக் பண்ணுங்க...நா போய் வண்டி கூட்டிட்டு வரேன்" என்று நழுவினேன்.

"எங்க தம்பி ஓடுற.. வா பேய்ய நேர பாத்துருக்கியா.. வா நா காட்டுறேன்..." என்னை இழுத்துக்கொண்டு போனார்கள்.

போகிறவழியில் மான்சி ஹோட்டலுக்கு சாப்பிட வந்த அண்ணாமலையை ஒன்னும் கூறாமல் அடிமை ஆக்கி கூட்டிச்சென்றோம்.

"அண்ணே நீங்க போய்.. உங்க கையால வீட்ட தொரங்கன்னே...." என்றேன்

"போங்கண்ணே..." என்றான் பிரபா

"என்னடா அண்ணே மேல தம்பிகளுக்கு பாசம் வழியுது.. என்ன மாட்டரு ..."

"போங்கண்ணே...!!"

போய்கதவின் மீது கைவைத்தார்.... கதவு தானாக திறந்தது.... உள்ளே போனவர் ...

"டேய்.." என்று கத்தினார்....
அலறி அடித்து மூவரும் ஓடினோம்...

"டேய்...உங்க ரூமாட இது..இவ்ளோ கிளீனா இருக்கு.... இதுக்கு தான் என்ன முதல்ல வர சொன்னீங்களா..."அப்பாவியாய் கேட்டார்.

எல்லா குப்பைகளும் நீக்கப்பட்டு ரூம் பளிச்சென்று புது வீடு போல் இருந்தது.... டிவியில் தமிழ் பாட்டு...

ஆடி போன .... ஆவணி.....
நீ...ஆள மயக்கும் தாவணி....!!!

"சந்தீப்புக்கு மாட்டர் தெரிஞ்சிருச்சு..."என்றான் ஹரி...

"ஐஸ் வைக்க பாக்குறான்...." என்றான் பிரபா

"டேய் ஆங்கிலம் உபயோகிக்காத.... பனி கட்டி வைக்க பாக்குறானு சொல்லு..."என்றேன்.

"நண்பர்களே நமக்கு இருப்பது 5 நிமிடங்கள் தான்...அதற்கு மேல் சந்தீப் அவர்கள் அதிரடியில் இறங்கிவிடுவார்.... வாயு வேகமாக உங்கள் சாமான்களை சேகரித்து விரையவும்..... "என்றான் பிரபா

"டேய் இங்கிலீஷ்...." என்றான் ஹரி

"இதுல என்னடா இங்கிலீஷ்..."

"சந்தீப்....."

"ஸ்ஸ்ஸ்.. தமிழ்லையும் அதாண்டா....இப்போ நீ கிளம்பலா.... " உதைக்க போனான் பிரபா

"என்னடா இங்க என்ன உங்க PL வந்துட்டார... ஆபீஸ்ல பேசி பேசி இங்கயும் சுத்த தமிழ்ல பேசுறீங்க...." எனக்கேட்டார் அண்ணாமலை.

"முதல்ல இவருக்கு தெரியாம பாத்துக்கணும்" என்றேன் நான்.

அவசர அவசரமாக கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்துபோட்டு கொண்டிருக்கையில்

"டம்மென்று...."    கதவை சாத்தும் சத்தம் கேட்டது.... ஹாலிற்கு விரைந்தோம்... டிவி பார்த்துக்கொண்டிருந்த அண்ணாமலை கதவை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

எங்களுக்கு புரிந்தது.... நாங்கள் பேசுவது புரியலைனாலும்.. செய்வதை வைத்து கண்டுபுடிதுவிட்டான் சந்தீப்...

"டேய் போய் கதவ திற..." யென பிரபாவிடம் சொன்னேன்.

"டேய் நீ போ..."என்றான் ஹரியிடம்.

அவன் அண்ணாமலையை பார்த்தான்... "என்னடா  யாரவது போங்கடா.. கதவு காத்துக்கு தா சாத்திஇருக்கு..." ஹரி கதவை திறந்தான்.. திறந்தது...எங்கள் மூவர் முகத்திலும் சந்தோஷ புன்னகை....

ஹரி சற்று நகர..மீண்டும் கதவு டமால்என்று சாத்தியது....

ஹரி  கதவை இழுத்தான்... சிறிது திறந்து மீண்டும் மூடியது... நாங்கள் இருவரும் போய் அவனுடன் இழுத்தோம் ... நாங்கள் இந்த பக்கம் இழுக்க... அந்த பக்கம் யாரோ இழுக்க...tug of war போல் இருந்தது.....

இத்தனை ரணகளத்திலும்.. அண்ணாமலை எங்களை ஒரு புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்...
"டேய்... என்ன fun பண்ண்றீங்கள...."

"ஹெல்ப் பண்ணுங்கண்ணே..." என்று கேட்டவுடன்  எழுந்தார்.. எல்லாம் தள்ளு...மூவரும் அவருக்கு வழி விட்டோம்... ஜிம்மெல்லாம் போய் செம்மையா இருப்பார்....

கதவை இழுத்தார்..... லேசாக திறந்தது... விட்டவுடன் மீண்டும் மூடிக்கொண்டது...

"டேய் யாரோ நம்ப பய தான் அந்த பக்கம் இருந்து விளையாடுறான்...."

கதவில் இருந்த பீப் ஹோல் வழியாக பார்த்தார்.... என்னத்த பாத்தாருன்னு தெரில.... அடுத்த செகண்ட்.... கரண்ட் கம்பியை பிடித்தது போல செம vibration.... நாக்கு தள்ளி... ஹால்லை நான்கு முறை வலம் வந்து.... கிழே விழுந்தார்... அவர் கை கதவை நோக்கி நீண்டிருந்தது....!!!!

அண்ணன் அவர்களை எழுப்பவே மூன்று மணி நேரம் ஆகிவிட்டது.... அவர் எழுந்தவுடன் நாங்கள் ஒன்றும் விளக்கவில்லை... அவரே புரிந்துகொண்டார்....
"என்ன ஏண்டா மட்டிவிட்டீங்க...." தலையில் கைவைத்து உட்க்கார்ந்து விட்டார்.

சிலமணி நேரம் கழித்து சொர்க்க வாசலின் கதவு தானாக திறந்தது.... ஒன்னும் வேணாம் விட்டா போதும் என்று தலை தெறிக்க ஓடினோம்....

"அண்ணே இந்த பக்கம்... இந்த பக்கம்..."

"ஆள விடுங்கடா சாமி... இனிமே உங்க சகவாசமே வேணாம்...." எங்களை மதிக்காமல் ஓடினார்.

தெரு முனையில் கூட நிற்கவில்லை.. ஓடினோம் ஓடினோம் ஓடிக்கொண்டே இருந்தோம்.... வழியில் ஒரு கால் டாக்ஸி வந்தது.... நிப்பாட்டி ஏறிகொண்டோம்.. முன்னால் ஓடிக்கொண்டிருந்த அண்ணாமலையையும் ஏற்றி கொண்டோம்....

"எங்க போகணும்" என்று டிரைவர் கேட்டான்

"சென்னை பையா.. சென்னை..."

"ஆமாட... இனி இந்த புனேவே வேனோம்..." என்று ஹரி சொன்ன பொழுது....

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... னு ஒரு சத்தம் லோ பிட்ச்சில் கேட்டது....!!!

காரில் இருந்த fm தானாக சுவிட்ச் ஆன் ஆகியது..... ஹிந்தி பாடல்.... நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து "சந்தீப் சிங்...!!!" என்று கோரஷாக சொல்ல....

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... சத்தம்  ஹை பிட்ச்சில்....!!!!

Wednesday, April 17, 2013

ஒசிக 5 : திடீர்னு ஒரு நாள் 2

 நான் ஹரியிடம் நடந்ததை சொன்னேன்.. அவன் நம்பவில்லை... பிரபாவும் வந்து விட்டான்..... நான் சொல்வதை கேக்காமல் என்னை இழுத்துக்கொண்டு சென்றார்கள்... ஸ்கூல் பஸ் ஏற மறுக்கும் குழந்தை போல போராடினேன்...
"டேய்... மாடு மாறி யாரோ என் மேல ஜிங் ஜிங்குன்னு குதிச்சாங்கடா... இன்னும் வலிக்குது.. ப்ளீஸ் டா..!!!"

"யே... எரும மாடு.... இப்படி நடுங்குற.. வெக்கமா இல்ல... இந்த வீட்ல தானே 4 மாசமா இருக்கோம்... இப்ப நீ வரல.. இப்படி அழுது உச்சா போய்டேனு உன் ஆளுகிட்ட மாட்டிவிற்றுவேன்...." என்றான் பிரபா.

"யார்ட்ட வேணா சொல்லு... நா வரல.." பிய்த்துக்கொண்டு ஓடிவிட்டேன்.

புனே வந்த 8 மாசத்துல 10 வீடு மாறிட்டோம்.... வேண்டா பொண்டாட்டி கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம்ன்க்ரா மாதிரி நாங்க என்ன பண்ணாலும் nuisance  அக்கிடுவனுங்க.... நைட் ஆபீஸ்ல இருந்து லேட்டா வந்து லைட் போட்டதுக்கு.. நைட் எல்லாம் கூத்தடிக்க்ரங்கனு பக்கத்துக்கு வீட்டு பொண்ணோட அப்பா கம்ப்ளைன்ட் பன்னி எங்கள காலி பன்னார்.

பொதுவா புதுசா கட்டிகிட்டு இருக்குற சொசைட்டில ஈசியா வீடு கெடக்கும்.. ஆனா கொஞ்சம் பாமிலி வந்தோன நைட் ஏழு மணிக்கு ஒரு பத்து பேரு வந்து கதவ தட்டி சொசைடில bachelors நாட் allowed .... நாளைக்கு எட்டு மணிக்குள்ள காலி பண்ணிடுங்க.. இல்ல போலீஸ் கேஸ் ஆயிடும்னு மிரட்டுவாங்க.

புது வீடு பக்கலாம்னாலும் bachelorsக்கு கஷ்டம்.... இந்த மாறி சூழ்நிலையில் தான் நாங்க இந்த வீட்ட வந்து பார்த்தோம்..... fully furnished.. டிவி...வாஷிங் மெச்சின்.... பெரிய சோபா... ரெண்டு டபுள் காட் அதுவும் அடிமாட்டு ரெண்டுக்கு.


"மச்சான் தெய்வத்தா நேர்ல பாத்துருக்கியா.. வா காட்டுறேன்" என்று கூறி தான் நான் என் வீட்டு ஓனரை என் நண்பர்களுக்கு அறிமுக படுத்தினேன்.

இப்போ தானே புரியுது... தெய்வம் நின்று கொல்லும்னு  ...!!!!


அவர்கள் இருவரும் வீட்டிற்குள் சென்று வெகு நேரம் ஆகிவிட்டது...அவர்கள் பயந்து ஓடி வருவதை எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன்.... ரொம்ப நேரம் ஆகியும் வரவில்லை... ஒருவேளை மேலே... அய்யய்யோ அப்படியெல்லாம் ஆகியிருக்க கூடாது.....
மேலே போகவும் பயமாய் இருந்தது.. போகாமலும் இருக்க முடியவில்லை... பயந்து பயந்து மேலே போனேன்.

கதவை மெதுவாய் திறந்து.. உள்ளே எட்டி பார்த்தேன்... உள்ளே அவர்கள் ஜாலியாய் டிவி பார்த்துகொண்டிருந்தார்கள்... தமிழ் படம் ...!!!
ஒன்னும் நடக்கவில்லையா....!!! ஹரி சைஷ பார்த்து பயந்துடுச்சோ..!!!

அவர்கள் காலை பார்த்தேன் அவர்கள் தான்...கதவு தானாக சாற்றி கொள்ளாதபடி லாக் போட்டு விட்டு உள்ளே போனேன்.

"டேய்..வாங்கடா.. அண்ணாமலை வீட்டுக்கு போய்டுவோம்..."
அடுப்படியில் மீண்டும் சத்தம் கேட்டது....!!

"ஹே.. சந்தீப் சிங் சுப் கரோ..." என்றான் பிரபா

"இவ்ளோ நேரம் சும்மா தான் இருந்தான் நீ வந்தோன தான் துள்றான்... உன்ன தான் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு போல....!!"

மீண்டும் அந்த அமானுஷ்ய சத்தம் கேட்டது.. அவர்களும் பயந்து தான் போனார்கள்... ஆனால் காட்டிக்கொள்ளவில்லை.

"டேய் சந்தீப் கோப பட்றான் போலருக்கு.... ஹிந்தி பாட்டு வை..."
ஹரி ஹிந்தி சேனல் வைத்தான்.
ஒரு 5 நிமிஷம் ரொம்ப போர் அடித்தது... ஹரி வேற சானெல் மாற்றினான்...

டம்மென்று ஒரு சத்தம்... ஹரி charil இருந்து தோம்மென்று கிழே விழுந்தான்... அவ்ளோ பெரிய பாடி.. அசைக்கறத்துகே பல நியூட்டன் போர்ஸ் தேவை.. விழுந்துருக்கான்னா செம அடி போல....
கண்ணில் நீருடன்.. தலையை பிடித்துக்கொண்டு எழுந்தான்....
"டேய் சந்தீப் @#$!...! நீ என்ன பருப்பா.... பேய்னா பயந்துடுவோமா....இவ்ளோ நேரம் புரியாம நாங்க பத்தொம்ல...!! வேற சேனலும் ஹிந்தி தானே போட்டேன்...!! ஏன்டா அடிச்ச..!! எனக்கு ஹிந்தில தெரிஞ்சது நாலே நாலு வார்த்த அதுவும்...."

அந்த நான்கு அமுத சொற்களை அவன் உதிர்க்க... லைட் மின்னி மின்னி ஏறிய ஆரம்பித்தது....சுற்றி இருந்த குப்பைகள் பறக்க ஆரம்பித்தது....

"கிர்ர்ர்...ர்ர்ர்....ர்ர்"
என்று ஒரு சத்தம் கொஞ்சம் தொலைவில் கேட்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சம்மாக பக்கம் வந்தது....
"சந்தீப் காண்டாய்ட்டாண்டா..." என்றவுடன்
கரண்ட் கட் ஆனது..... கும்மென்று இருட்டு... மாயன அமைதி....!!!
 நாங்கள் மூணு பேரும் ஒருவரை ஒருவர் பிடித்துகொண்டு பக்கம்பக்கமாக நின்றோம்...பிரபா லைட்டர் எடுத்து பற்ற வைத்தான்.....நான்காவதாக ஒரு உருவம் எங்களுடன் நின்றது...!!!

Monday, April 15, 2013

ஒ.சி.க 4 : தீடீர்னு ஒரு நாள்....!

மூணு வாரத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாங்க என் அப்பா அம்மா புனே வரேன்னு... bachelors ரூமுக்கு பேரெண்ட்ஸ் வரது அரசியல்வாதி வீட்டுக்கு இன்கம் டாக்ஸ் ரைட் வரா மாதிரி.... ஆச ஆசையாய் சேர்த்துவச்சு கோட்ட கட்டின பீர் பாட்டேல் எல்லாம் தூக்கி போடணும்.... ஒரு சிகரட் துண்டு கூட தப்பி தவறி கண்ணுல பட்டுட கூடாது... சாமி படம் ஒன்னு வாங்கி மாட்டனும்... ரூம் ஸ்ப்ரே அடிக்கணும்... எல்லாத்துக்கும் மேல பாத்ரூம கழுவி சுத்தமா வைக்கணும்.....

"டெட் லைன் நெருகிடுச்சு பாய்ஸ்...  நாளைக்கு காலைல நாலு மணிக்கு வரதா இருந்த ஆபீசர்ஸ்.... ட்ரைன் லேட் ஆனதால 8 மணிக்கு தான் வராங்க.... சோ வி ஹாவ் சம் பிரீதிங் டைம் ... கெட் ரெடி.. பாக் அப்...."

போர்வைக்குள் மல்லாந்து கிடந்தவர்களை தட்டி எழுப்பி.. தூசி தட்ட ஆரம்பித்த பொழுது.. கட்டிலுக்கு அடியில் தரையோடு தரையாய் ஒட்டி போன ஜாக்கி..... பல மதங்களுக்கு முன்னால் காணாமல் போன ரூம் கி... என்று பல புதை பொருட்கள் கிடைக்க ஆரம்பித்தது..... பல ஆயிரக்கணக்கான கரப்பான் பூச்சிகள் விழித்து எழ.... நாங்கள் அதை ஒவ்வொன்றாய் செருப்பில் அடித்து முடியாமல் பாதி காலியான ஹிட்டை எடுக்க...அதில் இருந்து சில நூறு கிளம்பியது...!!!! பின்னர் பிரபா யூஸ் பண்ணும் துபாய் பாடிஸ்ப்ரேவை பிரயோகித்து ஒருவாறு சில நூறை வெற்றி கண்டோம்.

கிரிக்கெட் பால் ஒன்று நாங்கள் கண்டெடுத்த புதைபொருட்களில் ஒன்றாய் வந்து சேர கிளறிய குப்பைகளை பாதியில் விட்டு விட்டு கிரிக்கெட் ஆட முடிவேடுத்துவிட்டார்கள். நான் எவ்வளவோ கெஞ்சியும் என்னை பொருட்படுத்தாமல் அவர்கள் சென்றுவிட வீடு கிட்ட தட்ட குப்பை லாரி அக்சிடென்ட் ஆன இடம் போல் காட்சி அளித்தது...துபாய் சென்டும்.... பல மாதங்களுக்கு முன் நீதிராஜன் செஞ்சு மறந்த பாயாசம் பாய்சன் ஆனது தெரியாமல் திறந்ததால் வந்த ஒரு வித பாதாள சாக்கடை வாடையும் ரூமில் பரவி இருந்தது.... தெரு நாய்களும் பக்கத்து வீட்டு ஆண்டியும் வந்துவிடாமல் இருக்க கதவை சாற்றி விட்டேன்..!!!!

முகத்தில் துண்டை கட்டி கொண்டு.... டிவி-இல் சன் மியூசிக் வைத்துவிட்டு ஆரம்பித்தேன்.... கிச்சென் ஜன்னலில் ஏகப்பட்ட கயிறு கட்டபட்டிருந்தது... பார்க்கவே பயங்கரமாய்.... கத்தியை கண்டுபிடித்து அறுத்தேன்....

 டம டம டம என்று பலமாய் யாரோ கதவை தட்டினார்கள்.... யாராய் இருந்தாலும் அப்படி யென்ன அவசரம் கடுப்பாய் போய் கதவை திறந்தேன்.. இல்ல.. இல்ல... லேசாய் தாழ்பாளை தான் அவிழ்திருப்பேன் படார் என்று யாரோ என்னை தள்ளி விட்டு உள்ளே வந்தார்கள்.

விழுந்த அதே அதிர்ச்சியில் கண் விழித்தேன்... சுற்றி முற்றி பார்த்தேன்...
"என்ன பெட்ரூம்ல வாஷ் பாஸின்..இருக்கு..."
நான் கிடந்தது பாத்ரூமில்....(யார்டயும் சொல்லிடாதீங்க...!!!)
எப்படி...?! ஒரு வேல விஷ வாயு தாக்கிடுச்சா....?!
புரியாமல் எழுந்த போது.. கிட்செனில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டது....
"டேய்....."
பதிலில்லை......
"பிரபா....?!"
"........."
"நீதி....?!"
"ஹரி..குண்டா நீயா....?!"
அதற்குள் நடந்து கிட்செனுக்கே வந்துவிட்டேன்... யாருமில்லை...!!!
டிவி ஓடிகொண்டிருந்தது......

 "ஹ...!!!....ஹிந்தி பாட்டு..."

சென்னையில மே மாசத்துல பனி பொழியிரதும் ஒண்ணுதான்.. எங்க வீட்ல ஹிந்தி சேனல் ஓடுறதும் ஒண்ணுதான்....அதான் இவ்வளவு அதிர்ச்சி..!!

இந்த ஹரி பயலா தான் இருக்கும்.... ஹிந்தி பொண்ணுகள கரெக்ட் பண்ண இந்த வேல.... "டேய்.... பேபி உன் வேல தானே இது....?"

ரீமோட்டை தேடினேன்...காணவில்லை...பீரோ மேல்..டிவி டேபிள்...கட்டில்..பெட்ஷீட்டுக்கு அடியில்.. எங்கேயும் இல்லை..!!! கடைசியில் கட்டிலுக்கு அடியில்...சமந்தமே இல்லாத மூளையில் இருந்தது....கையை விட்டு எடுக்க ட்ரை பண்ணேன்... ஹ்ம்ம்... கையில் அகப்படவில்லை.... துலாவினேன்.. காணோம்...மீண்டும் குனித்து பார்கையில்..அது இருந்த இடத்தை விட்டு சற்று நகர்திருந்தது...!!!!

கட்டிலை நகர்த்தி.. ரீமோட்டை எடுத்தேன்.சேனல்லை மாற்ற ட்ரை பண்ணேன்.. மாறவில்லை....பல விடா முயற்சிக்கு பிறகு.... சன் மியூசிக்....!!!
திரும்பயில் மீண்டு ஹிந்தி சேனலுக்கு மாறி விட்டது.....!!!

ரீமோட்டை எடுத்து மீண்டும் சன் மியூசிக் மாற்றினேன்...மீண்டும் ஹிந்தி சேனல் மாறியது.....SM/HC/SM/HC மாறி கொண்டே இருந்தது... கடுப்பாகி டிவி யை ஆப் செய்துவிட்டேன்.

வீட்டில் யாரோ இருக்கிறார்கள்....தேடினேன்..வீடு முழுக்க...யாரோ என் பின்னால் வருவது போல் இருந்தது.... சட்டேன்று திரும்பயில்... என் கண் முன்னே..மங்கலாய்.....பயங்கரமாய்.... பயந்து தடுமாறி.... கிழே விழுந்து..அருகில் இருந்த ராக்கில் துழாவி.. கையில் கிடைத்த கத்தியை எடுத்தேன்...!!!
"டேய் யாருடா அது... கொன்னுருவே.... தைரியம் இருந்தா முன்னால வாடா.." கத்தியை சுழற்றிக்கொண்டே.. "முஞ்சில பூரான் விட்டுருவேன்.....!!!!"

ஒத்த கையில் கத்தியை பிடித்துக்கொண்டு..இன்னொரு கையில் துன்ணூறு டப்பாவை பிரித்து பட்டையிட்டுக்கொண்டென்.....பிள்ளையாரை பார்த்துக் கும்பிட்டேன்....அய்யய்யோ பிள்ளையாருக்கு தும்பிக்கைய காணோம்....!!

"ஐயோ...கணபதி பப்பா..!!!  தும்பிக்கை எங்க....?!"

என் கால்களை யாரோ இழுத்தது போல் இருந்தது....தடுமாறி கிழே விழுந்தேன்... யாரோ மேலே ஏறி குதித்தார்கள்....
"டேய் யாரு டா அது......"
அலறி அடித்து வீட்டை விட்டு ஓடினேன்..... படிக்கட்டில் ஓடும் பொழுது எதிரே ஹரி வந்தான்.. ஹை வோல்டஜ் பதட்டத்தில் அவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் நான் பலமாய் மூச்சு வாங்க....
ஆச்சி சாம்பார் பொடி விளம்பரத்தில் வருவது போல் நல்லா மோப்பம் பிடித்து கேட்டான்.
"மச்சான் வாசன தூக்குது... என்ன பிரியாணியா....!!!!"

கதவு டம் என்று சாத்தியது, கதவோரத்தில் வெளியில் இருந்த பிளாஸ்டிக் பாக்குகள் பறந்தது.







Wednesday, April 10, 2013

எங்கேயோ பார்த்த மயக்கம்....!!!


நெய்வேலி நகரம்,5th பிளாக்


.......!
'மச்சான்..நாய்யெல்லா குரகிதுட...வாடா போயுடுவோம்..!
'டேய் என்னடா பையன் நீ இதுக்கெல்லாம் பயப்படா அப்புறம் எப்படி நீ தைரியமா அவகிட்ட ப்ரொபோஸ் பண்ணுவ....!
ஹீரோ வசனம் பேசுவது போல் பல்லை கடித்து,விரலை சொடக்கு போட்டுகொண்டுசொன்னான் "போறோம்டா உள்ள... சொல்ல்ரோம்ட லவ்எ...!"
கண்னுக்கு எட்டிய தூரத்தின் முடிவில் தெரிந்தது சின்ன வெளிச்சம்,
ஒரு டிகிரி கூட வலைவில்லாத நேர் ரோடு.சுற்றிலும் பொட்டு வெளிச்சம் இல்லாதeucalyptus காடு.கொலை செய்ய ஏற்ற இடம்.
மணி இரவு 11.00 ,
பாதி தூரம் வந்து விட்டோம்,நாங்கள் கிளம்பிய இடம் சிறு திட்டாய் தூரத்தில்தெரிய,நாங்கள் செல்லவேண்டிய இடமும் சிறு திட்டாய் தெரிந்தது எதிர்பக்கத்தில்...!எதிர் காத்தில் எங்களால் சைக்கிள்லை மிதிக்க முடியவில்லை.உமேஷ்கூட வருகிறான் என்பதை அவன் பேசுவதை வைத்து தான் கண்டுபிடிக்கமுடிந்தது...அப்படி ஒரு கும்மிருட்டு...!
"நாளைக்கு நியூஸ் வரப்போகுது...!nlc-கு ட்ரைனிங் வந்த மாணவர்கள் பேய் அடித்துபலின்னு...!"
"ஐயோ அப்போ ரியா(உமேஷ் ஆளு...!)"என்று அவன் சொல்லி கொண்டிருக்கும்பொழுது தடார் என்று ஒன்று வந்து என்னை அடித்தது,தடுமாறி சைக்கிளில் இருந்துகிழே விழுந்தேன்...!
"ஐயோ"என்றொரு முனகல் சத்தம்...!
நான் அவர் மேலே...இல்லை இல்லை அது மேஅலே,இல்லை இல்லை எதுமேலேயோ விழுந்து கிடந்தேன்...!பிசு பிசுவென இருந்தது..!ரத்தம் உறைந்தநாற்றம்...!உமேஷ் அங்கு இல்லை என்பது புரிந்தது.

நான் வேகமாய் எழுந்து ஓட ஆரம்பித்தேன்..!
அது கூப்டது...!கர கர குரலில்...!
"டேய் நில்லு..நில்லுடா..நில்லுடா XXXX...!"
பேய் எல்லாம் நம்மள திட்டுது..!
தூரத்தில் வெளிச்சத்தில் உமேஷ் நின்று மூச்சு வாங்கி கொண்டிருந்தான்...நான் அவனை முட்டி கொண்டு நின்றேன்...!
"டேய் என்னடா ரத்தம்...!"
என் உடல் முழுவதும் ரத்தம்..!
"பேச நேரம் இல்ல வா வேற வழியா ஓடிறலாம்..!"
நான் கையை பிடித்து இழுக்க அவன் வராமல் நின்றான்...!
"ஏன்டா...!"
அவன் சொன்னான் "dead end"
சுற்றி முற்றி பார்த்தேன்,வந்த வழியை பார்த்தேன்...!
இதயம் எகிறி துடித்தது...!ஒரு உருவம் நொண்டி நொண்டி எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது...!
உமேஷ்உம் பார்த்திருப்பான் போல தொப் என்று கிழே சரிந்தான்,
"டேய் எந்திருடா...எந்திருடா முண்டம்...!"
அது பக்கத்தில் வந்துவிட்டது...!
ஓடமுடியாமல் ninren ....!
இன்னும் பக்கத்தில் வந்து "டேய் XXXX நில்லுனா நிக மாட்டியா ...!"
நிற்கவில்லை நானும் விழுந்து விட்டேன் ...!
அது என் அருகில் வந்து என் மேல் கை வைத்தது..!
மறு நாள் காலை,நெய்வேலி G.H.,
கண்விழித்து பார்த்தேன் பகத்து பெட்இல் உமேஷ் இழித்து கொண்டு படுத்திருந்தான்,சுற்றிலும் பிரஸ்...!கேமரா பிளாஷ்கள் பளிச்சிட்டன....!
காக்கி சட்டை ஒன்று லோக்கல் channeluku பேட்டி அளித்து கொண்டிருந்தார் ..!
"இந்த காலத்து இளைஞர்களுக்கு தைரியம் வேண்டும் சார் ...செத்த பொனம் எங்கயாவது பேசுமா சார் ....!"
camera என்னுடைய இந்தாண்ட பெட்டை  focus செய்தது ,அதில் ஒருவன் படுத்து கொண்டு கை அசைதான் ,அவன் கையில் என் போன் ...!
அந்த கேடு கெட்ட முகத்தை எங்கேயோ பார்த்த மயக்கம் ....!

Tuesday, April 2, 2013

சாவித்திரி

"சாவி... பைக் சாவி பாத்தியா....?"

"ஹ பாத்துட்டேன்..பாத்துட்டேன்....."

அயன் பண்ணாத சட்டையை அணிந்து விரைந்தார் வெங்கிடாசலம்.....

"டீபின் சாப்பிட நேரம் இல்ல... ஆபீஸ்ல பாத்துக்கறேன்.... பத்திரமா இரு....."

ஓட்டமும் நடையுமாய்....வாசலுக்கு ஓடி..கதவை சாற்றி....லாக் போட்டுவிட்டு.... வண்டி வரை ஓடியவர் ஒரு கணம் நின்றார்... மீண்டும் வந்து...
கதவை திறந்து... "சாவித்திரி....சாவித்திரி...." என்று அழைத்துக்கொண்டே பெட்ரூமிற்குள் நுழைந்தார்.... உள்ளே சென்று...

"என்ன பாக்குற.... "

"உங்கிட்ட ஒன்னு சொல்லனும் சாவி.... " இழுத்தார்....

"உனக்கு தெரிஞ்சதுதான்...' வெட்கப்பட்டார்.....

"ஏன் நா சொல்லலைனு எனக்கே தெரில...."

சுற்றி முற்றி பார்த்து......

"ஐ லவ் யூ சாவித்திரி " என்றார் சுவற்றில் மாட்டியிருந்த மாலை போட்ட சாவித்திரி இடம்.

திருமணமாகி 25 வருடத்தில் சொல்லாததை சொன்ன திருப்தி... சொல்லாமல் விட்டதற்காக அரும்பும் கண்ணீர்.... இவரே அறியாத இவரது தேவைகளை உணர்ந்தவள் அவள்....சந்தேகங்களை தீர்க்கும் தோழி.... ஆலோசனை கூறும் தகப்பன்... அவருக்குள் இருக்கும் குழந்தைக்கு தாய்....அவளில்லாததை அவரால் எப்படி ஏற்கமுடியும். அவளை இழந்த அன்றைய தினத்தில் அவரால் அழமுடியவில்லை...வீட்டிற்கு பெரியவர்.. நேர்மயனாவர்.... முன்கோபி.... இரும்பு.. நெருப்பு... என்று ஒவ்வோருவர் ஒவ்வொர்விதமாய் இவரை பார்க்க... இவரை வெங்கிடாசலமாக.... இவரை மனிதனாக பார்த்த ஒருத்தி சாவித்திரி.
அவள் முன் அழுதார்... தினமும்....கண்ணீரை துடைத்துவிட்டு.. மீண்டும் நெருப்பாய்.. இரும்பாய்.. நாடக உலகத்தில் நுழைவார்.

இன்னமும் அவர் குழந்தையாய் இருப்பது அவளிடம் தான்.... தினமும் மாலை வந்தவுடன்... அவள் முன் அமர்ந்து அன்று நடந்ததை சொல்லுவார்..... அவளிடம் பேசுவார்... சிரிப்பார்....அழுவார்....!!!!

துவைக்காத சட்டை போடுவதில் இருந்து....நீண்டநாள் கழித்து அடித்த கிங்ஸ்.... எதேச்சையாய் சந்தித்த நீண்ட நாள் நண்பர் ஒருவர் "வைப்பு எப்படி இருக்காங்க" என்று கேட்ட பொழுது அழுததை சொல்லி மீண்டும் அழுதார்.
பில்ட்டர் காப்பி என்றால் அவருக்கு கொள்ளை பிரியம்.. ஒரு நாளைக்கு ஏழு எட்டு போகும்.. இப்பெல்லாம் குடிப்பதில்லை.....சிந்து காப்பி கோமியம் போல் கலப்பதால் வேறு வழியில்லை... பில்ட்டர் காப்பி  இடத்தை கிங்ஸ் பில்ட்டர் ஆக்கிரமிப்பு செய்தது.


அவர் அடிக்கடி தனியாக பேசி சிரிப்பதை பார்த்த வேலைக்காரி "அய்யாவுக்கு என்னமோ ஆயிடுச்சு.. அம்மா போனதில இருந்தே சரி இல்ல" என்று  சினம்மாவிடம்  வத்திவைத்தாள்.

சிந்துவிற்க்கு அவரிடம் எப்படி பேசுவதென்றே தெரியவில்லை.... காலேஜ் முடிந்ததும் சீக்கிரம் வீடு வந்து அவரை பார்த்துக்கொள்வாள்....வருவதற்குள் அவரே சமைத்தும் வைத்திருப்பார்.. இப்பெல்லாம் ஆபீஸ் போவதே கம்மி ஆகிவிட்டது... சதா சர்வ காலமும் வீட்டிலேயே அடைந்திருக்கிறார். ஒருநாள் அவரை வெளியில் அழைத்து சென்றாள்.

"இன்னாம்மா இது"
"மால்பா..!!"
"இங்க என்னா வங்கபோற.."
"எல்லாமே வாங்கலாம்.... வாங்காமையும் போகலாம்..." சிரித்தார்
அவர் அதிகம் பேசவில்லை அமைதியாய் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தார். அவரிடம் அவள் பேசும் போதும் அவர் அதிகம் பேசாமல் எதையோ யோசித்துக்கொண்டே இருந்தார்.
எஸ்காலடோரில் ஏறும் பொழுது... கொஞ்சம் தடுமாறி.. டிராபிக் ஜாம் ஏற்படுத்திவிட்டார். அருகில் இருந்த சிறுவன் "சும்மா போங்க அங்கிள்.." என்று தள்ள  தாண்டி  போய்  நின்றதில் இமயத்தை கடந்த திருப்தி, சிந்து சிரித்தாள்.

"ஏன்பா இப்படி உம்ம்னே இருக்க....முன்ன மாறி இல்லப்பா நீ..."
அவர் அவளை தீர்கமாய் பார்த்தார்
"நா ஒன்னும் மாறலாமா.."
"இல்லப்பா... முன்னெல்லாம்.. வேலைக்கு ஒரு நாள் லீவ் போட்டுறிப்பியா.... சனிக்கிழம கூட ஆபீஸ் போவ...வீட்டில இருந்தா பொழுதென்னைக்கும் நியூஸ் பேப்பர்.. டிவி.... இப்ப நீ காப்பி குடிகிரதில்ல.. சிகரட் குடிக்கிற.. நியூஸ் பேப்பர பிரிக்கிறதுகூட இல்ல....டிவி பாக்கிறது இல்ல....  பேசுற.. சிரிக்கிற.. ஆனா அம்மாகிட்ட.. இல்ல இல்ல அம்மா போட்டோகிட்ட.... என்னப்பா வருத்தம்..."

"இப்ப ஏன் டிவி பாக்கல அம்மாட்டயே பேசுறன்னு கேக்றியே... அப்பவே ஏன்  டிவியே பாக்குற அம்மாட்டயும் கொஞ்சம் பேசுன்னு சொல்லிருக்கலாம்ல....இனி ....." என்ற பொழுது அவரது குரல் தழுதழுத்தது.