சிறுகதை

Friday, October 10, 2014

GRE Indians

அமெரிக்காவுக்கு வந்து மூணு மாசம் ஆகிடுச்சு. இதுவரைக்கு பார்த்து வாயை பொலந்தது மூணு விசயத்திற்கு, இறங்கி ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தவுடன் பார்த்த எக்கச்சக்க சிட்டு குருவிகள் (உண்மையான சிட்டுக்குருவிகள்). செல் டவர்ல போச்சு.... பூச்சி மருந்துல போச்சின்னு நம்மூர்ல ஏதேதோ பட்டிமன்றம் வச்சி டைம் பாஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க... அழகா செயற்கை நீருற்றில் குளிசுக்கிட்டே "ஹாய் ப்ரோ.." என்கிறது. நம்மாளுங்க கெளம்பறதுக்கு முன்னாடியே இந்த ஊரு சரி பட்டு வராது என்று தெரிந்துகொண்டு அவைகளும் மைக்ரேட் ஆகி விட்டது போலும்.

ரெண்டாவது ஆறுகள்.... எல்லாம் திம்ம் என்று  கரைத்தொட்டு ஓடிக்கொண்டிருந்தன. திருச்சில் இருந்து வந்த எனக்கு காரணமே இல்லாமல் கர்நாடகா மேல் கோபம் வந்தது. மூன்றாவது மீண்டும் சிட்டுக்குருவிகள்.... எல்லாத்துக்கும் சிறகு முளைதுடுத்து.... ப்ரீயா பறக்க ஆரம்பிடுத்து..:-)

இந்த வருடம் மட்டும் இந்தியாவில் இருந்து இங்கே படிக்க வந்தவர்கள் ஒரு லட்சம் பேராம். என் கல்லூரியில் மாஸ்டர்ஸ் கிளாஸ் அனைத்திலுமே minority americans , majority இந்தியன்ஸ். என் க்ரூபில் இரெண்டே இரண்டு அமெரிக்கர்கள் மீதி எல்லோருமே நம்ம பயலுகதெ. நான் புனே சென்ற பொழுதில் கூட இவ்வளவு ஹோம்லியாக பீல் பண்ணவில்லை. ஒரு வெளிநாட்டுல இருக்கோம் அப்படிங்கற பீலிங்கே அப்பப்போ தான் வருது. அதுவும் நம்ம ஆளுங்க நாடு ரோட்டில் உம்மா கொடுத்துகொண்டிருக்கும் பொழுது வரும். (நம்ம ஊருல இப்படி பண்ண முடியுமா...???). 

வேலையை விடும் சமயம் மேனேஜர் us விசா அப்பளை பண்ணறியா என்று கேட்டார்(நக்கலாக என்று நினைக்கிறன்....!!). வொர்க் எதிக்ஸ் நான் ஒன்றும் கூறவில்லை. சொல்லிருக்கணும் ஒக்கேன்னு சொல்லி இருக்கணும். இல்லல்ல படிச்சு பெரியாளா ஆகி நோபெல் பரிசு வாங்க போறா மாறி கிளம்பிவந்தேன். onsite வந்துருந்தா நம்ம லெவெலெ வேற. இப்போ சோத்துக்கே சிங்கி அடிக்க வேண்டி இருக்கு. பாய்ஸ்ல வர செந்தில் மாறி புல் schedule இருக்கு இப்ப எங்க கிட்ட. வெள்ளி கிழமை லூதரன் ஸ்டுடென்ட் சென்டரில் ப்ரீ சிக்கன் பிரியாணி, வியாழகிழமை அங்க இருந்து கொஞ்சம் நேரா போய் லேபிட் எடுத்தா பெயர் தெரியாத இடத்தில pizza. வாழ்க்கை இந்த ஊர் கோவில்களின் அன்ன தானத்தில் செவ்வனே ஓடிக்கொண்டிருக்கிறது.

சமைக்கிறதே இல்லையா என கேக்காதீங்க, நாங்கள் செய்வதற்கு பெயர் சமையலா என்றே இன்னும் விளங்கவில்லை. பிரியாணி செய்யும் பொழுது வரும் வாசனையை வைத்தே உப்பு கம்மியா இருக்கு இன்னும் கொஞ்சம் போடு என்று கூறும் சீனியர் மாணவர்களை பார்த்து நாமும் ஒரு நாள்ள்ள்....  இவர்களை போல் ஆகிவிடுவோம் என்கிற நம்பிக்கையில் தினமும் எதோ சமைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். 

திடீர் திடீர் என்றும் onsite கிளம்பி வரும் நண்பர்கள் நயாகரா போவதும், awesome சிக்கன் பிரியாணி @NY என்று அப்டேட் போடுவதுமாக எரியும் வயிற்றில் சாம்பிராணி தூவுகிறார்கள். நாங்கள் அன்றாட தேவைக்கு மளிகை சமான் வாங்க காரில் பத்து நிமிடம் போகவேண்டும். அதற்கும் ஆளுக்கு அஞ்சு டாலர் கார் இருபவரிடம் கொடுத்து நாலு பேர் சேர்ந்து செல்லவேண்டும்.

டவுன் பஸ் இல்ல, அவசரமா சக்கரையோ உப்போ, பால் பாக்கெட்டோ வாங்க ஒரு பொட்டி கட இல்ல, ஒண்ணுமே படிக்காம எக்ஸாம்முக்கு 10 நிமிஷம் லேட்டா போய்கிட்டு இருக்கையில் வழியில் "எப்படியாவது பாஸ் ஆக்கிடு"
என்று வேண்ட எந்த மரத்துக்கு அடியிலும் பிள்ளையார் இல்ல. யோவ் இந்த ஊரு ஒரு பெரிய நெய்வேலியா..!!

2025 இல் அமெரிக்காவில் அமெரிக்கர்கள் மைனாரிட்டி ஆகிவிடுவார்களாம். எங்க ஏரியாவ பார்த்தா இப்பவே ஆயிட்ட மாறித்தான் இருக்கு. அதுவும் நான் இருக்கும் இடத்தை எல்லோரும் ஆர்லிங்கபுரம் (ஆர்லிங்டன்) என்று தான் கூறுகிறார்கள். அவங்க மட்டும் தான் தூத்துகுடிய டுட்டுகொரின்னு மத்துவாங்கள என்ன. அவசரமாக ரோடு க்ரோஸ் பண்ணும் பொழுது "வீட்ல சொல்லிட்டு வந்தியா...." என்று கேட்பதும் வெகு தூரத்தில் இல்லை.

கல்லூரியின் முதல் நாள் மத்திய பிரதேச மாணவர் ஒருவருடன் அறிமுகம் ஆனேன். அன்று முதல் நாள் நெறைய வேலை இருந்து. ID கார்டு வாங்கணும், பேங்க் அக்கௌன்ட் ஓபன் பண்ணனும் அது  இது என்று பல. விசா காப்பியை கொடுப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தோம், அடுத்தது பேங்க் சென்று அக்கௌன்ட் ஓபன் பண்ண வேண்டும். மணி அப்பொழுதே 4 ஆகிவிட்டது. ஐந்து மணி மூடிவிடுவார்கள், நாங்கள் பேங்க் எங்கே இருக்கிறது என்று தேடி செல்ல வேண்டும். கண்டிப்பாக பக்கத்தில் இருக்காது, நம்ம ஊரு போல் குறுக்காக ஓடி சென்று விடவும் முடியாது. சின்ன சின்ன ஆளே இல்லாத தெருவில் கூட பட்டனை அமுத்தி வாக்கிங் சிக்னல் வந்தவுடன் செல்லவேண்டும்.

நான் மணி இப்பவே நாலு ஆயிடுச்சு இன்னிக்கு போன மாறித்தான்  என்று அருகில் இருந்த நண்பரிடம் சொன்னேன். அவரும் மணியை பார்த்துவிட்டு ஆமா ஆமா மணி ரெண்டரை ஆயிடுச்சு மூன்றைக்கு மூடிடுவாங்களே என்று தலையில் கை வைத்தார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை நான் இந்த முறை செல் போனில் டிஜிட்டல் வாட்சில் நேரத்தை சரியாக பார்த்துவிட்டு மணி நாலு இப்போ.... உங்க வாட்ச் தப்பா ஓடுது இன்னும் ஒரு மணி நேரத்துல பேங்க் மூடிடுவான் என்றேன் .

நானும் அதேதான் சொன்னேன் மணி 2.30, 3.30 பேங்க் மூடிடுவான், என் வாட்ச் கரெக்ட்டா ஓடுது இந்தியா டைம்ல என்றார்.
ஒ இன்னும் நீங்க மாத்தலையா... மாத்திடுங்க என்றது இல்ல இல்ல "I'm not gonna change" என்றார்.  இந்தியா டைமிங் தான் வச்சுப்பேன் என்று அடம்பிடித்தார். 

நாட்டு பற்று அப்படிங்கறது தேவைதான். நாம் எந்த  நாட்டுக்கு போனாலும் நம் நாட்டை மனதில் வைத்துகொண்டால் போதும் அதுக்குன்னு இவர மாறி ஓவர்டோஸ் போடதீங்க. முதல் நாள் கிளாஸ்சிற்கு டைம் கால்குலேசனை தப்பாக போட்டு கிளாஸ் முடிந்தவுடன் வந்தார்.

Wednesday, April 16, 2014

காட்சி பிழை 5

இரவு  எட்டு மணி, மாஜிஸ்ட்ரேட் வீட்டுக் கதவை தட்டினேன்.. அவர் மகன் கதவை திறந்தான்..."தம்பி அய்யா இருக்காரா... ரீமாண்டு வந்துருக்குன்னு சொல்லு..."

 உள்ளே சென்று "அஞ்சு நிமிஷம்..." என்றான்

"என்னப்பா இன்னும் பாம்பு பிடிச்சுகிட்டு தான் இருக்கியா...."

சிரித்தான்.." உன்  பேரு என்ன.. அன்னிக்கு கேட்க மறந்துட்டேன்...."

"ஹரி... ஹரி பிரஷாந்த்.."

"ஆமா.. நல்ல பாம்பு கூட பிடிப்பியா..?"

அவன் பதில் சொல்வதற்குள்  மாஜிஸ்ட்ரேட் வந்து குறுக்கிட்டார்..

"என்ன SI.. ராத்திரி நேரத்துல்ல நல்லது அது இதுன்னுகிட்டு...." அவரை பார்த்தவுடன் உடம்பை விரைப்பாக்காமல் casual salute ஒன்றை வைத்தேன்

"என்ன கேசு..."

"டொமெஸ்டிக் வையலான்ஸ்...."

"ஹ்ம்ம் கூப்டுங்க...."

ஜீபுக்குள் இருந்து  அந்த மாடை கான்ஸ்டபுள் கூட்டி வந்தார்....
ஒரு கும்புடு போட்டு விட்டு ஏதோ திருவிழாவிற்கு வந்த ஜமிந்தார் போல நின்று கொண்டிருந்தான். ரீமாண்டில்  கேட்கும் default கேள்விகளை மாஜிஸ்ட்ரேட் கேட்டார். அவரது மகனும் இன்னொரு பொண்ணும் (அவன் தங்கை போல..) ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தார்கள்.

"பேரு என்ன..."

"குமாரு சார்....."

"என்னையா கெடா குமாருன்னு போட்டு இருக்கு..."

"சாதா குமாரு தான்யா....." என்று மண்டையை சொரிந்தான்

"வயசு..."

"35"

"போலீஸ் அடிச்சாங்களா....?"

என்னை பார்த்தான்....

"அவர ஏன் பாக்குறீங்க.. தைரியமா உண்மைய சொல்லுங்க..."

"இல்லயா...."

"என்ன குத்தம் பண்ண...."

இவ்வளோ நேரம் கம்பீரமா தூண் மாறி நின்றவன்.. தீடீர் என்று தரையில் மண்டியிட்டு அழ ஆரம்பித்து விட்டான்.

"சத்தியமா  நான் ஒன்னும் பன்னலயா..... ஜெயில்ல இருந்து திருந்தி நேத்து தான் ஊட்டுக்கு போனேன்.... பொண்டாட்டிய கறி கொழம்பு வைடினா... கோழி கொழம்பு வச்சுட்டா.... ஏண்டி கறிக்கும்  கோழிக்குமா உனக்கு வித்தியாசம் தெரியாதுன்னு கேட்டதுக்கு.. எல்லாரும் சேந்து குடும்ப வன்முறைங்றாங்க அய்யா....."
 அப்படியே தவழ்ந்து அவர் காலை தொட போனான்... லத்தியால் ஒரு அடி போட்டு "எழுந்து நில்லுயா..எந்திரி" என்றேன்

"யாருக்கோ நான் வெளில இருக்காது பிடிக்கல.... இதுல போலீசும்  கூட்டு..." என்றான்  

அந்த சமயம் பார்த்து... பக்கவாட்டில் அம்மியில் சட்னி அரைத்துக்கொண்டிருந்த மாஜிஸ்ட்ரேட்டின் மனைவி.... NLC-யில் ஊதும் சங்கை போல அலறினார்.... "பாம்பு.. பாம்பு....."

கோர்ட் டுட்டியில் இருந்த மகாலிங்கம் எங்கிருந்து வந்தார் என்றே தெரியவில்லை...
"எங்க.. எங்க.." என்று ஓடி வந்தார்.

பாம்பு சந்தர்பம் தெரியாமல் கைலியுடன் அமர்ந்திருந்த மாஜிஸ்ட்ரேட்  கால்களுக்கு பின் சென்று மறைய.... பட்டனை தட்டி விட்ட பொம்மை போல ஜங் ஜங் என்று குதித்துக்கொண்டிருந்தார்.  அவர் பையன்  "யாரும் பதட்ட படாம..அமைதியா இருங்க.... நா அத பிடிக்கிறேன்.." என்று கூறி அவன் அம்மாவிடம் அடியை வாங்கி கட்டிக்கொண்டான்.

மகாலிங்கம் ஒரு பெரிய குச்சி ஒன்றை கையில் எடுத்து சேருக்கு பின்னல் தெரிந்த வாலில் ஓங்கி ஒரு அடி போட்டார்..... உள்ளே இருந்த மாஜிஸ்ட்ரேட்டின்  பெண் வெறி பிடித்தவள் போல வெளியே ஓடிவந்து...
"யாரு.. யாரு மேல கைய வச்ச... இங்க நான் எத்தன வருஷாமா இருக்கேன் தெரியுமா...... உன்ன கொல்லமா விடமட்டேன்... விடமட்டேன்..." என்று சாமி வந்தவள் போல்அவர் கழுத்தை நெரித்தாள்.

நான் ஓடி மகாலிங்கத்தை அவளிடம் இருந்து விடுவித்து..... அவளை பிடித்தேன்..மயங்கி விழுந்து விட்டாள்.

பாம்பு போன சுவடே தெரியவில்லை...மாயமாய் மறைந்து விட்டது....

"என் பொண்ணுக்கு இதுக்கு முன்னால இது மாதிரி வந்ததே இல்ல சார்.." என்று மாஜிஸ்ட்ரேட்  புலம்பினார். அவர் மனைவி அழுது கொண்டிருந்தார்.

 இப்பொழுது கான்ஸ்டபுள்  turn  "சார்.... " என்று  பேய் பிடித்தது போல் கத்தினார்.

கெடா குமாரு.. அவர் கைகளில் இருந்து நழுவி தெரிக்கெட்டு ஓடிக்கொண்டிருந்தான். நான் கான்ஸ்டபுள் , மகாலிங்கம் மூவரும் அவனை துரத்திக்கொண்டு ஓடினோம். பின் புறம் இருந்த காட்டு பக்கமாக ஓடின குமார்.... அங்கே இருந்த அந்த பாழடைந்த பங்களாவிற்குள் புகுந்துவிட்டான்.

நாங்கள் மூவரும் வாசலில் ப்ரேக் போட்டு நின்றோம்.

"யோவ்.. இப்ப என்னயா பண்றது..." பதட்டமாக கேட்டேன்

"சார்.. வெளில வர வேற வழியே இல்ல... இப்படி தான் வரணும்... அதுவும் இந்த பங்களா.. நாம உள்ளே போகணும்ன்னு இல்ல.. அதுவே அஞ்சு நிமிசத்துல வெளில துரத்திடும் பாருங்க..." என்றார் மகாலிங்கம்

"சார்.. தப்பிசுட்டானா பெரிய கேஸ் ஆயிடும்.. பேப்பர்ல வந்துடும்.." என்றார் கான்ஸ்டபுள்

"அய்யயோ திரும்பியும் பேப்பர்லயா.... மகாலிங்கம் நீங்க முன்ன பின்ன இதுக்குள்ள போய் இருக்கீங்களா..."

"உடஞ்ச சேறு.. பழைய பீரோ.. போடுறதுக்கு அப்பப்போ வருவேன்.."

"அப்பா வாங்க என்கூட.... கான்ஸ்டபுள்  நீங்க இங்கயே  பண்ணுங்க...." என்று கூறி மகாலிங்கத்தை வலுக்கட்டாயமாக கொட்டி சென்றேன்.

கும்மிருட்டு... கூட மகாலிங்கம் வருவதே அவர் பேசுவதன் மூலம் தான் கண்டு பிடிக்க முடிந்தது. அவர் கையை இருக்க பற்றிக்கொண்டு உள்ளே சென்றேன்.

ஜல்...ஜல்... சத்தம் பின்னால் கேட்டது, யாரோ நடப்பது போல் நிழல் ஆடியது.

கைகள்  நடுங்க ஆரம்பித்தது.... "சார் போய்டுவோம் சார்.." என்றார் மகாலிங்கம். குடலை பிரட்டும் நெடியுடன் வௌவால்கள் முகத்தை பிராண்டி பறந்தன.

பின்னால் யாரோ காலில் கொலுசு போட்டு வேகமா ஓடுவது போல் இருந்தது... இருவரும் திரும்பினோம்.... இருட்டில் சரியாக தெளிவாக இல்லை... அனால் ஒரு பெண் சத்தியமாக ஒரு பெண்.... எங்கள் இருவருக்கும் நேர் எதிரே...அடர்ந்த  பெருமூச்சு விட்டுக்கொண்டே எங்களை நோக்கி ஓடி வந்தாள்.

"ஹ..ஹ...ஹ...." என்று சத்தம் வேறு. இதயம் பளுக் என்று வாய் வரை வந்து விட்டது.

மகாலிங்கம் என் கையை உதறி விட்டு ஓடி விட்டார்....விட்டான் பாவி.

நான் தடுமாறி உடைந்த பழைய சேரை மீண்டும் உடைத்தேன். தூசி ஏறி இருமல் வந்து விட்டது. கண்கள் எல்லாம் கலங்கி போய்..... கும்மிருட்டு.. மேலும் இருண்டு போனது.

அவள் எங்கே.... மகாலிங்கம் எங்கே ஒன்றும் தெரியவில்லை.

"மகாலிங்கம்..யோவ்...என்ன எப்பிடியாவது வெளில கூட்டி போயா... என்ன கேட்டாலும் தரேன்யா...." என்று கெஞ்சி பார்த்தேன்.

பதிலுக்கு "ஹ ஹ....ஹ.." என்று சத்தம் தான் வந்தது.

அப்பொழுது வெளியில் constable loud speaker-இல் கத்தினார்....

"கெடா குமாரு வெளில வந்து பத்து நிமிஷம் ஆச்சு சார்..... சீக்ரம் வெளில வந்துடுங்க....!!!"



Thursday, April 3, 2014

காட்சி பிழை 4

கேம்பஸ் இன்டர்வியுல கெடச்ச வேலைய விட்டுட்டு...  ரெண்டு வருஷம் முக்கித் திக்கித் தெணறி...UPSCக்கு படிச்சு முடியாமல் tnpscஇல் தேறி SI ஆக சேர்ந்து என் பெயர் முதன் முதலில் பேப்பரில் வந்த தினம். கட் பண்ணி எடுத்து பிரேம் போட்டு வைக்க முடியவில்லை. அக்ஷிதா எழுந்துவிட்டாள் வேகாமா..கசக்கி தூக்கி எறிந்து விட்டேன்.

தூக்க கலக்கத்தில் என்னை முறைத்துக்கொண்டே சென்றாள். கல்யாணம் ஆனா புதிதில் வேலைக்கே செல்லமாட்டேன் என்று அடம் பிடித்த என்னை அதட்டி விரட்டுவாள்... ஆனால் இப்பொழுது வீட்டிற்க்கே வரவில்லை என்றால் கோபம் வரத்தானே செய்யும்.

இன்னும் நான் upscக்கு படித்துக் கொண்டிருப்பதற்கே காரணம் அவள்தான். தினமும் பத்து கேள்வி கேட்பாள்..பதில் சொன்னால் தான் சாப்பாடே..எக்ஸ்ட்ரா ஐந்து கேள்விக்கு பதில் சொன்னால் முத்தம். எனக்கு தெரிந்து சப்பாடிற்காகவும் முத்ததிற்காகவும் IASக்கு படிக்கும் ஒரே ஆள் நானாக தான் இருப்பேன்.

கோபமாக முறைத்துக் கொண்டே என்முன் அமர்ந்தாள், சிறிது  முறைத்து பார்த்துவிட்டு.. அந்த குட்டி நோட்டை கையில் எடுத்தாள்.

"பிப்டி குவஸ்டீன்..... பிப்டி டப் குவஸ்டீன்.." என்றாள்

இப்போல்லாம் சண்டை போடுவதற்கும் குவச்டீன்சை பயன்படுத்துகிறாள்...

"பிப்டி யா....??"

மிக கோபமாக பேசாதே என்று சைகை செய்தாள்....
"ரொம்ப கோபமா இருக்கேன்... வாயில இருந்து ஆன்ஸார் மட்டும் தான் வரணும்...."

"தெரியலனா...."

"குட்டு குட்டுன்னு குட்டுவேன்....."

"கரெக்ட்டா சொன்னா.." என்று கண்சிமிட்டினேன்

"குட்டு கெடையாது..."

"இதெல்லாம் அநியாயம்... நா ஒத்துக்க முடியாது..நோ டீல்..நோ டீல்.."என்று எழுந்தேன். அருகில் வந்து குட்ட வந்தாள்.

ஓடினேன்...துரத்தினாள்..... நேற்று வாங்கி வைத்திருந்த டெட்டி பியர் ஒன்றை எடுத்து நீட்டினேன்.

"டெட்டி பியர் கொடுத்து ஐஸ் வச்சா விட்டுடுவேனா.... எத்தன போன்...எத்தன மெசேஜ்.... நீ என்ன கலெக்டர் உத்தியோகத்துக்கா போற.... உண்மையில நீ கலெக்டர் ஆனா வீட்டுக்கே வர மாட்டியா...."

எதிர்த்து ஒரு வார்த்தை பேசலையே..பேச மாட்டேனே...கல்யாணம் ஆகி ரெண்டு நாள்ல நான் கற்றுக்கொண்ட பால பாடம் இது.

மீண்டு குட்ட வந்தாள்..பெட்டுக்கு அடியில் அவளுக்காக வாங்கி வைத்திருந்த புது புடவைய எடுத்து நீட்டினேன். அதை பார்த்தவுடன் முகத்தில் லேசாய் புன்முறுவல் ..(தெரியுமே....!!)

"திருடன் டா நீ...." என்று மீண்டு குட்ட வந்தாள்

"போலிச ஊரே அப்டிதான் கூப்டுது... ஸ்டாப் ஸ்டாப்....  இதுக்கு மேல கொடுக்குறதுக்கு எதுவும் இல்ல..." என்று ஒற்றை காலில் மண்டியிட்டு ஆரம்பித்தேன்...

"1989-ல பிறந்து... கஷ்டப்பட்டு வளந்து... அடி வாங்கி படிச்சு.... பின்னாடி சுத்தின பசங்கள விரட்டி, தேடி வந்த பல மாப்ளைங்கள வேணான்னு சொல்லி எனக்காக காத்திருந்து என் வாழ்க்கையை கம்ப்ளீட் பண்ணதுக்கு...." என்று ஒரு ரெட் ரோசை நீட்டினேன்.

வெட்கமாக சிரித்து கொண்டே அனைத்துக் கொண்டாள்... பின் காதோரமாய் கேட்டாள்

"அந்த சாரி எங்க வாங்குன....?"

"ராஜா சில்கஸ்ல.... நல்லாருக்கா......?"

"மொதல்ல அத மாத்தனும்...."




Saturday, March 29, 2014

காட்சி பிழை 3

டிஸ்கவரி சேனல் க்ளோஸ் அப் ஷாட்டில் கூட பாம்பை இவ்வளவு அருகில் பார்த்ததில்லை...!!!

பேலன்ஸ் தவறி முட்புதரில் விழுந்ததில்.. உடம்பெல்லாம் முட்கள் குத்தி என்னால் எழுந்திரிக்க முடியவில்லை... பாம்பு கிளையில் இருந்து நழுவி என் காலில் விழுந்தது.... அடித்தொன்டையில் இருந்து கத்தியதால் என்னவோ வடிவேலு பெண் வேடம் போடும் போது வரும் குரலில் கத்திக்கொண்டிருந்தேன்.

மிஸ்டர் முருகானந்தம் பரபரப்பாக அதை தள்ளி விட குச்சியை தேடி கொண்டிருந்தார்.... பதட்டத்தில் நான் முண்டியதில் முட்கள் உடல் முழுவதும் ஏறிக்கொண்டிருந்தன.... ஏறுவது முள் தானா இல்லை பாம்பின் பற்களா என்று கூட தெரியவில்லை... நரகம்.... 200 பெர்சென்ட் நரகம்...!!!

தீடீர் என்று பாம்பு என் உடம்பில் இருந்து விலகியது.... அந்தரத்தில் என் முகத்திற்கு நேரே மிதந்து கொண்டிருந்தது.... இல்லை இல்லை யாரோ ஒருவருடைய கை அதை பிடித்துக்கொண்டிருந்தது. தலையை அசைக்க முடியவில்லை.... கண்களை முன்னுத்தி அறுபது டிகிரி உருட்டி பார்த்தேன்... 16 வயது இருக்கும்... பொடியன்... 6 அடி பாம்பை கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்தான்.

முற்புதரில் இருந்து என்னை விடுவித்துக்கொள்ளவே பத்து நிமிடம் ஆகி விட்டது.. "யோவ் முருகானந்தம் சீக்ரம் யா... பாம்பு கடுச்சுருக்க போகுது... செத்துட போறேன்... "

"இந்தா இந்தா சார்.... " என்று ஏதோ செய்து கொண்டிருந்தார்

இன்னும் அந்த பாம்பை கையில் வைத்திருந்த அந்த சிறுவன்...

"ஐயோ அண்ணா.. இது சாரப் பாம்பு.. விஷம் கிடையாது...."

அவன் மட்டும் இதை சொல்லி இருக்காவிட்டால்.. இந்நேரம் செத்திருப்பேன். உடபெல்லாம் வின் வின் என்று தெரித்தது.... நல்ல வேலை வேறு யாரும் பார்க்கவில்லை...!!!

"தம்பி நீ யாரு...."

"மஜிச்ற்றடே பையன்..... மாடில படிச்சுகிட்டு இருந்தேன்.....நீங்க வராதுக்கு முன்னாடியே பாம்பு அங்க ரொம்ப நேரமா தொங்குச்சு நீங்க பார்க்கவே இல்ல.. அதான் ஓடி வந்தேன்..."

நான் முருகானந்தத்தை பார்த்தேன்.. அவர் வேறு பக்கம் முகத்தை திருப்பி கொண்டார்....
"இத தான் அப்பயும் பன்னிருகீங்க...."

"தம்பி ரொம்ப தேங்க்ஸ் பா... உனக்கு எப்புடி பாம்பு புடிக்க தெரியும்.. அத போய் கைல வச்சு கிட்டு.. தூக்கி போடுப்பா அத...." என்றேன்

"ஹாபினா.. சின்ன வயசுல இருந்தே இசியா புடுசுடுவேன்..." என்று சொல்லி கொண்டே பாம்பை தூர வீசினான்

"இது எல்லாம் இப்ப ஹாபி லிஸ்ட்ல சேந்துடுச்சா.. சூப்பர்.. எல்லாம் டிஸ்கவரி சேனல் பண்ற வேல...." அவன் சிரித்தான் நான் "இன்னும் ஒரே ஒரு உதவி...."

"சொல்லுங்கண்ணா.."

"இந்த மேட்டரு..ப்ளீஸ்..." என்று கெஞ்சலாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன்

"sure.... டியூஷனுக்கு டைம் ஆச்சு பாப்போம்.. " என்று ஹெர்குலஸ் சைக்கிளை ஓட்டி சென்று விட்டான்.

"சார்... புக்ஸ் எல்லாம் பேக்ல எடுத்து வச்சு பொறுமையா வந்துருக்கான் பாருங்க சார்...." என்றார் முருகானந்தம்

அவரை பார்த்து முறைத்தேன்.... "அவ மட்டும் வரலைனா இன்னும் நீங்க குச்சிய தேடிகிட்டு இருந்துருபீங்க...மிஸ்டர் முருகானந்தம்.."

அக்ஷிதா மீண்டும் கால் பன்னாள்.... பிஸி என்று செய்தி அனுப்பினேன்.

டாக்டரிடம் போய் உடம்பிற்கு எந்த சேதாரமும் இல்லை என்று உறுதி செய்த பின் வீட்டிற்கு சென்றேன்.

இன்று நடந்த சம்பவங்களை அசைத்து கொண்டே தூங்கியாதால்.. எம்மி ஜாக்சன் கனவில் மேரியாக வந்து என்னை எம்பி எம்பி துரத்தினாள். எந்த திசையில் ஓடினாலும் இறுதியாக அந்த சமாதியே வந்து தொலைத்து. வேறு வழி இல்லாமல் அந்த மொழங்கால் அளவு குட்டை கம்பவுண்டு சுவரை தாண்டி குதித்தேன்..... அது முடிவில்லாத அதல பாதாளாமாய் போய் கொண்டே இருந்தது..கிழே..வா வா என் சமாதிக்குள் வா... என்றாள் மேரி. எழுந்துவிட்டேன.

முகமெல்லாம் வியர்த்திருக்க .. அதற்குள் விடிந்திருந்தது... அருகில் அக்ஷிதா குளிருக்கு இழுத்து போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள்... ஒரே ஒரு முடி கீற்று அவள் முகத்தில் படறி இருந்தது... எவ்வளோ அழகாக இருக்கிறாள்.... கல்யாணம் ஆகி சில மாதம் தான் ஆகுது... அதற்குள் என்னை முழுதாக புரிந்து கொண்டவள்.... அப்பப்போ லைவ் status இன்னும் உயிருடன் தான் இருக்கேன் என்று அனுப்பினால் போதும்.. மற்றபடி வேறு தொந்தரவு ஏதும் செய்ய மாட்டாள். அவளுக்கு ஏதோ நான் தினம் வீரப்பன்களோடு சல்லாபம் புரிவதாக நினைப்பு.

அம்மா இவ்வளோ அழாகாக ஒரு மனைவியை பார்ப்பாள் என்று தெரிந்திருந்தால் பல அடிகளும் பீயர்களும் மிஞ்சி இருக்கும்..... இன்னும் தூங்காமல் எத்தனை பேர் இவள் தீடிர் கல்யாணத்தை நினைத்து என்னை தண்ணி அடித்துக் கொண்டு சபித்துக் கொண்டு இருகிறார்களோ தெரியவில்லை, ஒரு நல்ல கொலை கேஸ் என்று பார்த்தால்... பயங்கரமான பேய் கேசாக வந்து தொலைத்து விட்டது.

காபி போட்டு குடித்துக்கொண்டே..... அன்றைய செய்தித்தாளை எடுத்து புரட்டி கொண்டிருந்தேன்..அப்பொழுது அந்த செய்தி கண்ணில் பட்டது...

"சீரிய பாம்பு..!! சிதறிய காக்கி...!!!"





Friday, March 28, 2014

காட்சி பிழை 2

கோர்ட் கான்ஸ்டபள் முருகானந்தமும் நானும் fastrack குவார்டர்ஸுக்கு  நடந்து சென்று கொண்டிருந்தோம்.

"மேஜிஸ்ட்ரேட், முன்சிப், சப்-ஜட்ஜ், பாஸ்ட் ட்ராக்ன்னு மொத்தம் நாலுகோர்ட் இருக்கு சார்.... முன்சிப் கோர்ட் பில்டிங் அந்த காலத்துல ப்ரிடிஷ் கட்டினது.... மீதி மூணு கோர்ட்டும் புது பில்டிங்ல ஓடுது.... நாலு கோர்டுக்கும் குவார்டர்ஸ் பின் பக்கம் இருக்கு.. அதுக்கும் பின்னாடி பழைய பிரிட்டிஷ் காலத்து இடிஞ்ச பங்களா...."

"பங்களாவா இப்ப அங்க யாரு இருக்கா..."

"யாரும் இல்ல சார்..."

"அங்கயும் வாக்கிங் போகுதா அந்த பேயி.."

"அது மட்டும் இல்ல சார்.... சுத்தி 4 ஏக்கர் புதர் மண்டி காடு.. பாம்பு.. எக்கச்சக்கமா பாம்பு...."

"ஓஹோ..." அவர் சொல்வதை நான் சரியாக காதில் வாங்கி கொள்ளவில்லை... காரணம் அக்ஷிதா (aksithaa)  "சீக்ரம் வா.. சீக்ரம் வா" ன்னு அவள் அனுப்பிய எஸ்எம்எசில் இன்பாக்ஸ் நிரம்பி வழிந்தது... ஏகப்பட்ட மிஸ்டு கால்... அதற்குள் மணி ஆறு ஆகிவிட்டது. முன்சிப் கோர்ட்டை தாண்டி வந்துவிட்ட எங்களுக்கு அந்த இடம் நள்ளிரவு போல  இருட்டி விட்டிருந்தது வியப்பாக இருந்தது. பெரிய பெரிய தூங்கு மூஞ்சி மரங்கள்.... சில குட்டையான அரச மரங்கள்.. பெயர் தெரியாத இன்னும் சில மரங்கள் மேலே பரண் போலே வெளிச்சம் புகாத அளவுக்கு மூடி இருந்தது. quarters அருகில் சென்றதும்.. இது வரை நான் அறிந்திராத நறுமணம்.... மயக்கமே வந்து விட்டது எனக்கு.....  

"முருகானந்தம் உனக்கு ஏதும் வாசனை வருதா...."

"மகிழ மரம் சார்.. " என்று நாலு அடி  தூரத்தில் இருந்த மரம் ஒன்றை காமித்தார் 
அதை சுற்றி சட்டை பட்டன் சைசுக்கு சின்ன சின்னதாய் பூக்கள் கிடந்தன. 

ஒன்றை எடுத்து கையில் கொடுத்தார்.... துபாய் செண்டை விட காரமாக இருந்தது....

"இந்தவாசனைக்கு.. ஏகப்பட்ட பாம்புவந்து.. மரத்தடியில மயங்கி கெடக்கும் சார்..." அவர் சொல்லி கொண்டிருக்கும் பொழுதே ஏதே ஒன்று வேகமா ஊர்ந்து செல்வதை போன்று இருந்தது..... 

"அங்கிருந்து சீக்ரம் வா..." என்றாள் அக்ஷிதா

பாஸ்ட் ட்ரக் குவார்டர்ஸ் 2000-ல் கட்டப்பட்டது.. நன்றாக உதிர்ந்து பெயர்ந்து தமிழ்நாடு PWD-ன் கைவண்ணத்தை எடுத்துக்காட்டியது.. வீட்டிற்குள் லா புக்ஸ் இருக்க வேண்டிய ஷெல்பில் பல மூல்லிகை வேர்களை அடுக்ப்பட்டிருந்தன.... வீட்டில் இருக்கும் அத்தனை ஆணிகளிலும் நாட்டில் உள்ள அணைத்து சாமி படமும் மாட்டப் பட்டிருந்தது. முன் கதவின் மேல் அந்த மந்திரித்த கயிறு கட்டப்பட்டிருந்தது. முன்னால் சின்ன போர்டிகோ... நுழைந்தவுடன் ஆபீஸ் ரூம்.. பின்னால் ஹால்.. ரெண்டு பெட்ரூம்... கிட்சென்... அதை ஒட்டி கொள்ளை புற கதவு.... கதவை திறந்தவுடன் மீண்டு மகிழ பூவின் சுகந்தம். 

"முருகானந்தம்... பின்னாடியும் மகிழ மரம் இருக்கா.. "

ஆமாம் என்று அவர் சுட்டி காட்டிய திசையில் மிக பெரிய மகிழ மரம் ஒன்று இருந்தது.. அதன் மடியில் அந்த சமாதி. மகிழம் பூவின் சுகந்தத்தின் கிரகம்மா.. இல்லை காலையில் மகாலிங்கம் விட்ட சவாலா எது அப்படி செய்தது என்று தெரியவில்லை முருகானந்தம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நடக்க முடியாத அளவுக்கு மண்டியிருந்த புதர்களை தாண்டி அந்த சமாதி அருகே சென்று விட்டேன். 

சுற்றி சின்னதாய் சுற்று சுவர்.. நடுவில் சற்றே இடிந்து விரிசல்களில் முளைத்து இருந்த அரச மரங்களை தாங்கி கொண்டு இருந்தது அந்த சமாதி . அதன் முன்னே கல்வெட்டு போன்று ஒன்று இருந்தது. குச்சி ஒன்றை கையில் எடுத்து அதன் மேல் படர்ந்திருந்த காட்டு கொடி ஒன்றை விளக்கி டார்ச் அடித்து படித்தேன். சரியாக படிக்க முடியவில்லை... ஒரு சூ காலை காம்பவுண்டுக்குள் வைத்து... சற்று குனிந்து அரைகுறையாக அமர்ந்து படித்தேன்...

"Mary Adella Margret , Daughter of Justice Gregory Singlet, Died because of disease at the age of 19 years 6 months 23 days on September 5, 1893...."

மீண்டும் sms "reply ப்ளீஸ்... worried..:-("

"சார்..."  என்று முருகானந்தம் அலறினார் 

ஏற்கனவே சிறிது பேலன்சில் அமர்ந்திருந்த நான் சற்று தடுமாறினேன்..  மகிழ மரத்தின் தாழ்வான கிளையில் இருந்து தொங்கி கொண்டிருந்த பாம்பு என் முகத்திற்கு நேர் எதிரே நாக்கை நீட்டி சீறிக் கொண்டிருந்தது.


காட்சி பிழை - 1

"நா இந்த கோர்டுக்கு மொதோ  வந்தப்பயே மனசு ஒரு மாறி அமைதி இல்லாம அளஞ்சுச்சு.... அன்னைக்கே அதையும் பாத்தேன்.... மொழங்கால் உசரத்துக்கு சுத்தி compound சுவர் நடுவுல சமாதி மாதிரி.... முத்துசாமி அண்ணன் கிட்ட கூட என்னான்னு கேட்டப்போ பழைய பாத்ரூம் இடிஞ்சு கேடக்கு.. பாம்பு.. பூச்சி பொட்ட இருக்கும் அந்த பக்கம் போகாதேன்னு சொன்னார்.... அப்புறம் டெய்லி நைட் ஒன்னு ரெண்டு மணிக்கு மேல ஜல் ஜல்ன்னு காதுகிட்ட தூக்கத்தில இருந்தாலும் கேட்கும்... ஒரு நாள் இப்படி தான்... அன்னிக்கு எனக்கு நைட் டூட்டி... அகஸ்துமாத்தா 4.30 மணிங்க...  மசூதில கூட குரான் வாசிச்சுகிட்டு இருந்தாங்க.... எழுந்து பாத்ரூம் போனே... ஹ ஹ ஹ ன்னு ஒரு சத்தம்... யாரோ ஜன்னல் பக்கத்துல நின்னுகிட்டு கத்துன மாறி இருந்துச்சு.... அப்படியே ஜிவ்வுன்னு நரம்பெல்லாம் இழுத்துடுச்சு.... 10 நிமிஷமா இன்ச் நகராமா அங்கேயே நின்னேன்.... ஹ ஹ ஹன்னு கேட்டு கிட்டே இருந்துச்சு.... ரூமுக்கு  போகவும் பயம்.... அந்த ஜன்னல தாண்டி தான் திரும்பி ரூம்க்கும் போகணும்....

"அப்புறம் போனீங்கள இல்லையா..."

"போய்டேன் அங்கேயே...." என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை

"என்னங்க விசாரணைக்கு ஹெல்ப் பண்ணா.... உங்களுக்கு சிரிப்பு வருதா..."

"சார் நீங்க கோர்ட்ஸ்டாப்.... இதெல்லாம் கேசுக்கு சல்லி போறாது.. உங்களுக்கே தெரியும்...."

"தெரியும் சார்.... இது எப்போ உங்களுக்கு கேஸ் ஆச்சு... இது ஒரு நேச்சுரல் death... அடிக்கடி உடம்பு முடியாம போகும்.... தீடீர்னு நைட் கால் பண்ணுவார்.. ஓடி போய் அவர் டாக்டர் கிட்ட செப்போம்.. திரும்பி வந்து இங்கயே உட்க்காந்துக்குவாறு..."

" அன்னிக்கு நைட் கூட உங்களுக்கு கால் பண்ணி இருக்காரு இல்லையா..?"

"ஆமா சார் அன்னைக்கு நான் தான் நைட் டுட்டி.... கோர்ட் பாரா "

"அஞ்சு தடவ கால் பண்ணி இருக்காரு...".

தலையை சொரிந்தார்....

"தூங்கிட்டேன் சார்.. போன் பாத்தவுடன் உடனே ஓடி போனேன்.. அவரே வெளில வர ட்ரை பண்ணி இருக்காரு.. கீழ விழுந்ததுல சின்ன அடி... மயங்கி கெடக்காரு நெனச்சு.. பக்கத்து கோர்ட்ல பாரா பக்குரவங்கள உதவிக்கு கூப்ட்டு ஹாஸ்பிடல்ல செத்தோம்...அப்புறம் தான் தெரிஞ்சுது போய்ட்டார்ன்னு,...."

"முகத்துல சின்ன சின்ன கீறல் இருக்கே...."

"அதெல்லாம் தெரியாது சார்....."

"இத நீங்க natural டெத் அப்படீங்கறீங்க...?"

"அவருக்கு பிடிவாதம் சார் ... உடம்பு முடியல்ல.. பொண்டாட்டி புள்ளய தொரத்திட்டு தனியாவே இருந்தாரு... லீவ் போட மாட்டாறு... டாக்டர் கிட்ட போக மாட்டாறு... நாட்டு மருந்து... மூளிகைன்னு... quartersக்கு பின்னாடி ஒரு குட்டி போதரே வச்சு இருக்கார்.... அதுவும் அந்த சமாதி கிட்டேயே... அவங்க wife அவர்ட எவ்வளோ சண்ட போட்டாங்க தெரியுமா..quarters வேணா வேற வீடு போய்டுவோம்..... டாக்டர் கிட்ட போவோம்.. போகவே இல்லையே.... ரொம்ப பிடிவாதம் சார் அவரு"

"சோ நீங்க என்ன சொல்றீங்க..."

"இங்க இருபது வருஷமா இருக்கேங்கற முறையில சொல்லறேன்.... இந்த கோர்ட் compoundக்கு உள்ள... ஏதோ ஒன்னு இருக்கு.... அதுவும் அந்த சமாதி அவர் வீட்டுக்குநேர் பின்னாடி தான் இருக்கு... அவர் வீட்டுக்குள்ள கூட வருமாம்... அதான் அவசரப்பட்டு மந்திரவாதி எல்லாம் கூப்ட்டு மந்திருச்சு கயிறு கட்ட போய்..... உசுர விட்டுடாரு...."

"நீங்க சொல்லறத பாத்த எனக்கு உங்க மேல சந்தேகம் வருது..."

"சார்.. என்ன போய்...." வாயில் கைவைத்தார்

"யார்ட்ட வேணா கேட்டு பாருங்க.... மகாலிங்கம்னா ஒரு பேர் இருக்கு சார்.. இப்போ தஞ்சாவூர் district ஜட்ஜ் வேணு கோபால் இருக்காரே.. அவர் இங்க பட்டுகோட்டையில majistrate-ஆ இருந்தப்ப இருந்து இங்க இருக்கேன்... அவர்ட்ட வேணா கேட்டு பாருங்க இன்னும் என்ன ஞாபகம் வச்சு என்ன பத்தி சொல்லுவார்.... இதே போஸ்ட்ல இதே வீட்ல இருந்த கருணாகரன் என்ன ஆனாருன்னு தெரியுமா... நல்ல மனுஷன்.. திடீர்னு பத்த வச்சு கிட்டாறு.. அதுக்கு முன்ன இருந்தவரு... சொல்லிக்காம கொள்ளாம resign பண்ணிட்டு போயிட்டாரு..  எங்க போனாருன்னே ஆள் அட்ரஸ் இல்ல.... காத்தடிக்குது வெளில வந்து பாருன்னா.. வெளில வந்த தானே சார் தெரியும்... நீங்க வேணா இன்னிக்கு பாஸ்ட் ட்ராக் ஜட்ஜ் quarters-ல தங்கி பாருங்க...... உங்களுக்கே தெரியும்...."

வேலைக்கு சேர்ந்து வந்த முதல் கேசில் வந்த முதல் சவால் விடுவேனா...??

"கண்டிப்பா தங்குறேன்.... " என்றேன்


Saturday, March 8, 2014

ஒ.சி.க. : கௌரி

பிரபா கால் பண்ணான் "மச்சான் கல்யாணத்துக்கு என்ன பிளான்..?"
"கல்யாணமாடா.. இப்போதைக்கு பிளான் எதுவும் இல்ல மச்சா.. இன்னும்  2 வருஷம் ஆகும்ன்னு நெனைக்கிறேன்...."

"டேய்... உன் கல்யாணம் இல்லடா.. நந்தினி கல்யாணத்துக்கு என்ன பிளான்ன்னு கேட்டேன்... 24 மணி நேரமும்  அதே நெனைப்பு தானா...."

வாயை கொடுத்து மாட்டிக்கொண்டேன்.... நந்தினி கல்யாணத்தில் ஆரம்பித்து.. என் காதல், கல்யாணம் , first நைட் வழியாக பிரபா கல்யாணம் வரை போய் ஒருவழியாக கோயம்பத்தூரில் திங்ககிழமை 6 மணி கல்யாணத்துக்கு நானும் பிரபாவும் ஞாயிற்றுகிழமை காலை 8 மணிக்கெல்லாம் மண்டபத்தின் வாசலில் நின்றோம்.

கோபி, அண்ணாமலை எல்லோரும் புனேயில் இருந்து சென்னை மாறி ஒரு  வருடம் ஆகிறது. அவர்கள் ஏதோ  பெயர் தெரியாத எக்ஸ்ப்ரஸில் வந்து கொண்டிருகிருக்கிறார்கள். மண்டபத்திற்கு முன் பெரிய கிரிக்கெட் கிரௌண்ட் அளவிற்கு கேப் விடப்பட்டு அதற்கு முன் ஏறி குதிக்க முடியாத அளவிற்கு பெரிய கேட்டில் திண்டுக்கல் பூட்டு தொங்கி கொண்டிருந்தது. கோயம்பத்தூரில் இறங்கி எப்படியாவது அனைவரும் மண்டபத்திற்கு வந்துவிடுவது அப்புறம் அனைவரும் சேர்ந்து ரூம் போட்டுக்கொள்வது என்பது பிளான். வாசலில் பெரிய பானரில் நந்தினியும் வருங்கால கணவரும் சிரித்துக்கொண்டிருக்க அந்த முகத்தை எங்கோ பார்த்தது போல் இருந்தது.

"டேய் மாப்பள யாரு டா...உன் காலேஜ் தானா...?"
"ஆமாண்டா.. செகண்ட் இயர்ல  இருந்தே லவ்வு... குருசரண்... மெக்கு..."
குருசரண்... மெக்கு... இந்த வார்த்தைகள் மூளையில்  ஒரு மூலையில் இருந்த நியுரான்களை தட்டிவிட்டு என் ஆள் சொன்னது பிளாஷ் ஆனது.
"குருசரன்னு ஒருத்தன்... மெக்கு.. எத்தன வருசமா என் பின்னால அலஞ்சான் தெரியுமா.... நா ஒத்துக்கவே இல்லையே.... ஒரு தடவ என் கிளாசுக்குள்ள வந்து என்ன போட்டோ எடுத்துட்டான்.... அத ரவி பாத்துட்டான் (ரவி அவளை பார்க்கும் மற்றொருவன்..!!).. அப்புறம் பெரிய சண்டை ஆயிடுச்சு..."

அந்த குரு சரணா இவன்...
"டேய் இவன் நந்தினியை எப்போல இருந்து லவ் பண்றான்..."
"பஸ்ட் இயர்ல பாத்ததுல இருந்தே..."
நந்தினியையும் சும்மா சொல்லிவிட முடியாது.... ஏகப்பட்ட பேர் அவள் பின்னால் சுற்றினார்களாம்... நந்தினியும் என் ஆள் கௌரியும் ஒரே department தான்.
"எப்போ ப்ரோபஸ் பண்ணான்...."
"final இயர்ன்னு நெனைக்கிறேன்..."
"பிரபா இவன் என் ஆள் பின்னாடியும்  சுத்தி இருக்கான்டா..."
"டேய் எனக்கு அவன பிரஸ்ட் இயர்ல இருந்து தெரியும்டா... அவன் நந்தினியை தான் லவ் பண்ணறான்... ஆமா உன் ஆள் போட்டோவ என்னிக்காவது காமிச்சியா...?"
போனை எடுத்து நானும் அவளும் கருடா மாலில் எடுத்த போட்டோவை கமித்தேன்....
"அவசரர பட்டுடியே மச்சான்.. உனக்கென்ன ஆளா கெடைக்கல்ல.. FBல தமன்னா பிக் இருக்கும் போதே நெனச்சேன்....."  என்றானே பாக்கணும்.

பெங்களூர் வந்ததில் இருந்து ஒரு வருடம் நாய் போல சுத்தி.... அவளை பன்னிரெண்டாவதில் இருந்து லவ் பண்ணும் ரவியிடம் (முன்னே சொன்னேன்ல..) சண்டை போட்டு....உயிரை கொடுத்து ஒரு பொண்ண கரெக்ட் பண்ணிருக்கேன். நான் இதை எதிர் பார்க்கவே இல்லை...:-(

"டேய் என்னடா.. நேர்ல பாத்தேனா நயன்தாரா மாறியே இருப்பாட...."
"எ நைடில பத்தா நல்லருப்பான்னு சொல்லேன்...." ரொம்ப கூலா வானிலை அறிக்கை படிக்கிற மாறி சொன்னான்.
"டேய் ஏ அஞ்சலட அவ.." அவனை அடிக்க போனேன். அதற்குள் கோபி, அண்ணாமலை மற்றும் கூட எனக்கு தெரியாத சில பெண்கள் வர.. இப்போதைக்கு தப்பித்தேன்.

பொண்ணு வீட்ல இருந்தும் யாரும் வரல.. மாப்பள வீட்டில் இருந்தும் யாரும் வரல நாங்கள் போய் நின்றதை பார்த்து மண்டப செக்யூரிட்டி அதிர்ந்து விட்டார். மாப்பிளை பேரு சொல்லுங்க பொண்ணு பேரு என்ன.. மாப்பள எந்த ஊரு போன்ற கேள்விகள் கேட்டு திருப்திகரமான பதில் சொன்னதால் உள்ளே விட்டார். தற்கலிகமாக மாப்பிளை ரூமில் இடம் தந்தார்கள். அங்கேயும் ஆரம்பித்து விட்டான் பிரபா
"அண்ணே உங்களுக்கு.. டேய் ஹரி உன் ஆளு பேரு என்ன..."
"கௌரி..." கடுப்பாக சொன்னேன்
"ஹா.. கௌரின்னு ஒரு பொண்ணு... electrical department தெரியுமா...."
"யாருடா.. பெரிய கண்ணோட.... இடுப்பு வரைக்கும் சடை போட்டு இருப்பாளே அவளா..."
"அவ காயத்ரினே.. அவ இல்ல... கொஞ்சம் சுமாரா..."
"கொஞ்சம் சுமாராவா..." என்று அழுத்தி கூறி என்னை பார்த்து சிரித்து விட்டு "தெரியலையேடா பிரபா.." என்றார் அப்பொழுது கோபி முகம் கழுவி விட்டு வெளியே வந்தான்
"இந்தா கோபி கிட்ட கேட்போம்... நம்ம காலேஜ்லையே பெரிய database இவன்துதான்.... எல்லா பொண்ணு பேரு ஊரு department எல்லா தெரியும்.... டேய் கோபி பேரு கௌரி... department electrical.... டக்குன்னு சொல்லு ஆள் எப்படி இருப்பா...?"
அதிர்ச்சியாக பார்த்தான்.... "டேய் நம்ம காலேஜ் தானா... ?"
"ஆமாடா..."
"first time in my history.... no matches foundன்னு வருதுடா..."
அனைவரும் சிரித்தார்கள்.. எனக்கு கோபம் தலைகேறியது.....
"டேய் இந்த கல்யாண மாப்பிளையே.. என் ஆள் பின்னாடி சுத்துனவன் தாண்டா... தெரியும் இல்ல....?" என்று நான் கேட்கவும் அந்த மாப்பிளை உள்ளே வரவும் சரியாக இருந்தது.

அய்யோ கேட்டு இருப்பானோ.... "வாங்க மாப்பிளை... ஹாப்பி மாரீட் லைப்.." என்று ஏதேதோ உளறிகொண்டிருந்தேன். "மாப்பிளை மாறியா இருக்கேன்.. நான் குருவோட அண்ணன் சபரி.... கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆச்சு" என்று கூறி மிக சந்தோசத்துடன் அவர் மனைவியிடம் இதை கூற ஓடி விட்டார்.

பிரபா இந்த காதல் சந்தேகத்தை தீர்க்க குருவிடம் கேட்டு விடுவது என்று முடிவு எடுத்துவிட்டான். நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. மாலை receptionக்கு இப்போதே கோட் சூட் போட்டு சின்ன தொப்பையுடன்.. நேற்று செய்த facial முகத்தில் மின்னும் அளவிற்கு கச்சித மாப்பிளையாய் வந்தான் குரு.

எப்போழுதும் அப்பா அம்மா தங்கச்சி என்று யாரோ ஒருவர் அவன் கூடவே நிற்க அவனிடம் எதுவும் பேச முடியவில்லை. எப்படியோ அவனிடம் காதோரமாக பேசி தனியாக அழைத்து வந்து விட்டான் பிரபா.
"என்னடா பிரபா... சரக்குக்கு காசு வேணுமா.. பார்ட்டியா.." எனக்கேட்டான் குரு
"அதுவும் தான்... அதவுட இன்னொரு மேட்டர்... உனக்கு கௌரின்னு ஒரு பொண்ணு... electrical department.. தெரியுமா...?"
குருவின் முகம் மாறியது.... "தெரியும்... நந்தினி கிளாஸ் தான் சொல்லு..."
"அவள எப்பயாவது போட்டோ எடுத்தியா...."
"எத்தன பேரு டா கேட்பீங்க.... "
"வேற யாரு டா கேட்டா..."
"நா அவள சத்தியமா போட்டோ எடுக்கல டா... நா எடுத்தது நந்தினிய... அந்த போட்டோ கூட இருக்கு..." போனில் எடுத்து கமித்தான்.... புல் போகஸில் நந்தினி வாயில் கைவைத்து சிரித்துக்கொண்டிருக்க.. அவுட் ஆப் போகஸில்.. இடது மூலையில் இருந்தாள் கௌரி.
"இந்த போட்டோ என் லவ் souvenir... எப்பயுமே வச்சுருப்பேன்... இப்படி தான் ரவின்னு ஒரு லூசு பய வந்து சண்ட போட்டான்.. ஒதைச்சு அனுப்பிச்சேன்.. உனக்கு யாரு சொன்னா..." என்று கையை முறுக்கினான் குரு . 
சொல்லிடாத...சொல்லிடாத என்று கை அசைத்தேன்.
"அதே ரவி தான்.." என்றான் பிரபா.

பெங்களூரில் அவளிடம் கேட்டேன்.... "நீ ஏன் FB-ல உன் பிக் வைக்கல..?"
அதிர்ச்சியாக என்னை பார்த்தாள்..... "ஒவ்வொருத்தன் போட்டோ போடாத.. FB-ய deactivate பண்ணு லவ்வர்ச நச்சுறாங்க.... நீ ரொம்ப கிரேட் டா..." சிரித்தாள்.. சிரித்தேன்.... "போட்டோ போட்டா நெறய பசங்க தொல்ல பண்ணுவாங்க அதான்... "
"ஹ்ம்ம்....(முடியல....)"
"நீ ஆச பட்டுடியே... நா வேணா இப்படி ஒரு போஸ் கொடுத்து போட்டுடவா..." என்று கைகளை வைத்து முகத்தை மறைத்து... கண்களை மட்டும் காட்டி கண்சிம்மிட்டினாள்..... யாருங்க சொன்னா தமன்னா பிக் இருந்தா மொக்க பிகர்ன்னு...?




Thursday, February 13, 2014

பூவேழினி 5

மதுரையில் இருந்து முப்பது காததிற்கு தெற்கே இருந்தது தங்க சுரங்கங்கள் நிறைந்த, ஏழழேழ் நாடுகளில் குறும்பனை நாட்டின் தலைநகர் சென்னூர்.  ஆங்கே சுற்றிலும் பல காதங்களுக்கு தங்க கிணறுகள் வெட்டப்பட்டு இரவு பகல் பாராமல் சப்பை மூஞ்சியும் வெளிர் வண்ணமும் குட்டையான உடல்வாகும் கொண்ட மனிதர்கள் பலர் சுரங்கங்களில் தங்கம் வெட்டி எடுத்துக்கொண்டு இருந்தனர். அதனால் ஆயிரகணக்கான தீவர்த்திகள் பல நூறு கிணறுகளில் கொழுந்து விட்டு எரிய... வெளிர்  மஞ்சை பூசிய பெண்ணின் எலும்பிச்சை முகம் போல பிரகாசித்துக் கொண்டிருந்தது சென்னூர்.

 அவ்வூருக்கு சற்று தூரத்தில் சிறிய மடுவில் இருந்து சென்னூரை பார்த்த உதயனுக்கு.... தங்க கிணறுகள் இரவு நேரத்தில் உதித்த சிறு சிறு கதிரவண்களை போல் தெரிந்தது. சென்னூரை தங்க நகரம் என்று கூறுவதற்கு இதுவும் ஒரு காரணமோ என்று எண்ணிக்கொண்டான்.

தங்கத்தை பற்றியும் தங்க சுரங்கங்கள் பற்றியும் நம் மக்கள் வெகுவாக அறிந்து வைத்திருந்தனர். ராபதேஸ்வரர் வந்த பிறகு இக்கலை மேலும் வலு பெற்று பிற தாதுக்களை நீக்கி மிக தரமான தங்க கட்டிகளை உருவாக்க கற்றுக்கொண்டனர். வெட்டி எடுக்க பெற்ற தாதுக்கள் நேராக கொல்லன் உலைக்கு சென்று தரமாக சுத்த தங்கமாக பிரிக்க பெற்று பின்னர் தேவைக்கு ஏற்ப தங்கத்தையும் தாமிரத்தையும் கலந்து நகைகள், காசுகள், மாலைகள் செய்யப்பட்டன.

தங்கதிற்கான மோகம் இன்று போல் அன்றும் ஓங்கி பறந்து கொண்டு தான் இருந்தது.. அதனால் பற்பல வியாபாரங்கள் செய்யும் வணிகர்களும்... சிற்றரசுகளின் ராணிகளும், இளவரசிகளும் இன்னும் பல பணக்காரர்களும்.. அவர்களுக்கு வியாபாரம் செய்ய ஆடைகள், உணவுகள் போன்றவற்றை விற்கும் சிறு வியாபாரிகளும் என்று பலர் ஊருக்குள் வந்தும் போயும் கொண்டிருந்தனர்.

கலை நயம் மிக்க நகைகளை செய்வதில் கைதேர்ந்தவர்கள் சென்னூர் தட்டான்கள். நகை செய்யும் கூடத்திற்கு அனுமதி இன்றி வேறொருவர் சென்றால் தலை இல்லாமல் தான் வெளிவர வேண்டி இருக்கும்.ராஜாங்கத்திற்கு தேவையான தங்க நாணயங்களை செய்யும் கூடமும் அங்கே இருந்தது.  அதனால் காவலும் கட்டு கோப்பும் பலமாக இருந்தது. மலை போல ஊரை சுற்றி கோட்டை எழுப்பபட்டு அகழியும் வெட்டப்பட்டிருந்தது. வீரர்கள் வாளும் வேலும்  ஏந்திக்கொண்டு தயாராக நின்று கொண்டிருந்தனர். இந்நாட்டின் தலைவன் இந்தினை மீறி காற்று கூட சென்னூர் கோட்டை கதவுகளை தாண்ட முடியாது.  கோட்டைக்கு வெளியிலேயே பல வீரர்கள் காவல் புரிந்து கொண்டு இருந்தனர், ஒருவரையும் சாலையில் நிற்க விடவில்லை. நகர்த்திக்கொண்டே சென்றனர். யாரோ ஒருவனை நான்கு வீரர்கள் அவன் கத்த கத்த எங்கோ தூக்கி சென்றனர்.

சென்னூரை ஒரு தடவை ஆவது பார்த்துவிட வேண்டும் என்கிற உதயனின் ஆசை  இன்றாவது பாதி நிறைவேறி விட்டது. ஆம், கோட்டைக்கு வெளியே கிணறுகளை பார்த்தாகிவிட்டது.... அப்பா எவ்வளவு ஆழமாக தோண்டிக்கொண்டே போகிறார்கள். விசாலமான கடை வீதிகள், வித விதமான சாமான்கள், உணவு வகைகள் அப்பப்பா எத்தனை எத்தனை... ஒரு சதாரான மனிதனின் இச்சைகளை போக்க எத்தனை எத்தனை வழிகள். சில பெண்கள் கூட்டமாக பாண்டிய நாட்டை பற்றி பாடி ஆடிக்கொண்டிருக்க சுற்றி  நின்று கைத்தட்டிக்கொண்டிருந்தது சிறு கூட்டம். கோட்டைக்கு வெளியிலேயே இவ்வளவு கலகலப்பாக இருந்தால், உள்ளே எப்படி இருக்கும் என்று உதயனின் மனம் என்ன துவங்கியது. நமது வேலை இதுவல்ல மதுரை செல்ல வேண்டும், குருவின் கட்டளை. இருந்தும் இன்று இரவு எங்காவது தங்கி நாளை சூர்யோதயதிற்கு பிறகு தானே செல்ல வேண்டும். ஏன் இன்று இங்கேயே இரவு தங்க கூடாது.. என்று அவன் மனமே கேள்வி கேட்டு அறிவு பதில் சொல்வதற்குள் மனமே சரி என்றும் பதி சொல்லி விட்டது.

கோட்டை கதவுகள் திறந்திருந்தால் அதன் வழியாக நகரத்தின் சிறு பகுதியை ஆவது பார்த்து விடலாம். அணைத்து வாசல் கதவுகளும் மூடி ஆகி விட்டது.. திறந்திருப்பது ஒரே ஒருவாசல் கதவுகள்....  தங்க வாசலின் கதவுகள். எறும்புகள் தங்க தாதுவை கோட்டைக்குள் கொண்டு சேர்க்கும் வழி. அங்கே சென்றால் விரட்டுவார்களோ..போய் தான் பார்ப்போமே.. ஒரு வேளை இனி சென்னூர் வர சந்தர்ப்பமே அமையாமல் போய்விட்டால் பார்க்கவே முடியாதே என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டே கிழக்கு பக்கத்தில் இருக்கும் தங்க வாசலை நோக்கி நடந்தான்.

கோட்டை வாசலுக்கு அருகே அவ்வளவாக கூட்டம் இல்லை.. காவலர்கள் தான் அதிகம் நின்றனர். வாயிலுக்கு அருகில், சுரங்கத்தில் இருந்து எருது பூட்டிய வண்டிகள் வரும் வழியில் எறும்பு மனிதர்களின் வீடுகள் இருந்தது. மூங்கில்களில் கட்ட பட்டிருந்த குடிசை வீடுகள்... வித்தியாசமான உணவின் வாசம் உணவு வகை என்னவென்று தெரிவிக்க வில்லை என்றாலும் உதயனின் பசியை கிள்ளி விட்டு மிதந்து சென்றது. மேலும் அக்குடியிருப்புக்கு அருகில் சென்றால்.. வாசல் நேராக இருக்கும் ஊரும் தெரியும்.

உதயன் அவ்வீடுகளை நெருங்கினான்.... வெளிர் நிறத்துப் பெண்கள் குழைந்தகளுடன் விளையாடி கொண்டிருந்தனர்.....  வேலை விட்டு வந்த எறும்புகள் துங்கி கொண்டிருந்தார்கள். கிழக்கு தேசத்தில் இருந்து சுரங்கங்களில் வேலை செய்ய அழைத்து வரப்பட்ட அடிமைகள்.  அத்தேசத்து பெண்கள்  விதவிதமான  பொருட்களை செய்து தத்தம் வீட்டின் வெளியில் அடுக்கி வைத்திருந்தனர். பனை ஓலைகளிலும், மூங்கில்கலிலும் சிறு சிறு பொம்மைகள்.... நாற்காலிகள் களிமண்ணில் செய்யப்பட்டிருந்த தட்டுக்கள் என்று பல விதமான பொருட்களை அடுக்கி வைத்திருந்தனர்.

இதை எல்லாம் ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே வந்த உதயனை ஒரு முதாட்டி கைகளை அசைத்து அழைத்தாள். அவனிடம் வேலைப்பாட்டுடன் சிகப்பு மஞ்சள் நிறத்தில் பின்னப்பட்டிருந்த கைகளில் கட்டிக்கொள்ளும் கயிறு ஒன்றை கொடுத்தாள்.

"எனக்கு இது தேவை இல்லையே பாட்டி..."
அவள் நீட்டிக்கொண்டே இருந்தாள். உதயனுக்கு என்னவென்றே புரியவில்லை கைபையில் வைத்திருந்த காசுகளை ஒரு நாணயத்தை எடுத்து கொடுத்தான். பாட்டி அதை வங்கி கொள்ளாமல்  கயிறை மட்டும் நீட்டிக்கொண்டிருந்தாள்.
"பணம் கொடுக்காமல் தானமாக நான் எதுவும் வாங்கி கொள்வதில்லை" என்று கூறி மேலே நடக்க துவங்கினான்.
அவனை தடுத்து நிறுத்திய பாட்டி... சிறிய மணி ஒன்றை கையில் எடுத்து இசைத்தாள். உள்ளிருந்து பதின் வயதில் இருக்கும் பெண்ணொருத்தி வெளியில் வந்தாள். பளிங்கு போன்ற நிறம் கத்தி போன்ற கண்கள், சிறிய உதடுகள். தமிழகத்து பெண்களுக்கும் இவளுக்கும் அத்தனை வித்தியாசம்.... தமிழகத்து பெண்களின் கண்கள் தாமரை மொட்டு என்றால் இவளின் கண்களோ மல்லிகை மொட்டு.

அவள்பாட்டியிடம் ஏதோ பேசிவிட்டு.....
"நீங்கள் மதுரைக்கு போக திட்டமிட்டுள்ளீரா...."
உதயனுக்கு அதிர்ச்சியாக இருந்தது... யார் இவர்கள் இவர்களுக்கு எப்படி தெரியும்.....
"யார் அப்படி சொன்னது.... அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை...."
அவள் இவன் இதை  என்று எதிர்பார்த்ததை போல் முகத்தில் எந்த சலனமும் இல்லமால்
"உங்களால் போக முடியாது.... உங்களை சென்னூர் விடாது..." என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டாள்.
மூதாட்டி இன்னும் கயிறை நீட்டி சிரித்துக்கொண்டிருந்தாள்....  இதற்கு மேலும் அங்கே நிற்காமல் உதயன் நடக்க துவங்கினான்.

அப்போது தீடீர் சலசலப்பு ஏற்பட்டது.... புழுதி பறக்க குதிரையில் அடிப்பட்டு மயக்க நிலையில் வந்த
வீரன் தங்க வாசலுக்கு சென்று விழுந்தான். சட்டென்று பதற்றம் தொற்றி கொண்டது.... வீரர்கள் குதிரையில் வந்தவனை உள்ளே  அழைத்து சென்றனர். அபாய சங்கு முழங்கப்பட்டு.... வீதிகள் வெறிச்சோடி காவலர்கள் குவிக்கப்பட்டனர். பகைவர்களால் பிரதம அமைச்சர் கவிக்குன்றனார் கடத்தப்பட்டுள்ளார் என்றும் அவருடன் இளவரசியும் சேர்ந்து கடத்தப்பட்டுள்ளார் என்று அரசல் புரசலாக வந்த செய்தியை உதயனால் நம்ப முடியவில்லை.


Wednesday, February 5, 2014

பூவெழினி 4

4. கயல் விழி மான்

அடுத்த அம்பு நாண் ஏற்றப்பட்டு... காற்றை கிழித்துக் கொண்டு கிளம்பியது.... அதன் நுனியில் சாதாரண அம்பு போல் இல்லாமல் சுழலும் சக்கரம் போல் வடிவமைக்கப் பட்டிருந்தது.... அதன் விளிம்புகளில் கூரான முனைகள்.... மின்னல் வேகத்தில் பாயும் வேளையில் அதிவேகமாக சுழலும் அந்த சக்கரம்... பாறைகளில் கூட துளை இட்டு விடும் போல.

கிர்ர்.. என்று இரும்பு உராயும் சத்தத்துடன்  அம்பு நன்னனை நோக்கி விரைந்தது.... இது நேரம் வரையில் சற்று சுதாரித்து இருந்த நன்னன்.... இடப்புறமாக சாய்ந்து.. தரையில் உருண்டு எழுந்தான்... அம்பு அருகில் இருந்த தேக்கு மரத்தில் பாதி துளையிட்டு மேலும் கிழும் ஆடியது. அம்பு வரும் திசையை உணர்ந்த அவன் நொடி தாமதிக்காமல் வட்டமாக ஓட ஆரம்பித்தான்.... அவன் ஓட ஓட... அவன் வேகத்திற்கு இடு கொடுக்க முடியாமல் ஒவ்வொரு அம்பாக  அவனை தழுவாமல் நழுவிச் சென்றது.

அவன் கால்களே கண்கள் உடையது போல் மேடுகள் பள்ளங்கள் புதர்கள் பார்த்து ஓடியதால் நன்னனுக்கு ஓடுவதில் கவனம் செலுத்த தேவையில்லாமல் முழுகவனத்துடன் அவன் கண்கள் கோபக்கனலை கக்கிக்கொண்டு  கூர்மையாக அம்பு வரும் திக்கிலே இருந்தது. சுற்றி சுற்றி வட்டமாக ஓடிக்கொண்டே விட்டத்தை குறைத்ததால் புரவியின் மீது அமர்ந்திருந்த ஒருவனும் அவனை சுற்றி மூவரும் தெரிந்தனர்.

புரவியின்  மீது அமர்ந்திருந்தவன் அம்பு எய்த மற்றவர் அவனை தாக்க வந்தனர். நன்னனின் கோபம் கட்டுக்கடங்காத எல்லையை தாண்டி இருந்தது. நிகரில்லாத வீரனை கோளைத்தனமாக வஞ்சகமாக கொன்றுவிட்டார்கள். இவர்களை கொன்றாலும் அவன் ஆத்திரம் தீராது.
நன்னன் உதடுகள் சங்க பாடல் ஒன்றை கானகம் அதிரும்படி பாடியது... பறவைகள் பறந்தன...  முயல்கள் மிரண்டு மீண்டும் வலைக்குள் பதுங்கின.. சிங்கங்களின் ரோமங்கள் கூட சிலிர்த்தது....!!!
" மைத்துடை யானை கைவைத்து உறங்க...."
எதிரில் வாளை வீசிக்கொண்டு வந்த வீரன் மதங்கொண்ட யானையின் மேல் மோதியவனை போல் நன்னனின் வாளால் தாக்கபட்டு பறந்தான்....
"தின்பினி முரசம் கண் கிழிந்து உருள..."
கண்களின் குறுக்கே வாளால் வெட்டுப்பட்டு வாளுடன் வீழ்ந்தான் ஒருவன்..
"காவல் வெண்குடை கால் பிரிந்து உலற..." மற்றொருவனை வீழ்த்தி நான்கு கால் பாய்ச்சலில் விரைந்த நன்னன் சிறிது சிறிதாக தன்னை நெருங்குவதை உணர்ந்த அம்பு எய்தியவனின் கைகள் உதற ஆரம்பித்தது. குதிரையை திருப்பிக்கொண்டு தப்பிக்க முயற்சிதான்... குதிரை முன்னங்கால்கல்களை தூக்கி புழுதி பறக்க ஓடத்துவங்கியது.
"மேலோர் உலகம் எய்தினன் ஆருயிர் புங்கன்.."
மின்னல் போல பறந்து சென்று தாக்கியது நன்னனின் குறுவாள்.
குதிரை ஆளில்லாமல் தனியாக காட்டுக்குள் பறந்தது.

கோபம் இன்னும் தணியவில்லை நன்னனுக்கு.... வாளால் மரத்தில் ஓங்கி ஓங்கி வெட்டிக்கொண்டிருந்தான்.... வாள் நெளிந்து பயனற்று போனது.. மரம் கண்ணீர் வடித்தது. அப்படியே வேரில் சாய்ந்து தரையை வெறித்தான்.. கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளித்தது. தாய் தந்தை இல்லாமல் தனியாக இருக்கும் என் மீது அந்த அம்பு பாய்ந்திருக்கலாம்... புங்கனுக்காக காத்திருக்கும் அவன் தாய் தந்தையருக்கு என்ன பதில் சொல்வது.. அவன் ஊரே அல்லவா அவனை எதிர்பார்த்து காத்திருக்கிறது அவர்கள் எவ்வளவு ஏமாந்து போவார்கள் அஹா அவன் அத்தை மகளின் வாழ்க்கை...? உரிய நேரத்தில் திருப்பி அனுப்புவதாக சொன்னாரே குரு.. அவர் வாக்கு பொய்த்துவிட்டதே...!!

எப்பொழுது இருந்து நம் மக்கள் இத்தகைய தீ காரியங்களில் இடுபட ஆரம்பித்தார்கள்.. இவர்கள் நம் மக்கள் தானா..? தீடிர் என்று எழுந்த சந்தேகத்தினால் அருகில் சரிந்து கிடந்தவனை உற்று பார்த்தான் நன்னன். அவர்களின் கவச உடை வித்தியாசமாக முழு உடம்பையும் தலையையும் கூட மூடி இருந்தது. சரிந்து கிடந்தவனை மல்லாக்க திருப்பினான்...
 "ஆ.." என்று முனகினான் அடிப்படவன் .
அவன் மார்பு கவசத்தில் புரியாத முத்திரை ஒன்று பொறிக்க பட்டிருந்தது.அவர்கள் எய்த அம்பு ஒன்றை கையில் எடுத்தான்.. அம்பின் முனை சுழன்றது.. இது போன்று இது வரை எங்கும் பார்த்ததில்லையே.

அப்பொழுது அருகில் இருந்த புதர்களில் யாரோ தாக்க வருவது போல் சலசலப்பு ஏற்ப்பட்டது... நன்னன் அடிப்பட்ட வீரனிடம் இருந்து எடுத்து அம்பை கையில் இறுகி பிடித்தான். புதருக்கு உள்ளிருந்து கரிய விழிகளை உருட்டி கொண்டு.. மிரட்சியான பார்வையுடன் மான் ஒன்று துள்ளி குதித்து வந்தது.... ஒரு நிமிடம்..ஆ மான் இல்லை.. பெண்.. பெண் ஒருத்தி துள்ளி குதித்து ஓடி வந்தாள்... நன்னனை பார்த்ததும்... ஓட்டத்தை திடுதிப்பென்று நிறுத்தி.. தடுமாறி விழப்பார்த்து... திசையை மாற்றி மறுப்பக்கம் ஓடினாள்... அந்த திசையில் குதிரையில் ஒருவன் வரவே... மாட்டிக்கொண்டதை எண்ணி அடுத்து என்ன செய்வது என்று எண்ணிக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தாள்.

குதிரை வீரன் நெருங்கி அவள் கன்னங்களை வருட வந்தவன் சிறிய ஊசி ஒன்றால் அவள் கழுத்தில் குத்தினான்... நொடி பொழுதில் அவள் இடுப்பில் சொருகி இருந்த கத்தியை எடுத்து அவள் அவன் கைகளை கீறவும்.. நன்னன் வீசிய அம்பு அவன் முன்கைகளில் சொருகவும் சரியாய் இருந்தது. அலறிக்கொண்டே கீழே விழுந்தான்.

அவள்கயல் போன்ற கண்களை மேலும் பெரிதாக்கி அவனை நீ யார் என்பது போல் பார்த்தாள். நன்னன் பெண்களின் வீரம் பற்றி சிறிது கேள்வி பட்டிருந்தாலும் அதை நம்பாமல் தான் இருந்தான். அவள் கண்களில் மிரட்சியும் இவனை கண்டதும் ஆச்சர்யமும் வெளிப்பாடதே தவிற பயம் வெளிப்படாதது அவனுக்கு ஆச்சர்யமாகவே இருந்தது. பெண்களின் வீரத்தை மட்டுமல்ல மேகமலை காட்டில் சமயல் செய்யும் சில பாட்டிகளை தவிர்த்து பெண்களையே இப்பொழுது தான் பார்கிறான் என்றும் வைத்துக்கொள்ளலாம்.

அவள் சாதாரண பெண்ணாக இருக்க முடியாது. அவளை பற்றி இன்னும் அறிய சற்றே அவளை நெருங்கிச் சென்றான். அவள் கத்தியை முன்னாள் நீட்டி இன்னும் முன்னாள் ஒரு அடி எடுத்தால் குத்திவிடுவேன் என்பது போல் பார்த்தள். இது என்ன பெண்கள் கண்ணால் பேசுவார்கள் என்றும் கேள்விபட்டிருக்கிறான்.. அனால் இது வரையில் அவன் பேசியதே இல்லையே.. எல்லாம் புரிகிறதே..?
"பெண்ணே வாய் திறந்து பேசமாட்டாயோ...?"
அவளால் பேச முடியவில்லை... திடீர் என்று கால்கள் தள்ளாட.. நிற்க முடியாமல் கிழே விழுந்தாள்... அவளை தாங்கி பிடித்த நன்னன்
"யார் நீ..?"
"யார் நீ?" என்று கேட்டது அதளபாதாளத்தில் யாரோ குசுகுசுவென்று  ரகசியம் பேசியது போல் விழுந்தது.

"பூவெழினி ..பூவெழினி..!!! " என்று அவள் முனுமுனுத்துக்கொண்டே மயங்கி அவன் மார்பில் சரிந்தாள்.

Tuesday, January 28, 2014

பூவெழினி 3

3. உற்ற நண்பன்

பொதுவாக காரை என்று முடியும் ஊர்களை கண்களை மூடிக்கொண்டு கடற்கரை ஊர்கள் என்று கூறி விடலாம். ஏழ்குணகாரை நாடுகள் என்பது கடற்கரையில் இருந்த ஏழு நாடுகளை குறிப்பதுவே. அக்காலத்தில் மிக முக்கிய மற்றும் பெரிய குடியேற்றங்கள் கடற்கரையை ஒட்டி இருந்தது. அதற்கு முக்கிய காரணம் ஓங்கி உயர்ந்த மலைகளும்.. அடர்ந்த காடுகளும் தான். கரடு முரடான காடுகளில் செங்குத்து சரிவுகளில் ஓடி வரும் ஆறுகளும் அவ்வற்றை சுற்றி மண்டியிருந்த காடுகளும் அதில் இருந்த அபாயகரமான வன விலங்குகளும் குடியேறுவதை கடினமாக செய்து இருந்தது.  அப்படிப்பட்ட கடினமான புகலிடத்தில் வாழ்ந்தது புங்கனின் ஊர் கால்னாட்டன் காடு.

அவ்வூர் மக்களின் ஒவ்வொரு நாளும் கேள்விக்குறியாகத்தான் இருந்தது. திடீர் என்று தாக்கி ஊரை சூறையாடும் நாடடோடி கும்பல்கள், புலிகளின் வேட்டை, பொங்கி வரும் காட்டாற்று என்று அவ்வூர் பதுகாப்பற்றதாகவே இருந்ததது. இருந்தும் அவர்களுக்கு கடற்கரையில் இருப்பதை விட காட்டில் வாழ்வது அவ்வளவு ஆபத்து இல்லை என்றே கருதினர். கடல்கள் என்றாவது ஒரு நாள் மலைகள் போல எழுந்து..... விரிந்து கிடக்கும் மதுரையை கூட விழுங்கி விடும் என்று அவர்கள் பயந்தனர். அவர்களுக்கு உயரமான இடம் பாதுகாப்பானதாக பட்டது.

ஏதேச்சையாக அந்த பக்கம் வந்த ராபதேஸ்வரிடம் தங்கள் குறைகளை கூறி புலம்பினர். அப்போது அவர் அவர்களுக்கு காட்டிலேயே புதிதாக இடம் ஒன்றை தேர்வு செய்து சுற்றி அரண் அமைந்த ஊரை ஏற்படுத்தினார். மேலும் அவர்கள்  ஊரிலேயே வீரனான புங்கனை தேர்ந்தெடுத்து அவருக்கு சிஷ்யனாக  என்றும் கேட்டுக்கொண்டனர். ராபதேஸ்வரரும் அதை ஏற்றுக்கொண்டு அவனுக்கு முழு பயிற்சி அளித்து  சமயத்தில் மீண்டும் கால்னாட்டன் காட்டிற்கு அனுப்புவதாக வாக்களித்தார்.

அன்று வரை தன் அத்தை மகளை காதலித்து திருமணதிற்கு காத்திருந்த இளைஞன் புங்கன் அவளை தனக்காக காத்திருக்கும்படிகூறி விட்டு தன் ஊருக்காக விடைபெற்று வந்து இத்துடன் மூன்று ஆண்டுகள் ஆகிறது. இத்துணை நாள்களாக பயிற்சி முடிந்ததும் ஊருக்கு செல்லலாம் என்றும் எத்தனை தூரம் விரைவாக கற்றுகொண்டால், அத்தனை விரைவாக தன் காதலியை காணலாம் என்று எண்ணியிருந்த புங்கன் ராபதேஷ்வரர் தன்னை கபடாபுரதிற்கு செல்ல கட்டளை இட்டதும் கொஞ்சம் ஒடிந்து தான் போனான். இருந்தும் குருவின் வார்த்தைக்குள் ஆயிரம் காரணம் ஒழிந்திருக்கும் என்று எண்ணியவனாய் மகிழ்ச்சியாக கிளம்பினான்.

கூடவே இருந்து, பழகி பயிற்சி பெற்று உற்ற நண்பர்களாய் இருந்த அவர்கள், பயிற்சி முடிந்தவுடன் மதுரை படைகளில் ஒன்றாக சேரப்போகிறோம் என்று எண்ணி இருந்தனர். இப்படி நால்வரையும் நான்கு மூலைக்கு அள்ளி தெளிப்பார் என்று அவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தது வியப்பில்லை. 

"போங்கள்.." என்று ராபதேஸ்வரர் உத்தரவிட்ட உடன் அடுத்த கருகல்லிலேயே நால்வரும் விடை பெற்று கிளம்பி விட்டனர். நல்லி தெற்கு திசையில் பயணம் மேற்கொண்டான்... உதயா கிழக்கே சென்று தன் அன்னையை பார்த்துவிட்டு வடக்கே பயணப்பட திட்டமிட்டுள்ளான்.... புங்கனும் நன்னனும் அடர்ந்த காடுகளின் ஊடே புரவிகளை மெதுவாக ஓடவிட்டுக்கொண்டு பேசிக்கொண்டே சென்றனர். நன்னன் கபடபுரத்தை தாண்டி எல்லையில் காவல் இருக்கும் நாகர் படைக்கு செல்லவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களாக பயணப்பட்டதால் அவர்கள் புரவிகள் களைப்படைந்திருந்தாலும் அவர்கள் என்னவோ உற்சாகமாகத்தான் இருந்தார்கள்.

"நேராக கபடாபுரம் செல்கிறாயே... இந்த முறையும் உன் அத்தை மகளை சென்று பார்க்கவில்லையா...." எனக் கேட்டான் நன்னன். 

"அங்கே போனால்.. கல்யாணாம் விருந்து என்று சில மாதம் தங்க வேண்டி வரும் .... காலத்தில் கபடாபுரம் சென்று சேர முடியாது..."

"ஒருவழி செய்... உன் அத்தை மகளை அங்கே வர சொல்லிவிடு.... இன்னும் தாமதித்தால் வேறு யாரையோ மணந்து கொள்ள போகிறாள்" என்று நகைத்தான் நன்னன்.

"உனக்கு பெண்களிடம் அதிகம் பழக்கம் இல்லை அல்லவா அதான்  இப்படி பேசுகிறாய்.... அவள் என்னை மணம்புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் நான் மேரு மலையை தாண்டி போனாலும் தொடர்ந்து வந்து என்னை பிடித்து விடுவாள்...."

"ஒரு வேளை அவளுக்கு இந்நேரம் உன்னை பிடிக்கவில்லை போயிருந்தால்...."

புங்கன் பெரு மூச்சு விட்டு.."இந்நேரம் இடிப்பில் பிள்ளையை சுமந்து கொண்டிருப்பாள்...." என்று முடித்தவன் மேலும்..." அதனால் பாதகம் இல்லை.. என் அத்தைக்கு என்னை பிடிக்கும்.... ஒன்று போனால் இன்னொன்றை பெற்று எனக்காக கணக்கை நேர் படுத்தி வைத்திருப்பாள்...." என்று கூற இருவரும் சத்தம் போட்டு சிரித்தனர். 

அந்நேரத்தில் விசுக்கென்று பறந்து வந்த சக்கர அம்பு புங்கனின் இடது கண்ணை துளை இட்டு மறுபுறம் வெளிவந்து மரத்தில் குத்தி நின்றது. புங்கன் குதிரையில் இருந்து சாய்ந்தான் "புங்கா......" என்று நன்னன் கத்தியது காடுகளை அதிரச்செய்தது. 

Saturday, January 25, 2014

பூவெழினி 2

விதிகள் என்பது எப்போது ஏற்படுத்தப்படும். ஒரு விசயத்தை பல நாட்களாக பின்பற்றி அதில் உள்ள நல்ல பண்புகளை (good practices) கண்டு பிடித்து இதை செய்யுங்கள் என்று கூறுவது விதிகள். இப்படி நாடு, ஒற்றறிதல், சான்றாண்மை, சூது ,அமைச்சு போன்ற அதிகாரங்களின் பத்து பத்தாய் 1330 நற்பண்பு விதிகளினை கூறும் திருக்குறள், அது எழுதப்பட்ட காலத்திற்கு பல காலம் முன்பே தமிழர்கள் அரசாங்கம், பொருளாதாரம், வணிகம், கல்வி போன்றவற்றில் முழு வளர்ச்சி பெற்று விட்டார்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. திருக்குறளின் காலம் கி.பி. 31 என்று வரையறுக்கப்பட்ட போதிலும், அது அதற்கும் முற்ப்பட்டது என்பது என் உள்ளுணர்வு.
இனி....

2. வேளை வந்து விட்டது

"பெருமலை ஒருபுறத்தே திருமலை மறுபுறத்தே
பெருங்கடல் ஒருபுறத்தே இருங்கடல் மறுபுறத்தே
திருவுறச் சூழ்ந்த தாலே செழுவளம் கெழுமிச்சூழ
ஒருபெரும் கண்ணிநாடு குமரிநா டெனஉரைத்தார்"



ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் கொண்ட பெரும் ரஜ்ஜியாமான பாண்டிய நாட்டின் ஒப்பற்ற தலைநகராய் திகழ்ந்தது பக்றுளி ஆற்றங்கரையில் அமைந்திருந்த தென் மதுரை. அறமும் மறமும் தவறாது கட்டிகாத்து நீதி நெறியுடன் ஐபெருங்குழுவுடன் நாட்டை ஆண்டு வந்தான் மாமன்னன் மிஞிழி. திரை கடலோடி திரவியம் சேர்த்த வணிகர்களால் முத்தும் மணியும், வைரமும் வைடூரியமும் குப்பல் குப்பலாக குவிந்து கிடந்ததன. மேரு மலையின் காகம் கூட தங்கம் தான் என்று கூறும் அளவிற்கு தங்க சுரங்கள் குவிந்த முத்தூரில் இருந்து வந்த தங்கம் மதுரையின் மாட்டு வண்டிகளை கூட அலங்கரித்தது. 

 உள்நாட்டில் இருந்து வந்த விவசாயம் செய்யும் மருத நிலத்து மக்கள் மிளகு, கம்பு, சோளம், பருப்பு வகைகள்,கம்பு, ராகி, கரும்பு ஆகிவற்றை பண்ட மாற்றம் செய்து மணிகளையும், பட்டாடைகளையும் பெற்று சென்றனர்.கொல்லர், உழவர், தச்சர், நெசவாளிகள், மருத்துவர்கள், பெரும் வணிகர்கள் போன்ற பலர் வசிக்கும் மாபெரும் நகரமாய் விளங்கியது மதுரை. அதற்கு மேற்க்கே நூற்றி முபத்தி எட்டு காதமும் தெற்கே  என்பது காதமும் விரிந்திருந்த பெரும் நாடாய் விளங்கியது பண்டைய பாண்டிய நாடு. (ஒரு காதம் = 16 KM என்று கொள்க)

ஆலமரத்தை தாங்கும் ஆணி வேராய் மன்னனும் அமைச்சர்களும் இருந்தார்கள். ஏழேழ் நாடுகளில் இருந்த சிற்றசர்களும் அவர்களது யானை படையும், குதிரை படையும், காலால் படையும் ஆலம் விழுதுகளாய் அரசை தாங்கி நின்றது. அணைத்து விழுதுகளும் மண்ணில் புதைந்து மரத்திற்கு வழு ஊட்டுவதில்லை, சின்ன தென்றலில் கூட பல விழுதுகள் ஆடிவிடும்.


மண்ணுக்கு அடியில் பிறர் கண்ணுக்கு புலப்படாமல் தொலை தூரம் கடும் பாறைகளில் கூட பரவி நீரை தருவிக்கும் ஆணிவேரில் இருந்து கிளம்பு துணை வேறுகளாய் இருப்போரை நம்பித்தான் மாபெரும் நாடே உள்ளது. அவர்களுள் ஒருவர் தான் ராபதேஸ்வரர். அவர் எங்கிருந்து வந்தார், எப்படி வந்தார், அவர் வயது என்ன யாருக்கும் ஒன்றும் தெரியாது. அவரது கதை மர்மமும், அதிசயங்களும் நிறைந்தவை, நம்ப முடியாதவை. சிலர் இவரை சாக வரம் பெற்ற சித்தர் என்பார்கள், சிலர் இவரை மாயா மந்திரம் தெரிந்த சூனியவாதி என்பார்கள், இவருக்கு தெரியாமல் நாட்டில் எதுவும் நடந்துவிடாது என்று அனைவரின் நம்பிக்கை. எது என்னவோ எனக்கு தெரிந்து இவர் நம் அரசன் மிஞிழிக்கு உயிர் காத்த இறைவன் அதனால் அவன் நம்பிக்கைக்கு உரியவர். அந்த கதை பின்னே.


நாட்டின் இத்தனை முக்கிய நபர் இருப்பது அலைகடல் நீர் தெளித்து விளையாடும் மதுரையின் கோட்டைக்கு நடுவில் உள்ள மாட மாளிகையில் அல்ல. மேகமலையில் அமைதி சூழ் கானகத்துக்கு நடுவே மயில்கள் அமர்ந்து தோகை விரித்து விளையாடும்  சின்ன குடிலில். அதுவும் இப்போது அவர் அங்கு இல்லை, பின்னே? குன்று ஒன்று இடிந்து விழுந்ததே அதன் மேலிருந்து சிறுத்தையுடன் நின்று கொண்டிருந்த நன்னனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.



குடுமியற்ற தலையிலே வேப்பந்தளிரும், உழிஞைப்  பூவும் கொடியோடு அணிந்து வந்த அவரின் வயதை கணித்து சொல்வது கடினம் தான். நின்னனுக்கு ஒத்த வயதுடையவர் போல் இருந்தார். அவரை கண்டதும் நால்வரும் வணக்கம் செலுத்தினர். 

நாட்டில் செய்தி பரிமாற்றம் என்பது அன்று முதல் இன்று வரை முக்கியமானதாகவும், ஆட்சியே மாற்ற கூடியதாகவும் விளங்குகிறது. "நான் நலம்.. நீ நலமா..உன்னை காணமல் கண் வாடுதே " போன்ற காதல் கடிதங்களையும் புறா மூலமாக அனுப்பாலாம் வேறொரு பெண்ணின் கையில் கிடைத்தாலும் குற்றம் இல்லை, கொஞ்சம் முக்கிய செய்திகளை ஆள் அனுப்பி தெரிவிக்கலாம், அவசர செய்தியா.... குதிரையில் அனுப்பலாம். முக்கிய ராஜாங்க செய்திகளை அனுப்ப நம்ப தகுந்த ஆள் வேண்டும். இது போன்ற முக்கிய செய்திகளை எடுத்துச் செல்வோருக்கு ஏற்படும் இன்னல்களும் அபாயாயங்களும் எண்ணற்றவை. அதனால் தான் இது போன்ற முக்கிய செய்திகளை பரிமாற்ற இந்த நால் வரை தேர்ந்தெடுத்து குதிரை ஏறவும், வாள் சுழற்றவும், அம்பு எய்யவும், குதிரை இன்றி தனியாக மாட்டிக்கொண்டால் அடர்ந்த காட்டிலும் கூட சிறுத்தையை விட வேகமாவும் லாவகமாகும் ஓட பயற்சி அளித்துள்ளார் ராபதேஸ்வரர். அவர்களின் வளர்ச்சி அவருக்கு பெருமிதத்தையே தந்தது. இவர்களை போல இன்னும் பலர் குதிரை விற்பவர்களாகவும், கொல்லர்களாகவும் பல வேடங்களில் பல இடங்களில் இருக்கிறார்கள். 

  "நீ இளையவன் அல்லன்.. இணை அற்ற வீரன்.." அவர் வாயில் வந்த முதல் வாழ்த்து..... நின்னனின் முகத்தில் புன்னகை பூத்தது.

அவர் முன்னே குடிலை நோக்கி செல்ல நால்வரும் அவரை பின் தொடர்ந்து சென்றனர். சட்டென திரும்பி 

"நின்னன், உதயன், புங்கன், நல்லி உங்களுக்கு வேளை வந்துவிட்டது....."

அனைவருக்கும் சந்தோசம்.... இத்தனை வருடங்களாக பெற்ற பயிற்சியை பிரயோகப்படுத்தும் நாள்.. இந்த நாளுக்கு தானே இத்தனை நாட்கள் தவங் கிடந்தோம்.... என்று எண்ணி நின்னன் பேருவகை கொண்டான். 

தானும் பாராட்டு பெற "பயிற்சி முடிந்து விட்டதா.... தேர்ச்சி அடைந்து விட்டோமா.." ஆர்வமுடன் கேட்டான் நல்லி.

"இல்லை.... செல்வதற்கானா வேளை வந்துவிட்டது...." அதற்கு மேல் அவன் ஒன்றும் கேட்கவில்லை.

அவர்களிடம் வித்தியாச வேலைப்பாடணிந்த பவள முத்திரை ஒன்றை கொடுத்தார்...
"நீங்கள் ஒற்றர்கள்.... மக்களோடு மக்களாக இணைந்து நீங்கள் வாழ வேண்டும்.. உதயா நீ மதுரைக்கு போ.... புங்கா நீ கபடாபுரத்துக்கு செல்.....  நல்லி நீ கடல் கடந்து பெருவள நாட்டிற்கு செல்.....நின்னா நீ  நாகர் படையில் சென்று சேர்... இப்பொழுதே கிளம்பவும்...."

என்று கூறி நடையை தொடர்ந்தார்.... மூவருக்குமே அதிர்ச்சி..... உதயா கேட்டான் " மன்னிக்கவும்.... எங்களுக்கு என்ன வேலை என்று சொல்லவில்லையே...."

"வேலை காத்திருக்கிறது.... போங்கள் புரியும்.... முத்திரை பத்திரம்...."

அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை போகின்ற இடத்தில் வேலை இல்லை போகிற வழியில் தான் வேலை என்று...!!! 


Friday, January 24, 2014

பூவெழினி

குமரிகாண்டம் பற்றி அனைவருக்கும் தெரியும் என்று நம்புகிறேன்.... சங்க பாடல்களில் இருக்கும் தகவல்களை வைத்து பார்த்தால் நமது தமிழ் சமுகம் 12000 கி.பி இல்லேயே மிகவும் முன்னேறிய ஒன்றாக இருந்திருக்க வேண்டும். கப்பல்கள், மாளிகைகள், அரசு, போர் படை மற்றும் பல. நிறைய தகவல்கள் சொல்வதற்கு இருக்கிறது குமரிக்கண்டத்தை பற்றியும் பாண்டியர்களை பற்றியும்..... அப்படியே சொல்லாமல் கதைவழியாக சொல்ல ஒரு சின்ன முயற்சி. உங்களுக்கு பிடிக்கும் என்கிற நம்பிக்கையுடன்....

1. நன்னன்

மேற்கிலிருந்து கிழக்காக சுற்றும் பூமி பந்தினை நிறுத்தி சற்று கிழக்கிலிருந்து மேற்காக சுற்றி விட்டால்.....  எம்.ஜி.ஆர் நான் ஆணை இட்டால் பாட்டிற்கு சாட்டையை சுழற்றி கொண்டிருப்பார்...... காந்திஜி உப்பு சத்தியாகிரகத்தில் குச்சியை பிடித்துக்கொண்டு நடந்து போய் கொண்டிருப்பார்...... ஆங்கிலயருக்கு எதிராக யாரோ ஒரு பெயர் தெரியாத வாலிபர் கையெறி குண்டினை வாயில் கடித்து வீசி கொண்டிருப்பார்.... முதன் முதலாக வாஸ்கடோ கமோ கள்ளிக்காட்டில் வந்து இறங்கி வைன்அருந்திக் கொண்டிருப்பார்.... இன்னும் கொஞ்சம் வேகமாக சுழற்றினால் மக்கள் மாட்டு வண்டிகளிலும் குதிரை பூட்டிய ரதங்களிலும் சென்று கொண்டிருப்பர்.., தஞ்சையில் ராஜ ராஜர் பெரிய கோவிலை கட்டிக்கொண்டிருப்பார்..... இயேசு பிறப்பார்..... முதன் முதலாய் ஒருவர் நாயினை வீட்டு விலங்காய் மாற்றி இருப்பார்.... இந்து நதிக் கரையில் மணிகளை அடைகளாய் பூட்டிய பெண்கள் நடனம் ஆடிக்கொண்டிருப்பார்....  அதற்கும் பின்னே பயணப்பட்டால் இலை தலைகளை அணிந்த மக்கள் நாடோடியாய் அலைந்து.... வேட்டை ஆடி நர மாமிசத்தை தின்று கொண்டிருப்பர்... அதற்கும் பின்னே போனால்...????

இன்னும் கொஞ்சம் வேகமாக சுழற்றி தமிழகத்துக்கு தெற்கே நகர்ந்தால்... குமரிக்கு தெற்கே உள்ள இந்தியப் பெருங்கடல் பனிக்கட்டியாய் சுண்டிபோய்.... அகன்ற கண்டம் ஒன்று நீருக்குள் இருந்து வெளிவரும்.... முழ்கிய பல்லாயிரக்கனக்கான கப்பல்களும் தென் மதுரையின் கரையில் அசைந்தாடி கொண்டிருக்கும். ஆங்கே வானுயர்ந்தமாட மாளிகையில்.... முழுதாய் பட்டாடை உடுத்தி.. சங்க பாடல் ஒன்றை பாடிக்கொண்டே நிலவை காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டிக்கொண்டிருப்பாள் ஒரு தமிழ் அன்னை..... அடடா இது என்ன காலம் என்று கேட்கிறீர்களா.... இது தான் முதல் சங்க காலம்... ஏறக்குறைய கி.பி. 12000ம் !!!!

நமக்கு மதுரையில் வேலை இல்லை.... அங்கிருந்து நகர்ந்து பக்றுளி ஆற்றை கடந்து குமரி கண்டத்தின் முதுகெலும்பை போல் விரிந்திருக்கும் மேரு மலையின் மேல் தோன்றும் முத்தாற்றின் முக்கிய துனை ஆறான ஹிர்தியாவுக்கு செல்வோம்.

தொல் பாண்டிய நாட்டில் ஓடும் பல்லாயிரக்கணக்கான ஆறுகளில் மிகவும் ஆக்ரோஷமான ஆறுகளை கொண்ட காடு மேகமலை காடுகள். அதில் மிகவும் ஆக்ரோஷமாக... பிளிறுகள் கூட கடக்க அஞ்சும் விதத்தில் பிளிறிக்கொண்டு செல்பவள் ஹிர்தியா. அடர்ந்த வனாந்திரம் சூழ்ந்த பகுதியில், மலை சரிவில் பறைகளை உருட்டிக்கொண்டு வேகமாக சென்றது ஹிர்தியா.

அவ்வாற்றங்கரையில் மான்கள் கால்களை தூக்கிக் கொண்டு இலைகளை பறித்து மென்று கொண்டு இருந்தன. ஆற்றின் இரைச்சலை தவிர மற்றபடி அமைதியாய் இருந்த கானகத்தில் முழவு கொட்டும் ஓசை ஆரம்பித்தது. மான்கள் கூட்டம் அலறி அடித்து ஓட ஆரம்பித்தன.... மரங்களின் நடுவில் இருந்து தின்று பருத்த சிறுத்தை ஒன்று தவ்வி குதித்தது.... முழவு கொட்டும் ஓசை இன்னும் அதிகமாய் கேட்டது. சிறுத்தைக்கு பின்னே நான்கு கட்டிளம் காளைகள் சிறுத்தையை துரத்திக்கொண்டு வந்தார்கள். இல்லை இல்லை அவர்கள் சிறுத்தையை துரத்தவில்லை அவர்களும் மானை தான் துரத்தினார்கள்.

சிறுத்தையின் வேகத்திற்கும் துரிதமான திசை மாறுதலுக்கும் கொஞ்சம் கூட அவர்கள் சலிக்கவில்லை. நான்கு பேரில் முன்னாள் சிறுத்தைக்கு மிக அருகில் வந்தவன் கொஞ்சம் வேகத்தை கூட்டித் தாவினான், சிறுத்தையும் தவ்வியது, மானும் உயிரை காப்பாற்ற பிரயத்தனம் செய்து தவ்வ முயற்சித்தது.

நமது இளைஞன் முன்னால் தவ்விய சிறுத்தையின் மேல் கால் வைத்து எம்பி மின்னல் வேகத்தில் இடுப்பில் சொருகி இருந்த கத்தியை எடுத்து மானின் கழுத்தை அறுக்க தொப்பென்று விழுந்து பொரண்டு கரையின் விளிம்பில் எழுந்தான். முழவு சத்தம் நின்றது..... மீதி மூவரும் கைதட்டினர்... சிறுத்தை அவனை பார்த்து உறுமிக்கொண்டே அரைவட்டம் அடித்தது. எந்த கணமும் அவன் மேல் பாய.... பாய்ந்துவிட்டது. இருவரும் தொப்பென்று வெள்ளத்தில் விழ.... சுழலில் சிக்கி சுற்றி... இழுத்துச்செல்லப்பட்டன். சிறுத்தை கூட கால்களை வைத்து தத்தியது.... பாறைகளின் ஊடே அடித்து செல்லும் நதி... அவனை அந்த பெரும்பாறைகளில் மோதி இருக்க வேண்டும். அவனை சுற்றி ரத்தக்கம்பலம் விரிக்கப்பட்டது. ஒரு சுத்த வீரன் கொல்லப்பட்டான் என்றதை மீதி மூவரால் நம்ப முடியவில்லை.

அந்த நொடி யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிசய சம்பவம் நிகழ்ந்தது.... ஆயிரம் இடி இடித்தார் போல பெரும் ஓசை கேட்டது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமோ....தெய்வாதீனமோ...மனிதனின் செயலோ.... அருகில் இருந்த குன்றில் நிலச்சரிவு ஏற்ப்பட்டு அந்த குன்று அப்படியே நகர்ந்து ஆற்றின் குறுக்கே அமர்ந்தது. நதியின் குறுக்கே தற்காலிக அணை ஏற்ப்பட்டு ஆற்றின் வெள்ளத்தை தடுத்தது. கீழ் கரையில் வெள்ளம் வடிந்தது மேல் கரையில் வெள்ளம் சேர்ந்து அணையை அரிக்க ஆரம்பித்தது. தடுமாறி எழுந்த இளைஞன்.... அணையை பார்த்தான்.. இன்னும் சில நொடிகள் தான்.. அணையை வெள்ளம் தகர்த்துவிடும். அண்ணாந்து கதிரவனை பார்த்து கும்பிட்டான்... தூரத்தில் ஓடிய சிறுத்தையை நோக்கி ஓடத் துவங்கினான். அணை உடைந்தது. வெள்ளம் அடித்துக்கொண்டு செல்ல கரையில் சிறுத்தையுடன் ஒதுங்கினான் நம் இளைஞன். மீண்டும் முழவு சத்தம் ஒழிக்க அனைவரும் "நன்னன்...நன்னன்..!!!" என்று கோஷமிட்டனர்.

அதிர்ஷ்டவசத்தால் எக்காலத்திலும் வற்றாத ஆறு கண நொடியில் வற்றி உயிர் பிழைக்க மறு வாய்ப்பு கிடைத்த போதிலும்... அதை பயன் படுத்தாமல் தன்னைகொல்ல வந்த சிறுத்தையை கொன்றது நம் பழந்தமிழர்களின் வீரம்..!!!

தொடரும்.