மிகத்திறமை வாய்ந்த சூப்பர் ஹீரோ ஒருவன் அந்த ஊரில் இருந்தான்.... அவனுக்கு நிகர் யாருமில்லை.... அவ்வளவு பலம் மற்றும் சக்திகளை உடையவன்..... அவனுக்கு சரி நிகரான வில்லன் ஒருவனும் இருந்தான்... மிக கொடியவன்.... இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கும்.. யுத்தம் போல் இருக்கும்.... புழுதி மண்டலம் இமயமலை சைஸ்க்கு எழும்பும்... பூமி நில நடுக்கம் வந்தது போல நடுங்கும்.... அணுகுண்டு வெடித்தாற்போல... சத்தம் காதை பிளக்கும்.. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி விழும்.... நின்று கொண்டிருக்கும் புல் லோட் லாரிகூட வெகு தூரத்தில் நடக்கும் யுத்தத்தினால் வரும் சத்தத்தில் நடுங்கும்.
அந்த ஊரில் உள்ள அனைவரும் அந்த வில்லனை எந்த அளவுக்கு வெறுத்தார்களோ அதைவிட பலமடங்கு அந்த ஹீரோவை ரசித்தார்கள்.... ஆனால் அவன் மட்டும் அந்த ஹீரோவை காதலித்தான் என்று தான் சொல்லவேண்டும்..... எப்பொழுதும் அந்த ஹீரோவை பற்றி தான் பேச்சு.. ரூம் பூரா அவனது போஸ்டர்கள்.... நெஞ்சிலும் அவனைத்தான் ஒட்டிவைதிருந்தான்... அவனுக்கு தெரியும் அவனால் அந்த ஹீரோவை போல் வரமுடியாது என்று... அது போன்ற சக்தி... ஆயிரம் ஆணைகளுக்கு உண்டான பலம்.... காற்றைவிட வேகமாய் பறக்கும் திறன்.... கண்டிப்பாக முடியாது என்று அவனுக்கு தெரியும்.. அவனும் அதற்கு ஆசைபடவில்லை... அந்த ஹீரோவிற்கு நன்பனாக வேண்டும் என்று ஆசை பட்டான்.. ஒரே ஒரு முறை நேரில் மிக அருகில் பார்த்திருக்கிறான்.... அந்த வில்லன் அவனை ஓங்கி ஒரு குத்து குத்த... தள்ள பட்ட ஊஞ்சல் போல நேர இவன் இருந்த இடத்தை நோக்கி.... நடுவில் நின்றிருந்த பஸ்... மற்றும் ஒரு தலைவரின் சிலையை உடைத்துக்கொண்டு நேரே இவனை நோக்கி... அதற்குள் இந்த பக்கமாக திரும்பியிருந்த நம் ஹீரோ அவனை அலேக்காக கையில் பற்றி மேலே தூக்கி சென்று ஒரு மொட்டை மாடியில் வைத்து.... "ஹே..சின்ன பையா.... எப்படி இருந்துச்சு நம்ம flight..."என்று சிரித்து கொண்டே கேட்டு கையில் சாக்லேட் நீட்டினார்.... அவன் தெய்வத்தை கண்ட பக்தன் போல பரவசிதில் இருந்த அவன் அதை ஒரு பிரசாதம் போல் வாங்கி கொண்டான்... இன்னும் அவன் ரூமில் அதை வைத்து அழகு பார்த்துக்கொண்டிருக்கிறான்.....!!!
அந்த சிறுவன் ரூமில் இதெயெல்லாம் யோசித்துக்கொண்டிருந்த பொழுது... வீடு லேசாக நடுங்கியது... அவன் முகத்தில் மகிழ்ச்சி..... "ஐயா...சண்டை..."
நேராக வெளியே ஓடினான்... தூரத்தில் எழும்பியிருந்த புகைமண்டலம் அதனை உறுதி படுத்தியது.... சுற்றி இருந்த கட்டிடங்கள் பார்வையை மறைத்ததால்.. அருகில் இருந்த சிறு குன்றுக்கு மிதிவண்டியில் விரைந்தான்.... கொஞ்சம் கொஞ்சமாக அவன் மேலே ஏற..ஏற..... இரண்டு பிரகாசமான நட்சச்திரங்கள் அந்த அடர்ந்த மேகங்களுக்குகிடையே அவன் கண்களுக்கு புலனாகின..... இரெண்டும் வந்து மோதும் பொழுது.. ஒரு ஒளிவெள்ளம் அந்த மேகங்களையும் கிழித்து இரவை பகலாக்கின..... அவன் குன்றின் உச்சியை அடைந்த கூடியிருந்த மக்கள் வெள்ளத்தில் ஒரு சிறு துளியாய் சேர்ந்து நடக்கும் இரவின் ஒலி ஒளி நிகழ்ச்சியை 5d யில் ரசித்தான்.... அந்த சண்டையின் எபிசென்ட்டர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து... இவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகமையில் வந்தது.... வில்லனை நேர் பார்த்த சிலர்.. அவன் உருவத்தில் இருக்கும் பயங்கரதிலெயெ மயங்கி விழுந்தனர்.... காற்று பலமாக வீசியது... குன்றே லேசாக நடுங்கியது.... கூடியிருந்த அனைவரும் அலறி ஓட... அவன் மட்டும் நின்று.. உலகை மறந்து ரசித்துக்கொண்டிருந்தான்..... பலமாக வீசிய காற்று அவனை பின்னுக்கு தள்ளியது..... தாங்கமுடியாமல் ஒரு கட்டத்தில் காற்றால் தள்ளப்பட்டு... பறந்து.... தலைவிரி கோலமாய் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒற்றை மரத்தில் தனது உயிரை கொக்கிப்போட்டான்.... தீடிரென்று பலமான இடி இடித்தார் போல சத்தம்.... சண்டையில் ஓங்கியிருந்த வில்லனது கை... ஹீரோ வை பலமாய் தாக்க... ஹீரோ சுடுபட்ட சுல்லேரும்புபோல் சுருண்டு குன்றின் மேல் விழுந்து உருண்டார்..... வில்லன் பக்கத்து குன்றில் தரை இறங்கினான்.... காற்று தனிந்தது....அடிபட்ட ஹீரோவிற்கு தென்றலாய் மாறி ஒத்தடம் கொடுத்தது..... வானம் கண்ணீர் பொழிந்தது...... நமது சிறுவனது கண்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது..... ஓடி போய்.. மயங்கியிருந்த ஹீரோவை எடுத்து... மடியில் எடுத்து வைத்து கன்னத்தை தட்டி எழுப்பினான்.... மயக்கமான கண்களை திறந்து பார்த்த ஹீரோ
"இனி என்னால் உயிருடன் இருக்க முடியாது......"
"அய்யோ.. அப்டி எல்லாம் பேசாதீங்க.. நீங்க இல்லான.. இந்த உலகத்தையே அவன் அழிச்சிடுவான்..."
அவர் இதழ்களில் லேசான புன்முறுவல்...
"அப்படி விட்டுட்டு போய்டுவேனா என்ன..... அத நீ இருக்கீயே....."
அவன் புரியாமல் முழித்தான்....
"என் சக்திஎல்லாம் உனக்கு தரேன்.... இனி இந்த உலகம் உன் கையில்... "
சொன்னவர் அவன் கையில் தன் கைகளை கோர்த்தார்..... ஒளி கீற்றுகள் அவர்களது விரல் இடுக்கிலிருந்து புறப்பட்டது..... அந்த ஒளியோடு..ஒளியாக.... அவர் மறந்து மாயமாக... இருள் சூழ்ந்தது..... எதிரில் வில்லன் "இந்த போடியானா...." என்று ஏளனமாய் அதிர..... கூடி இருந்த மக்கள் நமது புது ஹீரோவை கரகோஷத்துடன் ஆதரிக்க.....
இவனால் நம்பவே முடியவில்லை... நெஜமாவே.... நமக்கு.. பலம் வந்துவிட்டதா..... கைகள் புடைக்கவில்லை.. மார்பு எக்கு போல் ஆகவில்லை.. நெஜமாவே நாம் சூப்பர் ஹீரோ தானா...
"போ..போ.. அவனை ஒழி...ஒழி...." என்று ஏகப்பட்ட கூக்குரல்கள்....
முடிவெடுத்தான்...... கால்களை தரையில் ஊன்றினான்..... புழுதி பறந்தது..... ஓடினான் வேகமாக... வில்லனை நோக்கி....இவன் இந்த பக்கம் ஓடிவர.. வில்லன் அந்த பக்கம் ஓடி.. நடுவில் அதலபாதாளம்......
வில்லன் எகிறி அவனை நோக்கி.... சீரிபாய்ந்தான்......
"ஹே...."என்று கத்திகொண்டே அவன் ஓடி விளிம்பில் கால் வைத்து எம்பி குதித்தான்...... அடுத்த விநாடி.... தொப்பென்று கிலே விழுந்தான்.....!!!!
வில்லன்.... இந்த குன்றில் வந்து இறங்கி.. கிலே விழும் இவனை பார்த்து எக்காலம்மிட்டான்....... "எனக்கு.. அப்பவே டவுட்டு இவனுக்கு எப்படி.. அவ்ளோ பவர் வரும்னு..." என்று கூட்டத்தில் ஒருவன் ஒலி எழுப்பினான்.இவன் இன்னும் பாதாளத்தை நோக்க விரைந்து கொண்டிருந்தான்.
தம்பி இந்த கதையில இருந்து என்ன சொல்ல வர எனகேட்கிறீர்கள.....
அந்த சூப்பர் ஹீரோ தான் நம்ம பெண்கள்.... அந்த சின்ன பையன் நம்ம பசங்க..... அந்த சூப்பர் ஹீரோ அந்த சின்ன பையனுக்கு குடுத்த சூப்பர் போல தான் பசங்களுக்கு இந்த பொண்ணுங்க காதலை ஒத்துக்கொள்ளும் போது உற்சாகமும் ... அத நம்பி உலகத்த விட்டு மேலே மேலே ரொம்ப மேலே போய்டுவாங்க... உலகமே சின்ன புள்ளியாதா தெரியும்....... திடீர்னு கழட்டி விட்டுடாங்கான..இப்படி அதளபாதளம் தான்.....!!!!
கிழே விழுந்து கொண்டிருக்கும் பொழுது.... இது போன்ற சில mindvoice-சும் நமக்கு கேட்டு வைத்தேரிச்சலை கிளப்பும் .....
"எனக்கு.. அப்பவே டவுட்டு இவனுக்கு எப்படி.. அவ்ளோ பவர் வரும்னு...!!!!"
இது அடுத்து வரபோகும் கார்டூன் கிழவி பகுதி இரேன்டிற்கு.... ஓர் முன் கதை தான்.....!!!


No comments:
Post a Comment