சிறுகதை

Tuesday, November 12, 2013

இதுவும் காதல்

இந்தியாவில் நூறு பெண்களுக்கு நூத்தியெட்டு ஆண்கள் உள்ளார்களாம். அந்த எட்டு பேர் பாவம்..!!! ஏற்கனவே ரேஷியோ கம்மி இதிலும் கொஞ்சம் நல்லா இருந்தாலே டிபார்ட்மெண்டுக்கு பத்து என நூறு பேர் ஒரே பிகர் பின்னால் சுத்துவதால் கணக்கு இன்னும் அடிபட்டு ஏகப்பட்ட ஒரு தலை காதலன்கள்.

என் நண்பர்கள் ஒவ்வொருவரையும் மூன்று பிரிவாக பிரிக்காலாம் என்னையும் சேர்த்து..... ஒன் சைடு, டபுள் சைடு அப்புறம் லவ் பெய்லியர்.
காலேஜ் ஆரம்பத்தில் ஏகப்பட்ட ஓன் சைடு இருந்தார்கள், மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு சில டபுள் சைடும் கூட மூன்றாவது கொஞ்சம் கம்மி தான்.... அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் நேரமும் நம்பிக்கையும் இருந்தன. வருடம் ஓட ஓட கிராப்பில் இரெண்டாம் நபர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது ஒருவன் டபுள் சைடு ஆகும் பொழுது குறைந்த பட்சம் பத்து பேர் ஆவது லவ் பெய்லியர் லிஸ்டில் சேர்வது எழுதப்படாத விதி...அதன் விளைவாக மூன்றாவது அணியும் பலமடைந்தது.

டபுள் சைடுகாரனுங்களால அதிகம் தொந்தரவு இருக்காது பெரும்பாலானோர் நம்மை கண்டு கொள்ள மாட்டார்கள் அவ்வப்போது அங்கபோனேன் இங்க போனனேன் fb பிக்ல அஜித் மாதிரியே இருந்தேன்னு சொன்னா என்று கடுப்பேத்துவத்தை தவிர்த்து அதிக இம்சை இருக்காது.

சிங்கள் சைடு, லவ் பேய்லியர் ரெண்டு பேரும் பேசியே சாகடிப்பானுங்க ஒருத்தன் நா இனிமே தண்ணி தம்மே தொட மாட்டேன் சொல்லுவான் இன்னொருத்தன் தண்ணி அடிச்சே தீரனும்பான். ஒரு கட்டத்தில் ரெண்டு பேருமே நம்மை யாரோ ஒரு முகம் தெரியாத கட்டை தொப்பையிடமே அடுத்த டிப்பார்ட்மெண்ட் வாத்தியிடமே அல்லது அந்த பெண்ணிடமே அடி வாங்க வைத்து விடுவார்கள்.

இப்பொழுது இருக்கும் காதல்கள் எல்லாம் சைனா மேட் போல.. ஒரு சின்ன வழியை..சின்ன ஏமாற்றத்தை... சோதனையை அது தாங்குவதில்லை. ஒவ்வொருத்தனின் கதையையும் பக்கம் பக்கமாக எழுதலாம்...... சத்யா கல்லூரியில் அறிமுகம் ஆகி கல்லூரியிலேயே மறைந்து போனவன்.... அவனுக்கும் எனக்கும் எந்ததொடர்பும் இல்லை.... அவன் சோபியா என்ற குட்டையான மைதா மாவு போன்ற கலர் உடைய பெண்ணை காதலித்தான். அருகருகே அமர்ந்து கைகளை தடவிக்கொள்ளாத...செல் போனில் அதிகம் பேசாத..... யாருமில்லா வகுப்புகளில் தனியாக அமர்ந்திராத காதல்... இப்படி எதுவுமே செய்யாமல் கடைசியில் பிரிந்து விட்டதாக தகவல், இதுவும் காதல். இதைவிட பலதும் செய்து பிரிந்ததும் காதல்...... பலருடன் சுற்றி பலருடன் பிரிந்து அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கும் சக்தி செய்தது காதல். எட்டு வருடம் போராடி சம்மதம் வாங்கி கல்யாணம் செய்த பாரதி செய்ததும் காதல்.. பேரன்ட்ஸ் ஒத்துக்கல பிரிஞ்சுடுவோம் என்று கழண்டதும் காதல். ஏகப்பட்ட காதல்.. எங்கேயும் காதல்.

இந்த மூன்று பிரிவிலும் சேராத ஒருவன் இருந்தான்..... மோகன ரங்கன். பெரிய சோடா புட்டி.... ரிப்பேர் ஆனா மெசினில் வெட்ட பட்ட புற்கள் போல சரியாக சவரம் செய்யாத தாடி... பக்கத்தில் போனாலே ஒரு வித முடை நாற்றம். அவனுக்கு அடிக்கடி வலிப்பு வரும்.. அடிக்கடி  என்றால் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் நான்கு தடவை. வலிப்பு வந்தால் அவன் கைகளை பிடித்து கட்டுபடுத்துவது படு சிரமம்.. ஆள் ஆறு அடி.... நான்கைந்து பேர் வேண்டும். வலிப்பு வரும் போது பேன்டில் மூச்சா போய்விடுவான்... பின் அந்த ஈரத்துடனே அலைவான்.. அருகில் வந்து அமர்வான்.

அவன் பேசுவதும் ஸ்லோ மோஷனில் பேசுவது போல் தான் இருக்கும்."என்ன்ன்ன்ன்னா டாஆஆ....(சில நொடி) கௌவ்வ்வ்வ்தம்....." என்பான். அவனுடன் உரையாடுவதும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட ரோவருடன் உரையாடுவதும் ஒன்று தான் தகவல் கொடுத்து தகவல் வாங்க 40 நிமிஷம் ஆகி விடும். "என்னடா ரங்கா.... சப்டியா..."
ஒரு நிமிடம் உற்றுப் பார்ப்பான்.... ஹே ஹே என்று சிரிப்பான்.... சரி சிரித்து விட்டு பதில் சொல்லுவான் என்று நினைத்தால் மீண்டும் உற்று பார்ப்பான்... "டேய் தேவையா உனக்கு வா டா.." என்று நண்பன் இழுத்து....போய் விடுவேன். இரண்டு வகுப்புகள் கழித்து அருகில் வந்து அமர்ந்து தீடீர் என்று கிளாசுக்கே கேட்கும் அளவிற்கு கத்தி சொல்லுவான் "மோருஞ் சாதம் சாப்பிட்டேன்.... ஹே  ஹே ..."

அவனுக்கு சொல்லி கொள்ளும் அளவிற்கு நண்பர்கள் கூட்டமும் இல்லை. தனியாக தான் சுற்றுவான். எக்ஸாமிற்கு பேனா கூட எடுத்து வர மாட்டான்... அருகில் அமரும் பெண்களிடம் கேட்காமல் எல்லாத்தையும் எடுத்து அவன் பக்கத்தில் வைத்துக்கொள்வான்.
"ஸ்கேல் வேணும் வேற இல்ல.." என்று அந்தப் பெண் திரும்பி கேட்கும் பொழுது உற்று பார்த்துக்கொண்டே அருகில் போவான். சில பெண்கள் பயந்து எழுந்து விடும்....  சில க்ரீச் என்று கத்தும்.

ஒரு பக்கம் தான் எழுதுவான் அதையும் பிட்ஸ் வரும் பொழுது கிழித்து விடுவான். அவன் இது வரை எந்த எக்ஸாமிலும் கிழிக்காமல் இருந்ததில்லை. அவனுக்கென்று ஒரு உலகம்.. தனி உலகம் செவ்வாய் கிரகம் போல்.. நாம் போய் ஏதாவது தொந்தரவு செய்தால்.. கொஞ்சம் நேரம் எடுத்தாலும் பதில் சொல்லுவான் அவ்வளவுதான் வேறு எதை பற்றியும் அவனுக்கு கவலை இல்லை. உடை அழகு உணவு மதிப்பெண் பெண் வேலை என ஒரு சராசரி ஆண்களின் கவலைகள் அவனுக்கு இல்லை.

ஆனால் இந்த காதல்...?? மிருகங்கள் கூட காதலிக்கின்றன..... எனக்கு தெரிந்து ஒருத்தன் கூட காதலிக்காமல் இல்லை. இவனுக்கு காதல் கூட இருக்காதா என்ன?. என் வகுப்பில் பல நல்ல பிகர் இருந்தார்கள்....  அந்த பெண்களையே கூட சில சமயங்களில் இவன் கத்தவிட்டு இருக்கிறான். இவன் யாரை காதலிக்கிறான் என்ற ஆர்வம் எங்களுக்குள் பல நாட்களாக இருந்தது. எத்தனை நாட்கள் ஆனாலும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து ஒரு நல்ல நாளில் அவனிடம் கேட்டோம்.

"டேய் ரங்கா எங்க போற....."
"......"
"டேய் என்னடா நெத்தியில காயம்..."
"....."
"வெயிட் பண்ணுடா கேட்டுகிட்டே இருக்காத குழம்பிடுவான்.."
"..."
"கிழ விழு,,ந்து..டேன்டா.. பிட்ஸ்"
"பாத்து போடா... டிட்ச்செல்லாம் தாண்டாத.... பிரிட்ஜ்ல நடந்து வா..."
"....."
"டேய் இந்த பய ஹரி இருக்கான்ல.."
"ஹ.." அவனை பார்த்து சிரித்தான். ஒரு வார்த்தை பதில்கள் சட்டென்று வந்துவிடும்.
"அவன் நம்ம கிளாஸ் சிந்துவ லவ் பண்றானாம்.."
"ஹி..ஹி.." என்று வெட்கப்பட்டான்
"நா யார லவ் பண்ணறேன்னு உனக்கே தெரியும்...."
"யாருன்னு சொல்லுடா.." என்று ஹரி அவனிடம் கேட்டான்
மீண்டும் "ஹி ஹி.."
"சீதா மேம் பேரச் சொல்லிட போறான்.... அதவிடு... நீ யார லவ் பண்ற..?"
உடம்பை அசைத்து பக்கத்தில் முத்தம் குடுப்பது போல் வந்து விட்டான்.
"டேய் டேய் என்னடா பண்ற...?"
"டேய்ய்ய்ய்..... யாருன்னு சொல்ல்ல வந்தேண்டா..." என்றான்
"ஒ சீக்ரெட்.. ஹ்ம்ம் சொல்லு சொல்லு..."
காதில் அவன் மீசை உரசியது.... "யாருமில்லை.."
"லொள்ள பாத்தியா.... இத சொல்ல தான் காதுல குச்சி விட்டு ஆட்டினியா..?"
"ஹே ஹ .." கிளாசே அதிரும்படி சிரித்தான்
"டேய் டேய்..சொல்லுடா ரெங்கா...."
அவன் வெட்கப்பட்டு முதன் முறை பார்த்தோம்....
"சொல்லுடா யாரு தீப்தி தானே.."
"இல்ல்ல்லடா.."
"அப்புறம் யாரு..."
"என் தங்கை.. செண்பா...." என்றானே பார்க்கணும்
இதுவும் காதல் தான்.

Wednesday, October 16, 2013

நிதர்சனம் 3 - இந்தியா இனி சுதந்திர நாடு...?!

அதிகாலை ஐந்து மணிக்கே ஊர் கோலாகலமாக திருவிழா கோலம் பூண்டு இருந்தது. கணேஷ் முழுக்க சவரம் செய்து வெள்ளை வேட்டி சட்டை அணிந்து தின்னையில் அமர்ந்து தனது மனைவி அமுதவல்லியிடம் மதராசில் நடந்த கூட்டத்தை பற்றியும் லட்ச கணக்கானோர் திரண்டு கோட்டையில் தேசிய கொடியை ஏற்றியதை பற்றியும் பேசிக்கொண்டிருந்தான். அவனருகில் வந்து அமர்ந்த முருகன் "நமக்கு உண்மையிலேயே சுதந்திரம் கெடச்சுடுச்சா அண்ணா..." எனக் கேட்டான். அதை கேட்ட அமுது சிரித்தாள். கணேஷ் அவனைக் கட்டிக்கொண்டு
"ஏ முருகா அப்படி கேக்குறா... சத்தியாம சுதந்திரம் கெடச்சுடுச்சு.."
"இல்ல எனக்கு ஒரு வித்தியாசமும் தெரில அதான்.."
"உனக்கு என்ன தெரியனும்..."
"நம்ம ஊர் அப்பிடியே தானே இருக்கு.... நம்ம வீடும் அப்படியே தானே இருக்கு... காலையில மாடு ஓட்டிகிட்டு போற கோனார் வழக்கம் போல காட்டுக்கு போய்ட்டார்.... அம்மா வழக்கம் போல சமையல் கட்டுல இருக்கா... அக்காவ வெளில கூப்டா வரக் கூடாதுன்னு சொல்றா....."
கணேஷ் அவனை  சிறிது நேரம் கூர்ந்து பார்த்தான் .."நா சொல்றது உனக்கு புரியாதுன்னு தெரில.. இருந்தும் சொல்லறேன்... இது வரைக்கும் நம்மல யாரோ ஒருத்தன் ஆண்டான்.. இனி நம்மள நாமே ஆள போறோம்.... அதோட பலன் கொஞ்ச கொஞ்சமா தெரியும்.. அக்கா கூட பள்ளி கூடத்துக்கு போக போறா.... நம்மாள்ள ஒருத்தன் கோட்டைக்கும் போவான்.... நாளைக்கு நீ கூட படிச்சுட்டு கலெக்டர் ஆகலாம்.... இனி நாம தாண்டா ராஜா... நீ ராஜா....  நான் ராஜா.... இந்த நாட்டுல இருக்க ஒவ்வொருத்தனும் ராஜா.. யார் வேணாலும் எங்கு வேணும்னாலும் செல்லலாம்...யாரையும் யாரும் தடுக்க முடியாது...!!!"
"அப்படினா கோவிலுக்கு யார் வேணாலும் போகலாமா..."
"கண்டிப்பா.. அதுக்குன்னு சட்டமே வரப்போகுது...."
" சரி" என்று கூறி எழுந்தான் முருகன்
"எங்கடா போற..."
"சுதந்தரத்தை கொண்டாட" என்று கூறி ஓடினான்.

தாத்தா வழக்கம் போல ஆலமரத்தில் சாய்ந்து படுத்திருந்தார்.. முருகன் ஓடி வந்தான் "என்ன தாத்தா... இப்படி படுதுக்கிடக்குற..."
"ஏன் என்னாச்சு.."
"நமக்கு சுதந்திரம் கெடச்சுடுச்சு..."
"அப்படியா.."
"என்ன அப்படியா உனக்கு ஒன்னும் தெரியாதா.."
"ஒன்னும் தெரியலியே..."
"சுதந்திரம் கெடச்சா என்னென்ன கெடைக்கும் சொல்லு.."
" என்னென்ன கெடைக்கும்..."
"ஹ்ம்ம் எல்லாம் கெடைக்கும் இப்போ நா ராஜா..எங்கண்ணன் ராஜா... நீ ராஜா.."
தாத்தா சிரித்தார்.." நானுமா..?!"
"ஆமா.. நீயும் தான்.... யார் வேணாலும் எங்க வேணாலும் போகலாம் கோவில் உட்பட.." என்று முருகன் சொன்ன பொழுது தாத்தா எழுந்தே விட்டார்.
"என்ன என்ன சொன்ன.."
"இப்போ யார் வேனாலும் கோவிலுக்கு போகலாம்ன்னு சொன்னேன்.."
தாத்தாவிற்கு கைகால் ஓடவில்லை...
"வா கோவிலுக்கு போகலாம்.." என்றான் முருகன்
"நில்லு நில்லு.." என்று தாத்தா அருகில் இருந்த குடிசைக்கு கம்பை பிடித்துக்கொண்டு ஓடினார். துண்டை கட்டிக்கொண்டு அருகில் இருந்த குளத்தில் முங்கி விட்டு.... வளந்திருந்த முடிகளை சின்டாய் கட்டிக்கொண்டார். துருப் பிடித்திருந்த பெட்டியில் இருந்து ஊதா நிறம் ஏறி இருந்த வேட்டி  சட்டையை போட்டுக் கொண்டார். நெற்றியில் பெரிய பட்டை இட்டுக்கொண்டு  துள்ளலுடன் முருகனோடு நடக்க ஆரம்பித்தார்.

சிதம்பரத்தை நெருங்க நெருங்க நான்கு கோபுரங்களும் தெரிய ஆரம்பித்தன. குறுக்கு வழியில் சென்று கோவிலின் சமீபத்தை நெருங்கிவிட்டனர். தாத்தா மெய்மறந்து கோவிலை பார்த்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தார்.

கோவிலின் கிழக்கு வாசலுக்கு வந்து சிறிது தயங்கினார். போலாம் என்று முருகன் செய்கை செய்தான். அவர் தனது கால்களை கோபுர படிகளில் வைத்தார்... தன் வாழ் நாளில் பார்க்க துடித்த ஓர் இடம்... ஒரு பர்லாங்கு தூரமே இருந்தாலும் பார்க்க முடிந்திறாத இடம்.... இனி பார்க்கவே முடியாது இறந்து விடுவோமோ என்று நினைத்த இடம்.... அவர் நடக்க நடக்க அவர் கண்களுக்கு விருந்தாய் விரிந்து கொண்டிருந்தது. அவர் தன்னை முழுதும் மறந்திருந்தார்.

சுகந்தம் நிறைந்த தென்றல் அவர் முகத்தில் அப்பியது.... ஆயிரங்கால் மண்டபத்தில் நாதஸ்வரமும் மிருதங்கமும் இசைத்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு அபிநயம் பிடித்து பரதம் ஆடிக்கொண்டிருந்தாள் ஓர் யுவதி. அவளை தாண்டி தங்க கோபுரம் ஜொலித்துக் கொண்டிருந்தது.

அவர் தன்னை மறந்து "என்னாட்டவர்க்கு இறைவா..." என்று ஆரம்பிக்கும் பொழுது ஒரு கல் வந்து அவரது நெற்றியில் பட்டு இரத்ததுடன் தெரித்தது.
"ஆ..." என்று கத்திக்கொண்டு  விழுந்தார்
தீடீர் என்று என்ன நடந்தது என்று அறியாத முருகன் அதிர்ச்சியுடன் அவரை பிடித்தான்.
அப்பொழுது தான் பார்த்தார்கள்  கோவிலே ஸ்தம்பித்து நின்று இவர்களை பார்த்துக்கொண்டிருப்பதை.
ஒருத்தன் வந்து கீழே கிடந்த தாத்தாவை உதைக்க துவங்கினான்.. மேலும் சிலர் சேர்ந்துக்கொண்டனர்... முருகன் தடுத்தான் "ஏ அவர அடிகிறீங்க.. அதான் சுதந்திரம் கிடைச்சுருச்சுல...." ஒரு முரட்டு கை அவனை அறைந்தது... சில அடி தள்ளி குளத்துச் சுவரில் இருந்த நந்தியின் மேல் முட்டிக்கொண்டான்.
ஏறக்குறைய தாத்தா மயக்கம் அடையும் அளவிற்கு அடித்துவிட்டு இழுத்து சென்று வெளியில் எரிந்து விட்டார்கள்.
முருகன் அழுது கொண்டே அவர் அருகில் சென்று அமர்ந்தான்.... அவரை கஷடப்பட்டு எழுந்து சம்மணம் இட்டு அமரச்செய்தான். இருவரும் ஒன்றும் பேச வில்லை...... முருகன் அழுது முடித்து கண்களை துடைத்துவிட்டு பார்த்தபொழுது தாத்தா அங்கு இல்லை கசக்க பட்ட காகிதம் ஒன்று இருந்தது அதில் ஒரு பெண் பரதம் ஆடிக்கொண்டிருந்தாள்.

தூரத்தில் வானொலி ஒலித்தது.... ஆல் இந்தியா ரேடியோ.... செய்திகள் வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்.... இந்தியா இனி சுதந்திர நாடு...!!!!


Friday, October 11, 2013

நிதர்சனம் : கண்களை திறக்கும் கடவுளாய் இருங்கள்....!!!

அடுத்த நாள் முருகன் முறுக்குகளை விற்றுவிட்டு சீக்கிரமே திரும்பி வந்துக்கொண்டிருந்தான். வழியில் ஆலமரத்தடியில் சென்று தாத்தாவை தேடினான்... அவரது பையும் தடியும் இருந்தது அவரை காணவில்லை...
"தாத்தா... தாத்தா..."
பதில்லில்லை.... கொஞ்சம் தள்ளி சுற்றும் முற்றும் பார்த்தான்.... பிறகுஅவரது பைக்குள் இருந்த காகிதங்களை எடுத்துப் பார்த்தான்..... நிறைய படங்கள் வரையப்படிருந்தன..... அதில் பல் கோவில்கள்.... கோவிலின் கோபுரம்... கோபுரத்தின் கலசம்.. அதில் அமர்ந்திருக்கும் புறா.... கோபுரத்தில் இருக்கும் சிலைகள்..... வெளியில் உள்ள பிள்ளையாரை கும்பிடும் பட்டு சேலை அணிந்த பெண்.. கூட வேடிக்கை பார்க்கும் சிறுவன்.... கிழக்கு வீதியில் பவனி வரும் உற்சவர்.... வெள்ளியிலிருந்து தெரியும் கோவிலின் உள்புறம்.. அனைத்தும் கோவில் கோவில் கோவில்...!!!!

அப்பொழுது வந்த தாத்தா படங்களை அவனிடம் இருந்து பிடுங்கி கொண்டார் "என் கிட்ட இருக்க ஒரே சொத்து இது தான்.... இதையும் எடுத்துட்டு போய்டாதீங்க சாமி..." அவர் முகத்தில் இன்னும் கொஞ்சம் பயம் ஒட்டிக்கிடந்ததது. முருகன் அவரை பாவமாய் பார்த்தான்..... தனது பைக்குள் கைவிட்டு வெள்ளை காகிதத்தையும் ஒரு பென்சில்லையும் எடுத்து அவரிடம் கொடுத்தான்......
"உனக்கு தான் வாங்கி வந்தேன் வச்சுக்கோ..."
 "எனக்கா.." என்க் கேட்டார்..
"ஹ்ம்ம் உங்களுக்குத்தான்..... இதுல வரைஞ்சா இன்னும் நல்லாருக்கும் எங்கண்ணன் இதுல தான் வரையும்..."
அவர் சிரித்தார்...... "நீ போ.. போ.. யாராவது பத்தா அடிப்பாங்க..."
"என்ன யாரும் அடிக்க மாட்டாங்க.... நீ இங்க என்ன பண்ற..."
"உன்ன யாரு அடிப்பா.. என்ன தான் அடிப்பாங்க...போ போ...."
"காகிதம் எல்லாம் வாங்கி கொடுத்துருக்கேன் ஒரு நன்றி கூட இல்லயா..."
"எனக்கு எதுவும் வேணாம் நீ போ சாமி..."
"தண்ணியாவது கொடேன் தாகமா இருக்கு..."
பானையில் வைத்திருந்த தண்ணீரை மொண்டு தந்தார்.....
"நீ  என்ன கோவில் கோவிலா வரஞ்சு இருக்க....."
"கோவில்...." என்று கூறி பேரு மூச்சு விட்டார்
"அது தான் என் கனவு...."
"என்ன சொல்ற......"
"நீ கோவிலுக்கு உள்ள போய் இருக்கியா..."
"இது என்ன கேள்வி நிறையா தடவ போய் இருக்கேன்...."
"எப்படி இருக்கும்.... ஆள் உயரத்துக்கு தத்ரூபமா சிலைங்க.... ஒரு வித தெய்வீக நறுமணம்..... நாதஸ்வரம்.. மிருதங்கம்..... மேகங்களுக்கு நடுவே இருக்குற மாறி புகைகளுக்கு நடுவே எம்பெருமான்.... சொர்க்கம் மாறி இருக்குமா..." மெய் மறந்து கூறிக்கொண்டிருந்தார்.
முருகன் பல தடவை சென்று இருந்தாலும் கோவிலை இது போல் ரசனையுடன் ஒரு போதும் அவன் அணுகியதில்லை. ஆச்சர்யத்துடன் அவரிடம் கேட்டான்
"நீ கோவிலுக்குள்ள போனதே இல்லையா..."
அவர் முகத்தில் சோகம் பரவியது
"இன்னும் போனதில்லை...."
அப்பொழுது முருகன் வயது மதிக்கத்தக்க ஒருவன் ஓடி வந்தான்.. தாத்தாவை ஏற இறங்க ஒரு மாதிரி பாத்து விட்டு "டேய் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க.. உன் அக்கா உன்ன ஊர் பூரா தேடிகிட்டு இருக்கு.."
"ஏன் என்னவாம்.."
"உங்கண்ணன் வந்துட்டானாம்.... தென்னந்திட்டுல ஏதோ கூட்டமாம்..."
இதை கேட்ட மறு நொடி முருகன் அங்கில்லை.. தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தான்.

முருகனின் அக்கா மனோன்மணி அவனிடம் தூக்கு கொடுத்தாள்..கணேஷை கேட்டதாக சொன்னாள்... பாத்து போ என்றாள். ஜோல்னா பையில் புது  சட்டை சகிதம்  அதிரசத்துடன் விறுவிறுவென்று  நடக்க ஆரம்பித்தான்.

ஊருக்கு வெளியே கொஞ்சம் தூரம் நடந்தவுடன் அக்காள் சொன்னபடி  சிகப்புத் துண்டுடன் ஒருவர் காத்திருந்தார். முருகனை வாய்க்கால் அருகே அழைத்துச்சென்று ஒரு படகில் ஏற்றினார். படகு தில்லைக் காடுகளின் ஊடே மிதந்து சென்றது. முருகனுக்கு அவன் அண்ணனை காணும் ஆர்வம் கட்டுபடுத்த முடியாத எல்லையை கடந்திருந்தது. சில நிமிட பயணத்திற்கு பிறகு கடற்கரை தெரிந்தது. கரையில் நான்கைந்து பேர் புகைத்துக்கொண்டிருந்தார்கள்.  கரையை அடைந்தவுடன் அவனுடன் வந்தவர் அதோ அங்கே என்று தூரத்தில் நின்று இருந்த கூட்டத்தை காமித்தார்.

கதிரவன் மேற்கே மறைய துவங்கியதால் இருட்ட துவங்கி இருந்தது. முருகன் கடற்கரை மணலில் தடுமாறி வழியில் இருந்த நண்டுகளை வளைக்குள் விரட்டிக்கொண்டு அந்த கூட்டத்தை நோக்கி ஓடினான். தீபந்ததின் வெளிச்சத்தில் கணேஷின் முகம் மற்றொரு பந்தம் போல் சுவ்வாலை வீசிக்கொண்டு இருந்தது.இரண்டு ஆண்டுகளில் முழுவதுமாய்  மாறி இருந்தான். முகம் முழுவதையும் தாடி மறைத்திருந்தது, பாரதி மீசை அதே பரந்த மார்பு கணீர் குரல். கூட்டத்தினரிடம் பேசிக்கொண்டிருந்த  அவன் முருகனை கண்டதும் லேசாய் புன்முரிந்தான். கூட்டத்தில் மகிழ்ச்சி நிரம்பி இருந்தது.

"நாம் மகிழ்ந்து கொண்டாட வேண்டிய தருணம்.. 200 ஆண்டுகளாய் நாம் போராடி எட்டிய தருணம்.. இன்னும்  சில தினங்களில் நமக்கு சுதந்திரம்...."
கூட்டம் சந்தோஷ முழக்கமிட்டது.....

"இவ்வுலகை ஆட்சி செய்தவர்கள் நாம்... 200 ஆண்டுகளுக்கு முன் அனைவரும்  பார்த்துவிடவேண்டும் என்று  ஆசை பட்ட நாடு நம் பாரதம்.... உலகுக்கே பண்டங்களை ஏற்றுமதி செய்தவர்கள் நாம்..... களவு இல்லாமல் ஜாதி சண்டை இல்லாமல் கட்சிகள் இல்லாமல் ஒருவருக்கொருவர் அமைதியாய் வாழ்ந்து கொண்டிருந்தோம்.... அழகு ஆபத்து தான்.... அழகும் அமைதியும் பேராபத்து.... இன்று வடக்கே ஜாதி கலவரத்தில், இங்கே உணவு பஞ்சத்தில் பலர் மடிவதை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.... ஏன் ஏன்..???"
"ஒண்ட வந்த பிடாரிகள்.. எல்லாம் அந்த வெள்ளைக்கார பேய்களால் தான்" என்று கத்தினர்
"இல்லை.." என்று கணேஷ் சொன்ன பொழுது நிசப்தம் நிலவியது.
"அவர்களால்  மட்டும் இல்லை....  பல பரிசுகளுடன் நாய் போல வாலை ஆட்டிக்கொண்டு வந்த ஆங்கிலேயர்களை பண்டைய மரபு விருந்தோம்பலின் படி வாழ்த்தி வரவேற்றோம்.... உபசரித்தோம் நாம்.... வந்தவர்கள் காலை சுற்றிய பாம்பாய் நம்மை அடிமை படுத்த நினைத்த பொழுது வெகுண்டு எழுந்தோம். போராடி பல தியாகிகள் உயிர் கொடுத்து நமக்கு நமது உரிமையை நமது பெருமையை  தந்துள்ளனர்... நாம் கொண்டாட வேண்டும்  இன்று மட்டும் அல்ல என்றும் தினம் தினம் நமது சுதந்திரத்தை கொண்டாட வேண்டும்.."
"ஆம் கொண்டாட வேண்டும்.. கொண்டாட வேண்டும்.." என்று சிலர் எழுந்து ஆட ஆரம்பித்தனர். வேறு சிலர் "ஜெய் ஹிந்த்", "வந்தே மாதரம்" என்று முழக்கமிட்டனர் . அவர்களை கை அசைத்து அமரச் சொன்னான் கணேஷ்.
"கொண்டாடலாம்... கொண்டாடினால் மட்டும் போதுமா..... அன்று இருந்த அந்த அமைதி இன்றும் இருக்கிறதா நம்மிடம்..."
"இல்லை இல்லை.."
"ஆம்.. இல்லை தான்...  முன் போன்ற வளமான நாடாக நமது பாரதம் இல்லை.... அமைதி இல்லை..... கொட்டிக்கொடுக்கும் வாணிபம் இல்லை...... ஆனால் நம்மிடம் அன்று இல்லாதா ஒன்று இன்று இருக்கிறது அது என்ன..??"
"அரசாங்கம்..."
"ராணுவம்.."
என்று பலக் குரல்கள்
"நம்மிடம் இப்பொழுது ஒன்று பட்ட இந்தியா உள்ளது..... அது மட்டும் போதுமா.. சுதந்திரம் பெற்று விட்டால் நமது போராட்டம் முற்று  பெற்று விடுமா.. இல்லை இனி தான் நாம் உண்மையான போராட்டத்தை தொடங்கவேண்டும்..... நமது பெருமையை நமது கலாசாரத்தை மீண்டும் புத்துயிர் கொள்ள போராட வேண்டும்..... சுதந்திரம் வாங்கி சுயாட்சி செய்து என்னத்த கிழிக்க போகிறீர்கள் .. ஒருவருக்குள் ஒருவர் சண்டை இட்டு மாண்டு மடிய போகிறீர்கள்..என்று எள்ளி நகை ஆடுகிறார்கள் ஆங்கிலேயர்கள்.... அவர்கள் முகத்தில் மண்ணை பூச வேண்டும்..."
"ஆம் ஆம்..."
"நம் நாட்டு பெருமையை காக்க நெல்லையிலே ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் தமிழன்... பரங்கியரை எதிர்த்து போராடி.. சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு..கடைசி வரையில் அடிபணியாமல் மாண்ட சிவா தமிழன்... சிரத்திலே ஈடி ஈடியென அடி விழுந்த போதிலும் கரத்தில் இருந்து நமது தேசியக்கொடியை விடாமல் பிடித்த குமரன் தமிழன்...கட்டபொம்மன் தமிழன்....  புலித்தேவன் தமிழன்.... அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ன.... நமது மானதிற்க்காகவும் வீரதிற்க்காகவும் நாட்டிற்காகவும் போராடிய அனைவருக்கும் நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா.."
"என்ன என்ன...???"
"நமது நாட்டின் பெருமையை மீட்டு கொணர வேண்டும்... நம்மை பீடித்த விச பேய் ஆகிய பரங்கியரின் சுய ரூபத்தை நாம் உணரவே இரண்டு நூற்றாண்டு ஓடி விட்டது.. .பரங்கியனை ஒழிக்கவே மேலும் ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது... நமது நாட்டில் இன்னும் ஜாதி மதம்... மற்றும் அதன் பெயரில் தீண்டாமை என்னும் பல பெரிய பேய்களும் பல சின்ன பேய்களும் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாய் தின்று கொழித்து மிக பெரியதாய் வளர்ந்துள்ளன...அவற்றை விரட்ட எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அவற்றை விரட்டும் வரை நம் போராட்டம் ஓயாது நண்பர்களே ஓயாது... இனி கோவில்கள் மட்டும் அல்ல சட்டமன்றகளும் அனைவருக்கும் சமமே என்பதை அனைவருக்கும் புரிய வையுங்கள்... நண்பர்களே இந்நேரத்தில் உங்களுக்கு ஒரு கதை சொல்ல ஆசைப்படுகிறேன்... அது ஒரு அழகான கிராமம் அந்த கிராமத்தில் கண் பார்வையற்ற சிறுமி ஒருத்தி இருந்தாள்.. அவளால் கதிரவனின் வெப்பத்தை உணரமுடியும்... தென்றலின் மென்மையை அனுபவிக்கமுடியும்.... தண்ணீரின் சல சலப்பை கேட்கமுடியும்...குயிலினும் இனிமையாய் பாட முடியும்... அனைத்தும் முடிந்த அவளால் இப்பூவுலகை பார்க்கமுடியாது வேதனைப்பட்டாள். அவள் தினமும் கடவுளிடம் வேண்டினாள் ஒரு நாள் ஆவது கண் பார்வை கொடுங்கள் என்று.. கடவுள் மனமிரங்கி ஒரே ஒரு நாள் இவ்வுலகை ரசிக்க வரம் தந்தார்... அச்சிறுமியும் அந்த ஒரு நாளில் விளையாடும் மானுடன் துள்ளி குதித்தாள்... மயிலுடன் ஆடினாள்... மீனுடன் நீந்தினாள்.... கதிரவனின் செம்மையைப் பார்த்து வண்ணம் கொண்டாள்.. மேகங்களுடன் மிதந்தாள்.. அந்த நாள் முடிவுற்றது.. சூரியன் மறைந்து இருள் கவ்விய நேரம் அவள் வாழ்விலும் நீங்கா இருள் சூழ்ந்தது.... அப்பொழுது கடவுள் அவளிடம் சந்தோசமா எனக்கேட்டார்.. அதற்கு அவள் விம்மி அழத் துவங்கினாள்..."ஏனம்மா அழுகிறாய்..?" என்று கேட்டதற்கு.... இது வரை எதையோ நான் இழக்கிறேன் என்று எண்ணி வருந்திக்கொண்டிருந்தேன்.. இன்று நான் எதை இழக்கிறேன் என்று தெரிந்து கொண்டேன்..முன்னை விட வருத்தமாக உள்ளது என்றாள்.... நண்பர்களே நம் மக்கள் எதை இழந்துள்ளார்கள் என்பதை புரிய வையுங்கள்..... நம் நாடு தானே முன்னேறும்.. அவர்கள் கண்களை திறக்கும் கடவுளாய் இருங்கள்....!!!"

Wednesday, October 9, 2013

நிதர்சனம்

கதர் ஜிப்பாகாரர்கள் அவ்வப்போது வந்து வந்தே மாதரம்.. ஜெய் ஹிந்த் என்று கத்திக்கொண்டு சென்றார்கள்.. சில இடங்களில் மூவர்ண கொடி  பறந்துக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் போராடி சுதந்திரம் பிறக்க இன்னும் சில தினங்களே இருந்தன.... நாடுமுழுவதும் புத்துனர்ச்சியுடன் சுதந்திர தினத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.... அங்காங்கே மேடை பேச்சுக்களும் கூட்டங்களும் நடந்தேறிக்கொண்டிருந்தன. பொம்மலட்டங்கள் தெருக்கூத்துக்கள்... தலைவர்களையும் தியாகிகளையும் மக்களுக்கு நினைவு படுத்திக்கொண்டிருந்தன. இவற்றின் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் சிதம்பரத்திற்கு கிழக்கே ரெண்டு மைல் தொலைவில் வெள்ளாற்றங்கரை ஓரத்திலே தில்லை காடுகள் நடுவே இருந்தது கிள்ளை கிராமம்.

அவ்வாற்றின் கரை வழியே ஓடிய மண் பாதைகளில் அச்சிறுவன் நடந்துக்கொண்டிருந்தான். ஏறக்குறைய 12 வயது இருக்கும். உக்கிரமான வெயிலும், உப்புக் காற்றும் அவனுக்கு களைப்பையும் தாகத்தையும் கொடுத்திருக்கவேண்டும் மேலும் வெகு நேரமாக நடந்து கொண்டிருப்பவன் போல் தோன்றினான் கையில் பெரிய துணிப்பை இருந்தது.  தூரத்தில் தெரிந்த ஆலமரத்தில் ஓய்வெடுக்க எண்ணி அதை நோக்கி சென்றான். அங்கு சிலர் அமர்ந்திருப்பதை பார்த்த அவன்... அங்கே நிற்காமல் மேலே சென்றான்.
அப்பொழுது ஒரு குரல் அவனை நிறுத்தியது.

"டேய் முருகா... என்ன பாத்துட்டு பாக்காத மாறி போற..?" எனக் கேட்டுக்கொண்டே ஒருவன் அவனை நோக்கி வந்தான்.
"என்ன சிதம்பரத்துல நல்ல வியாபாரமா பை காலியா இருக்கு..." என்று பேசிக்கொண்டே அந்த பையில் கை விட்டு கொஞ்சம் இருந்த முறுக்கு துணுக்குகளை எடுத்து வாயில் போட்டான். முருகன் அவனிடம் பேச்சு கொடுக்காமல் மேலே செல்ல முயற்சித்தான்.
"யங்க டா ஓடுற.. மனோ எப்படி இருக்கா..."
"இங்க பாரு சுந்தரம்... மனோ பத்தி என் கிட்ட பேசாதேன்னு உன் கிட்ட எத்தன தடவ சொல்றது,, என்ன விடு நான் போகணும்.."
"நா பேசாம யாரு பேசுவா.. போன தைலயே முடிச்சுருக்க வேண்டியது.. பாழா போன உன் அண்ணன் போய் போலீஸ்ல மாட்டிகிட்டு  கல்யாணத்த கெடுத்துட்டான்.."
அண்ணனை பத்தி பேச்சை ஆரம்பித்தவுடன் முருகனின் முகம் சுருங்கி போனது.... அவனது அண்ணன் கணேசை போலீசார் போன வருடம் அரசாங்கத்திற்கு எதிராக பேசியதற்காகவும் வன்முறையில் ஈடுபட்டதற்காகவும் கைது செய்தனர். அதன் பின் என்ன ஆனான் என்ற செய்தியே இல்லை. சுந்தரத்திற்கு சர்காரில் சில ஆட்களை தெரியும் கணேஷ் பற்றிய விவரமும் தெரியும் இருந்தும் அவன் யாரிடமும் சொல்வதில்லை.

முருகன் நழுவிவிடத்தான் பார்த்தான் சுந்தரம் தான் விடவில்லை. அவன் கழுதை சுற்றி பிடித்துக்கொண்டு நா சொல்றத மனோட்ட சொல்றியா...? என்றான்
"உன் பேச்சை எடுத்தாலே அக்கா அடிக்கும் ஆள விடு..."

"இத சொன்ன அடிக்காது...."

"அப்படி என்ன சொல்ல போற.."

"ஹ்ம்ம் உங்கண்ணன் கணேசை பத்தி...."

முருகனுக்கு ஆர்வம் ஆகி விட்டது... அவன் எத்தனையோ தடவை சுந்தரத்திடம் கெஞ்சி இருக்கிறான் இருந்து சுந்தரம் ஒரு போதும் வாய் திறந்ததே இல்லை.

"மாமா மாமா சொல்லு மாமா.."

"இப்போ தான் மாமாங்கற நெனப்பு வருதா உனக்கு.."

"சொல்லு மாமா.. நீ என்ன சொன்னாலும் மனோட்ட அப்படியே சொல்லிடறேன்"

"கல்யாணத்துக்கு ஏற்பாடெல்லாம் ஆரம்பிக்க சொல்லு...." என்று கண்சிமிட்டினான்
"ஏன் மாமா.. அண்ணன் இல்லமா எப்படி.."
"முட்டாள் உங்கன்னே விடுதலை ஆயிட்டான்... வந்துருவான்"
என்று சுந்தரம் கூறியவுடன் முருகனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. நடந்து வந்த களைப்பெல்லாம் மறந்து
"ஐ.. நா இப்பவே அம்மாட்ட போய் சொல்றேன்.." என்று ஓடத்துவங்கினான்.

அவனை இழுத்துப்பிடித்த சுந்தரம் "மனோட்ட சொல்ல சொன்ன அம்மாட்ட... அம்மாட்ட சொல்லுவியா..?" என்று மண்டையில் ரெண்டு தட்டு தட்டி..
"எங்க ஓடுற நில்லு மனோக்கு ஏதாவது வாங்கி தரேன் எடுத்துட்டு போ..." என்று சுற்றி முற்றி பார்த்தான்.
ஆலமரத்தின் அடியில் ஒரு முதியவர் முகம் முழுக்க மறைத்த தடியுடன் அமர்ந்திருந்தார். பழுப்பேறிய வேட்டி... கழுத்தில் ஒரு துண்டு.... கையில் ஒரு கம்பு.. மரத்தின் வேரில் சாய்ந்து படுத்திருந்தார்.
அவரிடம் சென்று "யோவ் அது என்ன அந்த பைல விக்குறதா..?" என்றான்
அவர் பதில் சொல்லாமல் அவனை உற்று பார்த்தார்.
"யோவ் கேக்றோம்ல என்ன வச்சுருக்க  பைல"
அவர் மீண்டும் பதில் சொல்லாமல் பையை  இறுக்கி பிடித்தார்.
சுந்தரத்திற்கு அவர் அவனை அவமதிப்பதாய் தோன்றியது.
"கேடுக்கிட்டே இருக்கேன்..... கிழட்டு @@##" என்று காலால் உதைத்தான். அவர் கையில் இருந்த அந்த அழுக்கேறிய பை மண்ணில் நழுவியது. ஈன சுரத்தில் அவர் இடுப்பை பிடித்துக்கொண்டு முனகினார். முருகனுக்கு அவரை பார்க்க பாவமாய் இருந்தது. "மாமா.. அவர விட்டுடு மாமா..." என்றதிற்கு அவனுக்கும் தலையில் அடி விழுந்தது. அந்த பையை தலை கிழாய் தூக்கினான் உள்ளிருந்து கச்கப்பட்ட காகிதங்கள் விழுந்தன. அதை பார்த்த சுந்தரத்திற்கு புருவங்கள் உய்ந்தன.
"ஓஹோ நீதானா.... ஜமீன சர்காருல  கடுதாசி போட்டு மாட்டி  விட்டது நீ தானா..?"
அவர் பயத்தில் நடுங்க ஆரம்பித்தார்.. அவரது தோளில் போட்டிருந்த துண்டை பிடித்து அவரை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
"சாமி நான் இல்ல சாமி... எனக்கு எழுத படிக்கவே தெரியாது...." கெஞ்சினார்
"அப்புறம் என்ன மயித்துக்கு இவ்வளோ காகிதம்.. வெள்ளகாரங்க மாதிரி பீ தொடைக்கவா..?"
அவர் கைகளை பிடிதுக் கெஞ்ச ஆரம்பித்தார்.... பொளேர் என்று கன்னத்தில் ஒரு அரை.." என்ன கைய பிடிக்குற.. அவ்வளோ தைரியமா.. உன்ன தான் நாலு மாசமா  தேடிகிட்டு இருக்கேன்.... இத்தனை நாளு ஜமீன் காசுல தானே வயித்த ரொப்புன.. இப்போ வெள்ளகாரே போறான்னு சொன்ன வுடன்னே... மொட்டக் கடுதாசியா...."
" அய்யா சாமி.... பெரிய  விவகாரம் எல்லாம் எனக்கு தெரியாது சாமி.... வெயிலுக்கு காத்தாட மரத்தடி ஒதுங்குன்னே..ஊரு பக்கம் வந்தே நாளாச்சு சாமி.. வுட்டுடுங்க..." என்று கை படாதவாறு கெஞ்சினார்.
அவர் துண்டை விட்ட சுந்தரம் "அப்புறம்  எதுக்கு உனக்கு இவ்வளோ கடுதாசி..??"
" எல்லாம் குப்ப சாமி.... திருவிழா, நாடக விளம்பர கடுதாசிங்க.."
சுந்தரம் அவரை பார்த்தான் "அதெல்லாம் உனக்கு எதுக்கு..?"
"நான் படம் வரைவேனுங்க..." சுந்தரம் சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.. முருகனின் தோளில் கை  போட்டு சிரித்தான். சிரித்துக்கொண்டே மீண்டும் ஒரு அரை "என்ன பாத்தா என்ன முட்டா பய மாறி தெரியுதா..?"
அவருக்கு கண்ணீரே வந்துவிட்டது.."சத்தியமா சாமி...."
"ப்ச்ச உன்கிட்ட   பேசினா  சரி பட்டு வராது.." அவர் துண்டை பிடித்து தர தரவென்று  சென்றான்.
"சாமி நம்புங்க.. நா வேணா உங்கள வரையட்டுமா..?"
சுந்தரம் சற்று நின்று "என்ன ஒன்னும் வரைய வேண்டாம் இந்த இவன வரை பாப்போம்"  என்று முருகனை காமித்தான்.

அவர் கசங்கிய காகிதம் ஒன்றை கையில் எடுத்தார்.. எச்சில் தொட்டு நேர் படுத்தினார்.. இடுப்பில் சொருகி இருந்த கரி துண்டு ஒன்றை எடுத்து தரையில் தேய்த்து கூர்மை செய்துக்கொண்டார். முருகனை இப்படி உட்கார் அப்படி உட்கார் என்று கூறினார். தலையை கொஞ்சம்  திருப்ப சொன்னார் அவன்  திருப்பாததால் லேசாய் அவன் தாடையை பிடித்து திருப்பினார்.மூங்கிலால் படீர் என்று அவர் கையில் ஒரு அடி விழுந்தது. "ஆ ஆ.." என்று கத்திக்கொண்டே கையை உதறினார்.
"என்ன ஆ ஊன்னுட்டு.. தொடக்கூடாது.. ஹ்ம்ம் ஆரம்பி ஆரம்பி  நேரம் ஆகுதுல.." என்று கூறிக்கொண்டே முருகனுக்கும் ஒரு அடி "அவன் பாட்டுக்கு தொடுறான் அப்படியே பிள்ளையார் மாறி உட்காதிருக்க..." என்றான் சுந்தரம்.
என் பெங்காலி நண்பர் இந்த கதைக்காக வரைந்த ஓவியம்  

வலி தாங்கமல் முருகன்  கண்ணீர் விட்டன... அந்த முதியவரும் கண்களை துடைத்துக்கொண்டு வரைய ஆரம்பித்தார்.. சுந்தரம் புகையிலையை சுருட்டி வாயில் வைத்தான்.
பொறுக்க முடியாமல் சில  நிமிடங்களில்லேயே சுந்தரம் அவர் வரைந்து கொண்டிருந்த காகிதத்தை  பிடுங்கி பார்த்தான்.
"ஹ்ம்ம்  சுமாரா வரையுற.. இருந்தும் இத்தனை எதுக்கு உனக்கு.." என்று அவர் வரைந்ததை  எறிந்தான்.
"நா  நிறையா வரைவேனுங்க...." என்றார்
"நா நம்பள... நாளைக்கு  வருவேன்.. எல்லாத்தையும் எடுத்துட்டு வா..."
சரி என்று தலை ஆட்டினார்.. அது என்ன அந்த சுருக்கு பைல
அவர் நடுக்கமான குரலுடன்
" நரி எழந்த பழம்.." என்றார்
"இந்தா பத்து பைசா...அத குடு.."
"இல்ல நா இத விக்குறது வச்சுக்கல.."
"அப்போ சும்மா கொடு.." என்று  பிடுங்கி கொண்டான்.
அதை முருகனிடம் கொடுத்து "இத மனோட்ட கொடுத்துரு நரி இழந்த பழம் கிடைகிறது  ரொம்ப கஷ்டம்..போ.." என்றான்
முருகனும் அந்த ஒரு வார்த்தைக்கு தான் காத்திருந்தார் போல ஓட ஓட ஆரம்பித்தான் "டேய் முருகா போற வழியில நீயே தின்றாத.." என்று சுந்தரம் சொன்னது முருகன் ஓட ஓட காற்றில் கரைந்து வலுவிழந்தது. சுந்தரம் மறைந்ததும் முருகன் அந்த பையை  புதரில் எரிந்து விட்டான்... சுந்தரத்திற்கு தெரியாமல் அவன் எடுத்து வந்த  காகிதத்தை பார்த்தான். அது அவனை கண்ணாடி போல் பிரதி பலித்து இருந்தது. ஒரே ஒரு வித்யாசம் படத்தில் அவன் கண்களில் கண்ணீர்.

பி.கு: 1947-ல் இருக்கும் இக்கதை குறும்படதிற்காக இரண்டு வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது.... பிறகு நமக்கு இதெல்லாம் கஷ்டம் என்று கைவிடப்பட்டது. சரி படம்  எடுக்க முடியவில்லை கதையாகவாது  எழுதலாம் என்றால் சற்றே பெரிதாக வந்துவிட்டது.  அதை மன்னித்து படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தொடரும் 

Tuesday, September 24, 2013

குற்றம் நடந்தது என்ன?

உமேசின் விவகாரம் பள்ளிகூட நண்பர்கள் வட்டாரத்தில் பரவி துக்கம் விசாரிக்க வந்துவிட்டனர். அதுகுள்ளயேவா.. இந்த சின்ன வயசுலயா.. இப்படி ஆயிடுச்சே.... ஏண்டா நீயாவது காப்பாத்தி இருக்க கூடாத என்று நோந்த என்னை மேலும் நோகடித்தனர் . "என்னடா சக்கு பண்றது.... அவன் சரியா ஹன்ட்ல் பன்னல.... முன்னாடியே தெரிந்து இருந்தா காப்பாத்தி இருக்கலாம் கடைசி நேரத்துல தான் தெரிஞ்சது.... கிரிடிக்கல் ஸ்டேஜ் கப்பாத்த முடியல".

சொந்த பந்தங்கள் அனைவரும் கூடிவிட்டனர்..... பெரியம்மாக்களும் சித்திகளும் குறுக்கும் நெடுக்குமாய் சென்று கொண்டிருந்தனர்... தாத்தாவை காரில் அழைத்துவர அப்பா சென்றுள்ளார்.... அத்தை அவனிடம் பேசாமல் முறைத்துக்கொண்டு என்னிடம் வந்து நீயாவது புத்தி சொல்லி இருக்க கூடாதா பப்பு எனக்கேட்டாள்... எனக்கே தெரியாது மாமி என்றேன்.... நான் அவன் நண்பன் மட்டும் அல்ல கசின்..சின்ன வயசில் இருந்தே ஒரே ஸ்கூல், பி.டெக் வேறு வேறு கல்லூரி என்றாலும் MSஇல் சேர்ந்துகொண்டோம்.

அதிர்ச்சியில் உறைந்து இருந்தேன்.... என்னால் நம்பவே முடியவில்லை... முதல் நாள் இரவு தான் சென்னையில் தரை இறங்கினோம். அப்பொழுது வரை எனக்கே தெரியாது அவன் காதலிப்பது... தீடீர்ன்னு நிச்சயதார்த்தம் என்கிறான் கல்யாணம் என்கிறான்.

 தங்கைகள் அவனை சுத்திக் கொண்டு "எப்படி ப்ரோபோஸ் பண்ண....எப்படி ப்ரோபோஸ் பண்ண.." என்று நச்சரித்தார்கள்....

"ஊமை குசுபண்டா நீ.... பொண்ண பாத்தா மன்ன பாத்து நடக்குறவே.... உம்மன்னா மூஞ்சி மாறியே இருந்துட்டு எப்படி லட்டு மாறி புடுச்சுருக்கான் பாரு....." என்று சிலர் வாழ்த்துகிறார்களா திட்டுகிறார்களா என்பதே தெரியாமல் கன்னத்தில் குத்தி விட்டுஅப்படியே என்னையும் நீயும் இருக்கியே உதாவக்கரை என்பது போல் பார்த்துவிட்டு சென்றனர்.

நான் தின்னைய புடிச்சு நடந்தப்ப என்னைய புடிச்சு  நடந்த பய..... இப்படி செய்துட்டானே. வருபவர்களை சிரித்துகொண்டே வரவேற்று கொண்டிருந்த அவனருகே போய்  "நைட் வரைக்கும் என் கூட  தானேடா இருந்த.... நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி எல்லாத்திலையும் காதல் வெறி ஊறிப்போன ஒருத்தனாலதான் இப்படி பண்ண முடியும்...."

"மச்சான் நடந்தது என்னன்னு தெரியாம பேசாத.... பொறுமையா அப்புறம் சொல்றேன் மச்சா.. மாப்பிள தோழனா லட்சணமா ரெடி ஆகு.."

"பொம்பள டிரஸ் போட்டு நித்யாவுக்கு தோழியா கூட நிப்பேன்.... துரோகி... லவ் பண்ற பொண்ண friend கிட்ட சொல்லாத நீயெல்லாம் ஒரு நன்பனாடா..?!இத்தன வருஷம் கூடவே இருந்த என் கிட்டேயே மறைச்சுட்டேல..."

டூ விட்டு சென்று விட்டேன்...  ஸ்கூல் படிக்கும் பொழுதிலிருந்தே எனக்கும் காதலுக்குஅடிதடி.. இத்தனைக்கும் நான் யாரையும் காதலித்தது இல்லை.. எங்க...?! கொஞ்சம் உஷார் ஆகி இந்த பொண்ணு அப்படின்னு பிக்ஸ் பன்றதுக்குல.... மச்ச ஏ ஆளு போற பார்ரான்னு... எவனவாது ஒரு ராஸ்கல் முந்திடுவான்.அந்த பொண்ணுங்க போற லேடி பேர்ட நாங்க ஹெர்குலஸில் follow பண்ணுவோம். பின்னாடி ரோமீயோக்கள் உட்கார்ந்து கடலை போட்டுக்கொண்டே வர நான் சைக்கிளை மிதித்துக்கொண்டு வருவேன். கரெக்ட் ஆய்டுச்சுன்னா நம்மள கழட்டிவிற்று வாங்க..... கலட்டி விட்டுருச்சுன்னா  திரும்பி நம்ம கிட்ட வந்து முதுக சொறிவானுங்க.

அதிலும் இந்த உமேஷ் சுத்தாத பொண்ணு இல்ல.. போகாத ஸ்கூல் இல்ல.... இவனுக்காக நான் மிதித்த கிலோமீட்டர்களை கணக்கிட்டால் ஹிமய மலையை கடந்து சீனா பார்டரை ஊடுறுவியிருக்கும். இருந்தும் ஒரு பொண்ண கரெக்ட் பண்ண துப்பில்லை....அதனால நானும் அவனும் க்ளோஸ் friends. எனக்கு அவன் மேல நம்பிக்க அவனுக்கு என் மேல நம்பிக்க.. இருவரும் எங்கள் எதிர் காலத்திற்கு பெற்றோர்களையே நம்பி இருந்தோம். ஒரு நாள் இரவில் என் நம்பிக்கையை போட்டு உடைத்ததை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை...!!!

நான் நித்யா உமேஷ்  மூவரும் ஒரே பல்கலைகழகதில் வேறு வேறு பிரிவில் MS பட்டம் பெற்று கையில் வேலையுடன் ஒருமாத விடுப்பிற்கு இந்தியா வந்தவர்கள். ஓஹயோ, US-ல் இருந்து கிளம்பி நேற்று முன்னிரவில் டாட்டா சொல்லி சென்னையில் விடு படும் வரை அவர்களுடன் தான் இருந்தேன்.

நித்யாவின் அப்பாஅவளுக்கு ஐயோவாவில் Rockwellஇல் வேலை பார்க்கும் ஒருவனை  பேசி முடித்திருந்தார். பிசினஸ் டீல் எல்லாம் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு இன்னும் சில தினங்களில் அந்த பெயர் தெரியாத மாப்பிள்ளைக்கும் இவளுக்கும் நிச்சயம் பேசப்பட்டு இருந்தது. அவளுக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை எப்படியாவது நிறுத்த வேண்டும்... மாறல் சப்போர்டுக்கு என்னையும் அழைத்தாள். வரதே 30 நாலு தான் என்று வர முடியாது என்று நழுவி விட்டேன.பாவம் உமேஷ் மாட்டிக்கொண்டான்.

ஒரே ஒரு நாள் தான்.. வந்தேனா என் லைப்பே மாறிடும் ப்ளீஸ்.. ப்ளீஸ்.. என்று கெஞ்சினாள். நம்ம உமேஷ் பச்சாம்பசளி எள்ளுக்கும் கொல்லுக்கும் வித்யாசம் தெரியாது  அப்பாவியான அவனை கூட்டிக்கிட்டு போய் கல்யாணத்த நிப்பாட்ட போறேன் என்று கடைசியில்அவனையே அவள்  திருமணம் செய்ய போவதாக வந்து நின்றாள். அவனுக்கு விசித்திரமான சில பழக்கங்கள் உண்டு ஓட மாட்டான் ஓடவே மாட்டான். ஓடுவது என்பது அவனுக்கு ஓடுறமாறியே  அசைவுகள் மட்டும் செய்வது. பஸ் பிடிக்க கூட உடம்பை ஆட்டிக்கொண்டு டான்ஸ் ஆடிவிட்டு ஓடி தான் வந்தேன் என்று அடம் பிடிப்பான். மற்றொன்று தப்பு செய்து மாட்டினாலும் தப்பு செய்யாமல் மாட்டினாலும் வாய்யையே திறக்க மாட்டான்.. மங்குனி.. எப்போதும்வாயில் கொழுக்கட்டை தான்.

அவனிடம் நான் எவ்வளவு துருவினாலும் நடந்ததை சொல்ல மாட்டான்...அதான் நடந்தது என்ன....?? குற்ற புலன் விசாரனையில்  இறங்கினேன்.

Accused No. 1: நித்யா

மாடி ரூமில் அலங்காரம் பண்ணிக்கொண்டிருந்தாள்.... மேலே போனேன்.
"வா வா பப்பு.... உன்னதான் பாக்கணும்னு இருந்தேன்..."
"ஓஹோ நாங்கெல்லாம் கண்ணுக்கு தெரிறோமா..கூட தான்டி இருந்த.. லவ் பண்றோம்னு ஒரு வார்த்த சொல்லி இருந்தா அழகா ஸ்கெட்ச் போட்டு கச்சிதமா சால்வ் பன்னிருப்பேன்ல...... ஏண்டி மறச்ச..?"
"எனக்கே ஷாக் தான் பப்பு....உமேஷ் இப்படி திடீர்ன்னு propose பண்ணுவான் நான்  எதிர் பார்க்கவே இல்ல..."
"என்ன அவன் உன்ன propose பண்ணானா.... ஒ மை காட்.."
"அதுவும் எங்க  அப்பா முன்னால.. எங்க அப்பாவே உறைஞ்சு போய்ட்டார்..."
உமேஷ் அப்படி பட்டவன் இல்லையே.. தேடி வந்த பானுவையே மிஸ் கிட்ட மாட்டி விட்டவன் ஆச்சே..!!!!
"மேல மேல.."
"அப்போ  எங்க அப்பா கிட்ட தெரியாதவண்ண ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்...கல்யாணம் வேணாம்ன்னு சண்ட போட்டு கிட்டு இருந்தேன்....அப்போ அப்பா நீ யாரையாவது லவ் பன்றியான்னு கேட்டார்...இல்ல தெரிஞ்சவன்னா ஓகேவான்னு கேட்டார்...அப்போ டைமிங்ல நச்னு சொன்னான் பாரு....செம.."
"நீ என்ன சொன்ன அதுக்கு..?"
"எனக்கு தெரியாது..இப்போ தான்பா ப்ரோபோசே பன்றான்னு சொன்னேன்.."
"ஹ்ம்ம்...அதுக்கு உங்க டாடி எப்படி ரியாக்ட் பண்ணார்..?"
"நான் எதிர்பார்கவே இல்ல.. அப்பா புகழ்ந்து தள்ளிட்டார்... உங்க தைரியம் புடிச்சிருக்கு... தனம்பிக்க புடுச்சிருக்கு.. போட்டுருக்குற பேன்ட் புடுச்சிருக்குன்னு...பழைய படம் ஹீரோயின் டையலாக் எல்லாம் விட்டுட்டு தம்பியதான் உனக்கு நல்ல தெரியுமே ஓகேவா" என்றார்

"why not..? ok சொல்லிட்டேன்"

"okன்னு ஒரு வார்த்தையில ஒருகொலையே பண்ணிட்டியேடி..?"

Side Accused No. 2: கார்மேகம் - நித்யாவின் அப்பா

நித்யாவின் ஊர் ஈரோடு, பாவனி பக்கத்தில் அந்தியூர். அவள் அப்பா நெசவு தொழிற்சாலை வைதிருந்தார்.பேசுவதில் கோயம்புத்தூர் பாசை தெரிந்தது.... . பெண்களை பெற்ற எல்லா அப்பாகளும் அய்யனார் மாறி இருக்கங்களா இல்ல நாம வில்லங்கம்மா யோசிக்கிறதுனால வில்லனனுங்களா தெரியுறாங்கலா. அவளின் அப்பாவும் அய்யன்னர் தான்.. முனி ராஜ்கிரண் போல் இருந்தார்.. முரட்டு பாசக்காரர் போல... தட்டி தட்டி அவர் பேசியதில் அணைத்து மூட்டுகளும் புலம் பெயர்ந்துவிட்டன.

இந்த பெண்களை பெற்ற அப்பகளிடம் ஒரே தப்பு என்ன தெரியுமா அவர்கள் அதிகம்  பாசம் வைத்து விடுவார்கள், அதனால் காதல் கீதல் என்று வந்தால் அடிக்க முடியாது ஆனா அடிக்க ஆள் வேணும். அப்போ தான் நாம கரெக்டா என்ட்ரி குடுப்போம் "அங்கிள் உங்க பொண்ண நான் ரொம்ப சின்சியரா லவ் பண்ணறேன்" ஆரம்பிக்கும் பொழுதே.... உன்ன தான் ராசா தேடிக்கிட்டு இருந்தேன் என்று  ஆரம்பித்து விடுவார்கள். இவன் எப்படி அடிவாங்காமல்...??? ஒரு வேல உள்காயமா இருக்குமோ...??!!

அவரிடம் சென்று என்னை அறிமுக படுத்திக்கொண்டேன். கட்டான மீசை... கை நீட்டும் அளவு அளவு தள்ளி நின்றாலும் இடிக்கும் தொப்பை.. வேலைகாரர்களை திட்டும் தோரணை.. அக்மார்க் பெண்களின் அப்பா.

"அங்கிள் அந்த கோவில்ல என்ன நடந்துச்சுன்னும் அப்படியே உங்க வருங்கால மாபிள்ளயா பத்தி என்ன நெனைக்குரீங்கன்னு சொன்னீங்கன்னா ரெக்கார்ட் பண்ணி அவங்களுக்கு வெட்டிங் ப்ரெசென்டா  பண்ணலாம் இருக்கேன்.."

"பலே பலே.. இந்த வீட்டு தம்பிக எல்லாம் படு சுட்டி....எடுங்க எடுங்க"

அருகில் இருந்த மர நாற்காலியில் அமர்ந்து விறைப்பாக பார்த்தார். மீசையை சீப்பால் சீவிக்கொண்டார்... "மங்களத்தையும் கூப்டனுமா...?"
"இது என்ன ஜோடி நம்பர் ஒன்னா அங்கிள்.. அதெல்லாம் வேணாம்."
"ரெடியா.."
"ஒரு நிமஷம்...."
"ஹ்ம்ம் ரெடி அங்கிள்...ஸ்டார்ட்..."
" நம்ம புள்ள இருக்கே தங்கம்.. தங்கம்னா தங்கம் பத்திர மாதத்து தங்கம்.... எனக்கு இருக்கே நெலம் புலன் இதெல்லாம் சொத்து இல்ல... எ புள்ள தான் எனக்கு இருக்க ஒரே சொத்து.... முகராசிக்காரி.. லெட்சுமி... அவ பிறக்குறதுக்கு முன்னாடி சைக்கிள்ள கடை கடையா போய் ஆர்டர் எடுப்பேன்.... அவ வந்ததுக்கு அப்புறம் தான்... என் முழு சம்பாத்தியம் எல்லாமே..... அவ மேல படிக்க வெளிநாடு போகனும்னு சொல்லும் போதே கிலியாத்தான் இருந்துச்சு... அவ படிப்புக்கு மாப்பள கிடைக்குமான்னு.... இப்போ வந்து கல்யாணம் வேணாம்ன்னு சொல்லு போது... காதலா இருக்குமோன்னு கொஞ்சம் சஞ்சலம் துளிர் விட்டுச்சு.... எம் புள்ள உண்மையதான் சொன்னா இல்லேன்னு.... அவ எப்ப உண்மை சொல்றா பொய் சொல்றாங்குறது  எங்களுக்கு தெரியாதா.. அப்போ என் முன்னாடியே.. ந உன்ன கதிலிக்கிறேன்னு சொன்ன மாப்பள தைரியம்.. அது  உண்மையா காதலிச்சா தான் வரும். எம் புள்ள உங்க இஷ்டம்ன்னு சொல்லிட்டா... அவளுக்கும் விருப்பம் இருக்குன்னு புரிஞ்சுது..... சந்தோசம்.... கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருந்தா ரொம்ப சந்தோசம். " என்றவர் தொடர்ந்து
"போதுமாப்பா இல்ல நா வேணா.. ஒரு தடவ எழுதிட்டு வந்து பேச வா.. ஒரு கோர்வையே  இல்லாம இருக்கு.."
"இல்ல இல்ல அங்கிள்... கேன்டிட்டா வந்துருக்கு.. நல்லாருக்கும் ".

அப்பொழுது உமேஷ் வந்தான்.. "வாங்க மாப்புள உங்கள பத்தி தான் பேசிகிட்டு இருந்தேன்...." அவன் தோலில் கையை போட்டு  என்னை பார்த்து சொன்னார் "ரெண்டு வருஷம்மா லவ் பண்றாராம்.... ஒரு வார்த்த சொல்லலியே.. நேரே என் முன்னால சொன்னார் பாரு.... பச்ச்ச்ச் கலக்கிடீங்க மாப்ள..."
"ரெண்டு வாருஷமா...?" என்று அதிர்ச்சி ஆனேன் அவன்  மலுபலாய் சிரித்தான்.

Main Accused: உமேஷ் எனும் துரோகி

 நிச்சயம் ஒரு வழியாக முடிந்தது....அனைத்து குற்றதிற்கும் காரணம் அவன் தான் என்று புரிந்தது.... அவன் புழு மீசை வைத்து இருப்பவர்களை பார்த்தாலே பயப்படுவானே.... இந்தாள்கிட்ட இவ்வளவு தைரியமா எப்படி..எப்படி ...?

அவனிடம் "உண்மைய சொல்லு.. அடி இல்ல.... திட்டு இல்ல....சொல்லல... வெட்டு குத்து தான் பத்துக்க..."


பல மணி நேர கெஞ்சலுக்கும் மிரட்டலுக்கும் பிறகு.... ப்ளீஸ் யார் கிட்டயும் சொல்லிடாத.... என்று ஆரம்பித்தான்

"அவள் குல தெய்வம் இருந்த கோவிலுக்கு போனோம்... கற்கோவில்.... சாமி கும்பிட்டுவிட்டு கோவிலை சுற்றி கொண்டிருந்தோம்.. அவள் கல்யாணத்தை பற்றி பேச்சை ஆரம்பிக்க முயற்சித்தாள்.. அதற்குள் அவள் அப்பா வர வெள்ளிகிழம மாப்பிள வீட்டுக்காரங்க வராங்க நீங்களும் இருங்களேன் என்று என்கிட்ட கேட்டார். அதற்குள் அவள் "அப்பா இப்போ கல்யாணம் வேணாம்ப்பா..." என்று கெஞ்சினாள்.  அவரும் அவள் தலையை வருடி விட்டு " அமெரிக்காவுக்கு படிக்க போறேன்னு சொன்ன.. ஏதாவது சொன்னேனா....?"
"அதுவந்து.. அது வேற..."
"சொன்னேனா.."
"இல்ல.."
"உன்கூட படிச்ச சங்கீதாவுக்கு ரெண்டு புள்ள நேத்து வந்தாலே பாத்தில்ல.."
"நீ இதுக்கு மேல படிச்சா உனக்கு மாப்பிள பாக்குறது கஷ்டம்.. இதுக்கு மேல வயசானாலும் மாபிள்ள பாக்குறது கஷ்டம்.... இதுக்கு மேல உனக்கு காரணம் கண்டுபிடிக்கிறதும் கஷ்டம்... என்ன நீ யாரயாவது லவ் பண்றியா....."
அவள் வேறு என்ன காரணம் சொல்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தாள்.
"சொல்லு என்ன முழிக்கிற.."
அதுவரையில் அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த அவளது அம்மா
"அடிப்பாவி சொல்லுடி...ஏம்பா தம்பி நீயாவது சொல்லேன் அவ லவ் பன்றாளா ..?"
அப்பொழுது தான் நான் சொன்னேன் "I Love You"என்று

"எப்படி டா சம்பந்தமே இல்லையே....."

"முழுசா கேளு மச்சான் .... அந்தாள பாத்தால்லே நடுங்குதுடா எனக்கு.... வந்து கிந்திர போறான்.. " கதவை சாத்திவிட்டு மேலும் தொடர்ந்தான்.

"அவர்கள் பேசுனதை கொஞ்சம் கூட நான் கேட்கவில்லை ஒரு சூப்பர் பிகர் ஒன்னு கோவிலுக்குள்ள போச்சு அது திரும்பி வருமான்னு அப்படியே பார்க்க...பாத்துக்கிட்டே.. கோவில் சுவத்துல நோட்டம் விட்டு கிட்டு இருந்தேன்."

"இங்கு சிறுநீர் கழிக்காதீர்.... வேன்கோப் சிக்கென்..... குட்டிபுலி.... இன்ப நிலா.... எப்பயாவது எதையாவது சம்மந்தமே இல்லம சத்தம் போட்டு படிச்சுருக்கியா....."

 நான் புரியாமல் விழித்தேன்

"நான் படிச்சேன் I Love youன்னு கோவில் சுவத்துல எழுதி இருந்ததை" என்றான் புரிந்தது நம்ம ட்ரைனிங் ஆச்சே சும்மாவா பின்ன.....நண்பன்டா கட்டிகொண்டேன்.  இவன் நடந்ததை யாரிடமும் சொல்ல மாட்டன் சொல்லவே மாட்டான்.

Monday, September 23, 2013

பொக்கிஷம்4- என் காதலின் மரணசாசனம்


தை எங்கோ தவறாக போவதை உணர்ந்த நான்... வேகமாக பக்கங்களை புரட்டினேன்.. அப்பொழுது நான் அமர்ந்திருந்த இடத்தில ஒரு பரபரப்பு ஏற்ப்பட்டது.... பலர் அருவியை நோக்கி ஓடி கொண்டிருந்தனர்.... எங்கிருந்தோ வந்த ஆம்புலன்ஸ் வேகமாக கிராஸ் செய்தது..... என்ன வென்று ஒருவனிடம் விசாரிக்கையில் "யாரோ ஒருத்தே மப்புல மேல இருந்து கீழ குதிச்சுட்டானாம்...." என்றார்.

ஒரு கணம் விக்கியா இருக்குமோ என்று மனம் திடிகிட்டது... அது ஏனோ அறியாதவர்களுக்கு விபரீதம் ஏற்படும் பொழுது பட படபடக்காத மனது.. சிறிது பழக்கப்பட்டவர்களுக்கு ஏதோனும்  நொந்து நூட்லஸ் ஆகி விடுகிறது. ரயில் சிநேகிதம் போல் கடந்த 20-25 நிமிடங்களில் என்னுடன் ஒற்றையாக உரையாடிக்கொண்டிருந்த விக்கியாக அது இருந்து விடக்கூடாது என்று மனது வழியில் வந்த பெயர் தெரியாத கடவுளிடம் வேண்டிக்கொண்டது.

நான் இந்த டைரி எடுத்த இடத்திற்கு வெகு அருகில் கும்பல் கூடி இருந்தது..... கன்னடத்தில் சிலர் பேசிக்கொண்டிருந்தனர்... தமிழும் அதிகம் புழக்கம்....

"போட்டோவுக்கு போஸ் குடுக்குறேன்னு கம்பி தாண்டி வந்து வழுக்கி உளுந்த்ருப்பான் ..."

"suicideபா..."

"யாரவது தெரிஞ்சவங்க இருக்கீங்கல்லா....?"

"செம்ம சரக்கு.... சின்ன புள்ளயா தெரியுது....'

போன்ற  குரல்கள்.... வரையப்படாத எல்லை கோட்டை தாண்டாமல் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தார்கள்..... சிலர் செல் போன்னில் புகை படம் எடுதுகொண்டிருந்தனர்...
"யாரு முதல்ல பாத்தா..?" என்ற கேள்விக்கு பதில் இல்லை.
டேய் நீதானே என்று ஒருவன் நீட்டிய கை ... தட்டிவிடப்படது...
ஆம்புலன்ஸ்க்கு உள்ளிருந்து பல கருவிகளை எடுத்து முதலுதவி அளித்துக்கொண்டிருந்தார்கள்.... சில நிமிடங்களில் அவன்.. அவன் என்கிற மதிப்பை இழந்து "அதை வண்டியில் ஏத்துங்கப்பா...." என்றாகிவிட்டது.

என்னையும் அறியாமல் கண்கள் அஞ்சலி செலுத்தியது.... இது விக்கியாக இருக்ககூடாது  என்று மனம் இன்னும் மன்றாடியது..... டைரியின் கடைசி பக்கத்தை படித்தால் தெரிந்துவிடும்.... 
கடைசி பக்கத்தின் தலைப்பே என்னை உடைத்துவிட்டது.....

"என் காதலின் மரண சாசனம்...!!!

நானும் நீயும் காதலித்துக் கொண்டிருந்த சமயம்.... நீ கேட்டாய் நீ எப்படி தைரியமாய் என் அப்பாவிடம் வந்து பெண் கேட்ப்பாய் நீ தான் சரியான பயந்தாங்குளி ஆயிற்றே என்று... அதற்கு நான் சொன்னேன் உன் கண்களை காணத்தான் எனக்கு பயம்... அந்த கண்களை தினம் கண்டு அஞ்ச.... தைரியமாய் நான் யாருடனும் போரிட தயார் என்று....!!

நான் என் தைரியத்தை நிரூபித்தேன்.. ஆனால் நீ....?!

திடிரென ஒரு நாள் இனி நான் சிக்கன் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தாய்.... ஏன் என்று கேட்டதற்கு சொல்லாமல் வெட்கபாட்டாய் ... உன்னை வற்புறுத்தி கேட்டபொழுது சொன்னாய் பிடித்த ஏதாவது ஒன்றை விட்டால் தான் பிடித்த மற்றொன்று கிடைக்கும்... சிக்கன்ன விட்டு உன்ன கேட்ருக்கேன் சாமி கிட்ட என்று.

என்னை விட அதிகம் கதலிக்கிறாயோ என்று பெருமிதம் கொண்டேன். ஆனால் அப்பொழுது தெரியவில்லை உன் பெற்றோருக்காக என்னை விட்டு விடுவாய் என்று. 

யாருமில்ல சாலையில் நீயும் நானும் நடைபலகையில் கேட்டேன்... நான் உன்ன விட சீக்கிரம் செத்து... கேட்பதற்குள் வாயைமூடி கண்ணீரை பதில் அளித்தாய். விடாமல் கேட்டேன் த்துட்டா..? நீ கோபமாய் என்னை அடிக்க வந்தாய்... உன்னை தடுத்து நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும் என்றேன். அழுது கொண்டே ஓடிவிட்டாய். 

நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன்... இன்று உனக்கு கல்யாணம்... !!!


மனிதர்கள் அழிப்பது காடுகளையும் 

விலங்குகளையும் மட்டும்மல்ல...
மனிதர்களையும் தான்...!!!

படித்து முடித்த பொழுது... ஆம்புலன்ஸ் சென்றிருந்தது.. கூட்டம் கலைந்து அவரவர் வேலையை பார்க்க சென்று இருந்தனர்.... நாய்கள் சிந்தியிருந்த ரத்த திட்டுக்களை மோப்பம் இட்டுக்கொண்டிருந்தன. இன்னும் ஏன் மனது அது விக்கியாக இருக்க கூடாது என்று வேண்டிக்கொண்டது. 

Wednesday, September 18, 2013

பொக்கிஷம் 3

ஜூலை 6, 2009
தஞ்சையில் 1000 ஆண்களுக்கு 
1033 பெண்கள் இருக்கிறார்களாம்..
இருந்தும்  ஏன் அனைவரும்
உன் பின்னால் சுத்துகிறார்கள்...?!

ஆகஸ்ட் 21, 2009
ஒரு பொய்யாவது சொல் பெண்ணே 
உன்  காதல் நான் தான் என்று...
அந்த சொல்லில் உயிர்வாழ்வேன்....

#அத பொய்ன்னு மட்டும் சொல்லிடாதே...:-)

செப்டம்பர் 24, 2009

நான் பிறந்த பொழுதே  எனக்கு விக்னேஷ் என்று பெயர் வைத்து என் காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டாள் என் அன்னை. கல்லூரியே அவள் பின்னல் சுற்றும் பொழுது நான் அவள்  கண்ணில் கூட பட்டிருக்க மாட்டேன்... அவள்  பெயர் வைஷ்ணவி என்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால். நானும் அவளும் அடுத்த அடுத்த ரோல் நம்பர். அவளை  முதலில் பார்த்தது electronics லேப்பில் தான். batch த்ரீயா போய் அங்க உட்கார் என்று mam நீட்டிய திசையில் அவள் தனியாக அமர்ந்திருந்தாள்.

கண்டவுடன் காதல் வந்துவிடவில்லை. இவள்ளோ பேர் ஏன் சுத்துகிறார்கள் என்று தான் தோணியது. அவள் அமர்ந்திருந்த ஸ்டூலுக்கு ஒரு ஸ்டூல் தள்ளி தான் அமர்ந்தேன்.  அடுத்து வந்தான் வைஷாக்....  கண்களில் ஆண்களே பட மாட்டார்கள் போல. நேரே வந்தவன் அவள்  அருகே அமர்ந்தான்.... பேச ஆரம்பித்தவன் அடுத்த இரேண்டரை நேரம் நிறுத்தவே இல்லை. இவன் இருக்கும் பொழுது என்னால் அவளிடம் ஒரு வார்த்தை கூட  பேசி இருக்க முடியாது.  இருந்தும் கடவுள் என் காதல் கட்டங்களை நகர்த்தினார்.  

நான்  படிப்பில் கொஞ்சம் மட்டம்.. ஆனால் என் குரூப்பில் இருக்கும் மீதி இருவரும் என்னை  விட மகா மட்டம்...ஹி...ஹீ... அதனால் லேப்  செய்ய வேண்டியது என் பொறுப்பு.... அவளுக்கு  சொல்லி தர வேண்டியதும் என் பொறுப்பு. முதலில் அவள் தான் கேட்பாள் "எப்படி விக்னேஷ் " என்று...   ஆரம்பத்தில் ஒரு சேவையாக செய்த நான்...  பின்னாளில் ஒரு கடமையாக செய்ய ஆரம்பித்தேன்... அவள் கேட்காவிட்டாலும் நானாக சொல்லி கொடுக்க ஆரம்பித்தேன்.. அப்படியே கற்று கொள்ளவும் ஆரம்பித்தேன் காதலை.

கொஞ்சம் கொஞ்சம்மாக வைஷாக்கை ஓவர்டேக் செய்த நான் இப்பொழுதெல்லாம் அவனை பேச கூட விடுவதில்லை... நான் ஆவலுடன் பேசி கொண்டிருக்கையில் அவன் டவுட் என்கிற  பேரில் disturb செய்வான்.. அது ஏனோ என் காதில் விழுவதில்லை.

உன்னிடம் கற்றுக் கொள்ள 
வேண்டிய காதல் நிறைய இருக்கிறது 
தவறாமல் வா கல்லூரிக்கு...!!!
ஜனவரி 18, 2010

உன் பெயரென்ன மின்சாரமா 
யார் உச்சரித்தாலும் ஷாக் அடிக்கிறதே எனக்கு.

பிபரவரி 14, 20110
ஆடைகளை அழகாக்க பிறந்தவள் நீ...!!!

மார்ச் 28, 2010

சொல்லாத காதல் கடவுளை சேராது என்பார்கள்... என் காதலை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. I love you என்ற மூன்று வார்த்தைகள் என் காதலை முழுதாக பிரதிபலிக்க வில்லை. ஏன் தீந்தமிழில் கூட என் காதலை முழுதாக  தெரிவிக்க முடியவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அன்று மதியமே அணைத்து வகுப்புகளும் முடிந்து விட்டன. அவள் தஞ்சைக்கு பஸ் ஏறினாள். அதை கடையில் இருந்து பார்த்துகொண்டிருந்த நான்... வேகமாக ஓடி ஏறினேன். அவள் முன் சீட்டில் அமர்ந்திருந்தாள்.. என்னை கண்டதும் ஒரு  புன்னகையை உதிர்த்துவிட்டு திரும்பி கொண்டாள். என்னுடன் ஏறிய மற்ற இரண்டு பசங்க... அவள் அருகில் இருந்த சீட்டில் போய் அமர்ந்துகொண்டு... அவளை பார்த்து  "நீங்க வந்தா மட்டும் போதும்..." என்றனர்.

காதல் ஒரு மதம் என்றால் 
அவள் எனக்கு தெய்வம் 

அவளையே அசிங்க படுத்தினால்....?! நான் வேகமாக அவர்களை நோக்கி நடந்தேன்... அதற்குள் ஒருவன் செல் போனை எடுத்து அவளை படம் பிடித்தான்.... செல் போனை பிடுங்கி வெளியில்  வீசி விட்டேன். 

இருவரும் சேர்ந்து அடிக்க தொடங்விட்டனர்.... நானும் அடித்தேன்.. இருந்தும் அடி வாங்கியது தான் அதிகம்...பஸ் நின்றுவிட்டது..... "வாடா #@#@# நாளைக்கு வருவேல செத்த.." என்று மேலும் கத்திக்கொண்டே  இருவரும் இறங்கி போனை எடுக்க ஓடினார்கள். நான் அவளை பார்த்துக்கொண்டே பின்னல் போய் அமர்ந்துகொண்டேன்.... பஸ் கிளம்பியது.

உடம்பு வலித்தது அதை விட வலித்தது மனது... பேருந்து நிலையத்தில் இறங்கி வேகமாக நடந்தேன்... கூபிட்டாள்... நடையை தொடர்ந்தேன்.... ஓடி வந்தாள்... அவள் பேச ஆரம்பிப்பதற்குள் கத்த ஆரம்பித்து விட்டேன்... "  உன்ன யாரு தனியா வர சொன்னது...." அவள் ஏதோ பேச ஆரம்பித்தாள்  'அந்த iswariyaa எங்க போனா... ஒரும நேரம் வெயிட் பன்னா காலேஜ் பஸ்லையே வந்துருக்கலாம்ல...இப்போ பாரு... லூசு.. இதெல்லாம் தேவையா...." கோபத்தை  முடியவில்லை..  தொண்டை அடைத்தது.... கண்களில் கண்ணீர் வழிந்தது..... கண்களை தொடைத்து கொண்டு நகர்ந்துவிட்டேன்.

தமிழால் கூற முடியாத 
என் காதலை....
பறை சாற்றியது கண்ணில் 
பூத்த கண்ணீர்...!!!


அதன் பிறகு டைரியில் கவிதையாக எதுவும் எழுதப்படவில்லை.. பக்கங்களை முழுவது கட்டுரை போல் சமூகத்தை திட்டியும்..... ஏன் காதலை எதிர்கிறார்கள் என்றும்  பல பக்கங்கள் எழுதப்படிருந்தது.....

ஒருத்தியை காதலித்த என்னை 
ஏன் யாரோ ஒருவனை காதலித்த 
ஒருத்தியுடன் வாழ சொல்கிறீர்கள்...? 

கதை எங்கோ தவறாக போவதை உணர்ந்த நான்... வேகமாக பக்கங்களை புரட்டினேன்.. அப்பொழுது நான் அமர்ந்திருந்த இடத்தில ஒரு பரபரப்பு ஏற்ப்பட்டது.... பலர் அருவியை நோக்கி ஓடி கொண்டிருந்தனர்.... எங்கிருந்தோ வந்த ஆம்புலன்ஸ் வேகமாக கிராஸ் செய்தது..... என்ன வென்று ஒருவனிடம் விசாரிக்கையில் "யாரோ ஒருத்தே மப்புல மேல இருந்து கீழ குதிச்சுட்டானாம்...." என்றார்.

தொடரும்.......

Tuesday, September 17, 2013

பொக்கிஷம்-2

அந்த டைரி ஜனவரி ஒன்றில் இருந்து எழுதப்பட்டு இருந்தாலும் ஒவ்வொரு குறிப்பிற்கும் வெவ்வேறு தேதி எழுதப்படிருந்தது... pen கலரும் அவ்வப்போது மாறி இருந்தது.... நான் பக்ககங்களை திருப்பி மேலும் படிக்க ஆரம்பித்தேன்....
மே 5, 2009
இன்று முதல் 23 நாளைக்கு விடுமுறை.. யாரை கேட்டு லீவ் விடுகிறார்கள்.... பலர் பொழுதுபோக்க கல்லூரி வருவார்கள்.. பலர் சைட் அடிக்க... சிலர் படிக்க.. நான் ஒரு லட்சியத்தோடு கல்லூரி வருகிறவன்... short term goal... ஒரு நாள் ஒரு வார்த்தை... long term.. கல்யாணம்.... ஒரு நாளில் ஒரு வார்த்தையாவது அவளிடம் பேசிவிடவேண்டும்...அது நீண்ட நெடிய கடலையாக இருக்கலாம்.. சின்ன ஹாய் பாய் ஆகா கூட இருக்காலாம்... ஆனா பேசி இருக்கணும்....சில பல நாட்களில் ஒரு நாள் ஒரு வார்த்தை திட்டம் செயல் படுத்த முடியாத அரசு திட்டம் போல் படுத்து விடும்.. அப்போது படுத்தி எடுக்கப்படுபவர்கள் என் நண்பர்களே...இன்று அது போன்ற ஒரு துரதிர்ஷ்டமான நாள்...இன்று அவளுடன் பேச முடியவில்லை.
இன்று முடியாவிட்டால் இன்னும் 23 நாட்கள் அவளுடன் பேச முடியாது....எனக்கு ஒன்றும் பேராசை எல்லாம் கிடையாது... "உன்ன விட்டு போகவே மனசு இல்ல விக்கி.. என் கூடவே வந்துடுன்னு" அவ சொல்ல வேணாம்.. ஏன் ஒரு பாய் கூட முழுதாக சொல்ல வேண்டாம்.... "பா" என்று சொன்னாலே போதும் எனக்கு.. அது போதும் என் காதலுக்கு.
நான் காதலிக்க மட்டுமே கல்லூரி வருகிறவன்.... அவளை பார்க்காமல்.... காதலிக்காமல்.... எப்படி நான் உயிர் வாழ போகிறேன் என்றே தெரியவில்லை. இன்று அவளுடன் ஒரு வார்த்தையாவது பேசிவிட வேண்டும்... எப்படியாவது போன் நம்பர் வாங்கிவிட வேண்டும்.... 5.10 க்கு கல்லூரி பேருந்து கிளம்பும்.. மணி தற்போது 5.
இனி பர்தா போட்டு வா
நான் மற்றும் நாங்கள்
படும் பாடு போதும்.
அவள் பேருந்தை சுற்றி என்னை போன்று அவளை பார்க்கும் பலர் ஒருத்தரை ஒருத்தர் முறைத்துக்கொண்டு என்னையும் முறைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். இத்தனை பேருக்கு மத்தியில் நானும் ஒருவனாய் நிற்க ஈகோ தடுத்து... அதுவும் இல்லாமல் பத்தோடு பதின்நோன்நாக அவள் நினைத்து விட்டால். இனி அவளுடன் பேச முடியும் என்று நம்பிக்கை இழந்து... கொஞ்சம் தள்ளி இருந்த stone பெஞ்சில் அமர்ந்தேன்.
உலகிற்கு காதலை பரப்ப வந்த
காதல் பரப்பு செயளாலரா நீ...?!
உன் கண்களை கண்டதும் அனைவருக்கும்
பற்றிக் கொள்கிறதே காதல் தீ...!!!
புற உலகை மறந்து.. என் உலகை...அவளை நினைத்துக்கொண்டே அமர்ந்திருந்தேன்... தீடீரென்று தேன் சுனாமி அடித்தது... என் பெயர் என்ன அவ்வளவு அழகா.. அவள் கூப்பிடும் பொழுது தோன்றியது...
"விக்னேஷ்...விக்னேஷ்...."
நிமிர்ந்து பார்த்தேன்...கண்களை விரித்து... கையை ஆட்டி.. சத்தம் வராமல் உதடுகளை மட்டும் அசைத்து கூபிட்டாள்...தண்ணீரில் அடித்து செல்லும் பூ போல அவளிடம் சென்றேன்...
"உன்கிட்ட டிஜிட்டல் புக் இருக்கா..?"
"எ..ஏன்..."
"ப்ச்ச்ச்...அரியர்ஸ் பா...."
"என்ன வைஷு...ஆல் கிளியர்ன்னு சொன்ன..."
கண்ணை சிமிட்டி... "அப்படி தான் சொல்லுவோம்..."
"ஹோ...ஹோ... எத்தனை..?"
"4... புக் இருக்கா இல்லையா..."
"இருக்கு இருக்கு.... எப்போ வாங்கிகிற...?"
" நாளைக்கு வாங்கிக்கலாமுன்னு நெனச்சேன்..." என்று அவள் இழுக்கும் பொழுதே.
"சரி..." என்றவுடன்
"பஸ்சுக்கு டைம் ஆச்சு.." என்று பறந்து விட்டாள்.
நாளைக்கு ஒரு நாள்.. 4 பரீட்சைக்கு 4 நாள்... 4+1... 5 நாள்... அப்புறம் அடுத்த மூணு பரீட்சை புக்குக்கு 3 நாள்.. மொத்தம் 8 நாள்....ட்ரைன் டிக்கெட் கான்செல்....பறந்தேன்... காதலென்னும் கப்பல் ஏறி.. வானில் பறந்தேன்..!!!!
மே 24, 2009
உன் அப்பன் உன்னை
கல்லூரிக்கு படிக்க அனுப்பவில்லை
என்னை போன்றவர்களை
படிக்கவிடாமல் தடுக்க அனுப்புகிறான்.
(அது தெரிந்து தான் நீயும் படிப்பது இல்லையோ..!!!)
தொடரும்...

பொக்கிஷம் 1

காலேஜ் முடித்து வேலைக்கு வந்துவிட்டு காலேஜை நினைத்து ஏங்குபவரா நீங்கள்..... அது போல் இங்கு ரெண்டு வருடம் கழித்து ilpயை நினைத்து ஏங்குபவன் நான்...!!! ILPஇல் போட்ட ஆட்டம் போல் எங்கும் போட முடியாது.... அங்கு கிடைத்த நண்பர்கள் கூட்டம் போல் மீண்டும் கிடைக்காது....!!! அடுத்த ப்ராஜெக்ட் போய் விட்டால் அப்பொழுது வந்திருக்குற ILP பாட்சை பார்த்து பெருமூச்சு விட்டு கொள்வது தான் நம்மால் முடிகிற ஒரே விசயம்.. அண்ணே அண்ணேன்னு சொல்லியே ஆட்டய விட்டு வெளியேத்திடுவானுங்க....!!!

அப்படி வெளியேற்ற பட்ட அண்ணன்களில் நானும் ஒருவன்...!!!
"இங்க பாருமா பிரதர்னு எல்லாம் கூப்பிடாதே மனசு வலிக்குது" என்று ஆர்யா ஒரு நஸ்ரியாவிடம் ஒரு முறை கூறுவதை நான் பல நஸ்ரியாவிடம் பல முறை கூற வேண்டிவரும் . Experience கூட கூட தொப்ப சைஸ்சும் கூடிகிட்டே போகுது.... இன்னும் வருடங்கள் போனால் தயவு செஞ்சு அண்ணன் ஆவது கூப்புடுங்க அங்கிள்ன்னு கூப்டாதீங்கன்னு கெஞ்சன்னும் போல.....யாரா இருந்தாலும் பேர சொல்லி கூப்பிடனும்ங்கற corporate கலாசாரத்தினை கொண்டுவந்தவர் என்னை போல் பாதிக்கப்பட்டவராக தான் இருக்க வேண்டும் ...!!!

இப்படி தனிமை படுதபட்டதின் காரணமாக சில பல நாட்காளாக என் பழைய பொழுதுபோக்கான புகைப்படம் பிடித்தலை தூசி தட்டி எடுத்தேன்.... பெங்களுரு உள்ளே எடுத்தால் ஆண்களும் பெண்களும் புகை பிடிப்பதை மட்டுமே அதிகம் புகைப்படம் எடுக்க வேண்டிவரும். நானாக தனியாக நந்தி ஹில்ஸ் சென்று இந்த வாரம் கிளிகெல்லாம் என்று ஆசை. பஸ் ஏறி ஒன்றரை மணி நேர தூக்கத்திற்கு பின் வந்தது நந்தி ஹில்ஸ்.தனியாக சென்றால் தான் நம்மால் நிம்மதியாக போட்டோ எடுக்க முடியும் இல்லை என்றால் கூட வந்தவர்களை போட்டோ எடுத்தே பொழுது சாய்ந்துவிடும்.

பஸ் ஸ்டாப்பில் இருந்து கொஞ்ச தூரம் காட்டுக்குள் நடந்தால் ஏதோ ஒரு பெயர் சொல்லி ஒரு அருவி வரும் ஆனால் சீசன் டைம் இல்லாததால யாரும் இருக்க மாட்டார்கள் போக வேண்டாம் என்றார்கள்... நாம யார் சொல்லி எப்போ கேட்ருக்கோம்... போனேன்... பேய் பூதம் என்று ஒருவர் டீ கடையில் பேசி பயமுறுத்த பார்த்தார்..... இருந்தும் ட்ரெக்கிங்-ஐ தொடர்ந்தோன்.... சில கிலோ மீட்டர் மலை ஏறின பிறகு காடு மிக அடர்த்தியாக இருந்தது....சமீபத்தில் அருவி விழும் சத்தம் கேட்டது..... அதை நோக்கி நடந்த பொழுது.... மரத்தின் மேல் ஒரு அழகான பெயர் தெரியாத பறவை.... காமெராவை எடுத்து ஜூம் பண்ணி போகஸ் செய்தேன்.. அதிர்ஷ்டவசமாக பறவை பறக்கவில்லை.... கிளிக் செய்யும் அந்த நொடி.... மரங்கலிருந்து ஏதோ ஒன்றுஅதன் மீது விழுந்து அதை தள்ளிவிட்டது..... தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டேன்.... என்ன விழுந்தது என்று அருகில் சென்று பார்த்தால் ஒரு 2009-ம் வருட டைரி...!!!

இந்த காட்டுக்குள்ள எப்பிடி டைரி என்று மனதிற்குள் கூறிக்கொண்டே அதை எடுத்து புரட்டினேன் சில பக்கங்கள் எழுத பட்டும் சில பக்கங்கள் எழுத படாமலும் இருந்தது... மார்ச் 28க்கு பிறகு ஒன்றும் எழுதவில்லை...!!!

முதல் பக்கம் முக்கிய நாட்கள் என்று வரும் பக்கத்தில் "பொக்கிஷம்" என்று தலைப்பிடப்பட்டு எழுத பட்டிருந்தது....
"இதை யாரும் படிக்க வேண்டாம்... படித்தால் ரத்தம் கக்கி சாவீர்கள்..... இல்லை இல்லை லாரியில் அடிபட்டு சாவீர்கள்" என்று

டைரியை மூடி எரிந்து விட்டேன்..... தொடர வேண்டாம் திரும்பி போய் விடுவோம் என்று தோணியது... இருந்தும் இது ஒரு சாதாரண டைரி... கையெழுத்து சாதாரண மனிதனுடைய கையெழுத்து தான்... என்ன தான் இருக்கும் என்று பாக்க ஆசையாக இருந்தது..... Curiosity kills.... அந்த டைரியை எடுத்துக்கொண்டு வேக வேகமாக ஆள் நடமாட்டம் இருந்த ஏரியாவுக்கு ஓடி வந்தேன்..... காமெராவை பக்கத்தில் வைத்துவிட்டு அந்த டைரி இன் பக்கங்களை புரட்டினேன்....

"இதை யாரும் படிக்க வேண்டாம்... படித்தால் ரத்தம் கக்கி சாவீர்கள்..... இல்லை இல்லை லாரியில் அடிபட்டு சாவீர்கள்..... இத்தனையும் மீறி படிகிறீர்களா.... படியுங்கள் படித்துத் தொலையுங்கள்... யாரும் படிக்காமல் இருபதற்கு ஏன் எழுத வேண்டும்.... படியுங்கள் ஆனால் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.

நான் ஒவ்வொரு முறை ஊருக்கு பாட்டியை பார்க்க போகும் பொழுதும் சின்ன வயதில் நான் செய்த குறும்புகளை சொல்லி சிரிப்பார்கள்..... நானும் ரசிப்பேன்... மகிழ்வேன்.... இப்படியெல்லாமா செய்தோம் என்று எண்ணுவேன்....அதே நேரம் இத்தனை சுவையான நிகழ்சிகளை எப்படி மறந்தேன் என்று வருந்தவும் செய்வேன். அது போல் தற்போது என் வாழ்வில் நடக்கும் அதிசயங்களையும் ஆனந்தமான நிகழ்வுகளையும் காலத்தின் ஓட்டத்தில் பலி கொடுக்க விரும்பவில்லை... என் வாழ்வின் இறுதி மூச்சு வரை என்னுடன் இருக்க வேண்டும் என ஆசை படுகிறேன்.

அம்மாவோ அப்பாவோ இல்லை கோகுலோ இதை படித்துக்கொண்டிருந்தால் படித்தததை பற்றி என்னிடம் பேச வேண்டாம்.... வேறு யாரும் இதை படித்கொண்டிருந்தால் யாரிடமும் இதை பற்றி சொல்ல வேண்டாம்.... இதைப் படிப்பது நீயாக இருந்தால்.....?!
"

இன்னும் பக்கங்கள் தொடரும்.....

Thursday, September 5, 2013

கிராமம்

கலைஞர் எழுதின பொன்னர் ஷங்கர் படிச்சிருகீங்களா... அதுல மணியங்குறிச்சின்னு ஒரு ஊரு வருமே.. அது தான் என் கிராமம்.... பல வருடங்கள் கழித்து அங்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது..... பாழடைந்த மீனாக்க்ஷி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மீண்டும் பாழடைந்திருந்தது..... ஆயிரம் காலத்து கோவில்... சிலர் தங்கள் அழகை மேக் அப் போட்டு குறைத்து கொள்வதுபோல்... இவர்கள் அந்த செங்கற் கோவிலுக்கு சிமெண்ட் பூசி பெயிண்ட் அடித்து அதன் பழமையை கெடுத்து விட்டனர்....!!!

பாண்டியர்களின் எல்லையாக இந்த ஊர் இருந்துள்ளதாக ஒரு வழக்கு.... ஒரு பாண்டியமன்னன் மதுரையில் உள்ளது போலவே அவனது எல்லையிலும் ஒரு கோவில் இருக்க வேண்டுமென விரும்பி.. மதுரை மீனாக்க்ஷி அம்மன் கோவில் போலவே இக்கோவிலையும் எழுப்பி உள்ளான். கோவில் மட்டும்மல்ல ஊரே மாறி போயிருந்தது....ரயில்வே track போல டயர் போன தடங்களை தவிர மீதி இடத்தில புல்  முளைத்திருக்கும் ரோடு இப்பொழுது சர்காரின் ஏதோ ஒரு திட்டத்தால் concrete சாலையாக மாறிவிட்டது.... எல்லாம் முதல்வரின் படம் போட்ட மச்சு வீடுகளாக உருமாறிவிட்டது.... நாட்டாமை வீட்டு பக்கத்தில் இருக்கும் மாட்டு தொழுவதை காணவில்லை.... ஓடி ஆடி விளையாண்ட பொது திண்ணைகள் பாழடைந்து கிடந்தன.... முன்பெல்லாம் போஸ்ட் மாஸ்டர்  டிவி இருக்கும்... சாயும் பொழுதில் வீட்டில் ஊரே இருக்கும் டிவி பார்க்க...இப்போது வீட்டுக்கு வீடு கலைஞர் டிவி .... சோடியம் வேப்பர் லாம்ப்.... 2  நேரத்திற்கு ஒரு வரும் பஸ்....என  எல்லாத்தையும் மாற்றி இருந்த காலம் எனக்கு அங்கு மிகவும் பிடித்த குறிஞ்சி இளைஞர்குழுவையும் விட்டுவைக்கவில்லை.

நான் ஊருக்கு வருவதற்கு மிக பெரிய ஈர்ப்பாக இருந்தது இந்த இளைஞர் குழு தான்....அப்பொழுதெல்லாம் பொங்கல் தினத்தன்று 4 நாட்களும் திருவிழா போல் கொண்டாடுவார்கள்..... சைக்கிளில் செட் கட்டி அப்பொழுது வந்த சலக்கு சலக்கு ஜரிக சேல சலக்கு சலக்கு போன்ற பாடல்களை போட்டுகொண்டு...  ஊர் ஊராக நோட்டீசுகளை கொடுப்பார்கள்... மணப்பாறையில் இருந்த எங்களுக்கு ஒரு நோட்டீஸ் வரும்.... பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓட்டப்பந்தயம்.. யானைக்கு வால் வரையுறது.... மாடுகளுக்கு கொம்புல பெயிண்ட் அடிச்சு ஓடவிடுவாங்க...அப்புறம் மியூசிக் chair அதுவும் ஸ்பெஷலா தாத்தா பாட்டிங்களுக்கு..... இதுல ரொம்ப famous ஆனது கயிறுல பானைய கட்டி அடிக்கவிட்றது ... ஒரு ஆளுக்கு 5 ரூபா.... கண்ணக்கட்டி சுதிவிற்றுவாங்க.... கலந்துகுறவங்க பாதிபேரு சுத்திவிட்டதில் குழம்பிபோயி பான இருக்குற சைடுக்கு பதிலா கும்பல் இருக்குற சைடு வந்து.. கும்பளுக்குள்ள சிலம்பம் விளையாடிகிட்டு இருப்பாங்க.... கலந்துகரதுல பாதி கிழம்... கண்ண கட்டாம விட்டாலே பானைய அடிக்காம நம்ம மண்ட உடைக்க ட்ரை பண்ணுங்க...!!!!

பாட்டுப்போட்டி அதே விட கலகல.... அதுதான் நம்ம ஏரியாவும் கூட... நெறய பேரு திருக்குறள் அதுவும் சொல்லிவச்சாபுல அகர முதல பாடுவானுங்க.. சிலர் பாரதி.. சிலர் சினிமா பாட்டு... எனக்கு  ஒரு கொள்ளு தாத்தா இருக்காரு  எங்க அம்மாவோட தாத்தா.....செரியான ஜொள்ளு தாத்தா போல... ஊர்ல எகித்தாபுள்ள வர பாதி பாட்டிய எங்க அம்மா இது உனக்கு பாட்டி... இது உனக்கு பாட்டின்னு சொல்லிகிட்டே வருவாங்க.... ஊர்ல பாதி வளசிட்டாறு போல...!!!

அந்த தாத்த எனக்கு பாட்டுப்போட்டியில பாட சொல்லி ஒரு பாட்டு சொல்லி தந்தாரு...... எனக்கு அந்த பாட்டு ஒண்ணுமே புரியல....பாட்டிய பத்திடா.... அவ்வையார் பாட்டி எழுதினதுன்னு சொன்னாரு.... அந்த பாட்டுப்போடிக்கு என் அம்மாவும் முன்று பேரில் ஒரு ஜட்ஜ்.... மேடயில ஏறி நான் அந்த பாட்ட பாடினேன்.... "எதுக்கு பொண்டாட்டி.... என்ன சுத்தி வப்பாட்டி... எக்க சக்கம் ஆகி போச்சு கணக்கு......பள்ளி கூடம் போகயில....". அம்மா ஓடிவந்து மைக்க புடிங்கிட்டாங்க. எல்லாரும் என்ன பாத்தோன முதல்ல கேக்குறது "எங்க அந்த பாட்ட பாடு...!!!"

15 வருடத்திற்கு முன் குளத்தங்கரை பிள்ளையார் கோவில் அருகே  வைத்த உறுப்பினர் பெயர் தாங்கிய  தகர போர்டு துறு பிடித்து காற்றில் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது...!!!! ஆம்... இந்த இளைஞர் அணி இப்பொழுது அரசியல் கட்சியின் இளைஞர் அணி போல கிழ போல்டுகளை இளைஞர்களாக கொண்டு இயங்கி கொண்டிருந்தது..!!! ஏன் என்றால் இளைஞர்கள் ஊரில் இல்லையாம்.... எல்லாம் வெளி ஊரு வெளி நாடுன்னு போய்ட்டாங்க... கோவில்ல சாமி தூக்க.. திருவிழாவுல தேர் இழுக்க கூட ஆள் இல்ல.. காசு குடுத்து சிலாம்பாட்டியில் இருந்து தான் குப்புட்றோம் என்ற பொழுது சுருக்கென்றது....!!! ஊரே முதியோர் இல்லம் போல் மாறிவிட்டது...!!!

"ஒரேடியா இங்க வாங்கன்னு சொல்லல திருவிழாவுக்கு வரலாம்ல.... விசேஷம் கல்யாணம்னா நம்மூர்ல நடத்தலாம்ல...." என்றார் தாத்தா.
அவர் எங்கள் வீட்ற்கு வந்தாலும் இரண்டு நாளிற்கு மீள் தங்க மாட்டார்.. ஊருக்கு போகணும்.. ஊருக்கு போகணும் என்று தவிப்பார்..... இது போன்று மண்ணை நேசிப்பவர்கள் அவர்களோடு சரி என்று தான் நெனைக்கிறான். இப்பொழுது இவர்களால் முதியோர் இல்லமாக இருக்கும் கிராமங்கள் இன்னும் சில தலைமுறைகளில் அனாதரவாக ஆகிவிடக்கூடாது....!!!

கிளம்புபோது பொது "போய்ட்டு வரேன் தாத்தா" என்றேன்
" அடுத்த பொங்கலுக்கு வரியா..." எனக்கேட்டார்
"கண்டிப்பா தாத்தா" என்றபொழுது இல்லாமல் சிரித்து வழியனிப்பினார் நான் சொல்லவில்லை அடுத்த வாரம் நான் வெளிநாடு செல்வதை.

பி.கு : குறிஞ்சி இளைஞர் குழுவின் நிரந்தர தலைவருக்கு குழு ஆரம்பித்த பிறகு தான் திருமணம் நடந்தது... அவர் மனைவின் பெயர் குறிஞ்சி...!!!
(எப்படி எல்லாம் ரூட் விட்டுருக்காங்க .பாருங்க..!!!!)

Saturday, August 17, 2013

அப்பாவியாகிய நானும்..... காந்தியின் கனவும்...!!!!

என்னைக்கு ஒருநாள் பெண்ணொருத்தி தனியா நள்ளிரவுல பாதுகாப்பா நடந்து போறாளோ அன்னிக்கு தான் இந்தியாவின் உண்மையான சுந்தந்திரம்னு காந்தி 1947 ஆகஸ்ட் 15 சொல்லி இருப்பார் போல.... 67 வது சுதந்திர தினம் வந்தும் அது நடக்காதுன்னு நெனைக்கிறேன்...!!!

உடனே நா ஏதோ உணர்ச்சி பேருரை ஆற்ற போறேன்னு நினைக்காதிங்க.... ஒரு அப்பவி அபலை ஆகிய எனக்கு நடந்த கொடுமையை கேளுங்க..!!!

அன்னைக்கு சோ வென்று பெய்ந்துகொண்டிருந்தது மழை... பஸ் ஏற வந்த நான் பாதி வழியிலேயே மாட்டிக்கொண்டு முழுவதுமாய் நனைந்திருந்தேன். என்னையே வெரிதுப்பார்துக்கொண்டு ஆட்டுத்தாடி வைத்த மொட்டை தலை ஒருவன் அருகில் நின்று கொண்டிருந்தான். தள்ளி தள்ளி போக அருகில் அருகில் வந்தான். என்னை சுற்றி வேறு யாரும் இல்லை... பயம் கவ்விக் கொண்டது... வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஏதோ ஒரு பஸ் வந்தது.... கை நீட்டி தவ்விக் கொண்டேன்.

பஸ்சில் என்னை தவிற டிரைவர், கண்டக்டர் இன்னும் ஒருவன்... யாரென்று பார்த்தால் அந்த மொட்ட தலை.  பஸ்சில் நகர்ந்து போய் ஒரு மூலையில் அமர்ந்தேன்..... போட்டிருந்த டிரஸ் வேறு உடம்போடு ஒட்டிப்போய் உள்ளே போட்டிருந்ததெல்லாம் வெளியே தெரிய.... பஸ்சின் வெளிச்சம் மேலும் என்னை தர்மசங்கடப்படுத்தியது....!!!

எல்லா சீட்டும் காலியாய் இருக்க...அவன் நேரே எனக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்து என்னை குறு குறு வென்று பார்த்தான். எரிச்சல் அதிகமாகியது.... ஏன் இப்படி desperate ஆகுரானுங்கன்னே தெரிலே.. பொன்னா இல்ல.... வேணும்னா கல்யாணாம் பண்ணி தொலைக்க வேண்டித்தானே.... அதுவரைக்கும் பொறுக்க முடியல்லனா ரெட் லைட் ஏரியாவுக்கு போ.... என்னாவது பன்னிதொல...ஏன் வந்து என்ன பிச்சு திங்கிற மாறி பாக்குற....!!!

கண்டக்டரும் கண்டும் காணாதது போல் இருந்துவிட்டார்...டிக்கெட் எடுத்ததும்.... "இப்போல்லாம் டிக்கெட் வில ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சுல.." என்று பேச்சை ஆரம்பித்தான்.
ஆம்மாம் என்பதுபோல் தலையாட்டினேன்....மனதின் மறுப்பையும் மீறி. "im jayaprakash ". நான் பதில் சொல்ல வில்லை.  இன்னும் அருகில் நகர்ந்து அமர்ந்து என் மார்பில் தொங்கிய ID card-ஐ பார்த்து... "நானும் உன் கம்பனி தான்,,, technical lead " என்று காலில் கை வைத்தான்.... அவ்வளவுதான்... "கைய எடுடா @#$%!!" எங்கிருந்து இவ்வளவு தைரியம் வருகிறது...என்ன துணிச்சல் இவ்வளவு கீழ்த்தரமான காரியங்களை செய்வதார்க்கு....கண்ணா பின்னா வென்று திட்டினேன்...எழுந்து நின்று ஒன்றும் தெரியாததுபோல் முழித்தான்.. பஸ் கரெக்ட் ஆகா அடுத்த ஸ்டாப்பில் நின்றது.. இறங்கி ஓடிவிட்டான். அந்த ஸ்டாப்பில் நெறைய பெண்கள் ஏறினார்கள்..... பொதுவாக பெண்கள் அதிகம் உள்ள இடத்தில தானாக ஒரு பாதுகாப்பு வளையம் உருவாகிவிடும்.. பாதுகாப்பாக உணர்ந்தேன்.... !!!

பஸ் முக்கால் வாசி நிரம்பி விட என் பக்கத்து சீட் காலியாக இருந்தது...அடுத்த ஸ்டாப்பில் இரண்டு ஆண்டி ஏறினார்கள்.... நேரே என்னருகே வந்து..."தம்பி இது லேடீஸ் சீட்....." என்று கூறி இடத்த காலி பண்ணு என்பதை போல் பார்த்தார்கள்...!!!

இப்போ சொல்லுங்க காந்தி கனவு...?!!!!!!

Thursday, July 11, 2013

லெப்டு ரைட்டு..!!!

டெய் பக்குராடா..,
நன்பனால் நம்பமுடியவில்லை..,
அவளா...போ மச்சன் செம்மயா இருக்கா..,
இப்ப கிராஸ் பன்னும்போது பாப்பா பாரு...கிராஸ் பன்னாள்..,பார்த்தாள்..,அவனும் பார்த்தான்..,
தஞ்சாவூர் பெரிய கோவில்..,
சுரக்கோட்டை பிரதர்ஸ் மிருதங்கம் வாசித்துகொண்டிருந்தார்கள்..,
அனைவரும் கேட்டுக்கொன்டிருந்தார்கள் நாங்கள் ( நானும் அவளும்) பர்ர்த்துக்கொன்டிருந்தோம்..,பரதநாட்டியம் ட்ரெஸ் போட்டிருந்தாள்..,அடுத்த பெர்பார்மென்ஸ் போல..,அவள் ஒவ்வொரு தடவை கிராஸ் தலை லெப்டு டூ ரைட்டு தானா ரோல் அகியது..,அப்டியே ஸகேன் பன்னி லெப்டு திரும்பினா என் நன்பன் முரைத்துக்கொண்டிருந்தான்..,மறுபடியும் கிராஸ் செய்தாள்...,மறுபடியும் ரோலிங்..,இப்போ ரைட்டு சைடு ஒரு சொட்டதல மொரச்சிங்..,சிரித்தேன்..,முரைத்தார்..,காதலுக்கு எத்தனை எதிர்ப்புகள்..,லெப்டு ரைட்டு..,லெப்டு ரைட்டு..,தலையில் மார்ச் பாஸ்ட்டு செய்துகொண்டிருந்தேன்.,அவள் இப்பொழுது என்னை பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள்..
அடுத்தது பாரதநாட்டியம் என்று அறிவித்தார்கள்..,அவள் என்னை நோக்கி வந்தாள்..,என்னக்கு உதற ஆரம்பித்துவிட்டது..அவள் அருகில் வர வர (பயத்த வெலிக்கட்டாதடா கௌதம்மு..) சிரித்துக்கொண்டே அவளிடம் பேச போனென்..,அவள் என்னை கிராஸ் பன்னி "அப்பா ஆசிர்வாதம் பன்னுங்க" என்ட்ராள்..,அவர் இன்னும் என்னையே பார்த்து முரைத்துக்கொண்டிருந்தார்..,

Saturday, June 15, 2013

பொன்வண்டு

"உங்கள் தோட்டத்தில் விளைவது சூரிய காந்தி... நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் சூரிய காந்தி...!!!"

தட்டென்று தலையில் ஒரு அடி....

" டெபாசிட் கிடைக்குமான்னு தெரில... இதுல இவன் வேற....."

"மைக்ல பேசிக்கலாம்னு சொல்லி தானே கூட்டி வந்த...."

"டேய் மைக்க ஆப் பண்ணுடா...."

"போ எனக்கு மைக்கும் வேணாம் ஒன்னும் வேணாம்.. என்ன வீட்ல கொண்டு போய் விடு....."

அழ ஆரம்பித்தான்..... மைக் வழியாக ஒழி பெருக்கப்பட்டு "ஊ... ஊ....ம்ம்ம்..."
என்று சுற்றி இருந்த மலைகளில் எதிரொலித்தது.

"மல மேல போரம்டா.... ஆனயெல்லாம் இருக்கும்..... அருவில குளிக்கலாம்.... பலா பழம் சாப்பிடலாம்..... மைக்ல நீயும் பேசலாம்...." அசை கூறி கூப்பிட்ட சித்தப்பாவை முறைத்து கொண்டு வந்தான். இத்தனை ஆசை கூறியும் தன்னைவிட 4 வயது மூத்த அண்ணன் ஏன் வரவில்லை என்று புரிந்துகொண்டான்.

அவர் அவனை கண்டுகொள்ளவில்லை..... மக்களுக்கு எதிர்காலத்தில் செய்ய போகும் திட்டங்களை அடுக்கி கொண்டிருந்தார்.......!!!

ஜன்னலில் சாய்ந்து அழுது முடித்திருந்த அவனது கண்களின் மிச்ச கண்ணீர் காற்றில் அடித்து செல்லப்பட்டது...... அதை இடுகட்ட ஒரு மழைத்துளி அவனது கன்னத்தில் வந்து அமர்ந்தது..!!!

மலையையும் மழையையும் ரசிக்கும் வயது அவனுக்கு இல்லை...
"ரேவதி கூடவாது   பல்லாங்குழி விளையாண்டுகிட்டு இருந்துருகல்லம்..."
எண்ணி கொண்டே பெரு மூச்சு விட்டான்.

அந்த மகிந்திரா வேன்னில் அவன் அவனது சித்தப்பா உட்பட இன்னும் இரண்டு பேர்... ஒரு கட்டு போஸ்டர்.... ஓட்டுவதற்கு பசை..... நைட்டில் எரியவிட.. சூரிய காந்தி வடிவில் அமைக்க பட்ட சீரியல் லைட், முன்னாள் கட்ட பட்ட இரண்டு குழாய் ஸ்பீக்கர்..!!.

மலை ரோட்டில் வேன் விரைந்து கொண்டிருந்தது..!!!

அவனும் எத்தனை நேரம் தான் மரங்களையும்... பறவைகளையும்.....மறைந்து மறைந்து மீண்டும் வரும் மனிதர்களையும் பார்த்துக்கொண்டிருப்பான்.

சிறிது நேரத்தில் ஒரு கிராமத்தில் வண்டி நின்றது... அச்சடித்த காகிதங்களை கையில் எடுத்துகொண்டு..வீடு வீடாக கொடுக்க அனைவரும் கிளம்பினர்.... அவன் ஜன்னலை பிடித்துக்கொண்டு கோபமாக அமர்திருந்தான்....!!!

"இங்கயே உட்காந்திரு.. எங்கயும் போக கூடாது..... வண்டில நெறையா சாமான் இருக்கு...." பதில் எதிர் பார்க்காமால் விரைந்தார்.

கா...ன்னு.....குடி..... கண்ணுகுடி.... எழுத்துக்கூட்டி எதிரில் எழுதிருந்த எழுத்துகளை படித்தான்.

சுற்றும் முற்றும் பார்த்த அவனது கண்களில் அந்த மைக் தென்பட்டது.... சந்தோசம் தொற்றி கொண்டது... அதை எடுக்க தாவி குதித்தான்....பச்சக் என்று சத்தம்.

போஸ்டர் ஓட்ட கொண்டுவந்திருந்த பசை டப்பாவில் காலை விட்டுவிட்டான். வீட்டிலேயே கிண்டிய பசை...
" தொடாதே.... ஒட்டுச்சுனா..தோல உரிச்சு தான் எடுக்கணும்..."
நேற்று அப்பாயி சொன்னது பொறி தட்டியது.

காலை வெளியே எடுக்கவே சிரமப்பட வேண்டியதாயிற்று... எடுத்து காலை பச்சேக்கென தரையில் வைக்க தரையில் ஒட்டிக்கொண்டது....சிரமப்பட்டு எடுத்து..நொண்டி அடித்துக்கொண்டே வெளியே வந்தான்..... வெளியில் சில சிறுவர்கள் நாடு பிரித்து விளையாடி கொண்டிருக்க..... அவர்கள் பக்கத்திலிருந்த குழாயை நோக்கி பயணத்தை ஆரம்பித்தான்....நொண்டி நொண்டி இவன் வருவதை பார்த்த அந்த சிறுவர்கள் இவனுடன் விளையாட துவங்கினர்.... சுற்றி வளைத்து.. நக்கலடித்து.... ஒருவன் இவனை தள்ளியே விட்டுவிட்டான்.

ஒற்றை காலை வைத்து அவனால் எழ முடியாவில்லை... இதற்கு மேல் பொறுக்காவும் முடியவில்லை ..இருகால்களையும்..தரையில் ஊனி எழுந்து அவர்களை விரட்டி விட்டு... குழாய் அருகில் சென்றான்.
 குழாயில் தண்ணீர் வரவில்லை... அந்த பசங்கள் இவனை சுற்றி கொள்ள.....கண்கள் பொத்துக்கொண்டது.

"டேய் இந்தா.... ஓடுங்கடா...ஒருத்தன் மாட்டிடகூடாதே " ஒரு நடுத்தர வயதுடைய பெண் வந்தாள்.

"யே தம்பி என்ன வெளியூரா..."

"ஆமாக்கா ....மணப்பறை "

"என்ன கால் பூர பச..."

"வேன்ல இருந்துச்சு தெரியாம கால வுட்டுட்டேன்..."

"அய்யோ... வேன்லன்னா கணேஷு கூடவா வந்த..."

"ஆமா எ சித்தப்பா..."

"அட முருகே பையான நீ...!"

"முருகேசன்...."

சிரித்தாள்.... "நாங்க முருகேன்னு கூப்புடுவோம்...."

அவன் காலை தூக்கி கொண்டே பேசிகொண்டிருந்தான்
"வா வா...தண்ணி தாரேன்...." அருகில் இருந்த வீடிற்கு கூட்டி சென்றாள்

"நில்லு தண்ணி கொண்டாறேன்.."

உள்ளே போனாள்..."ஏ முத்து.. அந்த பெரிய சொம்பு எங்கடி....."

"கொள்ளேல இருக்குமா..." ஒரு சிறு பெண்ணின் குரல்.

அந்த சிறுமி தண்ணி கொண்டுவந்தாள்.. ரெட்டை சடை...பாவாடை சட்டை..... இவன் காலை பார்தததும் சிரித்தாள்.. சிரிப்பை அடக்கி கொண்டு

"இந்தாங்க....." என்றாள்

அவனது எட்டு வருட வாழ்வில் முதன் முறையாக ங்க போட்டு அளித்த ஒருத்தி.

அதை வாங்கி ஊற்றினான்.. அவள் "ஐயோ..!" என்றாள்

"என்ன..."

"அப்படியே ஊத்தினா பச எப்படி போகும் கையாள தேச்சு கழுவுங்க..."

ஒரு கையில் சொம்பை வைத்து கொண்டுஒரு கையில் தேய்க்க அவன் சிரமப்பட..
"கொடுங்க..."
அவள் வாங்கி ஊற்றினாள்.... நன்றாக கழுவ நான்கு சோம்பு தேவை பட்டது.
அதற்குள்  அவள் அன்னை காப்பி போட்டு வந்து
"இந்தா காப்பி தண்ணி..." என்றாள்

"இல்ல வேணா....."

"எல்லாம் சொந்தகாரங்கதான் குடி.." அவனுக்கு புரியவில்லை
இருந்தும் "சித்தப்பா திட்டுவாரு...."

"நல்ல சித்தப்பா... அவரே மத்தியானம் இங்க தான் சாப்பிட வருவாரு..குடி...."

"ஊர்ல இருந்து லீவுக்கு வந்தியா...."

"ஆமா ஆனுவல் லீவு.."

"தாத்தா நல்லாருக்க...."

"அது எங்காயாவது ஊர் சுத்தி கிட்டே இருக்கு.. வீட்ல இருக்கறதே இல்ல...."

"உனக்கு என்ன பிடிக்கும்..கோழி அடிக்கவா...."

"இல்ல வேணா வேணா.... ஒன்னும் வேணாம்...."

"பச்ச்.... சேரி நா கோழி அடிச்சு கொழம்பு வக்கிறேன்.. மத்தியானம் சாப்டுட்டு போ..." என்றவள் தொடர்ந்து

"எ முத்து தம்பி கூட விளையாண்டுட்டு இரு நா இந்த செல்லா வீடு வரைக்கும் போயிட்டு வாரேன்..." என்று கிளம்பினாள்.

முத்து கதவை பிடித்துக்கொண்டே அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள் ..
அவள் அம்மா கேட்காத கேள்வி ஒன்றை கேட்டாள்
"உங்க பேரு என்ன....?"
"சுந்தர்...."
"உங்க பேரு...."
"முத்து ...."
"முழு பேரு...."
"ஹ்ம்ம் வேணாம் நல்லாருக்காது.. முத்துனே வச்சுக்கோங்க..."
"பரவால சொல்லு....."
உள்ளே ஓடி விட்டாள்.. கேக்காமயே இருந்துருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு.

சிறுது நேரத்தில் வெளியே வந்தாள் ..... கையில் நுங்கினால் செய்யப்பட்ட dumbells... ஒரு கவட்டை குச்சி....அதன் ஒரு நுனியில் மற்றொரு நுங்கு...
"என்ன இது...."வியப்புடன் கேட்டான்
"ஹா.. இது நுங்கு வண்டி..... இது ஸ்டியரிங்....."
"என்ன விளையாடுவ...."
"வண்டி ஓட்டி... இதோ அந்த மலை உச்சில ஒரு பெருமாள் இருக்காரு...... அந்த பெருமாள் கோயில் வரைக்கும் வண்டிலேயே போலாம்... வரியா...?"
"ஹ்ம்ம் போலாமே..."
 மேடு பள்ளங்களில் ஏறி... கற்களில் லேசாய் தடம் பொரண்டு.... சற்று தூரத்தில் இருந்த மரம் வரைக்கும் ஓட்டி சென்றாள்.. அவள் தோள்களில் கை வைத்துக்கொண்டு அவனும் பின்னே ஓடினான்.

"என்ன நினுட்ட...."
"doubles அடுச்சென்லா அதா ரெஸ்ட் எடுக்குறேன்... ஜூஸ் குடிகிரியா..."
"ஜூஸ்சா என்ன ஜூஸ் வச்சுருக்க....."
"நில்லுப்பா எடுக்குறேன்"
ஹோடேலில் உப்பு வைத்திருக்கும் குட்டி கோக் பாட்டில் ஒன்றை எடுத்தாள்...
"எ ஒன்னு தாப்பா இருக்கு.... பாதி பாதி குடிக்காலாம்...."
காலியான பாட்டிலை அவள் வாயில் கொஞ்சம் ஊற்றி அவனிடம் தந்தாள்....
அவனும் கொஞ்சம் ஊற்றி கொண்டான்....
"எ எனக்கு இன்னும் tired- ஆ இருக்குப்பா நீ ஓட்றியா...."
அவனுக்கு சந்தோசம் தாளவில்லை....ஆசையாய் வாங்கி ஓட்டினான்.
"டுர்ர்ர்ர்ர்...."
ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும்.... அவள் சொல்லிகொடுக்க சொல்லிகொடுக்க நன்றாக பழகிவிட்டன்...!!!

"ஹே நிப்பாட்டு நிப்பாட்டு....."
"எ முத்து என்னாச்சு...."
"இதா இந்த வேப்ப மரம் தான் பெருமாள் கோவில்.. வண்டிய பஸ் ஸ்டான்ட் குள்ள விடு...."
"கோவில் மல உச்சிலல இருக்கு....."
"பச்ச் நம்மக்கு இதுதான்ப்பா கோவில்...வண்டி உள்ள விடு....."
 வண்டியை மரத்தில் சாய்த்து நிப்பாட்டினான்... இருவரும் அந்த மரத்தடியில் அமர்ந்தனர்.
"முத்து நீ அந்த மல உச்சிக்கு போயிருக்கியா..."
"ஹ்ம்ம் நெறையா தடவ....."
"மேல என்ன யான இருக்குமா....?"
"யான சிங்கம் புலி எல்லாம் இருக்கும்... மயில் இருக்கு...மான் இருக்கு..முயல் இருக்கு...."
"நீ எல்லாம் பாத்துருக்கியா....."
"ஹ்ம்ம் பாத்துருக்கேன்...."
"எனக்கும் அதெல்லாம் பாக்கணும்னு அசையா இருக்கு...வண்டி எடுத்துட்டு  போலாமா "
"அட நில்லுப்பா இன்னும் டிக்கெட்டே சேரல....."
"பச்ச்..." அவனது முகம் வாடி விட்டது.
"தனியால்லாம் பாக்க கூடாது. எங்க அப்பா வரட்டும் போலாம்...."
"இப்போ போலாம்...ப்ளீஸ் ப்பா... ப்ளீஸ் ப்பா "
அவள் சற்று யோசித்தாள்
"ஆங் ஒன்னு இருக்கு சுந்தர் வா காட்டுறேன்....."
"ஐ என்ன என்ன சொல்லு..."
"சொல்லமாட்டேன்... வா காட்டுறேன்....."
"என்னப்பா சொல்லேன்...."
"ஹ்ம்ம்ஹ்ம்ம் வா...வண்டிய எடு ரைட்...ரைட்.."
தடக் தடக் என்று மெதுவாக கிளம்பி வேகத்தை கிளப்பியது நுங்கு எக்ஸ்பிரஸ்.
"முத்து முத்து என்னன்னு சொல்லேன்பா..."
"ஷ்ஷ்ஷ் வா காமிக்கறேன்..."
வண்டியை உருட்டி கொண்டு இருவரும் ஓடிக்கொண்டிருந்தனர்....
" நீயே கண்டுபுடி பாப்போம்...."
"மானா...."
"ஹ்ம்ம்ஹ்ம்ம்...." ஓடிக்கொண்டே தலையை ஆடினாள்... ரெட்டை சடையும் சேர்ந்து ஆடியது
"முயலா....."
"ப்ச்ச் இல்லப்பா...."
"புலியா......"
சிரித்தாள்...
"லூசாப்பா நீ.... வீட்டுக்கு தானே போயிட்டு இருக்கோம்.. அங்க போய் புலி இருக்குமா லூசு...."
"நீயே சொல்லேன்...."
 வீடு வந்துவிட்டது.... வண்டியை அப்படியே போட்டுவிட்டு அவன் கைகளை ஒரு கையில் பற்றி உள்ளே ஓடினாள்.....

சிறு திண்ணை.. திண்ணையை தாண்டி நீளமாய் ஒரு அறை.. ஒரு மூலையில் அடுப்பு.... அறையில் நாலு அடி நடந்தால் கொல்லை.....

"ஹே என்ன வீட்டுக்குள்ள போற.... பொய் தானே சொன்ன ஒன்னும் இல்லேல...."

அவள்  சொல்லமால்..... ஒரு மூலையில் இருந்த அவளது பள்ளி பையை திறந்து....உள்ளிருந்து ரெட் கலர் geometry பாக்ஸ்சை எடுத்தாள்.....

சுந்தர் பலத்த ஏமாற்றத்தில் இருந்தான்... அவள் பரவசமாய் இருந்தாள்....
வா வா என்று சைகை செய்தாள்.. அவனும் போய் அவள் அருகில் அமர்ந்தான்...

"என்ன உன் geometry பாக்ஸ்ச காமிக்கதான் கூப்டியா..."

இல்லை என்று தலை ஆட்டி... திறந்து காமித்தாள்...

 இது  போல் அவன் பார்த்ததேதில்லை...உள்ளே சில இலைகள் நடுவே பெரிதாய், சிகப்பு கலரில் தலை மட்டும் மயில் தொகை போல் தகதகவென மின்னும் ஒரு வண்டு...!!!

கொஞ்சம் பெரிய வண்டை பார்த்தாலே பயபடும் இவனுக்கு ஏனோ இதை பார்த்து பயமில்லை.... பசு போல் சாந்தமாக பாக்ஸ்சுக்குள் நடை பயின்று கொண்டிருந்தது....அதன் தலையில் ஒரு  கயிறு கட்ட பட்டிருந்தது....!!!

"என்னவண்ட போய் பாக்ஸ் குள்ள வச்சுருக்க..... என்ன இது..."

"இது பொன்வண்டு...... கெடக்கவே கெடைக்காது..... கெடக்கிரதுக்கு ரொம்ப கொடுத்து வசுருக்கணும்....இத பாக்ஸ்குள்ள வச்சு வளத்தா முட்ட போடும்.... அப்புறம் குட்டி வரும்.... அந்த முட்டை வச்சு நம்ம எதனாச்சும் வேண்டுனா அது நடக்கும் தெரியுமா....."

தலை ஆட்டி ஆட்டி இலைகளை சாப்பிட்டு கொண்டிருந்தது அது..... அவள் அதன் மயில் தலையை தடவி கொடுத்தாள்....
"பாத்து முத்து கடிச்சுட போகுது...."
" சுந்தர்.. நீ வேணா தொட்டு பாரேன்...."

கைகள் நடுங்கி கொண்டே ஒத்தை விரலால்தொட போனான்....

"வாணி... அந்த பய சுந்தர் இருக்கானா...."

டக்கென்று கைகளை சுருக்கி கொண்டான்...
"அய்யோ சித்தப்பா வந்துட்டாரு..."
அவர் வாணியுடன் ஏதோ பேசி கொண்டிருக்க....
இவர்கள் பிரிவுக்கு ஆயத்தமானார்கள் "சேரி நா வரேன் முத்து.. அடுத்த லீவுக்கு பாக்காலாம்...."
அவள் முகமும் லேசாய் வடித்தான் போய்விட்டது....
"டேய் வரியா இல்லையா...."
இதற்குமேல் இருக்க முடியாதவனாய் "வரேன்.." என்று சொல்லிவிட்டு வெளியே ஓடினான்....

"வரேன் சித்தப்பா....."
"உன்ன என்ன சொன்னேன்.. வேன்ல தானே இருக்க சொன்னேன்.... எங்கெல்லாம் தேட்றது... இங்க தேர்தல் வேல பக்க வந்தோமா இல்ல உன்ன பாக்க வந்தோமா...வந்து தொலை..." கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார்.

"கணேசு....புள்ளைக்கு தான் கோழி குழம்பு பண்ணிருக்கேன்.. சாப்டுட்டு போட்டும் விடேன்..." என்றாள் முத்துவின் தாய்.

"ஆமா சித்தப்பா நா சாப்ட்டுட்டு இங்க இருக்கேன் .. போமோது கூட்டி போயேன்..." அவன் சாப்பாடிர்காக சொல்லவில்லை...

"இப்போ முடியாது வாணி...." என்றவர் சுந்தரை பார்த்து "ஆயிரத்தெட்டு வேல கெடக்கு..இதுல உங்கள வேற வந்து பிக்கு அப்பு பண்ணணுமாக்கும்... இப்பயே அப்பன மாறி சோறு சோறுன்னுட்டு.... " இழுதுக்குகொண்டு சென்றார்.

சுந்தர் வீட்டை திரும்பி பார்த்தான்... முத்து கதவில்சாய்ந்து கொண்டு இவனை பார்த்துக்கொண்டிருந்தாள்... இவன் பார்த்ததும் உள்ளே ஓடிவிட்டாள்.... இவனுக்கு கண் கலங்கியது.

சித்தப்பாவின் கையை உதறிவிட்டு.... தலையை தொங்க போட்டுக்கொண்டு நடந்தான். கடவுள் வாழ்கையில் பிரிவை ஏற்று கொள்ளவேண்டும் என்ற பாடத்தை அன்று அவனுக்கு வழங்கினார்.

கொலுசு சத்தம் கேட்டது... அவள்தான்.... இந்தா என்று கையில் திணித்தாள் சின்ன பேப்பர் டப்பா ...அதனுள் பொன்வண்டு....

"என்ன முத்து... கேடக்கவே கேடக்காதுன்ன.. எங்கிட்ட கொடுக்குற....."

"நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி சுந்தர் அதான்.... உனக்கு தான் இது வச்சுக்கோ...."
 எதிர் பார்க்காமல் ஓடி போய் மீண்டும் கதவை பற்றிகொண்டாள்.

"முட்ட போட போது.. பாத்து...." கத்தினாள்.

அவள் மறையும் வரை அவளுக்கு டாட்டா காட்டி கொண்டே வந்தான்.... மறந்த பிறகும் சிறிது நேரம் கையை அசைத்து கொண்டிருந்தான்.

டப்பா வைத்திருந்த கையில் சொரசொர வென்று உணர்ந்தான்..... கால்களை அவன் விரல்களில் வைத்துக்கொண்டு பொன்வண்டு வெளியே எட்டி பார்த்துகொண்டிருந்தது.....!!!

"ஆ...." கத்திக்கொண்டே எழுந்து நின்றான்....
"டேய் என்ன டா.....ஏன் கத்துனா.."  அவன் கையில் இருந்த டப்பாவை பிடுங்கினார்...
"இல்ல சித்தப்பா வண்டு...அதை காமித்தான்...."
முகத்தை சுளித்தார்....... அது அவர் கையிலும் கால் பதிக்க
"ஆ...!"
வீசிவிட்டார்...!!

சுந்தர் பதறிவிட்டான்.... டப்பா நசுங்கிவிட்டது.... நல்லவேளை பொன்வண்டிற்கு  ஒன்றும் ஆகவில்லை..... கயிற்றின் ஒரு நுனியை பிடித்துக்கொண்டு தள்ளி அமர்ந்து அதை பார்த்துக்கொண்டிருந்தான்.... அது அமைதியாய் எதை நோக்கியோ நகர்ந்து கொண்டிருந்தது...!!!

ரெண்டு தெரு தள்ளி வண்டியை நிப்பாட்டினார்.... அங்கு இருந்த பெட்டி கடை..ஒன்றில்  கோழி பிரியாணி ரெடி என்று chalkபீஸ்சால் எழுதப்படிருந்தது.... அங்கு ஒரு பொட்டலத்தை வாங்கி அவனுக்கு தந்தார்...
"இந்தா  இத சாப்ட்டுட்டு இங்கயே இரு.. வந்தறேன்...."
"இதே ஊர்ல தானே இருக்க.. அப்புறம் ஏன் என்ன .கூடி வந்த... நா அங்கேயே இருந்துருப்பென்ல..."
"ந்தா... ஒவ்வோருதடவையும் ஒன்ன தேடி வந்துகிட்டு இருக்க முடியாது... ஒழுங்கா வேன்லயே உட்காதிருக்கணும் புரியுதா..."
அதட்டிவிட்டு சென்றுவிட்டார்.

பிரியாணி சாப்பிட்ட 20 நிமிடங்களிலேயே வேலையே காமிக்க தொடங்கியது..!! வேனுக்குள் அதற்குமேல் அவனால் உட்கார முடியவில்லை.... பொன்வண்டை கயிற்றின் நுனியில் பிடித்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கவிட்டவாறே இறங்கி ஓட துவங்கினான்.

பொன்வண்டு titanic heroine போல் கைகளையும் கால்களையும் நீட்டிக்கொண்டு சுழன்று கொண்டிருந்தது.வசதியாக ஒரு இடம் தென்ப்பட்டது.... ஆனால் இந்த வண்டு... இதை என்ன செய்வது... இதை ஒருகையில் வைத்துக்கொண்டு... எப்படி..?! சத்தியாமாய் அவனால் இதற்க்கு மேல் முடியவில்லை.... பிரியாணி வாங்கி கொடுத்த சித்தப்பாவை திட்டிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தான்....

அப்போது அருகே ஒரு மளிகை கடை வந்தது.... அதில் போய் "அண்ணே...எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண்றீங்களா...."
"என்ன தம்பி சொல்லு..."
"இல்ல எனக்கு ஒரு  முக்கியமான வேல.... கண்டிப்பா போகணும்.... நா வர வரைக்கும் இந்த பொன்வண்டை கொஞ்சம் பாத்துகுரீங்களா...."
அவர் அதை பார்த்தார்.... ஏதும் சொல்லவில்லை "சேரி கொடு..."
மறுநொடி ஓட துவங்கினான்.... மீண்டும் ஓடிவந்து.."அண்ணே ஒரு முக்கியமான விஷயம்... வண்டு முட்ட போட போகுது.... போட்டுச்சுனா எடுத்து வைங்க...." பரம ரகசியத்தை எளிதில் உடைத்துவிட்டு ஓடினான்.
இதற்க்கு முடியாது தெரு ஓரத்திலேயே ஆரம்பித்துவிட்டன... கடைகாரர் தூரத்தில் இருந்து பார்த்து சிரிப்பது தெரிந்தது, அவன் கண்டுகொள்ளவில்லை.

மீண்டும் பழைய சுந்தராய் கடைக்கு வந்தான்..."அண்ணே..அண்ணே.."
கடைக்கு பின்னால் தான் அவர் வீடு வீட்டிற்க்குள் இருந்து வந்தார்...
"வாப்பா... போன வேல முடிஞ்சுச்சா...."
"ஹ..ஹ...முடிஞ்சுச்சு..வண்ட குடுங்க...."
"நில்லுப்பா..ஒ வண்டு முட்ட போட்டுச்சு....முதல்ல அத வாங்கிக்கோ"
"ஐ.. எங்க கொடுங்க கொடுங்க..."
ஒரு பொட்டு கடலையை எடுத்து கொடுத்தார்....
அதை வாங்கி பார்த்தவன்.... "அண்ணே இது பொட்டு கடலைன்னே.. யார ஏமாத்த பாக்குறீங்க....முட்டைய ஒழுங்கா கொடுத்துடுங்க..."
"அட என்னப்பா பொன்வண்டு முட்டய நான் என்ன பொரிக்கவா போறேன்.... இது சத்தியமா பொன்வண்டு முட்ட தான்.. நீ வேணா இவர்ட்ட கேளேன்..."
அங்கு உட்காத்திருந்த இன்னொரு தாத்தா நக்கலாய் சிரித்துக்கொண்டே "இங்க பக்கதுல வா..காமி....." என்று உற்று பார்த்தவர்  "ஆமா..ஆமா இது பொன்வண்டு முட்ட தான்" என்றார்.
 "எல்லோரும் என்ன சின்ன பையன்னு ஏமாத்த பாக்குறிங்களா... அண்ணே என் பொன் வண்டு எங்க...."
"முட்ட போடேல செத்துபோச்சு தூக்கி போட்டுட்டேன்...." சாவகாசமாய் சொல்லி வந்த கஸ்டமருக்கு சக்கரை பொட்டலம் கட்டி கொண்டிருந்தார்.

தலையில் இடி இறங்கியது போல் இருந்தது அவனுக்கு..... கண்ணீர் சாரை சாரையாய் ஊற்றியது..... "அண்ணே கொடுங்கன்னே ப்ளீஸ்னே...."
"யே இது என்ன யா தொல்லையா போச்சு.... இப்போ இந்த முட்டய எடுத்துட்டு போறியா..இல்ல தூக்கி போடட்டுமா...." என்று தூக்கி போடா போனார்.
விரைந்து தடுக்க போனான்.... அதை கையில் கொடுக்க போய் மீண்டும் எடுத்துக்கொண்டார்.... "இது என்ன பொன்வண்டு முட்டையா இல்ல பொட்டுகடலயா.."
"முட்ட தான் கொடுங்க...."
"சத்தம்மாமுழுசா  சொல்லு"
" பொன் வண்டு முட்டதான்...கொடுங்க..."
"ஹ்ம்ம் அது....." சுற்றி இருந்த அனைவரும் நக்கலாய் சிரிக்க அதை வாங்கி உள்ளங்கையில் வைத்து கொண்டு பார்த்தான்.

அப்பொழுது ஒரு சிறுவன் அழுது கொண்டே ஓடிவந்தான்...அந்த கடைகாரரிடம் சென்று "அப்பா..அப்பா வாசு வண்ட நசுக்கி கொன்னுட்டான்ப்பா....." அப்பொழுது அதைவிட சிறியவன் ஒருவன் டிரௌசரை பிடித்துக்கொண்டு ஓடி வந்தான்.."அப்பா அப்பா அண்ணன் தான்ப்பா கொன்னுட்டான்...முன்னால ஓடிவந்து பொய் சொல்ல்றான்ப்பா...."

இருவருக்கும் அடிவிழுந்தது.... சுந்தர் கைகளை இருக்க மூடிக்கொண்டு வந்த வழியே நடக்க தொடங்கினான்..... அந்த கடைகாரனை சும்மா விடக்கூடாது.... எப்படி ஏமாத்திட்டான்....யாருக்குமே கெடைக்காத பரிசு.. தனக்கு கிடைத்தும் விட்டதை நினைத்து வருந்தினான்.

"முட்டை வச்சு நம்ம எதனாச்சும் வேண்டுனா அது நடக்கும் தெரியுமா....."
முத்து சொன்னது ஞாபகம் வந்தது.... அவளை பார்த்தாள் நல்லாருக்கும் என்று தோணியது..... கண்களை துடைத்துக்கொண்டே..... வேன் பக்கத்தில் நெருங்கினான்.... அங்கே முத்து நின்றுகொண்டிருந்தாள்...... அவளை பார்த்தவுடன் சுந்தருக்கு அழுகை தாளவில்லை... அழுது கொண்டே "அங்க...அங்க பொட்டி கடைல... வண்ட..அந்த பசங்க...."
"தெரியும் சுந்தர்.... அவங்க அத எடுத்துட்டு என் கிட்ட தான் வந்தாங்க.... வம்பிழுக்க...."
"மன்னிச்சுடு முத்து....யாருக்குமே கெடக்காதுன்னு சொல்லி கொடுத்த இப்படி விட்டுட்டேனே .. நா ஒன்னும் அதிர்ஷ்டசாலி இல்ல முத்து "
"ஐயோ லூசு சுந்தர்....நீ அதிர்ஷ்டசாலி தான்.... டோட்ட டொய்ங் .. இந்தா..." geometry பாக்சை எடுத்து திறந்தாள் உள்ளே இரண்டு பொன்வண்டு....
"ஒன்னு உனக்கு..ஒன்னு எனக்கு....அப்பா எடுத்து வந்துச்சு...!!!"
"நானும் ஒன்னு வச்சுருக்கேன் இந்தா.. கையை பிரித்து காமித்தான்... டோட்ட டொய்ங் .. இந்தா...பொன்வண்டு முட்ட"
"ஐயோ லூசு இது பொட்டு கடலை...." கலகலவென சிரித்தாள்.
"நீ சொன்ன மாறி நா அதிர்ஷ்டசாலி தான் முத்து.. பொட்டுகடலைய வச்சு வேண்டுனதே நடந்துடுச்சே...!!!!"