உமேசின் விவகாரம் பள்ளிகூட நண்பர்கள் வட்டாரத்தில் பரவி துக்கம் விசாரிக்க வந்துவிட்டனர். அதுகுள்ளயேவா.. இந்த சின்ன வயசுலயா.. இப்படி ஆயிடுச்சே.... ஏண்டா நீயாவது காப்பாத்தி இருக்க கூடாத என்று நோந்த என்னை மேலும் நோகடித்தனர் . "என்னடா சக்கு பண்றது.... அவன் சரியா ஹன்ட்ல் பன்னல.... முன்னாடியே தெரிந்து இருந்தா காப்பாத்தி இருக்கலாம் கடைசி நேரத்துல தான் தெரிஞ்சது.... கிரிடிக்கல் ஸ்டேஜ் கப்பாத்த முடியல".
சொந்த பந்தங்கள் அனைவரும் கூடிவிட்டனர்..... பெரியம்மாக்களும் சித்திகளும் குறுக்கும் நெடுக்குமாய் சென்று கொண்டிருந்தனர்... தாத்தாவை காரில் அழைத்துவர அப்பா சென்றுள்ளார்.... அத்தை அவனிடம் பேசாமல் முறைத்துக்கொண்டு என்னிடம் வந்து நீயாவது புத்தி சொல்லி இருக்க கூடாதா பப்பு எனக்கேட்டாள்... எனக்கே தெரியாது மாமி என்றேன்.... நான் அவன் நண்பன் மட்டும் அல்ல கசின்..சின்ன வயசில் இருந்தே ஒரே ஸ்கூல், பி.டெக் வேறு வேறு கல்லூரி என்றாலும் MSஇல் சேர்ந்துகொண்டோம்.
அதிர்ச்சியில் உறைந்து இருந்தேன்.... என்னால் நம்பவே முடியவில்லை... முதல் நாள் இரவு தான் சென்னையில் தரை இறங்கினோம். அப்பொழுது வரை எனக்கே தெரியாது அவன் காதலிப்பது... தீடீர்ன்னு நிச்சயதார்த்தம் என்கிறான் கல்யாணம் என்கிறான்.
தங்கைகள் அவனை சுத்திக் கொண்டு "எப்படி ப்ரோபோஸ் பண்ண....எப்படி ப்ரோபோஸ் பண்ண.." என்று நச்சரித்தார்கள்....
"ஊமை குசுபண்டா நீ.... பொண்ண பாத்தா மன்ன பாத்து நடக்குறவே.... உம்மன்னா மூஞ்சி மாறியே இருந்துட்டு எப்படி லட்டு மாறி புடுச்சுருக்கான் பாரு....." என்று சிலர் வாழ்த்துகிறார்களா திட்டுகிறார்களா என்பதே தெரியாமல் கன்னத்தில் குத்தி விட்டுஅப்படியே என்னையும் நீயும் இருக்கியே உதாவக்கரை என்பது போல் பார்த்துவிட்டு சென்றனர்.
நான் தின்னைய புடிச்சு நடந்தப்ப என்னைய புடிச்சு நடந்த பய..... இப்படி செய்துட்டானே. வருபவர்களை சிரித்துகொண்டே வரவேற்று கொண்டிருந்த அவனருகே போய் "நைட் வரைக்கும் என் கூட தானேடா இருந்த.... நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி எல்லாத்திலையும் காதல் வெறி ஊறிப்போன ஒருத்தனாலதான் இப்படி பண்ண முடியும்...."
"மச்சான் நடந்தது என்னன்னு தெரியாம பேசாத.... பொறுமையா அப்புறம் சொல்றேன் மச்சா.. மாப்பிள தோழனா லட்சணமா ரெடி ஆகு.."
"பொம்பள டிரஸ் போட்டு நித்யாவுக்கு தோழியா கூட நிப்பேன்.... துரோகி... லவ் பண்ற பொண்ண friend கிட்ட சொல்லாத நீயெல்லாம் ஒரு நன்பனாடா..?!இத்தன வருஷம் கூடவே இருந்த என் கிட்டேயே மறைச்சுட்டேல..."
டூ விட்டு சென்று விட்டேன்... ஸ்கூல் படிக்கும் பொழுதிலிருந்தே எனக்கும் காதலுக்குஅடிதடி.. இத்தனைக்கும் நான் யாரையும் காதலித்தது இல்லை.. எங்க...?! கொஞ்சம் உஷார் ஆகி இந்த பொண்ணு அப்படின்னு பிக்ஸ் பன்றதுக்குல.... மச்ச ஏ ஆளு போற பார்ரான்னு... எவனவாது ஒரு ராஸ்கல் முந்திடுவான்.அந்த பொண்ணுங்க போற லேடி பேர்ட நாங்க ஹெர்குலஸில் follow பண்ணுவோம். பின்னாடி ரோமீயோக்கள் உட்கார்ந்து கடலை போட்டுக்கொண்டே வர நான் சைக்கிளை மிதித்துக்கொண்டு வருவேன். கரெக்ட் ஆய்டுச்சுன்னா நம்மள கழட்டிவிற்று வாங்க..... கலட்டி விட்டுருச்சுன்னா திரும்பி நம்ம கிட்ட வந்து முதுக சொறிவானுங்க.
அதிலும் இந்த உமேஷ் சுத்தாத பொண்ணு இல்ல.. போகாத ஸ்கூல் இல்ல.... இவனுக்காக நான் மிதித்த கிலோமீட்டர்களை கணக்கிட்டால் ஹிமய மலையை கடந்து சீனா பார்டரை ஊடுறுவியிருக்கும். இருந்தும் ஒரு பொண்ண கரெக்ட் பண்ண துப்பில்லை....அதனால நானும் அவனும் க்ளோஸ் friends. எனக்கு அவன் மேல நம்பிக்க அவனுக்கு என் மேல நம்பிக்க.. இருவரும் எங்கள் எதிர் காலத்திற்கு பெற்றோர்களையே நம்பி இருந்தோம். ஒரு நாள் இரவில் என் நம்பிக்கையை போட்டு உடைத்ததை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை...!!!
நான் நித்யா உமேஷ் மூவரும் ஒரே பல்கலைகழகதில் வேறு வேறு பிரிவில் MS பட்டம் பெற்று கையில் வேலையுடன் ஒருமாத விடுப்பிற்கு இந்தியா வந்தவர்கள். ஓஹயோ, US-ல் இருந்து கிளம்பி நேற்று முன்னிரவில் டாட்டா சொல்லி சென்னையில் விடு படும் வரை அவர்களுடன் தான் இருந்தேன்.
நித்யாவின் அப்பாஅவளுக்கு ஐயோவாவில் Rockwellஇல் வேலை பார்க்கும் ஒருவனை பேசி முடித்திருந்தார். பிசினஸ் டீல் எல்லாம் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு இன்னும் சில தினங்களில் அந்த பெயர் தெரியாத மாப்பிள்ளைக்கும் இவளுக்கும் நிச்சயம் பேசப்பட்டு இருந்தது. அவளுக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை எப்படியாவது நிறுத்த வேண்டும்... மாறல் சப்போர்டுக்கு என்னையும் அழைத்தாள். வரதே 30 நாலு தான் என்று வர முடியாது என்று நழுவி விட்டேன.பாவம் உமேஷ் மாட்டிக்கொண்டான்.
ஒரே ஒரு நாள் தான்.. வந்தேனா என் லைப்பே மாறிடும் ப்ளீஸ்.. ப்ளீஸ்.. என்று கெஞ்சினாள். நம்ம உமேஷ் பச்சாம்பசளி எள்ளுக்கும் கொல்லுக்கும் வித்யாசம் தெரியாது அப்பாவியான அவனை கூட்டிக்கிட்டு போய் கல்யாணத்த நிப்பாட்ட போறேன் என்று கடைசியில்அவனையே அவள் திருமணம் செய்ய போவதாக வந்து நின்றாள். அவனுக்கு விசித்திரமான சில பழக்கங்கள் உண்டு ஓட மாட்டான் ஓடவே மாட்டான். ஓடுவது என்பது அவனுக்கு ஓடுறமாறியே அசைவுகள் மட்டும் செய்வது. பஸ் பிடிக்க கூட உடம்பை ஆட்டிக்கொண்டு டான்ஸ் ஆடிவிட்டு ஓடி தான் வந்தேன் என்று அடம் பிடிப்பான். மற்றொன்று தப்பு செய்து மாட்டினாலும் தப்பு செய்யாமல் மாட்டினாலும் வாய்யையே திறக்க மாட்டான்.. மங்குனி.. எப்போதும்வாயில் கொழுக்கட்டை தான்.
அவனிடம் நான் எவ்வளவு துருவினாலும் நடந்ததை சொல்ல மாட்டான்...அதான் நடந்தது என்ன....?? குற்ற புலன் விசாரனையில் இறங்கினேன்.
Accused No. 1: நித்யா
மாடி ரூமில் அலங்காரம் பண்ணிக்கொண்டிருந்தாள்.... மேலே போனேன்.
"வா வா பப்பு.... உன்னதான் பாக்கணும்னு இருந்தேன்..."
"ஓஹோ நாங்கெல்லாம் கண்ணுக்கு தெரிறோமா..கூட தான்டி இருந்த.. லவ் பண்றோம்னு ஒரு வார்த்த சொல்லி இருந்தா அழகா ஸ்கெட்ச் போட்டு கச்சிதமா சால்வ் பன்னிருப்பேன்ல...... ஏண்டி மறச்ச..?"
"எனக்கே ஷாக் தான் பப்பு....உமேஷ் இப்படி திடீர்ன்னு propose பண்ணுவான் நான் எதிர் பார்க்கவே இல்ல..."
"என்ன அவன் உன்ன propose பண்ணானா.... ஒ மை காட்.."
"அதுவும் எங்க அப்பா முன்னால.. எங்க அப்பாவே உறைஞ்சு போய்ட்டார்..."
உமேஷ் அப்படி பட்டவன் இல்லையே.. தேடி வந்த பானுவையே மிஸ் கிட்ட மாட்டி விட்டவன் ஆச்சே..!!!!
"மேல மேல.."
"அப்போ எங்க அப்பா கிட்ட தெரியாதவண்ண ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்...கல்யாணம் வேணாம்ன்னு சண்ட போட்டு கிட்டு இருந்தேன்....அப்போ அப்பா நீ யாரையாவது லவ் பன்றியான்னு கேட்டார்...இல்ல தெரிஞ்சவன்னா ஓகேவான்னு கேட்டார்...அப்போ டைமிங்ல நச்னு சொன்னான் பாரு....செம.."
"நீ என்ன சொன்ன அதுக்கு..?"
"எனக்கு தெரியாது..இப்போ தான்பா ப்ரோபோசே பன்றான்னு சொன்னேன்.."
"ஹ்ம்ம்...அதுக்கு உங்க டாடி எப்படி ரியாக்ட் பண்ணார்..?"
"நான் எதிர்பார்கவே இல்ல.. அப்பா புகழ்ந்து தள்ளிட்டார்... உங்க தைரியம் புடிச்சிருக்கு... தனம்பிக்க புடுச்சிருக்கு.. போட்டுருக்குற பேன்ட் புடுச்சிருக்குன்னு...பழைய படம் ஹீரோயின் டையலாக் எல்லாம் விட்டுட்டு தம்பியதான் உனக்கு நல்ல தெரியுமே ஓகேவா" என்றார்
"why not..? ok சொல்லிட்டேன்"
"okன்னு ஒரு வார்த்தையில ஒருகொலையே பண்ணிட்டியேடி..?"
Side Accused No. 2: கார்மேகம் - நித்யாவின் அப்பா
நித்யாவின் ஊர் ஈரோடு, பாவனி பக்கத்தில் அந்தியூர். அவள் அப்பா நெசவு தொழிற்சாலை வைதிருந்தார்.பேசுவதில் கோயம்புத்தூர் பாசை தெரிந்தது.... . பெண்களை பெற்ற எல்லா அப்பாகளும் அய்யனார் மாறி இருக்கங்களா இல்ல நாம வில்லங்கம்மா யோசிக்கிறதுனால வில்லனனுங்களா தெரியுறாங்கலா. அவளின் அப்பாவும் அய்யன்னர் தான்.. முனி ராஜ்கிரண் போல் இருந்தார்.. முரட்டு பாசக்காரர் போல... தட்டி தட்டி அவர் பேசியதில் அணைத்து மூட்டுகளும் புலம் பெயர்ந்துவிட்டன.
இந்த பெண்களை பெற்ற அப்பகளிடம் ஒரே தப்பு என்ன தெரியுமா அவர்கள் அதிகம் பாசம் வைத்து விடுவார்கள், அதனால் காதல் கீதல் என்று வந்தால் அடிக்க முடியாது ஆனா அடிக்க ஆள் வேணும். அப்போ தான் நாம கரெக்டா என்ட்ரி குடுப்போம் "அங்கிள் உங்க பொண்ண நான் ரொம்ப சின்சியரா லவ் பண்ணறேன்" ஆரம்பிக்கும் பொழுதே.... உன்ன தான் ராசா தேடிக்கிட்டு இருந்தேன் என்று ஆரம்பித்து விடுவார்கள். இவன் எப்படி அடிவாங்காமல்...??? ஒரு வேல உள்காயமா இருக்குமோ...??!!
அவரிடம் சென்று என்னை அறிமுக படுத்திக்கொண்டேன். கட்டான மீசை... கை நீட்டும் அளவு அளவு தள்ளி நின்றாலும் இடிக்கும் தொப்பை.. வேலைகாரர்களை திட்டும் தோரணை.. அக்மார்க் பெண்களின் அப்பா.
"அங்கிள் அந்த கோவில்ல என்ன நடந்துச்சுன்னும் அப்படியே உங்க வருங்கால மாபிள்ளயா பத்தி என்ன நெனைக்குரீங்கன்னு சொன்னீங்கன்னா ரெக்கார்ட் பண்ணி அவங்களுக்கு வெட்டிங் ப்ரெசென்டா பண்ணலாம் இருக்கேன்.."
"பலே பலே.. இந்த வீட்டு தம்பிக எல்லாம் படு சுட்டி....எடுங்க எடுங்க"
அருகில் இருந்த மர நாற்காலியில் அமர்ந்து விறைப்பாக பார்த்தார். மீசையை சீப்பால் சீவிக்கொண்டார்... "மங்களத்தையும் கூப்டனுமா...?"
"இது என்ன ஜோடி நம்பர் ஒன்னா அங்கிள்.. அதெல்லாம் வேணாம்."
"ரெடியா.."
"ஒரு நிமஷம்...."
"ஹ்ம்ம் ரெடி அங்கிள்...ஸ்டார்ட்..."
" நம்ம புள்ள இருக்கே தங்கம்.. தங்கம்னா தங்கம் பத்திர மாதத்து தங்கம்.... எனக்கு இருக்கே நெலம் புலன் இதெல்லாம் சொத்து இல்ல... எ புள்ள தான் எனக்கு இருக்க ஒரே சொத்து.... முகராசிக்காரி.. லெட்சுமி... அவ பிறக்குறதுக்கு முன்னாடி சைக்கிள்ள கடை கடையா போய் ஆர்டர் எடுப்பேன்.... அவ வந்ததுக்கு அப்புறம் தான்... என் முழு சம்பாத்தியம் எல்லாமே..... அவ மேல படிக்க வெளிநாடு போகனும்னு சொல்லும் போதே கிலியாத்தான் இருந்துச்சு... அவ படிப்புக்கு மாப்பள கிடைக்குமான்னு.... இப்போ வந்து கல்யாணம் வேணாம்ன்னு சொல்லு போது... காதலா இருக்குமோன்னு கொஞ்சம் சஞ்சலம் துளிர் விட்டுச்சு.... எம் புள்ள உண்மையதான் சொன்னா இல்லேன்னு.... அவ எப்ப உண்மை சொல்றா பொய் சொல்றாங்குறது எங்களுக்கு தெரியாதா.. அப்போ என் முன்னாடியே.. ந உன்ன கதிலிக்கிறேன்னு சொன்ன மாப்பள தைரியம்.. அது உண்மையா காதலிச்சா தான் வரும். எம் புள்ள உங்க இஷ்டம்ன்னு சொல்லிட்டா... அவளுக்கும் விருப்பம் இருக்குன்னு புரிஞ்சுது..... சந்தோசம்.... கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருந்தா ரொம்ப சந்தோசம். " என்றவர் தொடர்ந்து
"போதுமாப்பா இல்ல நா வேணா.. ஒரு தடவ எழுதிட்டு வந்து பேச வா.. ஒரு கோர்வையே இல்லாம இருக்கு.."
"இல்ல இல்ல அங்கிள்... கேன்டிட்டா வந்துருக்கு.. நல்லாருக்கும் ".
அப்பொழுது உமேஷ் வந்தான்.. "வாங்க மாப்புள உங்கள பத்தி தான் பேசிகிட்டு இருந்தேன்...." அவன் தோலில் கையை போட்டு என்னை பார்த்து சொன்னார் "ரெண்டு வருஷம்மா லவ் பண்றாராம்.... ஒரு வார்த்த சொல்லலியே.. நேரே என் முன்னால சொன்னார் பாரு.... பச்ச்ச்ச் கலக்கிடீங்க மாப்ள..."
"ரெண்டு வாருஷமா...?" என்று அதிர்ச்சி ஆனேன் அவன் மலுபலாய் சிரித்தான்.
Main Accused: உமேஷ் எனும் துரோகி
நிச்சயம் ஒரு வழியாக முடிந்தது....அனைத்து குற்றதிற்கும் காரணம் அவன் தான் என்று புரிந்தது.... அவன் புழு மீசை வைத்து இருப்பவர்களை பார்த்தாலே பயப்படுவானே.... இந்தாள்கிட்ட இவ்வளவு தைரியமா எப்படி..எப்படி ...?
அவனிடம் "உண்மைய சொல்லு.. அடி இல்ல.... திட்டு இல்ல....சொல்லல... வெட்டு குத்து தான் பத்துக்க..."
பல மணி நேர கெஞ்சலுக்கும் மிரட்டலுக்கும் பிறகு.... ப்ளீஸ் யார் கிட்டயும் சொல்லிடாத.... என்று ஆரம்பித்தான்
"அவள் குல தெய்வம் இருந்த கோவிலுக்கு போனோம்... கற்கோவில்.... சாமி கும்பிட்டுவிட்டு கோவிலை சுற்றி கொண்டிருந்தோம்.. அவள் கல்யாணத்தை பற்றி பேச்சை ஆரம்பிக்க முயற்சித்தாள்.. அதற்குள் அவள் அப்பா வர வெள்ளிகிழம மாப்பிள வீட்டுக்காரங்க வராங்க நீங்களும் இருங்களேன் என்று என்கிட்ட கேட்டார். அதற்குள் அவள் "அப்பா இப்போ கல்யாணம் வேணாம்ப்பா..." என்று கெஞ்சினாள். அவரும் அவள் தலையை வருடி விட்டு " அமெரிக்காவுக்கு படிக்க போறேன்னு சொன்ன.. ஏதாவது சொன்னேனா....?"
"அதுவந்து.. அது வேற..."
"சொன்னேனா.."
"இல்ல.."
"உன்கூட படிச்ச சங்கீதாவுக்கு ரெண்டு புள்ள நேத்து வந்தாலே பாத்தில்ல.."
"நீ இதுக்கு மேல படிச்சா உனக்கு மாப்பிள பாக்குறது கஷ்டம்.. இதுக்கு மேல வயசானாலும் மாபிள்ள பாக்குறது கஷ்டம்.... இதுக்கு மேல உனக்கு காரணம் கண்டுபிடிக்கிறதும் கஷ்டம்... என்ன நீ யாரயாவது லவ் பண்றியா....."
அவள் வேறு என்ன காரணம் சொல்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தாள்.
"சொல்லு என்ன முழிக்கிற.."
அதுவரையில் அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த அவளது அம்மா
"அடிப்பாவி சொல்லுடி...ஏம்பா தம்பி நீயாவது சொல்லேன் அவ லவ் பன்றாளா ..?"
அப்பொழுது தான் நான் சொன்னேன் "I Love You"என்று
"எப்படி டா சம்பந்தமே இல்லையே....."
"முழுசா கேளு மச்சான் .... அந்தாள பாத்தால்லே நடுங்குதுடா எனக்கு.... வந்து கிந்திர போறான்.. " கதவை சாத்திவிட்டு மேலும் தொடர்ந்தான்.
"அவர்கள் பேசுனதை கொஞ்சம் கூட நான் கேட்கவில்லை ஒரு சூப்பர் பிகர் ஒன்னு கோவிலுக்குள்ள போச்சு அது திரும்பி வருமான்னு அப்படியே பார்க்க...பாத்துக்கிட்டே.. கோவில் சுவத்துல நோட்டம் விட்டு கிட்டு இருந்தேன்."
"இங்கு சிறுநீர் கழிக்காதீர்.... வேன்கோப் சிக்கென்..... குட்டிபுலி.... இன்ப நிலா.... எப்பயாவது எதையாவது சம்மந்தமே இல்லம சத்தம் போட்டு படிச்சுருக்கியா....."
நான் புரியாமல் விழித்தேன்
"நான் படிச்சேன் I Love youன்னு கோவில் சுவத்துல எழுதி இருந்ததை" என்றான் புரிந்தது நம்ம ட்ரைனிங் ஆச்சே சும்மாவா பின்ன.....நண்பன்டா கட்டிகொண்டேன். இவன் நடந்ததை யாரிடமும் சொல்ல மாட்டன் சொல்லவே மாட்டான்.