"சாவி... பைக் சாவி பாத்தியா....?"
"ஹ பாத்துட்டேன்..பாத்துட்டேன்....."
அயன் பண்ணாத சட்டையை அணிந்து விரைந்தார் வெங்கிடாசலம்.....
"டீபின் சாப்பிட நேரம் இல்ல... ஆபீஸ்ல பாத்துக்கறேன்.... பத்திரமா இரு....."
ஓட்டமும் நடையுமாய்....வாசலுக்கு ஓடி..கதவை சாற்றி....லாக் போட்டுவிட்டு.... வண்டி வரை ஓடியவர் ஒரு கணம் நின்றார்... மீண்டும் வந்து...
கதவை திறந்து... "சாவித்திரி....சாவித்திரி...." என்று அழைத்துக்கொண்டே பெட்ரூமிற்குள் நுழைந்தார்.... உள்ளே சென்று...
"என்ன பாக்குற.... "
"உங்கிட்ட ஒன்னு சொல்லனும் சாவி.... " இழுத்தார்....
"உனக்கு தெரிஞ்சதுதான்...' வெட்கப்பட்டார்.....
"ஏன் நா சொல்லலைனு எனக்கே தெரில...."
சுற்றி முற்றி பார்த்து......
"ஐ லவ் யூ சாவித்திரி " என்றார் சுவற்றில் மாட்டியிருந்த மாலை போட்ட சாவித்திரி இடம்.
திருமணமாகி 25 வருடத்தில் சொல்லாததை சொன்ன திருப்தி... சொல்லாமல் விட்டதற்காக அரும்பும் கண்ணீர்.... இவரே அறியாத இவரது தேவைகளை உணர்ந்தவள் அவள்....சந்தேகங்களை தீர்க்கும் தோழி.... ஆலோசனை கூறும் தகப்பன்... அவருக்குள் இருக்கும் குழந்தைக்கு தாய்....அவளில்லாததை அவரால் எப்படி ஏற்கமுடியும். அவளை இழந்த அன்றைய தினத்தில் அவரால் அழமுடியவில்லை...வீட்டிற்கு பெரியவர்.. நேர்மயனாவர்.... முன்கோபி.... இரும்பு.. நெருப்பு... என்று ஒவ்வோருவர் ஒவ்வொர்விதமாய் இவரை பார்க்க... இவரை வெங்கிடாசலமாக.... இவரை மனிதனாக பார்த்த ஒருத்தி சாவித்திரி.
அவள் முன் அழுதார்... தினமும்....கண்ணீரை துடைத்துவிட்டு.. மீண்டும் நெருப்பாய்.. இரும்பாய்.. நாடக உலகத்தில் நுழைவார்.
இன்னமும் அவர் குழந்தையாய் இருப்பது அவளிடம் தான்.... தினமும் மாலை வந்தவுடன்... அவள் முன் அமர்ந்து அன்று நடந்ததை சொல்லுவார்..... அவளிடம் பேசுவார்... சிரிப்பார்....அழுவார்....!!!!
துவைக்காத சட்டை போடுவதில் இருந்து....நீண்டநாள் கழித்து அடித்த கிங்ஸ்.... எதேச்சையாய் சந்தித்த நீண்ட நாள் நண்பர் ஒருவர் "வைப்பு எப்படி இருக்காங்க" என்று கேட்ட பொழுது அழுததை சொல்லி மீண்டும் அழுதார்.
பில்ட்டர் காப்பி என்றால் அவருக்கு கொள்ளை பிரியம்.. ஒரு நாளைக்கு ஏழு எட்டு போகும்.. இப்பெல்லாம் குடிப்பதில்லை.....சிந்து காப்பி கோமியம் போல் கலப்பதால் வேறு வழியில்லை... பில்ட்டர் காப்பி இடத்தை கிங்ஸ் பில்ட்டர் ஆக்கிரமிப்பு செய்தது.
அவர் அடிக்கடி தனியாக பேசி சிரிப்பதை பார்த்த வேலைக்காரி "அய்யாவுக்கு என்னமோ ஆயிடுச்சு.. அம்மா போனதில இருந்தே சரி இல்ல" என்று சினம்மாவிடம் வத்திவைத்தாள்.
சிந்துவிற்க்கு அவரிடம் எப்படி பேசுவதென்றே தெரியவில்லை.... காலேஜ் முடிந்ததும் சீக்கிரம் வீடு வந்து அவரை பார்த்துக்கொள்வாள்....வருவதற்குள் அவரே சமைத்தும் வைத்திருப்பார்.. இப்பெல்லாம் ஆபீஸ் போவதே கம்மி ஆகிவிட்டது... சதா சர்வ காலமும் வீட்டிலேயே அடைந்திருக்கிறார். ஒருநாள் அவரை வெளியில் அழைத்து சென்றாள்.
"இன்னாம்மா இது"
"மால்பா..!!"
"இங்க என்னா வங்கபோற.."
"எல்லாமே வாங்கலாம்.... வாங்காமையும் போகலாம்..." சிரித்தார்
அவர் அதிகம் பேசவில்லை அமைதியாய் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தார். அவரிடம் அவள் பேசும் போதும் அவர் அதிகம் பேசாமல் எதையோ யோசித்துக்கொண்டே இருந்தார்.
எஸ்காலடோரில் ஏறும் பொழுது... கொஞ்சம் தடுமாறி.. டிராபிக் ஜாம் ஏற்படுத்திவிட்டார். அருகில் இருந்த சிறுவன் "சும்மா போங்க அங்கிள்.." என்று தள்ள தாண்டி போய் நின்றதில் இமயத்தை கடந்த திருப்தி, சிந்து சிரித்தாள்.
"ஏன்பா இப்படி உம்ம்னே இருக்க....முன்ன மாறி இல்லப்பா நீ..."
அவர் அவளை தீர்கமாய் பார்த்தார்
"நா ஒன்னும் மாறலாமா.."
"இல்லப்பா... முன்னெல்லாம்.. வேலைக்கு ஒரு நாள் லீவ் போட்டுறிப்பியா.... சனிக்கிழம கூட ஆபீஸ் போவ...வீட்டில இருந்தா பொழுதென்னைக்கும் நியூஸ் பேப்பர்.. டிவி.... இப்ப நீ காப்பி குடிகிரதில்ல.. சிகரட் குடிக்கிற.. நியூஸ் பேப்பர பிரிக்கிறதுகூட இல்ல....டிவி பாக்கிறது இல்ல.... பேசுற.. சிரிக்கிற.. ஆனா அம்மாகிட்ட.. இல்ல இல்ல அம்மா போட்டோகிட்ட.... என்னப்பா வருத்தம்..."
"இப்ப ஏன் டிவி பாக்கல அம்மாட்டயே பேசுறன்னு கேக்றியே... அப்பவே ஏன் டிவியே பாக்குற அம்மாட்டயும் கொஞ்சம் பேசுன்னு சொல்லிருக்கலாம்ல....இனி ....." என்ற பொழுது அவரது குரல் தழுதழுத்தது.

No comments:
Post a Comment