மூணு வாரத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாங்க என் அப்பா அம்மா புனே வரேன்னு... bachelors ரூமுக்கு பேரெண்ட்ஸ் வரது அரசியல்வாதி வீட்டுக்கு இன்கம் டாக்ஸ் ரைட் வரா மாதிரி.... ஆச ஆசையாய் சேர்த்துவச்சு கோட்ட கட்டின பீர் பாட்டேல் எல்லாம் தூக்கி போடணும்.... ஒரு சிகரட் துண்டு கூட தப்பி தவறி கண்ணுல பட்டுட கூடாது... சாமி படம் ஒன்னு வாங்கி மாட்டனும்... ரூம் ஸ்ப்ரே அடிக்கணும்... எல்லாத்துக்கும் மேல பாத்ரூம கழுவி சுத்தமா வைக்கணும்.....
"டெட் லைன் நெருகிடுச்சு பாய்ஸ்... நாளைக்கு காலைல நாலு மணிக்கு வரதா இருந்த ஆபீசர்ஸ்.... ட்ரைன் லேட் ஆனதால 8 மணிக்கு தான் வராங்க.... சோ வி ஹாவ் சம் பிரீதிங் டைம் ... கெட் ரெடி.. பாக் அப்...."
போர்வைக்குள் மல்லாந்து கிடந்தவர்களை தட்டி எழுப்பி.. தூசி தட்ட ஆரம்பித்த பொழுது.. கட்டிலுக்கு அடியில் தரையோடு தரையாய் ஒட்டி போன ஜாக்கி..... பல மதங்களுக்கு முன்னால் காணாமல் போன ரூம் கி... என்று பல புதை பொருட்கள் கிடைக்க ஆரம்பித்தது..... பல ஆயிரக்கணக்கான கரப்பான் பூச்சிகள் விழித்து எழ.... நாங்கள் அதை ஒவ்வொன்றாய் செருப்பில் அடித்து முடியாமல் பாதி காலியான ஹிட்டை எடுக்க...அதில் இருந்து சில நூறு கிளம்பியது...!!!! பின்னர் பிரபா யூஸ் பண்ணும் துபாய் பாடிஸ்ப்ரேவை பிரயோகித்து ஒருவாறு சில நூறை வெற்றி கண்டோம்.
கிரிக்கெட் பால் ஒன்று நாங்கள் கண்டெடுத்த புதைபொருட்களில் ஒன்றாய் வந்து சேர கிளறிய குப்பைகளை பாதியில் விட்டு விட்டு கிரிக்கெட் ஆட முடிவேடுத்துவிட்டார்கள். நான் எவ்வளவோ கெஞ்சியும் என்னை பொருட்படுத்தாமல் அவர்கள் சென்றுவிட வீடு கிட்ட தட்ட குப்பை லாரி அக்சிடென்ட் ஆன இடம் போல் காட்சி அளித்தது...துபாய் சென்டும்.... பல மாதங்களுக்கு முன் நீதிராஜன் செஞ்சு மறந்த பாயாசம் பாய்சன் ஆனது தெரியாமல் திறந்ததால் வந்த ஒரு வித பாதாள சாக்கடை வாடையும் ரூமில் பரவி இருந்தது.... தெரு நாய்களும் பக்கத்து வீட்டு ஆண்டியும் வந்துவிடாமல் இருக்க கதவை சாற்றி விட்டேன்..!!!!
முகத்தில் துண்டை கட்டி கொண்டு.... டிவி-இல் சன் மியூசிக் வைத்துவிட்டு ஆரம்பித்தேன்.... கிச்சென் ஜன்னலில் ஏகப்பட்ட கயிறு கட்டபட்டிருந்தது... பார்க்கவே பயங்கரமாய்.... கத்தியை கண்டுபிடித்து அறுத்தேன்....
டம டம டம என்று பலமாய் யாரோ கதவை தட்டினார்கள்.... யாராய் இருந்தாலும் அப்படி யென்ன அவசரம் கடுப்பாய் போய் கதவை திறந்தேன்.. இல்ல.. இல்ல... லேசாய் தாழ்பாளை தான் அவிழ்திருப்பேன் படார் என்று யாரோ என்னை தள்ளி விட்டு உள்ளே வந்தார்கள்.
விழுந்த அதே அதிர்ச்சியில் கண் விழித்தேன்... சுற்றி முற்றி பார்த்தேன்...
"என்ன பெட்ரூம்ல வாஷ் பாஸின்..இருக்கு..."
நான் கிடந்தது பாத்ரூமில்....(யார்டயும் சொல்லிடாதீங்க...!!!)
எப்படி...?! ஒரு வேல விஷ வாயு தாக்கிடுச்சா....?!
புரியாமல் எழுந்த போது.. கிட்செனில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டது....
"டேய்....."
பதிலில்லை......
"பிரபா....?!"
"........."
"நீதி....?!"
"ஹரி..குண்டா நீயா....?!"
அதற்குள் நடந்து கிட்செனுக்கே வந்துவிட்டேன்... யாருமில்லை...!!!
டிவி ஓடிகொண்டிருந்தது......
"ஹ...!!!....ஹிந்தி பாட்டு..."
சென்னையில மே மாசத்துல பனி பொழியிரதும் ஒண்ணுதான்.. எங்க வீட்ல ஹிந்தி சேனல் ஓடுறதும் ஒண்ணுதான்....அதான் இவ்வளவு அதிர்ச்சி..!!
இந்த ஹரி பயலா தான் இருக்கும்.... ஹிந்தி பொண்ணுகள கரெக்ட் பண்ண இந்த வேல.... "டேய்.... பேபி உன் வேல தானே இது....?"
ரீமோட்டை தேடினேன்...காணவில்லை...பீரோ மேல்..டிவி டேபிள்...கட்டில்..பெட்ஷீட்டுக்கு அடியில்.. எங்கேயும் இல்லை..!!! கடைசியில் கட்டிலுக்கு அடியில்...சமந்தமே இல்லாத மூளையில் இருந்தது....கையை விட்டு எடுக்க ட்ரை பண்ணேன்... ஹ்ம்ம்... கையில் அகப்படவில்லை.... துலாவினேன்.. காணோம்...மீண்டும் குனித்து பார்கையில்..அது இருந்த இடத்தை விட்டு சற்று நகர்திருந்தது...!!!!
கட்டிலை நகர்த்தி.. ரீமோட்டை எடுத்தேன்.சேனல்லை மாற்ற ட்ரை பண்ணேன்.. மாறவில்லை....பல விடா முயற்சிக்கு பிறகு.... சன் மியூசிக்....!!!
திரும்பயில் மீண்டு ஹிந்தி சேனலுக்கு மாறி விட்டது.....!!!
ரீமோட்டை எடுத்து மீண்டும் சன் மியூசிக் மாற்றினேன்...மீண்டும் ஹிந்தி சேனல் மாறியது.....SM/HC/SM/HC மாறி கொண்டே இருந்தது... கடுப்பாகி டிவி யை ஆப் செய்துவிட்டேன்.
வீட்டில் யாரோ இருக்கிறார்கள்....தேடினேன்..வீடு முழுக்க...யாரோ என் பின்னால் வருவது போல் இருந்தது.... சட்டேன்று திரும்பயில்... என் கண் முன்னே..மங்கலாய்.....பயங்கரமாய்.... பயந்து தடுமாறி.... கிழே விழுந்து..அருகில் இருந்த ராக்கில் துழாவி.. கையில் கிடைத்த கத்தியை எடுத்தேன்...!!!
"டேய் யாருடா அது... கொன்னுருவே.... தைரியம் இருந்தா முன்னால வாடா.." கத்தியை சுழற்றிக்கொண்டே.. "முஞ்சில பூரான் விட்டுருவேன்.....!!!!"
ஒத்த கையில் கத்தியை பிடித்துக்கொண்டு..இன்னொரு கையில் துன்ணூறு டப்பாவை பிரித்து பட்டையிட்டுக்கொண்டென்.....பிள்ளையாரை பார்த்துக் கும்பிட்டேன்....அய்யய்யோ பிள்ளையாருக்கு தும்பிக்கைய காணோம்....!!
"ஐயோ...கணபதி பப்பா..!!! தும்பிக்கை எங்க....?!"
என் கால்களை யாரோ இழுத்தது போல் இருந்தது....தடுமாறி கிழே விழுந்தேன்... யாரோ மேலே ஏறி குதித்தார்கள்....
"டேய் யாரு டா அது......"
அலறி அடித்து வீட்டை விட்டு ஓடினேன்..... படிக்கட்டில் ஓடும் பொழுது எதிரே ஹரி வந்தான்.. ஹை வோல்டஜ் பதட்டத்தில் அவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் நான் பலமாய் மூச்சு வாங்க....
ஆச்சி சாம்பார் பொடி விளம்பரத்தில் வருவது போல் நல்லா மோப்பம் பிடித்து கேட்டான்.
"மச்சான் வாசன தூக்குது... என்ன பிரியாணியா....!!!!"
கதவு டம் என்று சாத்தியது, கதவோரத்தில் வெளியில் இருந்த பிளாஸ்டிக் பாக்குகள் பறந்தது.

No comments:
Post a Comment