கலைஞர் எழுதின பொன்னர் ஷங்கர் படிச்சிருகீங்களா... அதுல மணியங்குறிச்சின்னு ஒரு ஊரு வருமே.. அது தான் என் கிராமம்.... பல வருடங்கள் கழித்து அங்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது..... பாழடைந்த மீனாக்க்ஷி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மீண்டும் பாழடைந்திருந்தது..... ஆயிரம் காலத்து கோவில்... சிலர் தங்கள் அழகை மேக் அப் போட்டு குறைத்து கொள்வதுபோல்... இவர்கள் அந்த செங்கற் கோவிலுக்கு சிமெண்ட் பூசி பெயிண்ட் அடித்து அதன் பழமையை கெடுத்து விட்டனர்....!!!
பாண்டியர்களின் எல்லையாக இந்த ஊர் இருந்துள்ளதாக ஒரு வழக்கு.... ஒரு பாண்டியமன்னன் மதுரையில் உள்ளது போலவே அவனது எல்லையிலும் ஒரு கோவில் இருக்க வேண்டுமென விரும்பி.. மதுரை மீனாக்க்ஷி அம்மன் கோவில் போலவே இக்கோவிலையும் எழுப்பி உள்ளான். கோவில் மட்டும்மல்ல ஊரே மாறி போயிருந்தது....ரயில்வே track போல டயர் போன தடங்களை தவிர மீதி இடத்தில புல் முளைத்திருக்கும் ரோடு இப்பொழுது சர்காரின் ஏதோ ஒரு திட்டத்தால் concrete சாலையாக மாறிவிட்டது.... எல்லாம் முதல்வரின் படம் போட்ட மச்சு வீடுகளாக உருமாறிவிட்டது.... நாட்டாமை வீட்டு பக்கத்தில் இருக்கும் மாட்டு தொழுவதை காணவில்லை.... ஓடி ஆடி விளையாண்ட பொது திண்ணைகள் பாழடைந்து கிடந்தன.... முன்பெல்லாம் போஸ்ட் மாஸ்டர் டிவி இருக்கும்... சாயும் பொழுதில் வீட்டில் ஊரே இருக்கும் டிவி பார்க்க...இப்போது வீட்டுக்கு வீடு கலைஞர் டிவி .... சோடியம் வேப்பர் லாம்ப்.... 2 நேரத்திற்கு ஒரு வரும் பஸ்....என எல்லாத்தையும் மாற்றி இருந்த காலம் எனக்கு அங்கு மிகவும் பிடித்த குறிஞ்சி இளைஞர்குழுவையும் விட்டுவைக்கவில்லை.
நான் ஊருக்கு வருவதற்கு மிக பெரிய ஈர்ப்பாக இருந்தது இந்த இளைஞர் குழு தான்....அப்பொழுதெல்லாம் பொங்கல் தினத்தன்று 4 நாட்களும் திருவிழா போல் கொண்டாடுவார்கள்..... சைக்கிளில் செட் கட்டி அப்பொழுது வந்த சலக்கு சலக்கு ஜரிக சேல சலக்கு சலக்கு போன்ற பாடல்களை போட்டுகொண்டு... ஊர் ஊராக நோட்டீசுகளை கொடுப்பார்கள்... மணப்பாறையில் இருந்த எங்களுக்கு ஒரு நோட்டீஸ் வரும்.... பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓட்டப்பந்தயம்.. யானைக்கு வால் வரையுறது.... மாடுகளுக்கு கொம்புல பெயிண்ட் அடிச்சு ஓடவிடுவாங்க...அப்புறம் மியூசிக் chair அதுவும் ஸ்பெஷலா தாத்தா பாட்டிங்களுக்கு..... இதுல ரொம்ப famous ஆனது கயிறுல பானைய கட்டி அடிக்கவிட்றது ... ஒரு ஆளுக்கு 5 ரூபா.... கண்ணக்கட்டி சுதிவிற்றுவாங்க.... கலந்துகுறவங்க பாதிபேரு சுத்திவிட்டதில் குழம்பிபோயி பான இருக்குற சைடுக்கு பதிலா கும்பல் இருக்குற சைடு வந்து.. கும்பளுக்குள்ள சிலம்பம் விளையாடிகிட்டு இருப்பாங்க.... கலந்துகரதுல பாதி கிழம்... கண்ண கட்டாம விட்டாலே பானைய அடிக்காம நம்ம மண்ட உடைக்க ட்ரை பண்ணுங்க...!!!!
பாட்டுப்போட்டி அதே விட கலகல.... அதுதான் நம்ம ஏரியாவும் கூட... நெறய பேரு திருக்குறள் அதுவும் சொல்லிவச்சாபுல அகர முதல பாடுவானுங்க.. சிலர் பாரதி.. சிலர் சினிமா பாட்டு... எனக்கு ஒரு கொள்ளு தாத்தா இருக்காரு எங்க அம்மாவோட தாத்தா.....செரியான ஜொள்ளு தாத்தா போல... ஊர்ல எகித்தாபுள்ள வர பாதி பாட்டிய எங்க அம்மா இது உனக்கு பாட்டி... இது உனக்கு பாட்டின்னு சொல்லிகிட்டே வருவாங்க.... ஊர்ல பாதி வளசிட்டாறு போல...!!!
அந்த தாத்த எனக்கு பாட்டுப்போட்டியில பாட சொல்லி ஒரு பாட்டு சொல்லி தந்தாரு...... எனக்கு அந்த பாட்டு ஒண்ணுமே புரியல....பாட்டிய பத்திடா.... அவ்வையார் பாட்டி எழுதினதுன்னு சொன்னாரு.... அந்த பாட்டுப்போடிக்கு என் அம்மாவும் முன்று பேரில் ஒரு ஜட்ஜ்.... மேடயில ஏறி நான் அந்த பாட்ட பாடினேன்.... "எதுக்கு பொண்டாட்டி.... என்ன சுத்தி வப்பாட்டி... எக்க சக்கம் ஆகி போச்சு கணக்கு......பள்ளி கூடம் போகயில....". அம்மா ஓடிவந்து மைக்க புடிங்கிட்டாங்க. எல்லாரும் என்ன பாத்தோன முதல்ல கேக்குறது "எங்க அந்த பாட்ட பாடு...!!!"
15 வருடத்திற்கு முன் குளத்தங்கரை பிள்ளையார் கோவில் அருகே வைத்த உறுப்பினர் பெயர் தாங்கிய தகர போர்டு துறு பிடித்து காற்றில் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது...!!!! ஆம்... இந்த இளைஞர் அணி இப்பொழுது அரசியல் கட்சியின் இளைஞர் அணி போல கிழ போல்டுகளை இளைஞர்களாக கொண்டு இயங்கி கொண்டிருந்தது..!!! ஏன் என்றால் இளைஞர்கள் ஊரில் இல்லையாம்.... எல்லாம் வெளி ஊரு வெளி நாடுன்னு போய்ட்டாங்க... கோவில்ல சாமி தூக்க.. திருவிழாவுல தேர் இழுக்க கூட ஆள் இல்ல.. காசு குடுத்து சிலாம்பாட்டியில் இருந்து தான் குப்புட்றோம் என்ற பொழுது சுருக்கென்றது....!!! ஊரே முதியோர் இல்லம் போல் மாறிவிட்டது...!!!
"ஒரேடியா இங்க வாங்கன்னு சொல்லல திருவிழாவுக்கு வரலாம்ல.... விசேஷம் கல்யாணம்னா நம்மூர்ல நடத்தலாம்ல...." என்றார் தாத்தா.
அவர் எங்கள் வீட்ற்கு வந்தாலும் இரண்டு நாளிற்கு மீள் தங்க மாட்டார்.. ஊருக்கு போகணும்.. ஊருக்கு போகணும் என்று தவிப்பார்..... இது போன்று மண்ணை நேசிப்பவர்கள் அவர்களோடு சரி என்று தான் நெனைக்கிறான். இப்பொழுது இவர்களால் முதியோர் இல்லமாக இருக்கும் கிராமங்கள் இன்னும் சில தலைமுறைகளில் அனாதரவாக ஆகிவிடக்கூடாது....!!!
கிளம்புபோது பொது "போய்ட்டு வரேன் தாத்தா" என்றேன்
" அடுத்த பொங்கலுக்கு வரியா..." எனக்கேட்டார்
"கண்டிப்பா தாத்தா" என்றபொழுது இல்லாமல் சிரித்து வழியனிப்பினார் நான் சொல்லவில்லை அடுத்த வாரம் நான் வெளிநாடு செல்வதை.
பி.கு : குறிஞ்சி இளைஞர் குழுவின் நிரந்தர தலைவருக்கு குழு ஆரம்பித்த பிறகு தான் திருமணம் நடந்தது... அவர் மனைவின் பெயர் குறிஞ்சி...!!!
(எப்படி எல்லாம் ரூட் விட்டுருக்காங்க .பாருங்க..!!!!)

No comments:
Post a Comment