நடுத் தெருவில் குளிரில் விறைத்து போய் நின்றுகொண்டிருந்தோம்... போன் பர்ஸ் எல்லாம் வீட்டினுள் தான் இருந்தது.... ஒனெர் வீடு நாலு தெரு தள்ளிதான்..போனோம்...எங்களுக்கு ஹிந்தி தெரியாது கொஞ்சம் புரியும்.. அவருக்கு இங்கிலீஷ் தெரியாது... பேசினோம்...!!!
ஒனெர் எங்களை பார்த்தவுடன் போலி சிரிப்புடன்
"எப்படி இருக்கீங்க... வீடு நல்லருக்கா....?"
"நல்லா செஞ்சுவுட்டுட்டு கேள்வி கேக்குது பாரு..." என்றான் பிரபா
"பையா.. வீட்ல பேய் இருக்குது பையா....!!" என்றேன் நான்
"க்யா ...?"
"பேய்....!பேய்....பேய்ய்ய்ய்ய் பையா.... பேய்ய்ய்ய்ய்..!!!"
"நெய்...நெய்... யூ கேன் பெ நெக்ஸ்ட் month...!!!"
"ஓ தலேல அண்டாவ கவுக்க..."
"பையா பேய்...!ஹ்ம்ம் ghost பையா.... பூதோ பையா பூதம்..!!! இங்க பாருங்க இவன மாறி " ஹரியை இழுத்து
"டேய் நாக்க வெளில நீட்டி காமிடா...!!"
செய்தான்...அவர் முகம் மாறியது....
"பூத்...?!"
ஒரு வித மிரட்சியுடன் கேட்டார்.....
"ஹரே பாப்ரே....!!"
ஹரியிடம் ஏதோ ஹிந்தியில் பேசினார்... அவன் என்னிடம் திரும்பி
"ரூம்ல ஏதாவது கயிறு கட்டி இருந்ததா... அவுத்தியா" எனக்கேட்டான்
இல்லவே இல்லை என்று சத்தியம் செய்தேன்.
இருவரும் கொஞ்சம் நேரம் பேசி தினறினார்கள் பின்னர் ஹரி சொன்னது...
"அந்த வீட்ல ஏற்கனவே பிராப்லெம் இருந்துச்சாம் ...."
"தெரிஞ்சே விட்டனாடா..."
அவனிடம் சண்டைக்கு போனோம்... அவன் வீட்ட வேணா காலி பண்ணிடுங்க.. என்னோட இன்னொரு வீடு இருக்கு.. நீங்க காசே தரவேணாம்.. இத வெளில யார்டயும் சொல்லாதீங்க என்று ஒரு ஆபர் வைத்தான்... நல்லாத்தான் இருந்தது..... சரி என்று ஒருவாறு முடிவெடுத்து கெழம்பயில் அவன் மறுபடியும் சொன்னான்...
"காலி பண்ணுங்க.. அதுக்கு தெரியாம காலிபன்னுங்க ....!!!"
"எப்படிடா.. எப்படி..அதுக்கு தெரியாம காலி பண்றது..." எனக் கேட்டான் பிரபா.
"அடி மாட்டு விலைக்கு வரும்போதே நினச்சேன்... ஏதாவது உள்குத்து இருக்கும்னு..."
"குத்து செமையா வலிக்குதேடா.. வீங்கின முஞ்சியை துடைத்துக் கொண்டான் ஹரி.
"நம்ம தெய்வம் இப்படி பண்ணும் நினைக்கலடா.."என்றேன் நான்.
"நீதானே இந்த வீட்ட பாத்த... நீதானே அந்த டேஷ தெய்வம்ன... என்னது தெயவத்த நேர்ல பாத்துருக்கியா மச்சான்.. வா நா கட்டுறேன்....."
நான் அவர்களிடம் சொன்னது போலவே சொல்லி என்னை அடிக்க வந்தார்கள்.....
"டேய் மச மசனு நிக்காம போய் சாமான்லா பேக் பண்ணுங்க...நா போய் வண்டி கூட்டிட்டு வரேன்" என்று நழுவினேன்.
"எங்க தம்பி ஓடுற.. வா பேய்ய நேர பாத்துருக்கியா.. வா நா காட்டுறேன்..." என்னை இழுத்துக்கொண்டு போனார்கள்.
போகிறவழியில் மான்சி ஹோட்டலுக்கு சாப்பிட வந்த அண்ணாமலையை ஒன்னும் கூறாமல் அடிமை ஆக்கி கூட்டிச்சென்றோம்.
"அண்ணே நீங்க போய்.. உங்க கையால வீட்ட தொரங்கன்னே...." என்றேன்
"போங்கண்ணே..." என்றான் பிரபா
"என்னடா அண்ணே மேல தம்பிகளுக்கு பாசம் வழியுது.. என்ன மாட்டரு ..."
"போங்கண்ணே...!!"
போய்கதவின் மீது கைவைத்தார்.... கதவு தானாக திறந்தது.... உள்ளே போனவர் ...
"டேய்.." என்று கத்தினார்....
அலறி அடித்து மூவரும் ஓடினோம்...
"டேய்...உங்க ரூமாட இது..இவ்ளோ கிளீனா இருக்கு.... இதுக்கு தான் என்ன முதல்ல வர சொன்னீங்களா..."அப்பாவியாய் கேட்டார்.
எல்லா குப்பைகளும் நீக்கப்பட்டு ரூம் பளிச்சென்று புது வீடு போல் இருந்தது.... டிவியில் தமிழ் பாட்டு...
ஆடி போன .... ஆவணி.....
நீ...ஆள மயக்கும் தாவணி....!!!
"சந்தீப்புக்கு மாட்டர் தெரிஞ்சிருச்சு..."என்றான் ஹரி...
"ஐஸ் வைக்க பாக்குறான்...." என்றான் பிரபா
"டேய் ஆங்கிலம் உபயோகிக்காத.... பனி கட்டி வைக்க பாக்குறானு சொல்லு..."என்றேன்.
"நண்பர்களே நமக்கு இருப்பது 5 நிமிடங்கள் தான்...அதற்கு மேல் சந்தீப் அவர்கள் அதிரடியில் இறங்கிவிடுவார்.... வாயு வேகமாக உங்கள் சாமான்களை சேகரித்து விரையவும்..... "என்றான் பிரபா
"டேய் இங்கிலீஷ்...." என்றான் ஹரி
"இதுல என்னடா இங்கிலீஷ்..."
"சந்தீப்....."
"ஸ்ஸ்ஸ்.. தமிழ்லையும் அதாண்டா....இப்போ நீ கிளம்பலா.... " உதைக்க போனான் பிரபா
"என்னடா இங்க என்ன உங்க PL வந்துட்டார... ஆபீஸ்ல பேசி பேசி இங்கயும் சுத்த தமிழ்ல பேசுறீங்க...." எனக்கேட்டார் அண்ணாமலை.
"முதல்ல இவருக்கு தெரியாம பாத்துக்கணும்" என்றேன் நான்.
அவசர அவசரமாக கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்துபோட்டு கொண்டிருக்கையில்
"டம்மென்று...." கதவை சாத்தும் சத்தம் கேட்டது.... ஹாலிற்கு விரைந்தோம்... டிவி பார்த்துக்கொண்டிருந்த அண்ணாமலை கதவை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
எங்களுக்கு புரிந்தது.... நாங்கள் பேசுவது புரியலைனாலும்.. செய்வதை வைத்து கண்டுபுடிதுவிட்டான் சந்தீப்...
"டேய் போய் கதவ திற..." யென பிரபாவிடம் சொன்னேன்.
"டேய் நீ போ..."என்றான் ஹரியிடம்.
அவன் அண்ணாமலையை பார்த்தான்... "என்னடா யாரவது போங்கடா.. கதவு காத்துக்கு தா சாத்திஇருக்கு..." ஹரி கதவை திறந்தான்.. திறந்தது...எங்கள் மூவர் முகத்திலும் சந்தோஷ புன்னகை....
ஹரி சற்று நகர..மீண்டும் கதவு டமால்என்று சாத்தியது....
ஹரி கதவை இழுத்தான்... சிறிது திறந்து மீண்டும் மூடியது... நாங்கள் இருவரும் போய் அவனுடன் இழுத்தோம் ... நாங்கள் இந்த பக்கம் இழுக்க... அந்த பக்கம் யாரோ இழுக்க...tug of war போல் இருந்தது.....
இத்தனை ரணகளத்திலும்.. அண்ணாமலை எங்களை ஒரு புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்...
"டேய்... என்ன fun பண்ண்றீங்கள...."
"ஹெல்ப் பண்ணுங்கண்ணே..." என்று கேட்டவுடன் எழுந்தார்.. எல்லாம் தள்ளு...மூவரும் அவருக்கு வழி விட்டோம்... ஜிம்மெல்லாம் போய் செம்மையா இருப்பார்....
கதவை இழுத்தார்..... லேசாக திறந்தது... விட்டவுடன் மீண்டும் மூடிக்கொண்டது...
"டேய் யாரோ நம்ப பய தான் அந்த பக்கம் இருந்து விளையாடுறான்...."
கதவில் இருந்த பீப் ஹோல் வழியாக பார்த்தார்.... என்னத்த பாத்தாருன்னு தெரில.... அடுத்த செகண்ட்.... கரண்ட் கம்பியை பிடித்தது போல செம vibration.... நாக்கு தள்ளி... ஹால்லை நான்கு முறை வலம் வந்து.... கிழே விழுந்தார்... அவர் கை கதவை நோக்கி நீண்டிருந்தது....!!!!
அண்ணன் அவர்களை எழுப்பவே மூன்று மணி நேரம் ஆகிவிட்டது.... அவர் எழுந்தவுடன் நாங்கள் ஒன்றும் விளக்கவில்லை... அவரே புரிந்துகொண்டார்....
"என்ன ஏண்டா மட்டிவிட்டீங்க...." தலையில் கைவைத்து உட்க்கார்ந்து விட்டார்.
சிலமணி நேரம் கழித்து சொர்க்க வாசலின் கதவு தானாக திறந்தது.... ஒன்னும் வேணாம் விட்டா போதும் என்று தலை தெறிக்க ஓடினோம்....
"அண்ணே இந்த பக்கம்... இந்த பக்கம்..."
"ஆள விடுங்கடா சாமி... இனிமே உங்க சகவாசமே வேணாம்...." எங்களை மதிக்காமல் ஓடினார்.
தெரு முனையில் கூட நிற்கவில்லை.. ஓடினோம் ஓடினோம் ஓடிக்கொண்டே இருந்தோம்.... வழியில் ஒரு கால் டாக்ஸி வந்தது.... நிப்பாட்டி ஏறிகொண்டோம்.. முன்னால் ஓடிக்கொண்டிருந்த அண்ணாமலையையும் ஏற்றி கொண்டோம்....
"எங்க போகணும்" என்று டிரைவர் கேட்டான்
"சென்னை பையா.. சென்னை..."
"ஆமாட... இனி இந்த புனேவே வேனோம்..." என்று ஹரி சொன்ன பொழுது....
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... னு ஒரு சத்தம் லோ பிட்ச்சில் கேட்டது....!!!
காரில் இருந்த fm தானாக சுவிட்ச் ஆன் ஆகியது..... ஹிந்தி பாடல்.... நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து "சந்தீப் சிங்...!!!" என்று கோரஷாக சொல்ல....
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... சத்தம் ஹை பிட்ச்சில்....!!!!

No comments:
Post a Comment